பா வானதி வேதா. இலங்காதிலகத்தின் கவிதைகள் இரண்டு!

Friday, 31 January 2020 10:54 - பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க் ) - கவிதை
Print

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1. அவுஸ்திரேலியா காட்டுத் தீ..

கஞ்சாச் செடிகளைப பாதுகாக்க பற்றைகளுக்கு
அஞ்சாது   தீயிட்டாராம்   ஐம்பத்தோரகவை   மூதாளன்
பஞ்சபூதத்திலொரு அக்னி பகவான்
ஆச்சு(தோ) பாரென்று நெருப்பு யாகம் நடத்துகிறான்.

உருவம்,  உறக்கமில்லா  அழிப்பே    தீ!
கருவான நெருப்பைப் பற்ற வைத்தவனெங்கே!
பாகாசுரப் பசியில் சாம்பலாக்குவது  உன்திறமை!
நெருப்பு நடனம் நீரிற்தானே  அழியும்!

ஆவணியிலிருந்து (2019) குவீன்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ் பகுதிகளில்
ஆங்காரமிடும் நெருப்புப் புயல்    அவுஸ்திரேலியாவில்.
இயற்கைக்  கோர தாண்டவம் உச்ச கட்டம்!
மயற்கைப் பதட்டத்தில் மக்கள் வேதனையில்!

கடந்தமாத ஐம்பது பாகை வெப்பம் ஆகுதியாகி
கோடிகள் ஐம்பதிற்கும்  மேலான உயிரிழப்பு!
பத்து இட்சம்  கெக்டார் பரப்பளவு நிலம்
பல்லுயிரினம், நானூறுக்கும் மேலான வீடுகள் பாழ்.

தீயணைப்பில் மூவாயிரத்து ஐநூறுவர்,
தீராது பலநாட்டுக் குழுக்கள் தியணைப்பில்
பதினெட்டுப் பேர் உயிரிழப்பும், உலகில்
பெரிய பவளக் கற்பாறையும் அழிகிறதாம்.


2. இமயமலை கைலாசம்

வெண் பனிப்போர்வையில் மல்லிகை மெத்தை
கண் தெற்காசிய மக்களின் கலாச்சார உரு
திண்ணெனும் இந்தியாவின் வடஎல்லை இயற்கையரண்
வண்ணமிகு  உலகின் மகா சிவலிங்கம் கைலாசமாம்.
சிவன் திரிபுரமெரித்த போது இமயம் வில்லானதாம் (பரிபாடல் திரட்டு)
சித்தியாக மனிதனாக்கிய  பிரமிட், இயற்கையானதல்லவாம்.
சிறியது கைலாசம் ஆறாயிரத்து  அறுநூற்றிமுப்பத்தெட்டு மீட்டர்.
சிலர் எண்ணாயிரத்தெண்ணூற்றுநாற்பத்தெட்டு எவறெஸ்டை எட்டியுள்ளனர்.

கைலாசத்தினருகில் ஆனந்தகிரியெனப்பட்ட நந்திமலை உள்ளதாம்.
யோகநந்தீசுவரர்   இங்கு   தவமியற்றியதால்   நந்திமலையானதாம்.
நந்திமலையில்   ஐம்பதடியிலிருந்து  இருநூறடி   வரை
விந்தையாக செதுக்கிய சிலைகள், சொரூபங்கள் காணலாம்.
வெறும் கற்களாலுருவான கற்பாறை கைலாசாவில்
வெக்கையான புறவிசை, கதிர்வீச்சு  நிலவுகிறதாம்.
எர்னஸ்முல்டர்சேயின் ஆய்வின்  படி  மேருமலை
கைலாசா ஒரு அறிவியல் அதிசயமென்கிறார் (1996ல்).

உயிருடன் திரும்புவதில்லையாம் மேலே ஏறுவோர்
இருபது நாட்களுக்குரிய முடி, நக வளர்ச்சியடைகின்றனர்.
சலிப்பான மனநிலை பெற்றுஒரு வருடத்திலிறக்கிறார்.
மலையேறியோர் மிகவேகமாக முதுமையடைகின்றாராம்.
பறக்கும் தட்டுத்தளமாக கைலாசத்தினடி உள்ளதாம்.
இராட்சத உப்பு நீரேரி, மானசரோவர் நன்னீரேரியுமுள்ளது.
சீனா   திபெத்தை   ஆக்கிரமித்தது  (1959)
இந்தோ சீனா ஒப்பந்தப்படி யாத்திரை மறுபடியுயிர்த்தது.(1981)

சமண, புத்த, இந்து புண்ணியதலமிது.
கடவுளின் நகரம் கைலாசத்தைத் தரிசித்தவர்கள்
சுந்தரர், சேரமான், காரைக்காலம்மையார்; இராமர் பலர்.
சுற்றிவர எழுமோசை மலைக்குள் மக்கள் வாழலாம் என்கின்றனர்.
சிந்து, பிரம்மபுத்திரா, சடலெட்ஜ்  புனிதஆறுகளாம்.
இந்திய சமவெளி திபெத்திய  மேட்டுநிலத்தைப் பிரிக்கும் 
மேகம் கொஞ்சும் மலைத்தொடராண்டுக்கு 5.5மீட்டர் உயருகிறதாம்.
இமயம் பூட்டான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தானுடன் பரவியது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Friday, 31 January 2020 11:15