சுப்ரபாரதிமணியன்* ஏப்ரல் மாதக்கூட்டம் 1/4/18.ஞாயிறு  மாலை நடைபெற்றது ..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர். துருவன் பாலா தலைமை வகித்தார் .முன்னிலை: தோழர்கள் எம்.இரவி..,பிஆர் நடராசன்.

“  நொய்யலைக் காப்பதில் பனியன் முதலாளிகள், அரசு அக்கறை காட்ட வேண்டும். நொய்யலைக் காப்பது  பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதில் எழுத்தாளார்களின் பங்கும் அவசியமானது ”  என்று எழுத்தாளர்  காசு வேலாயுதம் பேசினார்.

* நொய்யல் இன்று – கட்டுரைநூல் – எழுதிய கோவை கா.சு. வேலாயுதம் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நூல்கள் வெளியீடு :.* ரமேஷ்குமார் – இந்திக்கதைகள் “ ரஜியா “ நூலை சுப்ரபாரதிமணீயன் வெளியிட  நாக முத்துவேல் ( பேராசிரியர் காரைக்குடி அழகப்பா அரசுக்கலைக்கல்லூரி , காரைக்குடி )  மற்றும் பழனிவேல் ( இந்திப்பேராசிரியர்  பார்க்ஸ்கல்லூரி திருப்பூர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

* புகைப்படக்கலைஞர் வேணுகோபால்*  பிர்தவுஸ் இராஜகுமாரன்– “ ரணங்கள் “ நாவலை வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார்
* நெசவதிகாரம் –  கவிதைகள் -சே. சீனிவாசனின் நூலை சுப்ரபாரதிமணீயன் வெளியிட இயக்குனர் துசோபிரபாகர், தாய்த்தமிழ்ப்பள்ளி தங்கராசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

.* சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த - ஒடியக்கவிதைகள்   ” கான்சிபூரின் நிலவு  “ நூலை எழுத்தாளர் காசு வேலாயுதம் வெளியிட தொழிற்சங்கத் தலைவர்  பிஆர் நடராசன் (  ( பி ஆர் நடராஜன் , தொழிற்சங்கத் தலைவர், தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள்  சமீதி தலைவர் , திருப்பூர் ) மற்றும்  ஏவிபழனிச்சாமி பொருளாளர் ( தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.          திருப்பூர்  மாவட்டம் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உரைகள் : படைப்பு அனுபவம்

* நொய்யல் இன்று – கட்டுரைநூல் – எழுதிய கோவை கா.சு. வேலாயுதம் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்
* நூல்கள் அறிமுகம் .:  கா.ஜோதி, கீழ்க்கண்ட நூலகளை அறிமுகம் செய்தார் .“:மதுமிதா ( வேமனமாலை, மொழிபெயர்ப்பு), தமிழோசை விசயகுமார் (திருவாங்கூர் தமிழர் உரிமைப்போராட்டம் , மொழிபெயர்ப்பு), அருண்பிரகாஷ் ( செவ்வானமும், நீலக்கடலும்-நாவல் ) , த.தமிழரசி (சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளில் வாழ்வியல் -ஆய்வு நூல் )

* உரைகள் : முதல் நாவல் அனுபவம் - திருப்பூர்  சம்சதீன் ஹீரா பகிர்ந்து கொண்டார்

*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட இலக்கிய இதழ்கள் அறிமுகம் செய்யப்பட்டன: அம்ருதா, உயிர் எழுத்து, கல்வெட்டு பேசுகிறது

மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பில் கனல், துருவன் பாலா, ஜோதி . துசோபிரபாகர், சாமக்கோடாங்கி ரவி ஆகியோர் பங்கு பெற்றனர். துருவன் பாலா நிகழ்ச்சியை தொகுத்தளித்தார் ...கருத்துரைகள் வழங்கப்பட்டன .    செய்தை : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.