பதிவுகள் இணைய இதழ் இணையத்தில் வெளியான ஆரம்பகாலத்து இணைய இதழ்களிலொன்று. இதன் முக்கிய நோக்கங்களிலொன்று இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்புகளை எழுதுவதைத் தூண்டுவது. அவ்விடயத்தைப்பொறுத்தவரையில் நிச்சயமாக எனக்குத் திருப்தி உண்டு. வளர்ந்த எழுத்தாளர்களிலிருந்து வளரும் எழுத்தாளர்களை வரை பதிவுகள் இணைய இதழுக்குத் தம் ஆக்கங்களை அனுப்பி வைத்தார்கள்; வருகின்றார்கள். அவற்றையெல்லாம் இயலுமானவரையில் முதலில் ஆவணப்படுத்த வேண்டுமென்பதின் விளைவே இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இம் மின்னூல்கள். உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வருகின்றார்கள். இதுவரை வெளியான பதிவுகள் தொகுப்புகளிலுள்ள படைப்பாளிகள் மற்றும் அவர்கள்தம் படைப்புகளைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியான ஏனைய படைப்புகளும் காலப்போக்கில் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும்.

இதுவரை இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்.காம் வெளியிட்டுள்ள 19 மின்னூல்களின் விபரங்கள் வருமாறு,

1. பதிவுகள் சிறுகதைகள் - மூன்று தொகுப்புகள்: பதிவுகள் 55 சிறுகதைகள், பதிவுகள் 27 சிறுகதைகள் & பதிவுகள் 36 சிறுகதைகள்
2. பதிவுகள் கட்டுரைகள் - மூன்று தொகுப்புகள்.: பதிவுகள் 59 கட்டுரைகள், பதிவுகள் 27 கட்டுரைகள் & பதிவுகள் 25 கட்டுரைகள்
3. பதிவுகள் - கவிதைகள் - மூன்று தொகுப்புகள்: பதிவுகள் 100 கவிதைகள், பதிவுகள் 95 கவிதைகள் & பதிவுகள் 101 கவிதைகள்
4. பதிவுகள் - ஆய்வுக்கட்டுரைகள் - ஒரு தொகுப்பு: பதிவுகள் 25 ஆய்வுக் கட்டுரைகள்

வ.ந.கிரிதரனின் படைப்புகள்:

1. வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்
2. வ.ந.கிரிதரனின் கவிதைகள்
3. வ.ந.கிரிதரனின் சிறுகதைகள்
4.அமெரிக்கா
5. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு
6. குடிவரவாளன்
7. அமெரிக்கா (இரண்டாவது திருத்திய பதிப்பு)

அ.ந.கந்தசாமியின் படைப்புகள்

1. அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (நாவல்)
2. அ.ந.கந்தசாமியின் கவிதைகள்
இவை அனைத்தையும் நீங்கள் வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/@gthami

பதிவுகள்.காம் வெளியிட்ட மின்னூற் தொகுப்புகள் மற்றும் நூல்கள்!