இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
தை 2009 இதழ் 109  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!

ஸ்ரீமதி குமுதினி ஸ்ரீகாந்தனின் ரொறன்ரோ கலாபவனத்தின் மாணவி செல்வி யுசிக்கா புஸ்பராஜனின் வியக்க
வைத்த பரத நாட்டிய அரங்கேற்றம்

 - த.சிவபாலு -

“ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்தை அல்ல ஒரு பரத நாட்டியக் கச்சேரியைப் பார்த்த உணர்வே எனக்கு உண்டாகின்றது” – அடையார் பத்மஸ்ரீ கே. இலட்சுமண ஐயர்

ஸ்ரீமதி குமுதினி ஸ்ரீகாந்தனின் ரொறன்ரோ கலாபவனத்தின் மாணவி செல்வி யுசிக்கா புஸ்பராஜனின் வியக்க ஸ்ரீமதி குமுதினி ஸ்ரீகாந்தனின் ரொறன்ரோ கலாபவனத்தின் மாணவி செல்வி யுசிக்கா புஸ்பராஜனின் வியக்க

யாழ்ப்பாணத்தில் கொடிகட்டிப் பறந்தவர் பரதநாட்டிய ஆசான் ஸ்ரீமத் ஏரம்பு சுப்பையா அவர்கள். ஏரம்பு சுப்பையாவிடம் நடனம் பயின்றவர்கள் சிறப்பு மிக்க நடன நர்த்தகிகளாக மட்டுமன்றி நடன ஆசிரியைகளாகவும் திகழ்ந்தனர் திகழ்ந்தும் வருகின்றனர். பரதக் கலையைத் தனது குடும்பக் கலையாகக் கொண்டவர் அவர். அவரின் புதல்வியரிடம் நடனம் கற்றவேண்டும் என்ற ஆவல் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஏரம்பு அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். சாந்தினி, நந்தினி, குமுதினி இவர்களில் கடைக்குட்டிதான் குமுதினி. தந்தையால் கொக்குவிலில் ஆரம்பிக்கப்பட்ட கலாபவனத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றார் மூத்த பெண் சாந்தினி. இளம் வயதில் தனது தந்தையிடமும், மூத்த சகோதரியிடமும் நடனத்தைக் கற்றுக் தமிழ்நாட்டில் அடையார் கே. இலட்சுமண ஐயரிடமும் மெருகூட்டிக் கொண்டவர் கொண்டதோடு தமிழ்நாட்டில் அடையார் கே. இலட்சுமண ஐயரிடமும் மெருகூட்டிக் கொண்டவர் குமுதினி. தந்தையின் சாஸ்திரீய நடன முறையைப் பின்பற்றுபவர்கள் இவதர்கள். ஏனோ தானோ என்று அரங்கேற்றம் செய்ய முன்வராதவர்கள். தங்கள் மாணவர்கள் அரங்கேற்றம் செய்வதற்கு ஏற்ற தரத்தைத் தகுதியைப் பெற்றுள்ளார்கள் என்று கண்டபின்பே அரங்கேற்றம் செய்ய விளைபவர்கள். சாதாரணமாக நடன நிகழ்ச்சிகளுக்கு விழுந்து கட்டித் தமது பிள்ளைகளை அனுப்புபவர்களும் அல்ல. ரொறன்ரோவில் கலாபவனம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குமுதினியால் செய்யப்படும் இரண்டாவது அரங்கேற்றம் தான் இது. இதனைப் பார்க்க அநேக நடன, இசை ஆசிரியர்கள் வருகை தந்திருந்தனர்.

மிக எளிமையான அரங்க அமைப்பு, சாதாரணமான உடையலங்காரம் ஆள்பாதி, ஆடைபாதி என்றல்லாமல் இவை நடன ஆசிரியையின் தன்நம்பிக்கையை எடுத்துக் காட்டுவன. மங்கள விளக்கேற்றி சதங்கைப் பூசை செய்து முறைப்படி ஆரம்பமானது நடன அரங்கேற்றம். சிவஸ்ரீ முருகானந்த (நந்தன்) குருக்கள் சதங்கைப் பூசை செய்து சதங்கையை நடன ஆசிரியரிடமும் நடன ஆசிரியை தனது மாணவியிடமும் கையளித்ததோடு மாதா, பிதா, குரு தெய்வம் நான்கிற்கும் முறையான வணக்கத்தைச் செலுத்தி முதல்மரியாதை செய்தார் நர்த்தகி யுசிக்கா. பெற்றோர், குரு ஆகியோரின் பாதங்களில் விழுந்து வணங்கும் தமிழர் சால்பை இத்தகைய கலை அரங்கேற்றங்களிலும், திருமண வைபவங்களிலுமே காண முடிகின்றது. இந்தப் பண்பாட்டை வேற்றினத்தினரும் பார்த்து பெருமைப் படும் ஒன்றாக எம் எதிர்காலச் சந்ததியினருக்கு காட்டி வரும் நடன, இசை ஆசிரியர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்களே.

றைசன் பல்கலைக்கழக மாணவியான செல்வி யுசிக்கா பரதக் கலையை மூன்று ஆசிரியைகளிடம் கற்றுள்ளார். கொழும்பில் சிறிதுகாலம் திருமதி சாமினியிடமும், கனடாவில் திருமதி செந்தில்செல்வி சுரெஸ்வரனிடமும் கற்றுக்கொண்டவர் பின்னர் குமதினியிடம் கற்று அரங்கம் கண்டுள்ளார். இவர்கள் மூவரும் நடன ஆசான் ஏரம்பு சுப்பையா அவர்களின் கைவண்ணத்தில் உருவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 14 ஆண்டுகள் பரதக் கலையை நன்கு கற்றுள்ளார் என்பதனை அவரது நடன நிருத்திய, நிர்த்திய பாவ, தாள அசைவுகள் சாட்சியம் கூறின.

அரங்க வணக்கம், விநாயகர் ஸ்துதியோடு ஆரம்பமான நடன நிகழ்வு சுத்த நிருத்த அலாரிப்பும் பின்தொடர்ந்தது. கண்டசாபு தாளத்தில் இடம்பெற்ற அலாரிப்பு எடுத்த எடுப்பிலேயே நட நிகழ்வு சிறப்புற நிகழும் என்பதற்குக் கட்டியம் கூறிநின்றது. முpகச் சிறப்பாக பதம்பிடித்தாடி சபையோரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டார் நடன நர்த்தகி யுசிக்கா. சுத்த நிருத்தத்தில் அமைந்து அலாரிப்பைத் தொடர்ந்து சரஸ்வதி இராகத்;திலும் ரூபகதாளத்திலும் அமைக்கப்பட்டிருந்த ஜதி நிருத்த ஜதீஸ்வரம் சிறப்புற இடம்பெற்றது.

வயலின் வாசித்த ஸ்ரீமதி தனதேவி மித்ரதேவா குயிலையே தனது வயலின் இசையில் அழைக்க அதற்குப் பக்பலமாக வேய்குழல் தந்தார் கலாநிதி செல்வநாயகம் தயாபரன் அத்தோடு இந்த மேடையில் வீணையோடிருந்த ஸ்ரீமதி வெங்கடல~;மி ஸ்ரீதரின் இசைப்பிரவாகமும் சிறப்பளித்தது. இவற்றோடு திருச்சி சங்கரனின் மாணவரும் இளம் மிருதங்க இசைக்கலைஞருமான கிரிதரன் சச்சிதானந்தனின் மிருதங்கமும் மெருகூட்டியது.

நான்காவது நடன நிகழ்வாக வில்லிபுத்தூர் நாச்சியார் கௌத்துவம் இடம்பெற்றது. ஆண்டாளாகத் தன்னை உருவகித்துக் கொண்டு அபிநயம் செய்தார் நர்த்தகி. இது கவுளை இராகத்திலும், சதுஸ்ரதஏக தாளத்திலும் குமுதினியின் மூத்த சகோதரி ஸ்ரீமதி சாந்தினி சிவனேசனால் இதற்கான நடன அமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது அறியக்கிடக்கின்றது. ஆண்டாளின் கற்பனை வளத்திற்கு வர்ணராமேஸ்வரன் இசைத்த ‘துளசி வனம் தனிலே’ என்ற பாடல் மெருகூட்டியது மட்டுமன்றி வயலின் வாசித்த ஸ்ரீமதி தனதேவி மித்ரதேவா குயிலையே தனது வயலின் இசையில் அழைக்க அதற்குப் பக்பலமாக வேய்குழல் தந்தார் கலாநிதி செல்வநாயகம் தயாபரன் அத்தோடு இந்த மேடையில் வீணையோடிருந்த ஸ்ரீமதி வெங்கடல~;மி ஸ்ரீதரின் இசைப்பிரவாகமும் சிறப்பளித்தது. இவற்றோடு திருச்சி சங்கரனின் மாணவரும் இளம் மிருதங்க இசைக்கலைஞருமான கிரிதரன் சச்சிதானந்தனின் மிருதங்கமும் மெருகூட்டியது.

பிரதம விருந்தினாரக்ககலந்து கொண்ட ஒன்ராறியோ இசைக்கலா மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி
உரையாற்றும்போது மிக விரைவாகத் தன்னைப் பேச அழைத்துப் பேச வைத்ததில் கூட குமுதினி ஒரு வழமைக்கு மாறாகப் புதுமையைப் புகுத்தியுள்ளார் என்ற அவர் நடன சிரோன்மணி அடையார் இல~;மண ஐயரின் வருகை இந்த அரங்கேற்றத்தைப் புனிதமாக்குகின்றது. ஒரு கைதேர்ந்த கலைஞனின் முன் அரங்கம் செய்வது ஆனந்தம் தருகி;ன்றது. நடனத்தின் தன்மையைப் பற்றியோ அதன் நுணுக்கங்கள் பற்றியோ நான் இங்கு பேச விளையவில்லை அதனை அவர் சிறப்பாக எடுத்துரைப்பார் என்ற அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தமிழீழ பாரம்பரியத்தைக் கட்டிக்காத்துவந்த ஒரு மாபெருங் கலைஞரின் வழித்தோன்றலின் அரங்கேற்றம் இன்று இடம்பெறுகின்றது. ஏரம்பு சுப்பையா அவர்கள் தனது புதல்வியரை மட்டுமன்றி பல நடன ஆசிரியைகளை உருவாக்கியவர். அத்தகைய பாரம்பரியத்தில் வந்துள்ள அவரின் புதல்வி குமுதினியின் மாணவியின் அரங்கேற்றத்தைப் பார்க்கும் போது சுப்பையா மாஸ்ரரின் அரங்கேற்றத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. இன்று இங்கு முன்னணி இசைக்கலைஞர்களாக உள்ள அனைவருமே பெருமைக்கு உரியவர்கள். தனதேவி ஆசிரியையின் பெருமையை நான் இங்கு எடுத்துக்கூறவேண்டியதில்லை அவர் உலகறிந்த கலைஞர், தயாபரன் செல்வநாயகம் இசைப் பரம்பரையில் தந்தையைப் பின்பற்றிவந்த தனையன் வேணுகான இசையைப் பயிற்றி நல்ல மாணாக்கர்களை உருவாக்கி வருகின்றார். மிருதங்கம் வாசிக்கும் கிரிதரன் சச்சிதானந்தன் மாபெரும் மிருதங்க வித்தகர் திருச்சி சங்கரனின் மாணவர், மிக நேர்த்தியாக மிருதங்கத்தை வாசிக்கும் திறனைப் பெற்றவர். அவ்விதமே எம்மிடையே இன்று வந்து வீணை வாத்தியத்தை வாசிக்கும் வெங்கடல~;மி அவர்களும் சிறந்த கலைப்பாரம்பரியத்தில் வந்தவர் இவர்களின் ஒத்துழைப்பு இந்த அரங்கேற்றத்தை மேலும் எழிலுற வைக்கின்றது என்ற அவர் தொடர்ந்து உரையாற்றும் போது செல்வி யுசிக்கா பல்கலைக் கழகத்தில் பயின்றுவந்தாலும் தொடர்ந்து நடனக் கலையை கைவிடாது தொடரவேண்டும் என்றதோடு பெற்றோர் எமது பாரம்பரியக் கலைகளை மதிக்கும் ஒரு மணாளனை யுசிக்காவிற்கு வரனாகப் பார்த்துத் தரவேண்டும் என்றதோடு இந்த மலரில் நடனத்தைப் பயிற்றுவித்த செந்தில்செல்வியின் ஆசிச் செய்தியையும் இடம்பெற வைத்திருப்பது பாராட்டத்தக்கது என்ற தோடு நடன நர்த்தகியை அழைத்து இசைக்கலா மன்றித்தின் செயலாளர் திரு. மகேஸ்வரனின் கரங்களால் விருதினை வழங்கிக் கௌரவித்தார்.
தொடர்ந்து ‘மோகனமான என்மீதில்’ என்ற பாடலுக்குப் பதவர்ணம் தந்தார் நர்த்தகி யுசிக்கா. தந்தைக்குத் தப்பாத பிள்ளையாக மேடையில் தனது நட்டுவாங்கத்தில் சிறப்பை மட்டுமன்றி மிருதங்கத்தையும், இசையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து வழிநடத்தினார் குமுதினி என்பதனை மேடையைப்பார்த்துக் கொண்டிருந்த அனைவருமே அவரது திறமை, தலைப்பண்பு, நட்டுவாங்கத்;திறனை பார்த்து வியந்திருந்தனர். சுற்றம் தடுமாற்றமின்றி சோர்வின்றி நட்டுவாங்கத்தை மிகவும் தெளிவோம் உற்சாகத்தோடும் செய்ததோடு தேவைப்பட்டபோதெல்லாம் பாடல்களையும் இசைத்து தனது ஆளமையையும் வெளிப்படுத்தினார் என்றால் அவரது திறமை வெளிப்பாட்டிற்கு இந்த மேடை களமமைத்துத் தந்தது எனலாம்.

இடைவேளையைத் தொடர்ந்து சின்ன சின்ன பாதம் என்ற பாடலுக்கான கீர்த்தனம் இடம்பெற்றது. இந்தக் கீர்த்தனத்தை ஆக்கித்தந்தவர் அடையார் கே. இல~;மண ஐயர் ஆவார். தனது ஆக்கத்தை மேடையேற்றும் போது அதனை மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தார் அவர். தொடர்ந்து இசை, நடனத்துறை விற்பன்னர் யாழ்ப்பாணம் வீரமணி ஐயா அவர்களின் இசை வண்ணத்தில் ஆக்கப்பட்ட அஸ்டவித பதம் இடம்பெற்றது. இதற்கு சாந்தினி சிவனேசன் நடன அமைப்பைச் செய்திருந்தார். புதம் எடுத்து நடனமாடிய நர்த்தகியன் முகபாவம், நளினம், அடைவு என்பன மிகச் சுத்தமாக அமைக்கப்பட்டிருந்தது என்பதனை மேடைக்கே சென்று பாராட்டினர் பெரும்பாலான நடன ஆசிரியைகள். குறிப்பாக முன்னைநாள் விரிவுரையாளர் சாந்தா பொன்னுத்துரை நடன ஆசிரியையை மனதார வாழ்த்தியதை கவனிக்கக் கூடியதாக இருந்ததென்றால் நடனத்தின் சிறப்பைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ என எண்ணத் தோன்றுகின்றது.

தொடர்ந்த உரையாற்றிய சிறப்பு விருந்தினர் அடையார் கே. இலட்சுமண ஐயர் அவர்கள் நான் இதனை ஒரு அரங்கேற்றமாகவே காணவில்லை இது உண்மையிலேயே ஒரு நடனக்கச்சேரியைப் பார்த்த உணர்வே எனக்குத் தோன்றியது என வாயாரப் புகழ்ந்துரைத்தார்.

தொடர்ந்த உரையாற்றிய சிறப்பு விருந்தினர் அடையார் கே. இலட்சுமண ஐயர் அவர்கள் நான் இதனை ஒரு அரங்கேற்றமாகவே காணவில்லை இது உண்மையிலேயே ஒரு நடனக்கச்சேரியைப் பார்த்த உணர்வே எனக்குத் தோன்றியது என வாயாரப் புகழ்ந்துரைத்தார். மறைந்த நடனக்கலைஞர் ஏரம்பு சுப்பiயா அவர்கள் மிகச் சிறந்த ஒரு கலைஞர். அவர் குமதினியை என்னிடம் அழைத்துவந்து நடனம் சொல்லித்தரும்படி கேட்டுக்கொண்டார். ஏன் நீங்கள் சொல்லித்தரலாமே என்றதற்கு எனக்கு உங்களின் பாணி பிடிக்கும் என்று மனந்திறந்து சொன்னார். என்னிடம் சிறிது காலம் நடனத்தைக் குமுதினி கற்றுக்கொண்டார். இந்த அரங்கேற்றத்தை நான் வந்து பார்க்கவேண்டும் என அழைத்திருந்தார்; எனினும் எனக்கு ஏற்பட்ட பல்வலியால் ஊருக்குத் திரும்பத் தீர்மானித்தேன் என்றாலும் அது சுகமானதால் இன்று உங்களோடு இருந்து இந்த அரங்கேற்றதைப் பார்த்து மகிழும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நடனத்தை மிகவும் மதிக்கின்ற ஒரு மாபெரும் கலைஞரின் புதல்கள் சாந்தினி, நந்தினி, குமுதினி அவர்கள் தந்தையைப் போலவே நடனத்தை சாஸ்திர முறை தவறாது கற்பித்து வருகின்றார்கள். யுசிக்கா இன்று மிகத் திறமையாக நடனத்தை ஆடினார். அவர் மிகவும் நன்கு கற்றுக்கொண்டுள்ளார். யுசிக்காவின் பெற்றோர் பாராட்டப்படவேண்டியவர்கள். ஆவர்கள் சிரமத்தைப்பார்க்காமல் நடனத்தைக் கற்றுத் தர முன்வந்தமையால் இன்று அதன் பயனை அறுவடை செய்துள்ளனர். ஈழத்தமிழர்கள் எங்கிருந்தாலும் கலை, கலாச்சாரத்தை மதித்து வருபவர்கள் அதனை இன்று உலகெலாம் பரப்புகின்றார்கள். நான் பலதடவைகள் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சென்று வந்துள்ளேன். நான்; கொழும்பில் அரங்கெற்றம் செய்தவேளை தனது பத்துப்பதினிரண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கொழும்புக்கு வருவார் குமுதினி;யின் தந்தை ஏரம்பு சுப்பையா அவர்கள். கலைமீது மிகுந்த பற்றக்கொண்டவர் அவர். இன்று இந்த மேடையில் அவரின் படம் வைக்கபட்டள்ளது. ஆவர் மேடையில் இருந்து ஆசீர்வதித்து இந்த அரங்கேற்றத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார் அதனாலேயே இந்த அரங்கேற்றம் எள்ளளவு பிழையும் இன்றிச் சிறப்பாக இடம்பெற்றது என்றார். ஏனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. துமிழர்கள் படும் துயரங்கள் அகன்று அமைதியாக வாழவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்றார்.

தொடர்ந்து தில்லானா இடம்பெற்றது. பழமைமிக்க தில்லான அமைப்பு முறை மிகக் கடடிமான உருப்படியாக இருந்தாலும் அதனைத் துணிந்து மேடையேற்றியிருந்தார் குமுதினி. இந்தத் தில்லானாவையும் அமைத்துத் தந்தவர் சாந்தினி என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிறப்பாக தில்லானாவைச் செய்து பாராட்டைத் தனதாக்கிக் கொண்டார் யுசிக்கா.

அதனைத் தொடர்ந்து தனது குருவையும், இசைக் கலைஞர்களையும் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தார் நடன நர்த்தகி யுசிக்கா. நுடன நர்த்தகின் அரங்கேற்ற நிகழ்வின் நிறைவுக்கான சான்றிதழை வழங்கிப் பாராட்டினார் நடன குரு குமுதி ஸ்ரீகாந்தன். தனக்கு நடனம் கற்பித்த நடன ஆசிரியை, தனது குடும்பத்தைச் சேர்ந்தவரும் நடன ஆசிரியையுமான செந்தூர்ச் செல்வி சுரொஸ்வரன் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் மற்றுமம் இசைக்கலைஞர்கள், நண்பர்கள், பெற்றோர், சகோதரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார் யுசிக்கா. இந்த நிகழ்வைக் குடும்ப நண்பரும் தமிழ் ஆர்வலருமான குணா குணரெத்தினம் தமிழிலும், நடன ஆசிரியையின் மாணவியும் ரி.வி.ஐ தொலைக்காட்சி உதயம் நிகழ்ச்சி அறிவிப்பாளருமான செல்வி கிருத்திகா சிவகுமாரன் ஆங்கிலத்திலும் தொகுத்து வளங்கினர். குணா நடனம் பற்றிய பல தகவல்களைத் திரட்டி இடையிடையே தனது நேரத்தையும் பாராது தொகுத்து வழங்கிப் பலதகல்வகைச் சபையோருக்குத் தந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.  

thangarsivapal@yahoo.ca


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner