இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2007 இதழ் 94  - மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா!
இலக்கிய ரசிகைகளின் தனிமை வாழ்க்கை!

- சுப்ரபாரதிமணியன் -

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்சேரன் நடித்த " ஆடும் கூத்து" திரைப்படத்தில் நாயகி பின் நோக்கிய காலத்திற்குச் சென்று தன் வாழ்க்கையைத் தேடிப்பார்க்கிறவளாக இருக்கிறாள்.மனபிராந்தி போன்ற அவளின் வியாதியை அலசும் வைத்தியரும் வீட்டில் உள்ளோரும் அவள் படிக்கும் புத்தகங்களும் அதன் ஆசிரியர்களும் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அந்தப் புத்தகங்களை எழுதியவர்களின்
பட்டியலில் புதுமைப்பித்தன், மௌனி, தி.ஜானகிராமன் போன்றோர் இருக்கிறார்கள். இந்தப் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் டி வி
சந்திரன். இவர் இயக்கிய இன்னொருப் படத்தில் கூட இலக்கிய வாசிப்புக்கு உள்ளாகும் பட நாயகியின் வாழ்க்கை துன்பகரமானதாகவே இருக்கிறது.  (சென்றாண்டின் இந்திய தேசிய அரசாங்கத்தின் திரைப்பட விருதுப்பட்டியலில் "ஆடும் கூத்து" இடம் பெற்றிருப்பது " மாயக்கண்ணாடி" தோல்வியில் துவண்டிருக்கும் சேரனுக்கு ஆறுதல் பரிசு.)

சென்றாண்டு கேரள அரசின் சிறந்தத்திரைப்படங்களுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அப்பட்டியல் பெரும்பான்மையான
தமிழ் தினசரிகளில் வெளியாகியிருந்தது. பட்டியலில் இடம் பெற்றிருந்த சிறந்த படங்களுக்கான பரிசைப் பற்றினத் தகவல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, சிறந்த குழந்தை நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டிருந்தவர் முன்னணி படுத்தப்பட்டிருந்தார். அந்தக் குழந்தை நடிகர் ஜெயராமின் மகனாவார். ஜெயராமின் மகனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது என்றுதான் பெரும்பான்மையான தமிழ் தினத்தாள்களில் செய்தித்
தலைப்புகள் இருந்தன. பிரபலமானவர்களை முன் வைத்துதான் எல்லா மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துவது என்பது தமிழ் சூழலின் நியதி என்கிற மாதிரியாகிவிட்டது. பரிசுப்பட்டியலில் சிலாகிக்க வேண்டிய பல முக்கிய விஷயங்கள் இருக்கும்போது ஒரு பிரபல நடிகரின் மகன் பரிசுபெற்ற செய்தி மட்டும் பிரதானப்படுத்தப்படுகிறது இங்கு. மற்றைய விடயங்கள் மூன்றாம் நான்காம் நிலைக்குத் தள்ளப்படும்போது முன்னணிப் படுத்த வேண்டியவை நிராகரிக்கப்படுகின்றன.

தமிழில் இப்படி நிராகரிக்கப்பட்ட அல்லது கவனிப்பாரற்ற ஒரு இயக்குனர் மலையாளத்தில் மிக முக்கியமானக் கஞைராக இன்று
விளங்குகிறார் என்பது சாதாரண விடயம்.அவரின் சமீபத்திய படம் சிறந்த படத்திற்கான பல்வேறு விருதுகளை இவ்வாண்டின் பட்டியலில் கொண்டிருந்தது.

