இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2008 இதழ் 98  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

மீள்பிரசுரம்: புதுவை சோ.சுகுமாரன் வலைப்பதிவிலிருந்து!
ஓவியர் ஆதிமூலம் மறைவு!
- புதுவை சோ. சுகுமாரன் -

ஓவியர் கே.எம்.ஆதிமூலம்தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் கே.எம்.ஆதிமூலம் (வயது:70), 15-01-2008 செவ்வாய் இரவு 7.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.  1938-ஆம் ஆண்டு திருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவம் முதற் கொண்டே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இவர் பாடத்தை விட படத்திலேயே அதிக கவனம் செலுத்தினார். 1959-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த உடனேயே சிற்பி தனபால் தொடர்பு ஏற்பட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளமா' பெற்றார்.

சென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள்
இடம்பெற்றன.

1966-இல் காந்தியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியாரின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100
ஓவியங்களை வரைந்தார். அவர் அன்றைக்கு வரைந்த காந்தியாரின் ஓவியங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அதன்பின்னர், தமிழ்ச்
சூழலில் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

லலித் கலா அகடாமியின் தேசிய விருது, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய மாநிலங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.

இவரது ஓவியங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்
பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.

இவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் வெகுமக்கள் இதழ்களான 'ஜீனியர் விகடன்,''ஆனந்த விகடன்' போன்ற இதழ்களிலும் இவரது ஓவியங்கள்
இடம்பெற்றுள்ளன. இது போன்ற இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்தது இவரை மேலும் பிரபலப்படுத்தியது.

வண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில்
வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப்
பரபலமானவை.

'நான் நேரிடையான எனது படைப்புச் சக்தியை மட்டுமே சார்ந்திருக்கிறேன். இந்த அழகின் காட்சிப்படுத்துதலை அடிப்படையாக
வைத்துதான் நான் பிறரது படைப்புகளைப் புரிந்துக் கொள்ளவும், எனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்' என்று அவர் படைப்பாக்கம் பற்றி கூறியது அவரது அறிவடக்கத்தைக் காட்டுகிறது.

புள்ளிகளில் தொடங்கி கோடுகளில் உருவம் பெற்ற ஓவியர் ஆதிமூலத்தின் படைப்புலகம் கவனம் பெற்றவை. அவரின்
கோட்டோவியங்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாதது.

ஆதிமூலத்தின் கிருஷ்ணா ஓவியம்.இதுபற்றி, 'அந்திமழை' இணைய இதழில் வெளிவந்த அவரது நேர்காணலில், "A Line immediately breaks the space’ ஒரு வெள்ளைப்
பேப்பர்ல ஒரு dot வைச்சா அது ‘A planet in the space’ன்ற மாதிரியாயிடுதுல்ல. அந்தக் கோட்டை Horizontal ஆ left to right நீட்டினா
தானாகவே மேலேயிருக்கிறது ‘Space’ கீழேயிருக்கிறது ‘land’ னு ஆயிடுது. ஒரு பேப்பர்ல புள்ளி வைச்சவுடனேயே அதோட flat surface போயிடுது. ஆதி மனிதன் அவனை கோடுகளில்தான் வெளிப்படுத்தினான். குகை ஓவியங்கள். அவன் வரைந்த விலங்குகள் வேட்டைக் கருவிகள் எல்லாமே கோடுகள்தான். கோடு, கோடுகளுக்கப்புறம்தான் எழுத்து, மொழி, இலக்கியம் எல்லாம். ஓவிய வெளிப்பாடுதான் மனித நாகரிகத்தின் முதல்படி, எறும்புகள் எப்படி வரிசையா போகுதோ அது மாதிரிதான் புள்ளிகளெல்லாம் ஒன்றாகி கோடாகுது. பல வருஷங்களா communicate பண்ணுது" என்று கூறியுள்ளது புள்ளியும், கோடும் அவரை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஓவியர் ஆதிமூலம் அவர்களின் இழப்பு என்பது ஓவிய சமூகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் வெகுமக்களுக்கும் தான்.

நன்றி: புதுவை சோ. சுகுமாரன் வலைப்பதிவு; http://kosukumaran.blogspot.com/2008/01/blog-post_3783.html

ஏனைய இணையத்தளங்கள.....

1. http://www.saffronart.com/artistdetails.asp?sourceid=4
2. http://affordindianart.com/pages/adimoolamkm.html
3. http://www.alankritha.com/Adimoolam.htm
4. http://thenoblesage.wordpress.com/artists/k-m-adimoolam/


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner