ஆய்வு: பழந்தமிழ் இலக்கியத்தில் நீர்

Wednesday, 06 February 2019 21:13 - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 - ஆய்வு
Print

முன்னுரை
பழந்தமிழ் இலக்கியத்தின் இமயம் போல இருப்பது சங்கப்பாடல்களே. காதலை   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -யும் வீரத்தையும் நாணயத்தின் இருப்பக்கங்களைப் போன்று சங்கப் பாடல்கள் உள்ளன. காதல் பாடல்கள் அனைத்தும் அகப்பாடல்கள் என்றும் போர்ப்பாடல்கள் புறப்பாடல்கள் எனப் பிரித்துச்சொல்லப்படுகின்றன. மனித வாழ்க்கையில் இயற்கைக்கு நிகராக இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை உணரமுடிகின்றன. நீரின் தன்மையைப் பற்றி பல்வேறு பாடல்களின் மூலமாகப்புலவர் பெருமக்கள் கூறியுள்ளார்கள். தம் பாடலடிகளின் மூலம் கூறிய செய்திகளை சங்க இலக்கிய நூல்கள் மூலமாகக் கூறியுள்ளார்கள். பருவநிலையேற்றப் போல நீரின் தேக்கத்தைப் பற்றியும் இயற்யையாக உருவாக்கும் மழை நீர் தன்மையையும் பற்றியும் மனிதனின் ஆக்கப்பூர்மான ஓவ்வொரு செயலுக்கு இன்றியாமையாக ஒன்றாக நீர். நீர் பற்றிய செய்திகளை பழந்தமிழ் நூலின் அடிகளின் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரை நோக்கமாக முற்படுகிறது.

ஐம்பூதங்கள்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஐம்பூதங்கள் சமநிலையில் இருக்குமாயின் எந்த விதமானப் பாதிப்புகள் எப்போதும் மனிதனுக்கு வருவதில்லை. இயற்கையின் அமைப்பு ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பவற்றைச் சார்ந்தது. இங்கு மக்கள் நிலத்தை நிலமகள் என்னும் புவிமடந்தை என வழிபட்டனர். திருமகள் பற்றி கூறுவதை,

வரிறுதல் எழில்வேழம் பூநீர் மேல்சொரிதர
புரிநெகிழ் தாமரை மலர் அம்கண் வீறு எய்தி
திருநயந்து இருந்தன்ன தேம்கமழ் விறல் வெற்ப (கலித்.44:5-7)

என கபிலர் கலித்தொகைப்பாடலடிகளின் வழியாகச் சுட்டுகின்றார்.

நீர் என்பதும் இயற்கையின் மற்றொரு முக்கியக் காரணியாகும். கடலைச் சேரும் ஆறுகளை எல்லாம் தெய்வமாக எண்ணி மக்கள் வழிபடுகின்றனர். மக்கள் ஆறுகளுக்கு பெயர் வைத்து கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, கோதாவரி, கிரு~;ணா, காவிரி, வைகை முதலியன ஆறுகளெல்லாம் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து இருந்துள்ளன. கங்கையைத் தன் தலையில் சூடியவர் சிவன் என்பதை,

அமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலித்.38:1)

என்ற பாடலடியின் மூலமாகக் கலித்தொகைக் கூறுகின்றது.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டி, அணங்குகள் (தெய்வங்கள்) காவல் புரிந்ததாக மக்கள் நம்பியுள்ளனார். அணங்கு மூலமாகச் சொல்லுகின்ற போது மக்கள் தவறாக ஏற்படுத்த மாட்டார்கள் என்ற சூழல் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். நீர் மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் உண்பதற்கு நீர் எடுத்தனர். எந்தொரு நோயினை வராமல் இருக்க பிறச்செயல்பாடுகள் அங்கு நிகழாமல் பாதுகாத்தனர். தெய்வங்கள் தங்கும் குளிர்ந்த நீர்த்துறையை,

 

அணங்குடைப் பனித்துறை (ஐங்குறு.174:1)

என ஐங்குறுநூற்றுப்பாடலடியின் வழியாக நீர்த்துறைச் சொல்வதை அறிய முடிகின்றது. உணவாக நீரை உபயோகிக்கப்படுத்த எடுக்கும் நீர்த்துறையை அணங்கு இருந்ததை, 

“உண்டுறை அணங்கு” (ஐங்குறு.28:1)

என்ற பாடலடியின் ஐங்குறுநூறு பாடல் மூலமாக விளங்குகின்றது. 

நீர்த்துறை மக்கள் வணங்கியும் தொழுதும் வாழ்த்தியும் கூறுவதை,
அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி
யாவும் ஆயமொடு அயரும் (அகம்.240:8-9)

என எழுஉப்பன்றி நாகன்குமரானார் தம் பாடலடிகளின் மூலமாகத் தெரிவிக்கின்றார். நீர்த்துறை வணங்கி வந்திருந்தாலும் அதற்காகக் காணிக்கையாகத் தாம் வளர்த்து வந்த கிடாய் (ஆடு) வெட்டி நீர்த்துறை தெய்வமாக வழிபட்டதை,

நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி (அகம்:156:14-15)

என ஆவூர் மூலங்கிழார் அகநானூற்றுப் பாடலடிகளின் மூலமாகக் கூறுகின்றார்.

மலையின் நீர் ஆதாரங்கள்
உயர்ந்த மலையின் சாரலில் ஒளிபெற வீழ்கின்றது அருவி தூய்மையானது. நீர் களிற்றின் மீது எடுக்கப்பட்டக் கொடியைப்போன்று அழகுண்டாக இழியும் அருவிகள் பொருந்திய மலையின் சாரலும். அவ் அருவியிலே இருக்கின்றது என்பதை, 

களிறணி வெல்கொடி கடுப்ப காண்வர 
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி 
நேர்கொள் நெடுவரைக் கவாஅன் (அகம்.162:22-24)

என பரணர் தம் பாடலடிகளின் மூலமாகக் கூறுகிறார். அருவி விழும் ஓசையானது போர்ப்பறை முழக்கம் போல் கேட்பதாக அமைந்த பாடலடிகள் இடம் பெற்றுள்ளன. இதனை,

வலம்படு முரசின் இரங்குவன விழுஉம்
அவ்வெள் ளருவி (பதிற்று.78:1-2)

என பதிற்றுப்பத்துப் பாடலடிகளின் வாயிலாக அறியமுடிகின்றது.

மழைக்காலத்துக்குப் பிந்தியது வாடையாதலான் வற்றிச் சிறிதாக ஒழுகும் அருவியாதல் கருதி பாம்பின் உரித்த தோல் போன்ற உருவமுடையது என்பதை,

பாம்பின் . . . . . . . . . .
தூங்குதோல் கடுக்க தூவெள் அருவி (குறுந்.235:1-2)

அருவியானது பாம்பின் உள்ளது என்பதை மாயெண்டானார் பாடலடிகளின் மூலமாகச் சித்திரிக்கின்றார்.

சுனைகள் நீர்
சுனை நீர் என்பது இயற்கை நீர் நிலைகளுள் ஒன்றாகும். மழைக்காலத்துப் பெய்த மழைநீரைச் சேமித்து வைக்கும் நீராதாரம் ஆகும். சுனையிலுள்ள நீரானாது மலையின் வாழ்க்கை நடத்தும் விலங்கினங்களுக்கு அம்மழையின் நிறைந்த வகையில் உள்ளது. சுனையினது தோற்றம் கள்ளைப் பெய்த நீலக்குப்பிகளைப் போன்ற சிறிய வாயையுடைய சுனையின் கண் உள்ளனவாகிய பிளந்த வாயை உள்ளத்தை,

மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன 
இட்டுவாய்ச் சுனை (குறுந்.193:1-2)

என பாடலடிகளின் மூலமாக அரிசில் கிழார் சுட்டுகின்றார். 

சிறுசிறு சுனைகள் பல மலைமீது காணப்படுவது எறும்புப் புற்றுப்போல் இருந்ததாகப் பாடலில் இடம் பெற்றுள்ளதை. 
எறும்பி அளையின் குறும்பல் சுனை (குறுந்.12:1)

என குறுந்தொகையின் பாடலடியின் மூலமாக ஓதலாந்தையார் காட்டுகின்றார்.

இயற்கையரண்
வாழ்க்கைச் சூழலில் மரங்களை தம் வீட்டின் வேலியாகவும், ஊரைச் சுற்றியும் தான் மக்கள் வளர்த்து வாழ்ந்துள்ளன. இவ்வேலியான மரங்களை விலங்குகளிடமும். பகைவரிடமும் இருந்து மக்களைக் காத்துக் கொண்டிருந்துள்ளன. மரங்கள் செறிவாக இருந்தமையால் நீர் வளம் எப்பொழுதும் குறைபடாது என்பதை அறிந்தன. சில பொழுதுகளில் நீரே மக்களின் இயற்கை வேலியாக இருந்ததும் இலக்கியத்தில் காணமுடிவதை. 

வேரல் வேலி . . . . சாரல் நாட (குறுந்.18:1)

காந்தள் வேலி ஓங்குமலை நன்னாட்டு (குறுந்.76:1)

கண்டல் வேலிக் கழிகுழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை (நற்.207:1-2)

தெண்கடல் நாட்டுச்செல்வன் யான் (நற்.363-2)

முல்லை வேலி நல்லூரனே (புறம்.144:2)

மேற்கண்ட பாடலடிகளின் மரங்களும் நீர்நிலைகளும் ஊருக்கு இயற்கையான வேலியாக இருந்த செய்திகளை புலவர்களின் வாயிலாக அறியமுடிகின்றன.

ஏரிகளும் குளங்;;;;;;;;;களும் முதலியன நிறைந்து மருதநிலத்தை நீர்ப்பாசனம் கொண்டு அழகு மிக்கதாகக்காணப்படும். நீர் நிலைகளில் நீர்த்தாவரங்கள் மிகுந்த காட்சிப்படுகின்றன. நெடுநீர் பொய்கையும், குண்டு; நீர்ப்பொய்கையும் இருந்ததை, 

நறுவடி மாஅத்து விளைந்துரு தீம்பழம் 
நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழுஉம் (ஐங்குறு:61:1-2)

குண்டுநீர் அம்பல் …    (குறுந்.122:1)

என்னும் அடிகளின் மூலமாகப் பொய்கைப் பற்றியச் செய்திகளை அறியமுடிகின்றன.

உலகிற்கு வளமும் வனப்பும் வழங்குவன ஆறுகள். “பழந்தமிழ் இலக்கியத்தில் அடிக்கடி குறிக்கப்படும் ஆறுகளில் காவிரி, சேயாறு, வையை முதலியன சிலவாகும்” என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை இந்நூலின் மூலமாக மு.வரதராசன் கூறுகிறார்.

கூதிர்ப்பருவத்தில் ஆற்றுநீர் கலங்கலாகவும். கோடையில் மணிபோலத் தெளிந்ததும் இருக்கும். இதனை,
கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து

வேனில் அயின் மணிநிறம் கொள்ளும் (ஐங்குறு.45:1-2)

நாடெல்லாம் நீர் வளத்தினை நிறைக்கும் காவிரியின் கரையினைத் தொட்டுக் கொண்டு சென்ற பெருவெள்ளத்தின் ஓடக்கோடலும் மறையும் அளவுக்கு விளங்கிய நீர்ப்பெருக்கம் காட்டுவதை,

நாடார் காவிரிக் கோடுதோய் மலர்நிறைக்
கழையழி நீத்தம்… (அகம்.341:4-5)

என தம் பாடலடிகளின் மூலமாக ஆவூர் மூலங்கிழாhர் குறிப்பிடுகின்றார்.

கடல் நீர்
கடலும், மணலும் பெரும்பகுதியாகக் கொண்டதே நெய்தல் நிலம், சங்க இலக்கியத்தில் கடற்கரை, சோலை, உப்பங்கழிகள், மரங்கள் முதலியவை பற்றிய செய்திகள் பேசப்படுகின்றன. அச்சமுடைய நாவாய் புலால் நாற்றம் வீசும் அலைகளை உடைய பெரிய கடல் நீரின் இடையே பிறந்து கொண்டு போவதை உலகமே கிளர்ந்து எழுவதைப் போன்று விளக்குவதை, 

உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப்போழ
இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய (அகம்.255:1-6) 

என மதுரை மருதனிளநாகனார் பாடலடிகளின் மூலமாகச் சித்திரிக்கின்றார்.

முடிவுரை
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை இயற்கையைச் சார்ந்தே நீர் இருக்கின்றது. மனிதனின் ஐம்பூதங்களின் கொண்டே தம் உடலில் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றன.    இந்த ஐம்பூதங்களின் மிகவும் இன்றியாமையானது நீரும் ஒன்றாகும். கடவுள் முதல் கடல் வரை உள்ள வாழ்வியலை நீரின் கொண்ட தம் வாழ்வு பயணத்தில் முக்கியக்காரணிகள் உள்ளது.  நீர்த்துறை தெய்வமாக வணங்கியும் அதற்கு பலிக்கொடுப்பதும் பழக்கவழக்கமாக இன்று வரையில் பண்பாட்டில் வழங்கியுள்ளதைக் காணமுடிகின்றது.

சுனையானது மலைக்காலத்தில் உயிரினங்களும் காக்கக்கூடிய நீர் தேக்கத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. வாழ்க்கை சூழலியல் நீரைப்பாதுகாத்தும் தம் சுற்றுச் சூழலைக்காத்தும் வருவதைப் புலவர்களின் பாடலடிகளின் மூலமாக பழந்தமிழ் இலக்;கியக்காட்டுவதை இக்கட்டுரையின் வாயிலாக ஆராய்ந்து வெளிக்கொணர முற்பட்டுள்ளது.

முதன்மை ஆதாரங்கள்

1. சங்க இலக்கியம் எட்டுத்தொ
கை - ச.வே. சுப்பிரமணியன்
மெய்யப்பன் பதிப்பகம்
53, புதுத்தெரு, சிதம்பரம் - 01.

2. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை - மு. வரதராசன்
பாரி நிலையம் 
90, பிராட்வே - சென்னை - 08.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் -    - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -

Last Updated on Wednesday, 27 February 2019 17:24