இயக்குனர் டி.வி.சந்திரன்அப்படி தமிழில் நிராகரிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் டி.வி.சந்திரன். இவரின் முதல் படம் தமிழில் அமைந்திருந்தது. "ஹேமாவின் காதலர்கள்" என்றத் தலைப்பில் எண்பதுகளின் இறுதியில் இவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அப்போது பிரபலமாய் இருந்த அனுராதா என்ற கவர்ச்சி நடிகையைக் கதாநாயகியாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த படம். சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகைக்கு முன்பு வெகு பிரபலமாய் இருந்தவர் அனுராதா. அந்தப்படம் தமிழில் கண்டு கொள்ளப்படவில்லை. அனுராதவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் அன்றைக்கு இருந்தது. அனுராதாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒரு தடவை அந்தப் படத்தைப் பார்த்தால் போதும். நூறு நாள் ஓடியிருக்கும் என்று அப்படத்தைப்பற்றி அது வெளிவந்தபோது அசோகமித்திரன் கணையாழியில் எழுதியிருந்தார். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் ஹேமாவின் காதலர்கள் உட்பட ஏழு படங்களை மட்டும் எடுத்திருக்கிறார். ஆனால் எல்லாப்படங்களும் மிகச்
சிறந்தவை என்ற பட்டியலுக்குள் வந்தவை. சமீபத்திய அவரின் திரைப்பட பட்டியலில்"ஹேமாவின் காதலர்கள்" காண்ப்படவில்லை. அவர் இயக்கின வேறு ஆறு படங்கள்தான் இருக்கின்றன. தமிழ்ப்படத்தை அவரின் பட்டியலில் இருந்து விலக்கிவிட்டாரா அல்லது மலையாளப்படங்களின் பட்டியலில் தொடக்கமாய் ஒரு தமிழ்ப்படம் இருப்பது அகௌரவம் என்று அது நீக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் மலையாளத்தின் சிறந்த திரைப்பட இயக்குனர்களின் பட்டியலில் நிரந்தரமானவராய் தனக்கான இடத்தைப் படித்துக் கொண்டவராகிறார் டி.வி.சந்திரன்.

அவரின் சென்றாண்டு படம் "பாடம் ஒண்ணு: ஒரு விலாபம்" இந்தப் படம் கேரளா மலப்புறம் பகுதியில் இளம்வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகிற பெண்களைப் பற்றினது. இதற்கு முந்தின இவரின் படங்களில் ஒன்றான "சூசனம்மா" ஒரு பெண்ணின் 5 ஆண் சிநேகிதர்கள் பற்றினது. அவளின் நடுத்தர வயதிற்கு இணையான நடுத்தர வயது ஆண் சிநேகிதர்களின் மனோபாவங்களும், விசித்திரங்களும் அவர்களை ஒருநாள் ஒரே இடத்தில் அழைத்து அவள் பலவித நினைவுகளை கிளறிக் கொள்வதுமான படம். ஒரு பெண் குறித்த ஆண்களின் பார்வை மற்றும் அவளின் உடலை மீறி சிநேகிதத்திற்கான அனுபவங்களை விவரித்துக் கொண்டு போகிற படம்.

'பாடம் ஒண்ணு: ஒருவிலாபம்' மலையாள திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின்"பாடம் ஒண்ணு: ஒருவிலாபம்" கேரள மலப்புறம் பகுதியில் குறிப்பாக முஸ்லீம் சமூகத்தில் வெகு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகிற பெண்களின் அவலம்பற்றினது. பெண்களின் வயது என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அவர்களின் விருப்பங்களோ, படிப்பு பற்றின அக்கறையோ நிராகரிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையிலேயே திருமணம் நடந்து விடுகிறது. பெண்களின் படிப்பு உரிமைக்கான விருப்பங்கள் நிராகரிக்கப்படுவது மனித உரிமை மீறலாகவே தொடர்கிறது. முஸ்லீம் சமூகப் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற சுலபமான ஒரு படமாக இது அமைந்திருந்தால் இப்படம் வெற்றி பெற்றது என்பதும் சிறந்தத் திரைப்படம் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறது என்பதும் முக்கியமானது. இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பவர் மீராஜாஸ்மின். தமிழின் சமீபத்திய பல வெகுஜன வெற்றிப்படங்களின் நாயகியாவர் சகீனா என்ற பாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்

