-  முனைவர் ஆர். தாரணி -1. விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி - சோலை மாயவன் : ஆங்கில மொழியாக்கம் முனைவர் ஆர். தாரணி -

பனைமரத்துக் கள்
பன்றிக் குடல்
சுருட்டுப் பீடி
கருப்பட்டி கலந்த பொங்கல்
வானத்தைப் பிளக்கும்
கொம்பின் பேரிசை
பம்பை உடுக்கையில்
மிளிரும்
கொண்டாட்டத்தின்
உச்சபச்ச அலங்காரம்
எம் வயற்காட்டின்
தேசம் முழுவதும் பரவும்
பெண்கள் சமைத்த
பொங்கலின் அதீத ருசி
இவைகள் ஏதுமற்றுப்போன நிலத்தில்
தனித்து அலைகிறான்
அடிமாட்டு விலைக்கு
வயற்காட்டை விற்றபின்
சாத்தான் எனும் பெயரால்
என் முப்பாட்டன்

The blood flowing through the fingers of the voiceless soul

- Solai Mayavan ;
-- Translated by Dr. R. Dharani  -

Palm tree toddy
Pig intestine
Cheroot cigar
Black jaggery added sweet dish (pongal)*1
The sky-smashing instrumental music of the
Acoustic Horn (kombu) *2
The paramount embellishment of the
Celebrations flashing in the resonance of
Pampai damaru *3
The unfurling of the aroma of the
Most delicious
Pongal dish prepared by women
In my farming field
In such a land which is now deprived of
All these,
My fore-father with the name Satan
Wanders abandoned,
After selling the land for the cut-price.

Notes: 1. * A kind of sweet dish usually prepared with raw rice, moong dal, jaggery and ghee to be offered to the
Deities at the time worship or festival or some local celebrations
2, * It is one of the ancient instrument of the Tamil clan. In the ancient times, during the rule of the monarchs, it was
blown louder to announce the victory of the monarch. It is a symbol of prosperity and jubilation.
The darmru is also a symbol of sound. Sound is rhythm and sound is energy.
3. * Another ancient musical instrument held in hands and acts like the sound of a drum in popular culture. It is
associated with Lord Shiva in Hindu Mythology.


2. விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி - சோலை மாயவன்

இரு கரைகளையும்
நிரப்பிச்செல்லும்
நீராலான நதியைக்
கடக்கும் - ஒரு
பறவையின்
சிறகில் தெறிக்கும் பதைபதைப்பில்
நீயும் - அதன்
கால்களில் வதைபடுகின்ற
மீனாக நானும்
வாழ நேரிடுகிறது
எல்லா ஊர்களிலும்.

The blood flowing through the fingers of the voiceless -- Solai Mayavan ; -- Translated by Dr. R. Dharani  -

You are like the anxious flutter
of a bird’s wings
that crosses the wide river
with water flowing to reach
both the banks – And
I am the fish
that is tormented by the
bird feet –
we ought to survive as this
in all our dwelling villages

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.