பதிவுகளின் வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! உங்கள் இல்லங்களில் இன்பப்பூக்கள் பூத்திடட்டும்! உங்கள் எண்ணங்கள் யாவும் எண்ணியவாறே நிறைவேறிடட்டும்!  ஆரோக்கியமான எண்ணங்களுடன், உடல் நலத்துடன் உங்கள் வாழ்க்கை தொடரட்டும்! சிறக்கட்டும்!

பிறப்பாய்! சிறப்பாய்!  புதிய ஆண்டே!

கோவிட் இருள் ஒழிந்து எங்கும்
குதூகலம் பிறந்திட, சிறந்திட, ஒளிர்ந்திட
இன்ப மலர்கள் மலர்ந்திட, மணம்தனைப் பரப்பிட
ஆண்டு புதிது அவனியில் தோன்றிட
வாழ்க வாழ்க என்றே வாழ்த்துவோம்.
வாழ்க வாழ்க என்றே வாழ்த்துவோம்.
இருளே ! ஒளிந்து செல்வாய் தரணியில்.
ஒளியே வருகை தருவாய் அவனியில்.
இங்கு எத்தனை எத்தனை உயிர்கள்
இழந்தோம்! இடரில், துயரில் ஆழ்ந்தோம்.
வறுமை வயிற்றை வாட்டிட வதக்கிட
வாடியோர் எத்தனை எத்தனை மனிதர்!
உழைப்பவர் வாழ்வில் இன்பம் பிறந்திட
பிறப்பாய் புதிய ஆண்டே சிறப்பாய்.
தீயவர் செயல்கள் தீய்ந்திட , ஓய்ந்திட
நல்லவர் செயலால் நானிலம் செழித்திட
மகிழ்ச்சி நிறைந்து மானிலம் சிறந்திட
பிறப்பாய் புதிய ஆண்டே பிறப்பாய்!
சிறப்பாய்! சிறப்பு ஆண்டே! சிறப்பாய்!
அனைவரும் அன்பினில் ஆழ்ந்திட, மூழ்கிட
நினைவினில் நல்ல எண்ணம் பெருகிட
பிறப்பாய் புதிய ஆண்டே பிறப்பாய்!
சிறப்பாய்! சிறப்பு ஆண்டே! சிறப்பாய்!