இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2011  இதழ் 133  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தகவல் தொழில் நுட்பம்: நேர்காணல்!
தகவல் தொழில் நுட்ப நிபுணர் அஷீவ் ரகுமானுடன் ஒரு சுருக்கமான நேர்காணல்!
'டொராண்டோ' , கனடாவில் தகவற் தொழில்நுட்ப நிபுணராகப் பிரபல நிறுவனமொன்றில் பணியாற்றிவரும் கனடியரான திரு. அஷீவ் ரகுமான் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவருடன் அண்மையில் இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவை மற்றும் பயிற்சி பற்றி உரையாடியபோது அவர் தெரிவித்த கருத்துகளையும், அவர் இத்துறையில் வழங்கும் சேவைகளை பற்றியும் இந்த நேர்காணலில் நீங்கள் அறிய முடியும்.

பதிவுகள்: உங்களைப் பற்றியும், நீங்கள் வழங்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள், அதற்கான வசதிகள் பற்றியும் சுருக்கமாகக் கூறமுடியுமா?

அஷீவ் ரகுமான: 'குளோபல் ஐடி நெட்வேர்க கன்சல்டிங் இங்' (Global IT Network Consulting Inc.) என்னும் தகவல் தொழில் நுட்பத்தின் பல்வேறு துறைகளில் வகுப்புகளை வழங்கிவரும் நிறுவனமொன்றினை நடாத்திவருகின்றோம். எமது நிறுவனமானது பரந்த அளவில் 'நெட்வேர்க்', 'சேர்வர்', 'வேர்க் ஸ்டேசன்' பற்றிய தொழில்நுட்பத்திற்கான சேவையினையும், உதவியினையும் வழங்கி வருகின்றது. அத்துடன் 'ஐபிஎம்- ஏஐஎக்ஸ் யூனிக்ஸ் (IBM AIX UNIX), 'டிபி2 (DB2), 'வெப் ஸ்பெயர்' (WebSphere), 'எம்கியூ' (MQ), 'ஆரக்கிள்' (Oracle), 'கியுஏ' (QA), 'விண்டோஸ்' (Windows), 'ஏக்ஸ்சேஞ் சேர்வர் ' (Exchange Server), 'சாப்' (SAP)  ஆகிய துறைகளில் பயிற்சிகளை உள்ளடக்கிய வகுப்புகளை நடாத்தி வருகின்றோம். இவ்வகுப்புகளுக்கான கட்டணம் இத்துறைகளில் ஏனைய நிறுவனங்கள் வசூலிப்பதுடன் ஒப்பிடும்போது மிகவும் நியாயமானதாகும். $299 , இதுவே மேற் குறிப்பிட்ட வகுப்புகளுக்கான் எமது கட்டணம்.

பதிவுகள்: தற்போதைய தகவல் தொழில் நுட்பத் துறையின் நிலை பற்றிய உங்களது கருத்துகளை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?  'டாட்.காம்'மின் ஆரம்ப நாட்களைப் போல் இன்னும் இத்துறை பலரையும் ஈர்க்கும் வல்லமையுடன் இருக்கிறதா? நீங்கள் குறிப்பிட்ட பாடத்திட்டங்களைப் பயில்வதன் மூலம் மாணவர்களுக்கு நல்லதொரு எதிர்காலமிருக்கிறதா?

அஷீவ் ரகுமான்: தகவல் தொழில் நுட்பத் துறையானது நாள் தோறும் வளர்ந்து வருமொரு துறையாகும். இந்நிலையில் சரியான தகவல் தொழில் நுட்பப் பிரிவினில் அறிவும் , பயிற்சியும் எடுப்பதன் மூலம் ஒருவர் இத்துறையில் மிகவும் விரைவாக வேலையொன்றினை எடுக்கும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. எதிர்காலத்தில் இத்துறையானது இன்னும் அதிகமாக வளரும். இந்நிலையில் இந்தத் துறையில் பயில்வதற்குரிய சந்தர்ப்பங்களை இழப்பதன் மூலம் இதற்கான சந்தர்ப்பங்களை, இத்துறையில் வேலையினைப் பெறும் சந்தர்ப்பங்களை, இழந்து விடாதீர்கள்.

பதிவுகள்: உங்களிடம் இத்துறையில் வகுப்புகளை எடுப்பதன் மூலம் மாணவரொருவர் அடையும் நன்மைகளெவை? உங்களது பயிற்சி அல்லது பாடத் திட்டங்கள் ஏற்கனவே அனுபவம் பெற்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் மாணவர்களுக்கானதா? அல்லது இத்துறையில் எந்தவொரு அனுபவமும் இல்லாத ஒருவரும் பயன்பெறும் வகையில் அவை அமைந்துள்ளனவா? அவ்விதமில்லாவிட்டால், நீங்கள் இத்துறையில் ஆரம்ப வகுப்புகளை வழங்குகின்றீர்களா?

அஷீவ் ரகுமான்: எமது நிறுவனத்தில் இத்துறையில் 10 வருடங்களாகப் பணிபுரியுமொரு நிபுணரால் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன. ஒருவருக்கு ஒருவர் என்னும் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஏனைய கல்வி நிறுவனங்களினால $1800ற்கும் குறையாமல் ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் அறவிடப்படும் தகவல் தொழில் நுட்பப் பயிற்சி வகுப்புகளுக்குத் தற்போது நாம் $299 தான் அறவிடுகின்றோம். நாம் புத்தகங்களுடன் மட்டும் நின்று விடுவதில்லை. உதாரணங்கள் (Examples), மற்றும் நிஜமாக நிறுவனங்களில் ஏற்படக்கூடிய தொழில் நுட்பச் சிரமங்கள், தவறுகளை இனங்கண்டு தீர்க்கும் (Trouble shooting) வகையிலான காட்சிகளை மையமாகக் கொண்டு எமது பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய வகுப்புகள் நிலவும் தகவல் தொழில் நுட்பத்திற்கான வேலைச் சந்தையில் (Job Market) மிகவும் பிரபல்யமானவை. இத்துறைகளில் அறிவினையும், அனுபவத்தினையும் பெறும் மாணவருக்கு வேலைக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பினைப் பெறும் சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. அத்துடன் வேலையினை விரைவாகப் பெறுதற்கும், அதிக அளவு ஊதியத்தினைப் பெறுவதற்குமான வாய்ப்புகளும் அதிகமாகவுள்ளன.

பதிவுகள்: இத்துறையில் கல்வி பயில்வதற்கு மாணவரொருவருக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகைமைகள் எவை?

அஷீவ் ரகுமான்: நாம் இத்துறையில் அனுபவம் உள்ள , அனுபவமற்ற இரு சாராருக்கும் பயிற்சிகளை வழங்குகின்றோம். அடிப்படை (Basic), இடைநிலை (Intermediate), மற்றும் உயர்நிலை (Advanced) ஆகிய தரங்களில் கற்பிக்கின்றோம். அதிகமான சந்தர்ப்பங்கள் ஒருவருக்கு ஒருவரென்னும் அடிப்படையில் வகுப்புகள் இருப்பதால், நூறு வீதம் மாணவர்களை நோக்கியே வகுப்புகள் அமைந்திருக்கின்றன.

பதிவுகள்: உங்களுடன் இப்பயிற்சிகள் அல்லது வகுப்புகள் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ளவேண்டுமென்றால் அதற்கான விபரங்களை வழங்க முடியுமா?

அஷீவ் ரகுமான்: பின்வரும் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றின் மூலம் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்:

மின்னஞ்சல் முகவரி: info@globalit.ca
தொலைபேசி இலக்கம்: (416) 720 - 9743.
இணையத்தள முகவரி: http://www.globalIT.ca


பதிவுகள்: இதுவரை எம்முடன் உங்களைப் பற்றியும், நீங்கள் வழங்கும் தகவல் தொழில் நுட்பத் துறையிலான சேவைகள் பற்றியும் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு அஷீவ் ரகுமான் அவர்களே! நன்றி!

அஷீவ் ரகுமான்: எமக்கு இச்சந்தர்ப்பத்தினை வழங்கியதற்கு உங்களுக்கும், பதிவுகள் இணையத் தளத்திற்கும் எமது நன்றி பல.

பதிவுகளுக்காக செவ்வி கண்டவர்: நந்திவர்மன்


 
aibanner

 ©©©©©©© காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்