மே-15. உலகக் குடும்ப தினம்.

Sunday, 22 May 2016 00:04 -ப.கண்ணன்சேகர், திமிரி - கவிதை
Print

மே-15.  உலக குடும்ப தினம்.

உறவினைப் போற்றிடு!  உணர்வினைப் பகிர்ந்திடு!
உண்மையைப் பேசிடு!  ஒற்றுமை கொண்டிடு!
அறத்தினை வளர்த்திடு! அன்பினைப் பகிர்ந்திடு!
ஆதரவு தந்திடு!  ஆனந்தம் கண்டிடு!
பறவையைப் பார்த்திடு!  பாசத்தைக் கற்றிடு!
பகிர்ந்திட வாழ்ந்திடு!  பட்டொளி வீசிடு
பிறவியின் பயனெடு!  பிரிவினை மறந்திடு!
பிளவினை தடுத்திடு! பெருமையைக் காத்திடு!

மக்களை சேர்த்திடு!  மகிழ்வென வாழ்ந்திடு!
மலரென பூத்திடு!  மணமென வீசிடு!
சிக்கலை தீர்த்திடு!  சிரித்திட பழகிடு!
செல்வத்தைச் சேர்த்திடு!  சிறப்பென வாழ்ந்திடு!
அக்கரைக் காட்டிடு!  அவனியில் கூடிடு!
ஆன்றோரைத் தொழுதிடு! அகலென ஒளிர்ந்திடு!
ஊக்கத்தைக் கொண்டிடு!  ஒற்றுமை காத்திடு!
உற்றோரை சேர்ந்திடு!  உரிமையைக் கொண்டிடு!

கொடுத்திட பழகிடு!  கூடியே உண்டிடு!
கொள்கையை வகுத்திடு! கொடையினை நல்கிடு!
உடுக்கையின் உணர்வோடு  இடுக்கனை களைந்திடு!
உண்மையின் அன்போடு உறவினை இணைத்திடு!
துடுப்பது அலையோடு துயரத்தை கடந்திடு!
துடிக்கின்ற அன்போடு தொய்வின்றி தொடர்ந்திடு!
குடும்பத்தைக் காத்திடு!  குழப்பத்தை தவிர்த்திடு!
குடியினை ஒழித்திடு!  குலத்தினை போற்றிடு!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Sunday, 22 May 2016 00:09