இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2008 இதழ் 98  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

எதிர்வினை 3: இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை!
- ஜெயமோகன் -

எழுத்தாளர் ஜெயமோகன்அன்புள்ள கிரிதரன், உங்கள் கடிதம். இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை. வெறும் சொற்களாகவே மாறும். இரு தரப்பும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டோம். ஆனால் உங்கள் கடிதத்தில் உள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள்.
1. நான் இலக்கியத்தில் முக்கியமானவர்களாக எண்ணும் முன்னோடிகள், சமகாலபடைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் பற்றி தொடர்ச்சியாகவும் விரிவாகவும் எழுதிவருபவன் என என் வாசகர்கள் அறிவார்கள். என் எழுத்துக்களில் கணிசமான பகுதி அதுவே. அவற்றில் பெரும்பகுதி நூல்களாக்வும் கிடைக்கின்றன. வாசிக்கச்செய்ய என்னால் இயலாதல்லவா?

தமிழ் இலக்கியத் தோட்டச் சின்னம்
2 குழுக் குற்றச்சாட்டு எளிதானது. ஆனால் என் வாசகர்கள் முன் எடுபடாது. கடந்த இருபது வருடங்களில் நான் முன்வைத்து, முக்கியப்படுத்தி, கவனத்தை ஈர்த்து, விவாதித்த படைப்பாளிகளின் பெயர்களை முடியும்போது பட்டியலிட்டுப் பாருங்கள். குறைந்தபட்ச நுண்ணுணர்வுள்ள ஒரு வாசகன் ஒருபோதும் தவிர்த்துவிடமுடியாத எல்லா முக்கியப் படைப்பாளிகளும் அதில் அடங்குவார்கள்.
அவர்கள் மட்டும் அடங்கியதுதான் என் குழுவா? அப்படியென்றால் அது எனக்கு மகிழ்ச்சியே. அக்குழு சாதனைகள் செய்தது, புறக்கணிக்கபப்டுவது. அதைச் சேர்ந்தவன் தான் நான். நீங்கள் வெளியே உள்ள பெரும்பான்மையின் குரல் என்றால் உங்கள் தேர்வு உங்களுக்குச் சரிதான்.

jeyamohan.writer@gmail.com

[இத்துடன் இயல்விருது பற்றிய இந்த விவாதம் முற்றுப் பெற்றது. ஜெயமோகனே கூறியிருப்பதுபோல் கூறவேண்டியதெல்லாம் கூறியாகிவிட்டது.]


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner