இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2009 இதழ் 113  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சமூகம்!
அருட்சகோதரி லூசில்லா: இளவாலையின் கருணைச்சுடர்

நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன்.)


இன்றைக்கு 113 வருடங்களுக்கு முன் இளவாலையில் சிறியதொரு கிராமப் பாடசாலையாக இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மடத் தமிழ் பாடசாலை தோற்றம் கண்டது. இக்கல்லூரி தன் நீண்ட வரலாற்றில் ஆற்றலும், ஆளுமையும் மிக்க மிஷனறிகளின் வழிகாட்டலில் கல்வித் தொண்டிலும், சமயத் தொண்டிலும் தலை சிறந்த கல்லூரியாக திகழ்ந்தது. 1926 ம் ஆண்டில்; இளவாலைக் கன்னியர் மடத்தில் ஆங்கிலப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அடுத்து வலிகாமம் கிழக்கு மேற்கிலிருந்து, பருத்தித்துறையிலிருந்து மாதகல் வரையிலும், பண்டத்தரிப்புஇ கே.கே.எஸ். உட்பட அனைத்துக் கிராமங்களினதும் மிக முக்கிய கல்வி மையமாக இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மடப்பாடசாலை புகழ்பெற்றிருந்தது.

வடக்கில் முதன்முதலாக பெண் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றினையும் இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மடமே ஸ்தாபித்து, வடபுலத்தின் பல தமிழ் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அனுப்பிப் பெருமை பெற்றது.

நீண்ட வலாற்றுச் சிறப்பு மிக்க இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மகாவித்தியாலய அதிபராகப் பணியாற்றி அண்மையில் மறைந்த அருட்சகோதரி லூசில்லா, இளவாலை என்றும் மறக்க முடியாத புனிதப் பெருமகள் ஆவார். வீமன்காமத்தைச் சேர்ந்த கிறிஸ்தோப்பர் தம்பிப்பிள்ளைஇ வசாவிளானைச் சேர்ந்த மரியமுத்து ஆகியோரின் மூத்த புதல்வியாக 1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் திகதி பிறந்த அருட்சகோதரி லூசில்லா 20 வயதில் கன்னியாஸ்திரியாகப் பயிற்றப்பட்டு இறைபணியில் தீவிரமாக செயற்பட்டு வந்தார். பின்னர் மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில பயிற்சி நெறியை முடித்துக்கொண்டு லண்டன் பி.ஏ. பரீட்சைக்குத் தோற்றி முதல் வகுப்பில் சித்தி பெற்றார். இளவாலையிலும்இ மன்னாரிலும்இ கொழும்பு பம்பலப்பிட்டியிலும், கரம்பனிலும், பாஷையூரிலும், சேந்தாங்குளத்திலும் மிகச் சிறந்த கல்விஇ சமயப் பணிகளை அருட்சகோதரி லூசில்லா மேற்கொண்டிருந்தார்.

89 வயதில் மரணத்தைத் தழுவிய அருட்சகோதரி லூhசில்லாவின் 70 ஆண்டு கால வாழ்க்கை பொருள் பொதிந்ததாக, சேவை நலன் கொண்டதாக அமைந்திருந்தது. மகோக்கனி மரங்கள் சூழ்ந்த, போர்கன்விலா பூச்செடிகள் தளைத்து நிற்கும் இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மகாவித்தியாலய வாசலில் தூய வெண்ணிற ஆடையுடன், பளிச்சென்ற புன்சிரிப்போடுகூடி நிமிர்ந்த ஆளுமைகொண்டு நிற்கும் அருட்சகோதரி லூசில்லாவை நான் மனக்கண்ணில் நினைத்துப் பார்க்கிறேன். கண்டிப்பும, கருணையும் நிறைந்த ஒரு அதிபராக அவரை எட்டத்தில் நின்று பார்த்த பாடசாலைச் சிறுமியாக எனது நினைவுகள் விரிகின்றன. மல்லிகை மலரில் பெரு விருப்புக் கொண்ட அருட்சகோதரி லூசில்லா குணத்திலும் மல்லிகையின் சாயலையும், இனிமையையும் கொண்டிருந்தார்.

ஒரு கிராமப் பாடசாலையாக இருந்த எங்கள் பள்ளியை யாழ்ப்பாணத்தின் முதன் நிலைக் கல்விக்கூடமாக உயர்த்தியதில் அருட்சகோதரி லூசில்லா ஆற்றிய பங்கு பொன் எழுத்துக்களால் பதிக்கப்படவேண்டியவை. அருட்சகோதரி லூசில்லா இளவாலைப் பாடசாலையில் காலை நேரத்தில் ஆற்றும் மாணவர் ஒன்றுகூடலின் உரையில் அவரின் ஆங்கில ஆளுமையையும், அறிவுசார்ந்த வழிகாட்டல்களின் பெறுமதியையும் உணர முடியும். பாடசாலையின் ஒருநாள் அவரது அழகிய ஆங்கில உரையோடு அமர்க்களமாகி ஆரம்பமாகும். தமிழ்மொழிமூலக்கல்வி இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் ஆங்கிலத்துவத்தின் முக்கியத்துவத்தை குறையவிடாமல் எங்கள் பாடசாலையின் ஆங்கிலமொழிப் பயிற்சிக்கு மிகக்கூடிய முக்கியத்துவம் அருட்சகோதரி லூசில்லா வலியுறுத்தியிருந்தார்.

ஆங்கிலம், தூயகணிதம், விஞ்ஞானம், ஆகிய பாடங்களோடு ஆங்கில நாடகம், ஆங்கிலக் கவிதை என்றும் அருட்சகோதரி லூசில்லா அக்கறை காட்டினார். ஆங்கிலப் பேச்சுப் போட்டி, பொதுஅறிவுப்போட்டி, ஆங்கிலப் பாடல்கள் ஆகியவற்றை பாடசாலை விளையாட்டு இல்லங்களுக்கிடையே சிறப்புற நடாத்தி மாணவிகள் மத்தியில் ஆங்கிலப் புலமையை வளர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் வெற்றியை அளித்திருந்தன.

பாடசாலை வாத்திய இசைக்குழுவை அமைத்து முக்கிய வைபவங்களில் அந்த வாத்திய இசைக்குழுவின் திறமையை அருட்சகோதரி லூசில்லா மிக அழகாக வெளிப்படுத்தி வந்தார். பாடசாலை வலைப்பந்தாட்டப்போட்டிகள், கலைநிகழச்சிகள் ஒரு காணிவேல் நிகழ்ச்சிகள் போலவே இளவாலையைச் சுற்றியுள்ள வட்டாரத்தின் அனைத்து மக்களாலும் விரும்பிப் போற்றப்பட்டன. அருட்திரு தனிநாயகம் அடிகளார் போன்ற தமிழ் அறிஞர்கள் எங்கள் பாடசாலையில் தொடர்ச்சியாகச் சிறப்புரை ஆற்றிவந்தமைக்கு அருட்சகோதரி லூசில்லாவின் ஈடுபாடே காரணமாகும். 1973 ம் ஆண்டு பிரிட்டிஷ் உயர் ஸதானிகர் எச்.எம்.ஸ்மெட்லி எங்கள் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவின் பிதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தமை இளவாலைக்கன்னியர்மட நினைவில் என்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகும்.

அருட்சகோதரி லூசில்லாவின் வாழ்க்கை முழுவதும் கல்விப் பணியைச் சுற்றியே அமைந்திருந்தது. பாடசாலையின் மாணவர்களின் சிறப்பியல்புகளை நன்கு புரிந்து அவர்களின் அளுமையை வளர்த்தெடுப்பதில் அருட்சகோதரி லூசில்லா தனித்திறமையே கொண்டவராவார். இளவாலைச் சுற்றுவட்டாரம் முழுவதிலும் அருட்சகோதரி லூசில்லாவின் புகழ் வியாபித்திருந்தது. ஏழைக்குழந்தைகளின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்வதை ஒரு இறைபணியாகவே அருட்சகோதரி லூசில்லா கருதி வந்தார். பெற்றோர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் இணைந்து இளவாலைக் கன்னியர்மட மகாவித்தியாலத்தை அபிவிருத்தி செய்ததில் அவரது பங்கு கணிசமானது ஆகும்.

