டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் -பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர்  -


பதிவுகள் ஆகஸ்ட் 2003 இதழ் 44 -

நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பீர்கள்  என்று எணக்குத் தெரியாது. நாம் சந்திக்க மாட்டோம். உங்கள் வயது எனக்குத் தெரியாது. என் வயதினராக இருப்பீர்களென நினைக்கிறேன். எனக்கு நாற்பத்தோரு வயதாகிறது. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகளிருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு பிள்ளைகளிருக்கிறார்கள். என் மகளுக்கு பதினைந்து வயதாகிறது.என் மகனுக்கு பன்னிரண்டு வயசாகிறது. உங்களுக்கும் பன்னிரண்டு வயதில் ஒரு மகனிருக்கிறான்.

என் மகன் கானாவில் பிறந்தான். அப்போது மருத்துவர் அருகிலில்லை. நான் நலமாக இருந்தாலும் டாக்டருக்கு அதிக வேலைகள் இருந்ததாலும், ஒரு மருத்துவச்சி தான் என்னை கவனித்துக் கொண்டாள். அவள் ஒரு கானிய குடும்பத் தலைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். எனவே எந்த மருத்துவருக்கும் அவருக்குத் தெரிந்த அளவு தெரிந்திருக்க நியாயமில்லை. நேரம் செல்லச் செல்ல அவர் எனக்கு உறுதியளித்தார். "இது ஒரு ண் குழந்தையாகத் தானிருக்கும். ஒரு ஆணால் தான் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியும்". நான் வலியால் துடித்த போது அந்த பெண்மணி நான் பிடித்துக் கொள்ள தனது கைகளை நீட்டினாள். அந்தக் கைகள் மட்டுமே வாழ்வின் கடைசி நம்பிக்கைச் சின்னங்களாக நினைத்து நான் பற்றிக் கொண்டேன். "இதோ விரைவில் முடிந்து விடும். நான் உன்னிடம் பொய் செல்வேனா. இதோ பார். எனக்குத் தெரியும். நானும் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறேன்," என்று கூறினார்.

ஆம். அவருக்குத் தெரிந்திருந்தது. எனக்கு மயக்க மருந்து கொடுக்கப் படவில்லை. பிறந்தவுடன் ஒல்லியாக ஈரப்பசையுடன் இரத்தக் கறையுடனுமிருந்த குழந்தையை என் வயிற்றின் மேல் போட்டார். " நான் உன்னிடம் என்னெ சொன்னேன்? இதோ உன் பிள்ளை. இங்கே இருக்கிறான். பார்."

என் மகனின் பிறப்பை கடவுளின் அருகிலிருந்து நான் பார்த்தபோது அந்தப் பெண் மட்டுமே அங்கிருந்தார். அவருக்கும் குழந்தைகள் இருந்ததால் அவர் நடப்பனவற்றை அறிந்திருந்தார். மேலும் சதையிலுணர்ந்தால் தான் நிஜமாக அறியமுடியுமென்பதையும் அறிந்திருந்தார்.

இதுவரை என் மகன் அதிருஷ்ட்டக்காரனாக இருந்துள்ளான். ஒரு முறைஆஅப்பிரிக்காவிலிருந்த போது அவனுக்கு மலேரியாக் காய்சலிருந்தது. பிறகு கனடாவிலும் இங்கிலாந்திலும் அவனுக்கு தொண்டை நோய்களும் விளையாட்டமையும் ஏற்பட்டன. அப்போது ஒவ்வொரு முறையும் குடலுறைந்ததைப் போன்ற உணர்வில் நான் பயந்திருந்தேன். என் குழந்தைகளுக்குக் கெடுதல் ஏற்படுவதைத் தவிர எந்த கெட்ட நிகழ்ச்சியையும் என்னால் எதிர்கொள்ள முடியுமென நம்பியிருந்தேன்.

இப்போது அவன் தன்னுடையு சைக்கிளில் கணக்கிலடங்கா மைல்கள் சுற்றுகிறான்.ஆவன் சுபாவத்தில் அறிவியல் நோக்குடையவன். மின்சாரத்திலியங்கும் அவனது இரயில் பொம்மைகளுக்கு பலவித சிக்கலான சுவிட்சுகளும் நுணுக்கமான மின் கம்பிகளும் உள்ளன. அவன் தானாகவே அவற்றை அற்புதமாக வேலை செய்ய வைத்து அந்தச் சின்னஞ் சிறு இஞ்சினை தான் ணையிடுவதைப் போல் வேலை செய்ய வைக்கிறான். இது வரையில் அவன் தன் வாழ்க்கையை நட்பான மனிதர்களிடையே வாழ்ந்திருக்கிறான். இதனால்ஆவனுக்கு வலி என்பது என்னவென்று தெரியாது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் எனக்குத் தெரிந்ததை விட அவனுக்குத் தெரிந்துள்ளது.ஆவற்றில் சிலவற்றை நானறிவேன். ஆனால் இதுவரை அவனது வாழ்வில் வலி என்பது அவனாகவே சமாளிக்கும் வகையிலிருந்துள்ளது.

திருமதி பாசு. உங்கள் மகனை நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். அதுவும் ஒரு தினப் பத்திரிகையிலிருந்த புகைப்படத்தின் வாயிலாக. டெட்ராய்ட்டில் ஒரு மாலைப் பொழுதில். அவன் நண்பர்கள் கூப்பிட்டதால் வெளியே சென்றான்.ஆனால் அது வெளியில் உலாவ தக்கதொரு மாலை அல்ல. உங்கள் மகன் போலிசாரால் சுட்டுக் கொள்ளப்பட்டான். அவன் தற்செயலாகக் கழுத்தில் சுடப்பட்டான் என்று போலிசார் கூறினர். மாக் கள்ளுக்கடையிலிருந்தஆஅறு டின்கள் கள்ளைத் திருடிக் கொண்டு வெளியில் வந்து கொண்டிருந்த பில்லி பர் என்பவனை நோக்கி போலிசார் குறி வைத்தனர். ஏதோ ஒரு உந்துதலினால் போலிசாரைக் கண்ட பில்லி ஓடிக் கொண்டேயிருந்தான். அவன் சுடப்பட்டான். ஆனால் போலிசார் ஒரு முறைக்கு மேல் சுட்டதால் அவ்வழியிலிருந்த ஜோவும் சுடப்பட்டான். தினசரிப் பத்திரிகைகள் உங்கள் மகன் பிழைப்பானா என்று கூறவில்லை. இது போன்ற நிலையிலிருந்த ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவனால்- ஒரு நீக்ரோவால் - குணமடைய முடியுமா என்றும் கூறவில்லை.

உங்கள் மகன் ஒல்லியானவன். என் பன்னிரண்டு வயது மகனை விட சிறிது உயரமானவனாலும்யாவ்வளவு திடகாத்திரமானவல்ல. அவன் கண்கள் திறந்த நிலையில் சாலையோரத்தில் கிடந்தான். தான் உள்பட எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொண்டிருந்தானென நான் நினைக்கிறேன். இரத்தம் கசிந்திருந்த அவனது கை சிந்திய இரத்தத்தில் தளர்ந்து படர்ந்திருந்தது. அவன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியுமில்லை. நான் அந்தப் புகைப்படத்தை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அந்தப் பத்திரிகையை தூரப் போட்டு விட்டாலும் அந்த முகத்தை அப்புறப்படுத்த முடியவில்லை.ஆந்த வெறுமையான குழந்தை முகம் என் மனதில் அலைந்து கொண்டிருந்தது. அது சில சமயம் உங்கள் மகனின் முகமாகவும் சில நேரங்களில் என் மகனைப் போலவுமிருந்தது.

பிறகு நான் வேறொரு பத்திரிகையில் வந்த புகைப்படத்தை நினைத்துக் கொண்டேன்.ஆது வடக்கு வியட்நாமைச் சேர்ந்த ஒரு பெண்ணினுடையது. நாபாம் எனும் புது வகையான ஒரு இரசாயனப் பொருளண்மையில் புழக்கத்திற்கு வந்திருந்தது. அதனுடைய இலக்கணங்கள் எனக்குப் புரியவில்லை. இந்தப் பொருள் எரிந்து கொண்டே தோலில் ஒட்டிக் கொண்டால் அதை அகற்ற முடியாது. அந்தப் புகைப்படத்திலுள்ள பெண் பதினெட்டு மாதங்களான ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தாள். அதன் முகத்தில் கறுத்துக் கருகிக் கொண்டிருக்கும் பகுதியிலிருந்து ஏதோ ஒன்ரைக் கிள்ள முயன்றிருந்தாள். அந்தக் குழந்தை பிறந்து புதிதாக வாழ்வில்ஆடியெடுத்து வைத்த பொழுது அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாளென வியந்தேன். ஒரு வேளை அவளும் தான் கடவுளின் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதாகக் கற்பனைச் செய்திருப்பாள் போலும்.

திருமதி பாசு. இவ்விரு படங்களையும் ஒப்பிடுவது சரியாகாது என எனக்குத் தெரியும். நீங்கள் வாழும் தேசம் பல கோணங்களையுடையது என எனக்குத் தெரியும். இவ்விதமான பைத்தியக்காரத்தனமான நிலக்கு இறங்குவதைக் கண்டு நான் அன்பு வைத்துள்ள மற்றும் அங்கு வாழும் அனேக மக்களும் என்னைவிட மனதுடைந்திருக்கிறார்கள். மேலும் நான் ஒரு வடக்கு அமெரிக்க நாட்டவள் என்பதால் இந்தத் தடுமாற்றத்திலிருந்து விலகிக் கொள்ள முடியாது.ஆனாலும் அவர்கள் தான் காரணம் என நான் கூறமுடியாது. நாஜாமுநூ தான் காரணம் என்றும் கூறக் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளேன். எதிரி யாரென்று உங்களுக்குத் தெரியும். ஒரு வேளை அது நானாகவுமிருக்கலாம்.

நான் வெகு நாட்களுக்கு முன்பு ஒரு முறை இருபது வயதுக் கண்ணோட்டத்தில் என் தந்தையைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். அது ஒரு ஊரிலுள்ள கல்லறையைப் பற்றியதாகவுமிருக்கலாம். அதிலுள்ள வாக்கியங்களாவன:

'இந்தக் கல்லுக்கடியில் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்த என் தந்தை கிடக்கிறார். வேசி பிள்ளைப் போன்ற இந்த உலகத்தைத் தான் உருவாக்கினோம் என்று அவருக்குத் தெரியவே தெரியாது.' நானும் உலகத்துடன் பிள்ளையாக அல்லாமல் பெற்றவனாக ஒரு நாள் தொடர்புக் கொள்ளக் கூடுமென எனக்கு அன்று தோன்றவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பு என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. பொறுப்பு என்பது மிகவும் விரிவான பொருளுடைய சொல். ஒரு கண்டம் என் முழு உலகமும் தானியங்கிகளாக சுற்றுவதைப் போல் தோன்றுகிறது. சக்கரங்கள் சுழலுகின்றன.ஆனாலும் ஒருவரும் தான் சுற்றியதாக ஒட்துக் கொள்ள மறுக்கிறார்கள். ஊர் பேருள்ள மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இச்செயல்களுக்கும் அமெரிக்கக் கதைகளிலிருந்ததாகக் கூறப்படும் இடையர்களின் போலியான இறப்பிற்குமிடையே உள்ள வித்தியாசம் குறைந்து கொண்டு வருகிறது. வனக்களில் படர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கும் கொடி வகைகள் மரங்களின் இடத்தை எடுத்துக் கொள்வதைப் போல. இந்த மனத்தோற்றம் உண்மையை மறைக்கிறது. எல்லாமெ தொலைக்காட்சியில் நடந்தும் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மை இதுவல்ல. அந்த மாலைப் பொழுதில் உங்கள் மகனை போலிசு சுட்டபோது நீங்கள் வலியை சதையில் உணர்ந்தீர்கள்.ஆதலால் உங்களுக்குத் தெரியும்  நாம் நிஜமாக் உணருமுன் வலியை உள் சதையில் உணருதல் அவசியமா? அது அவசியமென நான் நினைக்கிறேன். என் வாழ்வில் பதினைந்து வருடங்களை நான் நாவல் மற்றும் சில எழுத்துகளை எழுதுவதில் கழித்துள்ளேன். நான் எழுத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். 'முதலில் வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை கடவுளிடமிருந்தது.ஆந்த வார்த்தைதான் கடவுள்.' இந்தவிதமான நம்பிக்கை நிறைய எழுத்தாளர்களுக்குள்ளது. மனித உரையாடல்களின் மூலமாகத்தான் நாம் மற்றவருடன் பரிமாறிக் கொள்ள முடியும். வேறு வகையான பரிமாற்றங்களிருந்தாலும் அவை தனிமனுதனுக்கானவை.நாம் அன்பு கொள்ளலாம். நமது குழந்தைகளை அணைத்து றுதலளிக்கலாம். இவை இல்லாவிடில் நாம் வார்த்தைகளில்தான் பிடிபட்டுள்ளோம். இது குறையான வழியானாலும் ஒரே வழியாதலால் நாம் ஒருவருகொருவர் பேச முயற்சிக்க வேண்டும்.

ஆனாலும் நான் டெட்ராய்ட் நகரின் சாலையோரத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த உங்கள் மகனின் படத்தைப் பார்க்கிறேன். உண்மையில் இம்முடிவு இதே வயதான என் மகனுக்கு ஏற்பட்டிருந்தால் பயனுள்ள வேலையாகக் கருதி என்னால் நாவல்களை எழுதிக் கொண்டிருக்க முடியுமா என வியக்கிறேன். இந்தக் கேள்விக்கு என்னால் பதில் கூறமுடியுமெனத் தோன்றவில்லை. நாம் நம் எல்லோரின் குழந்தைகளுக்காகவும் பயப்படுகிறேன்.