இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2009 இதழ் 116  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கலை!

மீள்பிரசுரம்: நிகழ்வுகள்.காம்
டி.கே பட்டம்மாள் மரணம்

டி.கே பட்டம்மாள்சென்னை - வியாழன் 16 ஜுலை 2009 பிரபல கர்நாடக சங்கீத வித்வான் டி.கே. பட்டம்மாள் சென்னையில் இன்று காலமானார்.
அவருக்கு வயது 90. கர்நாடக இசை உலகின் அரசியாக விளங்கியவர் டி.கே. பட்டம்மாள். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி
மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் கர்நாடக இசையின் முப்பெரும் தேவியராக விளங்கியவர்கள் ஆவர். இவர்களில் பட்டம்மாள் தவிர
மற்ற இருவரும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர்.

பட்டம்மாள் கடந்த 1919ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி பிறந்தார். அவரது தந்தை தாமல் கிருஷ்ணமூர்த்தி. ஆசாரமான பிராமண
குடும்பத்தில் பிறந்த பட்டம்மாளுக்கு அலுமேலு என்பது இயற்பெயராகும். பட்டா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் சிறு வயதிலேயே தனது தாயார் காந்திமதியம்மாளிடம் இசை பயின்றார். ஆசாரமான குடும்பத்தில் பிறந்த அவர் உறவினர்கள் முன்பாக பாடக்கூட அனுமதிக்கப்படவில்லை.

கடந்த 1929ம் ஆண்டு தனது 10வது வயதில் பட்டம்மாள் முதல்முறையாக சென்னை வானொலியில் பாடினார். பின்னர் 13வது வயதில் முதல்முறையாக ரசிக ரஞ்சன சபாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். கடந்த 1939ம் ஆண்டில் அவர் ஈஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கர்நாடக இசைக் கச்சேரிகள் மற்றும் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடி வந்த பட்டம்மாளை திரைப்படங்களில் பாட பாபநாசம் சிவன் அறிமுகம் செய்து வைத்தார். பல்வேறு திரைப்படங்களில் பாட அவருக்கு வாய்ப்புகள் வந்த போதும், பக்தி மற்றும் தேசபக்தி பாடல்களை மட்டுமே அவர் திரைப்படங்களில் பாட முன்வந்தார்.

பாரதியாரின் பல பாடல்களை அவர் பாடி அவை இன்று ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்திய பட்டம்மாள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். பட்டம்மாள் பிரபல சங்கீத் வித்வான் டைகர் வராதாச்சாரியிடமிருந்து கான சரஸ்வதி விருதைப் பெற்றார். கடந்த 1971ம் ஆண்டு பத்ம பூஷன் மற்றும் 1998ம் ஆண்டில் பத்ம விபூஷன் வருதையும் பெற்றார்.

தனது இளைய சகோதரர் டி.கே. ஜெயராமனுடன் இணைந்து பல கச்சேரிகள் நடத்தியுள்ளார். தற்போது பிரபல இசைக்கலைஞராக உள்ள ;நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த டி.கே. பட்டம்மாள் இன்று சென்னையில் காலமானார்.

நன்றி: http://www.nigazhvugal.com/


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்