- சுப்ரபாரதிமணியன் -

25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”  ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்)

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பெங்களூர் இறையடியான் ( மொழிபெயர்ப்புக்காக ) அவர்களூம் திருமதி ஜெயந்தி சாகித்ய  அகாதமி பெங்களூர் அலுவலரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெயந்தி அவர்களும் திருப்பூர் இலக்கிய விருதை பெங்களூரில் நடைபெற்ற கன்னட - தமிழ்  கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கினர். எழுத்தாளர்கள் குறித்து கன்னட பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான மலர்வதி அறிமுகப்படுத்தினார். சாகிதய அகாதமியின் கவுரவ இயக்குனர் ( மொழிபெயர்ப்பு ) விஜய் சங்கர், சுப்ரபாரதிமணியன், நந்தவனம் சந்திரசேகர் . சாகிதய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற  ஸ்ரீதர பனவாசி., பேரா. மா.தா கிருஷ்ண்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். RT நக்ர, பால்பவ்னில் 25/12/19 அன்று நிகழ்ச்சி நடைபெற்றது

விருது பெற்ற பெங்களூர் எழுத்தாளர்கள்:

1. சி. சரவண கார்த்திகேயன் (  ஆப்பிளுக்கு முன்-நாவல் )
2. கே. நல்லதம்பி ( ஓடை-மொழிபெயர்ப்பு )
3. ஜெயா வெங்கட்ராமன் ( அந்த 30 மணி நேரங்கள் -சிறுகதைகள் )
4. இராம இளங்கோவன்(குழந்தைகளுடன் குழந்தைகள்- சிறுகதைகள் )
5. கரு தமிழாழன் –மரபுக்கவிதை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.