இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2009 இதழ் 113  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அறிவித்தல்!

நெல்லியடி சிவம் (கணேசமூர்த்தி சிவகுமாரன்) மறைவு!
நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட சிவம் அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக எழுந்தவர். தனது பாடசாலை நாட்களிலேயே ஏனைய முற்போக்கு மாணவர்களுடன் இணைந்து மாக்சிய மாணவர் மன்றத்தை நிறுவி சமூக மாற்றத்திற்காக போராடியவர். அவரின் பிரதிபலனற்ற செயற்பாடுகள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. பின்னர் சீனசார் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர தொண்டனாக செயலாற்றியவர். சாதிய பிசாசு கோலோச்சியிருந்;த நாட்களில் அதன் அனைத்து வடிவங்களையும் உடைத்தெறிவதில் இவர் முன்னின்று உழைத்த நாட்கள் வரலாற்றில் பலராலும் பதியப்பட்டுள்ளன.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த பிற்பாடு, மாற்றுக்கருத்துக்காகவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்காகவும் ஒரு தாபனத்தின் தேவையை வலியுறுத்தி தேடகத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று உழைத்து இறக்கும் இறுதித்தறுவாய் வரை அதன் நோக்கத்திற்காய் உழைத்தவர். புலம்பெயர்ந்த சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான ஒரு அடையாளமாக தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) திகழவேண்டும் என்ற நோக்கில் அதன் பன்முக செயற்பாடுகள் குறித்து வலியுறுத்தி வந்ததுடன் அவற்றை செயற்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர். அண்மைக்காலமாக நிலவி வந்த அரசியல் மந்தநிலையை உடைத்து மீ;ண்டும் புத்தெழுச்சியுடன் தேடகம் செயற்பட எம்மையெல்லாம் உந்தியவர்.

இறுதியாக 26.04.2009 இரவு பத்திரிகையாளர் காமினி வியாங்கொடவுடனான சந்திப்பின் போது, இன்றைய போரை, முற்போக்கு என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆழமாக புரிந்துகொள்ளவில்லை என்ற விசனத்தை தெரிவித்ததுடன், இந்த போர் இலங்கை பேரினவாதத்தின் தமிழ் சிறுபான்மை இனம் மீதான ஒடுக்குமுறையே தவிர வேறெதும் இல்லை என்று குறிப்பிட்டார். சிறுபான்மை இனம் தனது உரிமைக்காய் போராடவேண்டிய தேவை இன்று மிகப்பலமாக உள்ளதாகவும் அதற்கான அரசியல்பலத்தை உலகளாவிய ரீதியில் வென்றெடுக்கக்கூடிய போராட்டங்கள் தொடரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் மீதான படுகொலை நடவடிக்கைகள் அவரை மிகவாக பாதித்துமிருந்தது. நீண்டகாலமாக சிறுநீராக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றிருந்தாலும் அவை எவைற்றையும் மற்றவருக்கு தெரிவிக்கவிரும்பால் தனது பணிகளை முன்னின்று செய்யதவர் திரு. சிவம். 27.04.2009 அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் எம்மைவிட்டு திரு. சிவம் பிரிந்துவிட்டார். தன் வாழ் முழுவதும் சமூக மேன்மைக்காக சிந்தித்த, உழைத்த தோழனை போராளியை நாம் இழந்துள்ளோம். தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) தனது உற்ற செயற்பாட்டாளரையும் முன்னோடியையும் �இழந்துள்ளது. இவ் ஆழ்ந்த துயரை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

அன்னாரின் புகழுடல்
 29-04-2009 ல்29-04-2009 புதன்கிழமை மாOgden Funeral Home (Midland/ Sheppard) மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 30-04-2009 வியாழக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை St. James (Parliament/ Wellesley) மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்படும்..

சாந்தி (மனைவி) 905-303-6675 தேடகம் தொடர்புகளுக்கு: பா.அ. ஜயகரன் 416 275 0070  / கோணேஸ் 647 891 8597

விரிவான தகவல்களுக்கு... உள்ளே

thedakam@gmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner