பதிவுகளில் அன்று: 'யாப்பன'விற்கு வாருங்கள்!

Saturday, 14 September 2019 09:03 - ரதன் - 'பதிவுகளில்' அன்று
Print

'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


அசோக கங்கமரதன் - எழுத்தாளர்பதிவுகள் மார்ச் 2007 இதழ் 87
இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. ஏனையோர் பிரசன்ன விதானக, விமுக்தி ஜயசுந்தர ஆகியோர். இவாகளது படங்களின் தடைக்கு எதிராக, மூத்த திரைப்பட இயக்குனரும், சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான லெஸடர் ஜேம்ஸ் பீரிஸ் கருத்து தெரிவித்தபொழுது, இவ்வாறான தடைகள் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை இட்டு செல்கின்றமைக்கான அறிகுறியாகும் என தெரிவித்துள்ளார். The Chairman of the National Film Corporation (NFC) Sunil S. Sirisena (who is also a secretary to the Defence Ministry) கருத்து தெரிவிக்கையில் படைப்பாளிகளுக்கு எல்லைகள் வகுப்பது தரமான படங்கள் வெளிவருவதை தடைசெய்யும் என்றார். தனது 'Handa Kaluwara’ படத்துக்கு எதிரான தடைக்கு உயர் நீதி மனறம் சென்றவரும் சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான பிரசன்ன விதானக கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகள், தங்களின் சப்பாத்துக்களின் கீழ், படைப்பாளிகள் தமது கருத்துக்களை, கொள்கைகளை போட்டுவிடவேணடும் என நினைக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் படைப்பாளிகள் அடிபணியப் கூடாது. கிட்லர், ஸ்ராலினுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற படைப்பாளிகளை இன்றும் உலகம் மதிக்கின்றது என்றார். ஆனாலும் பெரும்பாலான வெகுசனத் தொடர்பு சாதனங்கள், இத்தடையை ஆதரித்து மௌனம் தெரிவித்தன. இவற்றையும் மீறி இந்த படைப்பாளிகள் தொடர்ந்து படங்களை தயாரிக்கின்றனர்.

இதில் அசோக கங்கமவும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் This is my moon (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட 'Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார்இதில் அசோக கங்கமவும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் This is my moon (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட 'Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 'Me Paren Enna' (இவ்வழியால் வாருங்கள்- Take This Road) என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இந்த தொடரைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், இவர் தமிழ் தேசியம் பற்றி தெரிவித்த கருத்துக்களை பார்ப்பது அவசியம். அவற்றில் சில:

•இலங்கையில் கலாச்சாரம் இல்லை, சமூகம் இல்லை, மனித உநவுகள் இல்லை. இருப்பதெல்லாம் தனி மனிதர்கள். அவர்கள் தன்னிச்சையாக இருக்கலாம், விரும்பின் நிர்வாணமாக நடந்து திரியலாம். சுதந்திரமாக செக்ஸ் படம் எடுக்கலாம் •தேசியவாதிகள், இனவாதிகளின் கருத்துப்படி “ இனப்பிரச்சினை மேறகத்தியரால் ஏற்படுத்தப்பட்டது. இவாகளுக்கு மேற்கத்திய சினிமாவும், விஞஞானமும எதிரி. ஆனால, இன்று வீதியால ஒரு பெண் நடந்து செல்ல முடியாது, பாடசாலைக்கு சிறுவர்கள் வாகனத்தில் கூட பாதுகாப்பாக செல்லமுடியாது. மக்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு,உடையை வாங்கமுடியாதுள்ளது. வெகுசன தொடாபு சாதனங்களில் வன்முறைப்பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. - யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பதும், தேசத்துக்காக, நாட்டு மக்களுக்காக என்று கூறப்படுபவையும் வெறும் அரசியல் கோஷங்கள். வேறு தொழில் இல்லாமையினால் வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே இராணுவத்தில் பலர் சேர்கின்றனர்.

•போரின் விளைவு- உ.ம் - குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பிரகாரத்தின் படி, சுமார் 33,000 குழந்தை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 விகிதம் பெண் சிறுவர்கள், 10 விகிதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். •நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனில்லை. ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினையை ஆதரிக்கின்றேன். நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை வை அசோக கங்கம இலங்கையைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள்.

'இது என் நிலா'
'இது என் நிலா' போரின்போது இராணுவச் சிப்பாயிடம் சென்றடைகிறாள் ஒருத்தி. சிப்பாய் இவளைக் கண்டதும் சுட முயற்சிக்கிறான்.  அவள் தனது சங்கிலியைக் கழற்றுகிறாள். ஆனால் அவன் குறி வைப்பதில் இருந்து விலகவில்லை. அடுத்து பாவாடையைத் தூக்குகிறாள். முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் புணர்கிறான். அவனைத் தொடர்ந்து அவளும் கிராமத்துக்குச் செல்கிறாள். இவளது வருகை அவனது முறைப் பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கிராமத்தில் சிப்பாயின் அண்ணன், மாணவன் போன்றோரால் அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இறுதியாக அருகில் உள்ள பௌத்த விகாரையில் தஞ்சம் அடைகிறாள். மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு பிக்கு காணாமல் போய்விடுகிறார். இறுதியில் இப் பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையை கைகளில் ஏந்தி இது என் நிலா என்கிறான். இதுவும் தமிழ் மக்கள் பிரச்சினை தங்களது கைகளில் உள்ளன என்று கூறுவது போல் உள்ளது. இங்கு யுத்தத்தின் கொடுமையை பாலியல், மதம் எனபனவற்றின் ஊடாக் காட்ட முற்படுகிறார். யுத்தத்தின் பிரதிபலிப்புகளை சமூக தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். கிராமங்களில் பாலியல் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதன் வெளிப்பாடு தான் போர்ப் பிரதேசங்களில் இராணுவ வீரர்களின் பாலியல் கொடூரங்கள் என சமாதானம் கூறுகிறாரோ என்ற ஜயமும் எழுகிறது. மனிதனின் வழமையான இயங்குதலை, இருத்தலை தீர்மானிப்பது பாலியலா? இன்றைய சிங்கள சமூகம் பாலியலை மையப்பட்டு இயங்குகிறது என்பது இவரது குற்றச்சாட்டு. இது பௌத்த, சிங்கள சமூகத்ததை விமர்சிக்கலாம், ஆனால் இனப்பிரச்சினை கொடூரங்களுக்கான காரணிகளில் ஒன்றாக கருதமுடியாது. இறுதியாக 'இது என் நிலர்' என இராணுவவீரர் கூறும் காட்சி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்ற விடவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. இங்கும் யுத்தத்தின் மூலவேர் ஆராயப்படாமல் அதன் எச்ச சொச்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

'இவ்வழியால் வாருங்கள்' (Take This Road)
இந்த 11 வார தொடரை ரூபவாகினி மற்றும் சனலைத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. இதன் மூலம் 25 விகிதம் கிராம பார்வையாளர்களையும், 41 விகிதம் நகர பார்வையாளர்கயையும் பார்வையிட்டுள்ளனர். இது மொத்தம் 4.1 மில்லியன் மக்களாவார். இதில் தமிழ், முஸலீம் பார்வையாளர்களும் அடங்குவர். இவரது முந்தைய படங்களை தடைசெய்த அரசு, இந்த தொடரை, அதுவும் தனது அரச தொலைக்காட்சி நிறுவனம் மூலம் ஒளிபரப்பச்செய்தமை ஆச்சரியத்துக்குரியதும், சிந்திக்கவேண்டிய விடயமுமே..

A9 பாதை திறந்து விட்ட பொழுது, அவ்வழியே சுபசிங்க குடும்பமும், ஒரு முஸ்லீம் குடும்பமும், பிரயாணிக்கின்றது. சுபசிங்க குடும்பம் நாகதீபத்திற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சிங்கள நூல்களும், இணையத்தளங்களும் யாழ்ப்பாணம் முழுவதும் புத்தர் யாழ்ப்பாணம் வந்த பொழுது சிங்கள மக்கள் நிறைந்து வாழ்ந்தார்கள் என பிரச்காரம் செய்கின்றார்கள். கந்தரோடை, நிலாவரை, உருத்திரபுரம், வவனிக்குளம், சுன்னாகம், கொடியவத்தை, மல்லாகம், உடுவில், புலோலி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக கூறிய சுவடுகளை சான்றாக காட்டுகிறர்கள். (http://easyweb.easynet.co.uk/~sydney/jaffna.htm) கி.மு 1ம் நூற்றாமாண்டு புத்தர், இலங்கைக்கு இரண்டாம் தடவை விஜயம் செய்த பொழுது நாகதீபத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது. நாகதீபம், நயினாதீவில் அமைந்துள்ளது. புத்தர் சென்ற தலமாதனால் பௌத்தர்கள் இக் கோவிலுக்கு தரிசனம் செல்வது வழமை.

பயணங்களை அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. இது கதையை நகர்த்துவதற்கான பொதுவான ஓர் உத்தியாகும். இங்கும் A 9 வழியே சென்று யாழப்பாணத்தை அடைந்து, பின்னர் நாகதீபம் சென்று, மீணடும் வந்து யாழ்ப்பாணம் வந்து தங்குகின்றனர். படத்தின் பெரும்பாலன பகுதி யாழப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நாகதீபம் செல்லும் வழியில், சுபசிங்கவின் மகள், தனது முன்னால் பல்கலைக்கழக சகாவும், இந்நாள் அரசு சார்பற்ற நிறுவன அதிகாரியை சந்திக்கின்றார். இவரின் வேண்டுக்கோளுக்கினங்க யாழ்ப்பாணத்தில் இவர்கள் வீட்டில் தங்குகின்றனர். அந்த தமிழ்க் குடும்பத்தில், அவர்களது மகன் இயக்கத்தில் இருந்து விட்டு தங்கியுள்ளார். அரசு சார்பற்ற நிறுவன அதிகாரி நாவலப்பிட்டியிலிருந்து வந்து இந்த வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். சுபசிங்க குடும்பம் மீண்டும் கொழும்புவிற்கு செல்ல வெளிக்கிடும் பொழுது, பக்கத்து வீட்டு சிறுமி நிலக்கீழ் குண்டு வெடித்து ஓரு காலை இழந்து விடுகின்றார். இதனால் சுபசிங்கவிற்கு மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இதனால் இவர்கள் அதே வீட்டில் தங்குகின்றனர். ஆரம்பத்தில் இவர்களுக்கிடையிலிருந்த மனப்புகைச்சல், நம்பிக்கையின்மை பின்னர் நீங்கி விடுகின்றது.

யாழ்ப்பாணம் மீண்டும் வந்துள்ள, வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் படும் அவலங்கள் சிறப்பாக பதியப்பட்டுள்ளது. சொந்த மண்ணின்றி, அகதி முகாமிலேயே தஞ்சமாக இருக்கும் இந்த மக்கள் உண்மையில் இந்த போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். தங்களது சொந்த வீட்டிலேயே நிலக்கீழ் குண்டுகள். இது வரை எந்த வித மீள் குடியேற்ற திட்டங்களும் இன்றி அவலப்படுகின்றார்கள்.

சுபசிங்கவும், முன்னால் சமசமாஜக் கட்சி உறுப்பினரும், முன்னால் ஆசிரியருமான குடும்பத்தலை வரும், அரசியல் பேசும் பொழுது எழும் விமர்சனங்களில் பண்டாரநாயக்கவையும், இடது சாரிகளையும் விமர்சித்தளவிற்கு, தமிழ் தேசியவாதிகளை, சிங்கள பேரினவாதிகளை விமர்சிக்கவில்லை. இந்த போரின் இன்றைய நிலை இரு இனங்களுக்குமிடையாலான புரிந்துணர்விற்கப்பால் பரந்து விரிந்துள்ளது. மக்களுக்கப்பால் இரு போர் இயந்திரங்களும், துணை இயந்திரங்களும் இயங்குகின்றன. இவை மக்கள் நலனில் அக்கறையின்றி சொந்த நலனில் அக்கறை காட்டுகின்றன. நவீன தேசியத்துக்கு, இனங்களுக்கிடையில் தொடர்ச்சியான கருத்துரையாடல்களும், புரிந்துணர்வும் அவசியம். அதனை இயக்குனர் இப்படத்தில் வலியுறுத்துகின்றார். போர் இயந்திரங்களுக்கு அப்பால் மக்கள் தனித்து இயங்குகின்றார்கள். இவர்கள் இணைவை இந்த இயந்திரங்கள் தடுக்கின்றன என்பதை பதிவாக்கியுள்ளார். போரைப்பற்றிய அறிவு சார் மதீப்பீடுகளை (Cognitive Values) இங்கு விவாதிக்கின்றார். (தர்மசேன பத்திராஜ, சொல்லாது உன்னகே என்ற படத்தில் விரிவாக சுதந்திரம் பற்றி விவாதிக்கின்றார்)

ஒரு சிங்கள படைப்பாளியாக, தனது குற்ற உணர்வின் கருத்தாக்கங்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். எதிர் முரண் பாத்திரங்களுக்கூடாக, விசாரணைகளை தொடர்கின்றார். இந்த யதார்த்த நிலை இவர்களை நேர் கோட்டில் நிறுத்துகின்றது. இவரது குற்ற உணர்வின் வெளிப்பாடாக இவர்கள் தங்கியுpருந்த வீட்டின் மகனை, இவர்களது வாகனஓட்டி தாக்க முற்படும் பொழுது, சுபசிங்கவின் மூத்த மகன் வாகனஓட்டியை அடிப்பது வெளிப்படுகின்றது. சுபசிங்கவுக்கும், குடும்பத்தலைவருக்குமான விவாதங்களில், குடும்பத்தலைவர் குரல், கருத்துக்கள் ஓங்கி இருப்பமை மற்றொரு உதாரணம். இப்படத்தின பெரும்பாலான பார்வையாளர்கள் சிங்களவர்கள். இவர்களையும் இந்த குற்ற உணர்வு தொற்ற வேண்டும் என்பதே இயக்குனரின் நோக்கம். (இந்த குற்றஉணர்வின் வெளிப்பாட்டை, இவரையும் விட சிறப்பாக பிரசன்ன விதானகே, தனது படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.) ஆனாலும் புரிந்துணர்வில் சிங்களவர் மேலோங்கி நிற்பதாக காட்டியுள்ளார். படத்தில் வரும் அரசு சார்பற்ற அதிகாரி மலையகத்தை சோந்தவர். இவர் யாழ் வாழ் மக்களில் ஒருவரக கருதப்படுவதாக காட்டுகின்றார். இது கூட சற்று அதிகம் தான். யாழ் வாழ் சமூகம் இன்னமும் தங்களுக்கிடையில் சாதி, பிரதேச வேறு பாடுகளை முற்றாக
கழைந்துவிடவில்லை.

போரில் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மை, போர் வாழ்வின் தாக்கங்கள், இழப்புக்கள், பிரிவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றது. அவர்களது அக உணர்வின் அச்சங்களையும் மீறி அறிவுசார் முடிவுகளை, மொழி, மதங்களுக்கப்பால் எடுக்கவைக்கின்றது. எனக் கூறியுள்ளார். ஆனால் இன்னமும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பெரும்பாலோனோர் அறிவு சார் முடிவுகளை எடுப்பதில்லை.

ஏனைய வெகுசனத் தொடர்புசாதனங்களை விட சினிமா நவீன தேசியத்துக்;கான கற்பிதங்களை மக்கள் மத்தியில் வழங்கும் வல்லமை பெற்றது. அசோக கங்கமவும், நல்ல சினிமா மொழிக’கூடாக இதனை நெறிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் தேசிய, குற்ற விசாரணைக்களுக்கப்பால், வழமையான பொறாமை, குறிப்பாக எதிர் பால் உறவுகளது மீதான பொறாமை, போட்டி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

கணித உயர் பட்டதாரியும், இஙகிலாந்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான அசோக கங்கம தனது கற்புலத்திக்கூடாக சிங்கள மக்களை நோக்கி விசாரணைகளை முன்வைத்துள்ளார். இது நவீன தேசியத்துக்கான ஓர் விவாதத்தை உருவாக்குமா?

தமிழ்த் தேசியத்தை பொறுத்தவரை, இன்று அதனை கேள்விகளுக்கோ, அல்லது விசாரணைகளுக்கோ இட்டு செல்ல முடியாதுள்ளது. மரணம் வரவேற்கப்படவேண்டிய் ஓர் கலையாக, வாழ்வாக, இயல்பாக மாறப்பட்டுவிட்டது. எனவே இங்கு புதிய தேசியத்துக்கான எந்த கருத்தாடல்களையும் முன்வைக்க முடியாது. நாம் சார்ந்திருக்கும் நிலை சார்ந்து இயங்குகின்றோம்.. இது ஓர் வகையில் எமது அக உணர்வுகளின் வெளிப்பாடாகும். இதனால்தான் கொலைகளையும் எந்த வித விசாரணையும் இன்றி ஏற்றுக்கொள்கின்றோம். எமது அறிவுசார் கற்பிதங்கள் புத்தகங்களில் மாத்திரமே. திருநீறு அணிந்து, கூர்ப்பை போதித்தவர்கள் எமது ஆசிரியர்கள். சாதிகள் இல்லையடி பாப்பா எனக் கூறி சாதிக் கொலை புரிந்தவர்கள். எனவே எம்மிடம் எமது குற்றங்களுக்கான விசாரணைகளை படைப்புக்களாக எதிர்பார்க்க முடியாது.

தமிழ் தேசியம் பற்றி, இந்திய தமிழ் படைப்பாளிகளை விட, எமது படைப்பாளிகளை விட சிங்கள படைப்பாளிகளே அக்கறை காட்டியுள்ளார்கள். சர்வதேசத்துக்கு எமது நிலையை சொல்லும் வல்லமை பெற்றவை. இந்திய படைப்பாளிகளின் வியாபாரத் தன்மையே இப்படத்தை ரொரன்ரோவில் விநியோகிப்பதிலும் கையாளப்பட்டுள்ளது. ஏனோ தானோவாக, பத்தோடு, பத்தாக ரொரண்ரோ கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால் இப்படத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படுகின்றது. கலையை வியாபாரமாக, தமது வாழ்விற்காக பயன்படுத்துவர்களின் திருவிளையாடல் இது. எது எப்படியிருப்பினும், மக்கள் மத்தியில் இப்படம் சென்றடையவேண்டும.;. இப்படத்தை 2 டொலர்களுக்கு பெரும்பாலான ரொரண்ரோ கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். .

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 09 October 2019 01:59