தருமபுரி ஒரு பின்தங்கிய மாவட்டம். ஆனால் சாதிவெறியில், தீண்டாமைக் கொடுமையில் மிகவும் முன்னேறியுள்ளது. காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல் என்று அன்பின் வலிமையை, காதலின் சிறப்பை வலியுறுத்தினான் பாரதி. அந்த எட்டயபுரத்தானின் நெஞ்சில் நெருப்பு கொட்டியிருக்கிறார்கள் தருமபுரி சாதிவெறியர்கள். தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் இருக்கிறது நத்தம் குடியிருப்பு. இந்த ஊர் இளவரசனுக்கும் பக்கத்து ஊரான செல்லங்கொட்டாய் ஊரைச் சேர்ந்த திவ்யாவிற்கும் காதல். திவ்யா வன்னிய சமூகம். இளவரசன் ஆதிதிராவிடர். திவ்யாவின் பெற்றோர் இவர்களின் காதலை விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பை மீறி இருவரும் அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். குடும்பங்களுக்குள் சண்டை, இரண்டு ஊரின் சண்டையானது. இரண்டு ஊரின் சண்டை சாதியச் சண்டையானது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. தருமபுரி ஒரு பின்தங்கிய மாவட்டம். ஆனால் சாதிவெறியில், தீண்டாமைக் கொடுமையில் மிகவும் முன்னேறியுள்ளது. காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல் என்று அன்பின் வலிமையை, காதலின் சிறப்பை வலியுறுத்தினான் பாரதி. அந்த எட்டயபுரத்தானின் நெஞ்சில் நெருப்பு கொட்டியிருக்கிறார்கள் தருமபுரி சாதிவெறியர்கள். தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் இருக்கிறது நத்தம் குடியிருப்பு. இந்த ஊர் இளவரசனுக்கும் பக்கத்து ஊரான செல்லங்கொட்டாய் ஊரைச் சேர்ந்த திவ்யாவிற்கும் காதல். திவ்யா வன்னிய சமூகம். இளவரசன் ஆதிதிராவிடர். திவ்யாவின் பெற்றோர் இவர்களின் காதலை விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பை மீறி இருவரும் அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். குடும்பங்களுக்குள் சண்டை, இரண்டு ஊரின் சண்டையானது. இரண்டு ஊரின் சண்டை சாதியச் சண்டையானது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.

இந்த நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள், சாதிக்காரர்கள் சடலத்தோடு சாலை மறியலில் இறங்கினர். உள்ளத்தில் சாதிய வெறுப்போடும் கைகளில் தீப்பந்த நெருப்போடும் நவம்பர் 7 அன்று சாதி வெறியர்கள் நத்தம் குடியிருப்பு, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் பகுதிகளில் ஊரை வளைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
அனைத்து வீடுகளையும் எரித்தனர். பொசுக்கினர். அடித்து நொறுக்கினர். ஈருருளிகளும் ஊர்திகளும் கொளுத்தப்பட்டன. குழந்தைகள் மையம் தரைமட்டமானது. அப்பகுதி தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
 
தருமபுரிப் பகுதியிலிருந்து பெங்களுருக்;கு வேலைக்குச் சென்று கடந்த இருபத்தி அய்ந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணம், செல்வம், பொருட்கள், கனவுகள் அனைத்தும் கருகிப் போயின. அவர்கள் மீள்வதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஒரு சமுதாயத்தை மிதித்துக் கொண்டு மற்றெந்த சமுதாயமும் முன்னேறவே முடியாது. ஏற்றத்தாழ்வுகளைப் பேணி வளர்க்கும் வரையில் இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு உண்மையான முன்னேற்றம் கிடைக்காது.

காதலிக்கும் ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் வேறு வேறு சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால் மட்டும் இந்தக் கொடுமைகள் அரங்கேறவில்லை. நாம் வாழும் சமுதாயம் சாதியச் சமுதாயம். நமது பண்பாடு சாதியப் பண்பாடு. நமது சமயம் சாதியச் சமயம். நமது நாடு சாதிய அடிப்படையிலான நாடு. நமது உளவியல் சாதிய உளவியல். நமது சிந்தனை சாதியச் சிந்தனை. ஊரின் பெயரிலும் திரைப்படத்தின் பெயரிலும் சாதியம் கோலோச்சுகிறதே அது நம்மோடு இருந்து நம்மை நாசமாக்குபவை. லேசாகத் தீ வைத்தால் போதுமானது. பற்றி எரிந்து நம் வாழ்வை நாசமாக்கும். எத்தனையோ சாதிக் கலவரங்கள், மோதல்கள், எரியூட்டல்கள் தமிழகத்தை சுடுகாடாக்கியுள்ளன.  மனித வாழ்வின் தரத்தை மிகவும் கீழிறக்கியுள்ளன.
 
தமிழ்நாடு சாதிய நாடாக மாறிவிட்டது. பார்ப்பனியத்திற்கு எதிராக மிகப் பெரும் போர் தொடுத்த இந்த தேசம் சாதியால் இன்று நாசம். நாம் வழக்கம்போல அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறோம். ஆனால் வாழ்ந்தால் அனைவரும் வாழ்வோம். சாதியைக் கடைப்பிடித்தால் நாம் கடையராவோம். வீழ்வோம். நம்மை வீழ்த்துவதே சாதிப் பிரிவினைவாதிகளின் ஒரே நோக்கம். சாதிமறுப்புத் திருமணத்திற்கு சட்ட ஏற்பிசைவு கொடுத்ததுதான் 1969ல், அறிஞர் அண்ணா ஆட்சியின் முதல் சாதனை. பெரியாரின் வாரீசுகளாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் கட்சி அரசியல்வாதிகள் சாதியம் வளர்ப்பதை இன்றைய பெரியாரியமாகக் கொண்டுள்ளனர். இது பெரியாருக்குச் செய்யும் துரோகம். சில மாதங்களுக்கு முன்பு நம் சாதிக்காரப் பெண்ணை எவனாவது திருமணம் முடித்தால் அவனை வெட்டிக் கொல்ல வேண்டும் என்றார் ஒரு அரசியல் தலைவர். அவர் சொன்னதை அவரின் கட்சித் தலைவரோ மற்ற கட்சிகளோ கண்டிக்கவில்லை. இன்று நடைபெறும் (அ)தருமபுரி சாதிய மோதல்களுக்கு சாதிவெறி கட்சிகள் பொறுப்பேற்கப் போவதில்லை.
 
அரசியல் கட்சிகள் சாதிவெறியைத் தூண்டிவிடுகின்றன. சாதியைத் தூண்டிலாக்கி சாதிக்கின்றனர். சாதியமே அரசியல்வாதியின் மூச்சுக் காற்றாக உள்ளது. இலங்கையில் இனமோதலை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடும் கேடு கெட்ட அரசியல்வாதிகளைப் போன்றுதான் தமிழ்நாட்டில் சாதிய மோதல்களால் ஆதாயம் தேடுகின்றனர். நரகலில் நல்லரிசி பொறுக்குவோர் சாதி வெறி மூட்டுவதைத் தங்கள் சாதனையாகக் கருதுகின்றனர்.

சாதி, மத வேறுபாடற்ற தமிழ்ச் சமுதாயம் என்ற கனவு நனவாகும் நிலை தள்ளிப் போகிறது. நம்பிக்கை ஆண்டில் சாதியை, தீண்டாமையை ஒழித்துக் கட்ட அனைவரும் முன்வர வேண்டும். ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் மற்ற சாதிகளுக்குச் சேவை செய்ய முன்வரவேண்டும்.  அதுவே காந்தியின் பாதை. இயேசுவின் பாதை. புத்தனின் பாதை. எல்லாப் புனிதரின் பாதை. நல்ல சமாரியன் பாதை. நம்மை நல்வழிப்படுத்தும் பாதை. 'விதியே! விதியே! தமிழச் சாதியை என் செயக் கருதியுள்ளாய்?' என்று பாரதி பதைபதைத்தான். இன்று அந்தப் பதைபதைப்பு பன்மடங்கு பெருகியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் வளமான எதிர்காலம் கேள்விக்குறியாக்கியுள்ளது. சாதியத்தால் தமிழகம் தாழும். வீழும். தகரும். தீர்க்கதரிசனமாக பாரதி இதை அறிந்துதான் விதியோடு மோதினான். சாதியம் நம் தலைவிதியாக ஒருபோதும் மாறிவிடக்கூடாது என்று அவன் கவிதைச் சாட்டையைக் கையில் எடுத்தான். சாம்பல் நிறத்தொரு பூனை என்று கவிதை படைத்தான். எந்த நிறத்துப் பூனை என்றாலும் அது எங்கள் வீட்டுப் பூனை என்றான் பெருமிதம் பொங்க. எல்லோரும் ஓர் குலம்! எல்லோரும் ஓர் நிறை! எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்று முரசறைந்தான். அந்தப் பாரதியை நாம் காட்டிக் கொடுக்கிறோம்.
 
சாதியாவதேதடா! சமயமாவதேதடா! சாதியும் சமயமும் மனத்துள்ளே! என்றான் சித்தன். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்றான் வள்ளுவன். நல்ல சமாரியனாய் இரு என்றார் இயேசு. இன்று அனைவரின் அறவுரை மறந்து முட்டுச் சந்தில் நிற்கிறோம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. இன்னுமொரு சாதிய மோதல் வேண்டவே வேண்டாம். பிறப்பில் அனைவரும் சமம் என்பதை ஏற்போம். சமத்துவ தமிழ்ச் சமுதாயம் படைப்போம்.

______________________________________________________________________
“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு
 நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”
______________________________________________________________________

"Philip Sudhakar" : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அனுப்பியவர்: ஆல்பேர்ட் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.