சகீனா 15வயது உயர்நிலைப்பள்ளி படிக்கும் பெண். பžர் போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு குழந்தைத் தனமான கனவுலகத்தில் இருப்பவள். வெகுளித்தனமும், சக வயதினரும், இயற்கையும் அவளுக்கு வாழ்க்கையை என்றென்றும் புதிதாகவே காட்டிக் கொண்டிருக்கிறவளுக்கு திடுமென திருமணம் நிச்சயக்கப்படுகிறது. ரசாக் முன்பே திருமணமானவன். அவனுக்கு இன்னொரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு இன்னொரு உடலை அனுபவிப்பது என்பது தவிர வேறு எந்த உத்வேகமும் இல்லை. வளைகுடா நாட்டிற்கு செல்வதற்கு முன் திருமணத்தை முடித்துக் கொண்டு செல்வதில் ஆயத்தப்பட்டு திருமணம் முடிகிறது. சகீனாவுக்கு பள்ளிப்படிப்பை தவற விடுவதும், திருமண சடங்குகளும் பிடிப்பதில்லை. பžரின் உலகத்துக்குள்ளேயே இருக்க விரும்புகிறாள். முதலிரவு அவள் மீதான வன்முறையாகிற போது எதிர்க்கிறாள். இந்த எதிர்ப்பை தொடர்ந்த இரவுகளிலும் காட்டிக்கொண்டிருக்கிறாள். ரசாக் தன் முதல் மனைவி மூலம் மயக்க மருந்து கொடுத்து அவனின் பாலியல் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறான். இச்சூழலில் முதல்மனைவியின் வேதனைகள் கொடுமையானவை. சகீனா தான் ஏமாற்றப்பட்டு பலவந்தப்பட்டிருப்பது தெரிகிறபோது எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள். பிறந்த வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள். கணவன் 'தலாக்' சொல்லி நிராகரிக்கின்றான். வேறு கிழட்டு மாப்பிள்ளையை தரகர் அவளுக்காய் சிபாரிசு செய்கிறார்கள். அவள் கர்ப்பமாகிறாள். 'தலாக்' சொல்லப்பட்டபெண் கர்ப்பமாவது குடும்பத்தில் பல குழப்பங்களை தோற்றுவிக்கிறது. அவளின் படிப்பு ஆசைக்கு உதவிவரும் ஆசிரியரும் வீணான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார். தனித்து விடப்படுகிறவள் குழந்தையை பெற்றுக்கொள்கிறாள். அக்கிராமத்தில் ஓடும் சிற்றாற்றில் துணி துகைக்க போகிறதாக இறுதிக்காட்சி அமைந்திருக்கிறது. சகீனா போலவே பலபெண்கள் இளம் வயது திருமணத்தால் முதுமையையும் சோர்வையும் எட்டி இருப்பவர்கள். குழந்தைகளை கரையில்விட்டு துணி துவைக்கிறார்கள். அக்குழந்தைகளின் அழுகைகளும் விளையாட்டும் காற்றுவெளியை நிறைக்கிறது.

பள்ளிவயதில் திருமணம் செய்து முப்பது வயதிற்குள் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்து பாட்டியாகிவிடும் பெண்கள் முஸ்லீம் சமூகத்தில் மலிந்திருப்பதை இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

மீராஜாஸ்மினுக்கு இப்படத்தில் நடித்ததற்காய் சிறந்த நடிகை விருது ( கேரள அரசின் ) கிடைத்திருக்கிறதுமீராஜாஸ்மினுக்கு இப்படத்தில் நடித்ததற்காய் சிறந்த நடிகை விருது ( கேரள அரசின் ) கிடைத்திருக்கிறது. வெகுஜன தமிழ்திரைப்படங்களில் மீராஜாஸ்மின் நடித்திருப்பதற்காய் எக்ஸ்பிரஸ் விருது. பிலிம்பேர் என்று பலவும் அவருக்கு கிட்டின. கேரள விருதை விட பின் விருதுகளால் அவருக்கு அதிக பிரபல்யம் கிட்டலாம். ஆனால் தீவிரமான படம் குறித்த யோசிப்பில் டி.வி.சந்திரனின் படம் குறிப்பிடப்பட்டதாக இருக்கும். (மீரா ஜாஸ்மினின் திறமை வெளிப்பாட்டிற்கு லோகிதாஸ’ன் படங்களைப் பார்க்கலாம். மீரா ஜாஸ்மின் இல்லாமல் லோகிதாஸ் எடுக்கும் படங்கள் சமீபத்தில் எடுபடுவதில்லை. லோகிதாஸ’ன் சமீபத்திய நிவேத்யா படம் அப்படிப் பட்ட படங்களில் ஒன்று. சாதாரண காதல் கதை " கஸ்தூரிமான் " நிகழ் மையத்தில் இப்படமும்.) சூசனமில்லாமல் வரும் பெண் ஏகதேசம்
விலைமாதுவாக அலைக்கழிக்கப்படுவற்கும், தன் விருப்பமில்லாமல் கணவனுடன் உறவுகொள்ள அனுமதிக்காத காரணத்தால் நிராகரிக்கப்பட்ட சகீனா மனோதைரியத்தையோ உறுதியையோ இழந்திருந்தால் இன்னொரு சூசனம்மாவாக ஆக முஸ்லீம் சமுதாயத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வெறுமையாய்த் தொடரும் வாழ்க்கைக்கு அவள் சபிக்கப்பட்டிருக்கலாம். அவர்களின் பட்டியல்களுக்கு குறைவில்லை என்பதாகிவிடுகிறது.

சுப்ரபாரதிமணியன்
subrabharathi@gmail.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner