இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
தை 2009 இதழ் 109  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு

- திலகபாமா -

காஞ்சிபுரம்” இலக்கிய வட்டத்தின் அமைப்பாளரும் வெளிச்சம் இதழின் கௌரவ ஆசிரியருமான திரு.வெ.நாராயணன்காஞ்சிபுரம்” இலக்கிய வட்டத்தின் அமைப்பாளரும் வெளிச்சம் இதழின் கௌரவ ஆசிரியருமான திரு.வெ.நாராயணன்( வயது 62) அவர்கள் அசாம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது உடல் நிலை சரியில்லாத நிலையில் 19.11.08 புதன் கிழமை பகல் 1.30 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் 1988 முதல் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் எனும் அமைப்பை இன்று வரை நடத்தி வந்தார். அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொழிற்சங்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் . “ங்”, “சமவெளி”, “புல்வெளி” , “வெளிச்சம்” போன்ற பல சிறு பத்திரிக்கைகளை வெளியிட்டவர். இலக்கிய வட்ட அமைப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள ராஜம் கிருஷ்ணன், அஸ்வகோஷ், லா.சா.ரா, சுந்தர ராமசாமி,அசோகமித்திரன், எஸ்.வி. ராஜதுரை,  சிவகாமி, திலகவதி,  தணிகைச் செல்வன், மணியரசன், பாமா ,ஜெயமோகன், இன்குலாப்,பழமலய்,குட்டி ரேவதி, போன்ற பல படைப்பாளிகளை அழைத்து முரண்பாடான கருத்துகளையும் பேசுவதற்கான தளமாக நிகழ்ச்சிகளை காஞ்சியில் நடத்தி வந்தார்.

பல பதிப்பகங்களின் புத்தகங்களை தனது சொந்தச் செலவில் வாங்கி மிகக் குறைந்த விலைக்கு வாசகர்களுக்கு வழங்கி படிக்கும் பழக்கத்தை உருவாக்கினார். குறும்படங்கள், ஆவணப் படங்கள் உலகத் திரைப்படங்களைத் திரையிட்டு திரைப்பட ரசனைகளை உருவாக்கினார்.

பல்வேறு இலக்கிய அரசியல் கொள்கைகள் கொண்ட அமைப்புகளைச் சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து இலக்கிய கருத்துக்களை விவாதிக்கும் களமாக இலக்கிய வட்டத்தை நடத்தி வந்தார்.

புதிய படைப்பாளிகள் பலரை ஊக்குவித்து அவர்களின் படைப்புகளை இலக்கிய வட்டத்தின் மூலமாக வெளியிட்டார்.

2001 லிலேயே அவரோடு தி, க சியின் அறிமுகத்தின் வாயிலாக தொலைபேசியில் உரையாடினாலும் அவரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு 2007ல் தான் கிடைத்தது. இலங்கை எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இந்தியா வந்த போது அவரை சந்திக்க சென்னை சென்றிருந்தேன். இருவரும் காஞ்சிபுரம் செல்ல முடிவெடுத்து அங்கே சென்றிருந்த போது , அவரோடு தொலைபேசியில் உரையாடியதும் உடனடியாக 12 இலக்கிய நண்பர்களை அழைத்து
நாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே ஒரு சந்திப்பை நிகழ்த்தி விட்டார்.

இந்த வருடம் ஒரு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அவர் அழைத்திருந்த போது எனது புத்தகங்களையும் கொண்டு வரச் சொல்லியிருந்தார். எல்லாவற்றையும் அவரிடம் நான் கொடுத்து விட்டு வர , சரியாக இரண்டு மாதத்தில் அப்புத்தகங்களுக்கான பணத்தை அனுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

பத்மா சோமகாந்தனுடன் சென்றிருந்த போது காஞ்சிபுரத்தில் நாம் வழக்கமாக செல்லும் கோவில்கள் தவிர்த்து சில கோவில்களையும் அதன் முக்கிய தகவல்களோடு அழைத்துச் சென்று காண்பித்தார்.

அன்னாரது மறைவால் வாடும், அவரது குடும்பத்தினர் மற்றும் இலக்கிய அன்பர்களுக்கு ஆழ்ந்த இரங்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

தகவல் உதவி: வெளிச்சம்


thilagabama
mathi hospital
15/1arumugam road
sivakasi 626123
9443124688

mathibama@yahoo.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner