கவிதை: விடைகிடைக்கா வினாக்கள்: ஏன்? ஏன்?? ஏன்???

Monday, 01 August 2016 20:04 --பேராசிரியர் கோபன் மகாதேவா-- கவிதை
Print

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஏன் என்னாள்
தேன்நிலவைத் தோற்கடித்து
வெள்ளிவிழா தினத்தன்று
கள் போல் இனித்தார்?
மீன்போல் சுவைத்தார்?

பின் அன்னார்
பொன்விழா நிலவன்று
இன்னும் கூடி இன்சுவைத்தார்?? 
ஏன்

அன்றிருந்து மூன்றாண்டு
சென்று முடியுமுன்னர்
சென்றே ஒழிந்தார்???

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Monday, 01 August 2016 20:07