அரசாங்கம் பாடசாலையைக் கையேற்றதின் பின் அரசாங்க அதிகாரிகளுக்கும், கிறிஸ்த்தவ திருச்சபையின் அறிவுறுத்துதல்களுக்குமிடையில் அநாயாசமான சமன்பாட்டைப் பேணியதில் அருட்சகோதரி லூசில்லாவின் தனிஆளுமை பளிச்சிடுகிறது. பாடசாலை அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும் பாஷையூரிலிருந்து சென்ற். சேவியர் ஷெமினறியில் இளம் கத்தோலிக்கத்துறவிகளுக்காக ஆங்கில போதனை வழங்குவதில் அருட்சகோதரி லூசில்லா மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றினார். அதன்பின்னர் அமெரிக்காவில் விசேட பயிற்சிபெற்று நாடு திரும்பிய அருட்சகோதரி லூசில்லாh சேந்தாங்குளத்தில் ஒரு குடும்பசேவை மையத்தை நிறுவி குடும்ப மட்டங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வும்இ ஆறுதலும் தரும் கருணைத் தாயாகத் திகழ்ந்தார். பல்ஆண்டு காலமாக இளவாலைக் கன்னியர் மடத்தின் நிழலில் தன்னை நாடி வந்த அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி சேவை செய்த கருணைத்தாயின் மறைவு உலகெங்கும் வாழும் இளவாலை பெண்கல்வி பெற்றவர்கள் மனதில் என்றென்றும் நினைவு கூரப்படும்.

“ மிகப் பெரும் மனிதர்களின் வாழ்வு எங்களுக்கு நினைவு படுத்துவதெல்லாம்
எவ்வாறு எமது வாழ்வை விழுமியதாக மாற்றி காலப் பெருமணிலில் எங்கள் கால் அடிச் சுவடுகளைப் பதித்து
பிரிந்து செல்வது என்பதைப் பற்றியதே என்ற

எச்.டபிள்யூ..லோங்ஃபெலோ என்ற கவிஞனின் வரிகள் அருட்சகோதரி லூசில்லாவின் வாழ்க்கைக்கு சாட்சியமக அமைகிறது.

அவரின் அறிவு விருட்சத்தில் மலர்ந்த நான், அவரின் இனிய நினைவுகள் சிலவற்றை விரித்து அவரின் ஆன்மாவுக்கு…

லூசில்லா என்னும் தாரகை

நேரான பாதைகளை தவறாமல் சொல்லித்தந்து
கூரான என் சிந்தனைக்கு
வழிகாட்டிக் குடியிருக்கும்
வணக்கத்துக்குரிய லூசி;ல்லா என்னும் தாரகையே!
எத்தனை எத்தனையோ என் இருட்டு மனக்குகையில்
பற்பல தடவை உம்மை தலைவணங்கி நின்றேன் தாயே!


இளவாலைக் கன்னியர் மடத்தில் உயர் கல்வியிலும்
கலகலத்த உங்கள் ஆங்கிலத்தின் சத்தம்…
தனக்கென்ற தனித்த ஆங்கிலத்தை போட்டிகளால் வளர்த்த பாங்கு…
பாகு நிறைந்த இனிப்பைப் போல
அடி மனச் சுவடுகளில் என்னைத் தொட்டு நனைக்கிறது…
அன்பெனும் அகல் விளக்கின் ஆழ் மனதின் தூய் வடிவில்
வெள்ளை உடையில் உங்கள் பூ முகம் எழுந்து நிற்கிறது!


பல்காட்டி பொய்த்துதியால் நன்மை செய்யும் போர்வையிலே
போலிநடை போடாது பள்ளியிலே அன்று நீங்கள்
பரிவுடன் உதவி நடாத்திய சேவைகளும்…
எல்லாரும் எக்குலமும் பிறப்பினிலே சமமென்று
உணர்த்திய உங்கள் உணர்வுதனை என்ன சொல்ல?...


பள்ளி வாத்தியம் இசைமுழங்க மாணவிகள் பின்வரிசை
அணிவகுப்பின் போதனைக்கு என் தந்தை அகஸ்தியரை
அரவணைத்த காட்சி இங்;கே வாழ்க்கையின் அரவணைப்பை
காட்டிவிட்டீர் சோதரியே!


புத்தகமே….கருணையின் தத்துவமே!
செப்டம்பர் ஐந்தில் எங்கே புறப்பட்டீர்…!
எம் நாட்டின் காற்று இதமில்லாமில் இன்று
தடம்மாறி நாங்களிங்கு தங்கியிருந்தாலும்…
நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நாம் இருந்தாலும்…உம்
மல்லிகை மலரோடு சாந்தியுடன் போய்வாரீர்…!


என்ற கவிதையை காணிக்கையாக்குகின்றேன்.

5.1.2009

navajothybaylon@hotmail.co.uk

© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner