எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம்

ஜனவரி. 28, 2020
எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமடைந்தோம். கடந்த 2018 ஆம் ஆண்டில்தான் அவர் தனது மனைவியையும் இழந்திருக்கிறார் என்பது தெரிகிறது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் 1972 காலப்பகுதியில் அட்டனில் நடத்திய மாநாட்டில்தான் அவரை முதல் முதலில் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் இலக்கியப்பிரவேசம் செய்தவர்களில் அவரும் ஒருவர். குறிப்பிடத்தகுந்த மலையக படைப்பாளி. கொடகே விருதும் கிடைக்கவிருந்த தருணத்தில் - அவரது மற்றும் ஒரு நூல் வெளியாகவிருக்கும் வேளையில் அதனையெல்லாம் பார்க்காமல் விடைபெற்றுள்ளார்.

தொலைவில் இருப்பதனால், மல்லிகை சி. குமார் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளமுடியாமல், மின்னஞ்சல் வாயிலாக எனது ஆழ்ந்த அனுதாபங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இலக்கிய நண்பர்கள் மேமன்கவி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லியப்பு திலகர் ஆகியோர் வெளியிட்ட அனுதாபச்செய்திகளை படித்தேன். உங்கள் துயரத்தில்  பங்குகொள்வதுடன், மல்லிகை சி. குமாரின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். எமது இலக்கிய சகோதரனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அன்புடன்

முருகபூபதி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.