இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2006  இதழ் 83 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா!
''Children of Men''- (ஆண்களின் குழந்தைகள்) ஒரு பட விமர்சனம்.

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -



Children Of Men By P.D.JAMESஹொலிவூட்டிலிருந்து செப்டம்பர் மாதம்( Sep 2006) வெளிவந்த படங்களுள், சிந்தனையாளர் பலரால் மிகவும் பேசப்படும் படம் ''சில்ட்றன் ஒfவ் மென்'' என்ற படமாகும். அல்போன்ஸோ குயுறோன் (
Alfonso Cuaron) என்ற மெக்சிக்கன் டைரக்டரால் நெறிப்படுத்தப்பட்ட இந்தப் படம். ஆங்கில நாவலாசிரியை P.D.ஜேம்ஸ் என்பவரின் நாவல், 'சில்ட்றன் ஒவ் மென்' என்ற பெயரில் படமாக வந்திருக்கிறது. செப்டம்பரில் வெளியான படத்திற்கு, படம் வெளிவந்த சொற்ப நாட்களுக்குள்,வெனிஸ் திரைப்படவிழாவில் (Venice Film Festival), கோல்டன் ஒஸ்ஸெல்லா (Golden Ossela),லாலேர்னா மஜ்¢க்கல் பரிசு(Lalerna magical prize), என்ற வரிசையில் இதுவரை இரண்டு பரிசுகள் கிடைந்திருக்கின்றன. அத்துடன் கோல்டன் லையன் (Golden Lion) பரிசுக்கும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப்படம் இன்னும் பல பரிசுகளை மேலதிகமாக வென்றெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தைப்பற்றிய சிந்தனையைச் சுண்டியெடுக்கும் ஆழமான கருவுடன் படைக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். அடிதடி சண்டைகள், மானுடவிருத்தி பற்றிய விஞ்ஞானரீதியான அணுகுமுறைகள் என்று பலகோணங்களில் பார்வையைச்செலுத்துகிறது.

இன்றையகாலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தீவிரவாதம், எதிர்காலத்தைப்பற்றி சிந்தனையற்ற மக்களின் வாழ்க்கைமுறை, பொருளாதாரச் சூழ்நிலைகளாற் சின்னாபின்னப்படும் எதிர்காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தப்படத்தின் நிகழ்வுகள் 2027ம் ஆண்டில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. உலகில் நடந்து கொண்டுவரும் பலதரப்பட்ட மாற்றங்களால் பெண்களின் வயிற்றில் குழைந்தகளே தரிக்காமல், உலகமே மலட்டுத்தனமாகப் போவது எதிர்காலத்தில் நடக்கும் என்பது இப்படத்தின் மையக்கருத்தாகும். சமூகச்சீர¨ழிவு வரும்போது, அச்சமூகத்தில்வாழும் பெண்களின் நிலையும், ஆண்களின் வன்முறைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளும் பெண்கள் எப்படித் தங்கள் பாதுகாப்பை முன்னெடுக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்பது கதையின் பின்னணியாக மேலோட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் கதைச்சுருக்கம்: படத்தின் ஆரம்பம்,'' இன்று, உலகின் வாழும் மக்களில் மிகவும் இளைய வயதுடையவரான டியாக்கொ றிக்காடோ மரணமான செய்தி கேட்டு அகில உலகுமே துயரில் ஆழ்த்திருக்கிறது. இறந்து விட்ட டியாக்கோவுக்கு வயது, பதினெட்டு வருடம், நான்கு மாதங்கள், இருபது நாட்கள், பதினாறு மணித்தியாலங்கள், எட்டு நிமிடங்களாகும்'' என்ற டெலிவிசன் செய்தியுடன் தொடங்குகிறது.

Children Of Men

பதினெட்டு வருடங்கள், அதாவது 2009ம் ஆண்டிலிருந்து இந்த பிரபஞ்சத்தில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. ஏன் பிறக்கவில்லை என்பதற்கு, பல ஆண்டுகளுக்கு முன் பரவிய வைரஸ் தொற்று நோயாற் பல குழந்தைகள் இறந்ததாகவும் அதைத்தொடர்ந்து, பெண்களால் கருத்தரிக்க முடியாமற்போய்விட்டது என்பதைத்தவிர இந்தப்படம், அரசியற் பொருளாதார,வாழ்க்கைமுறைfஅளின் பாதிப்பு பற்றிய பெரிய விளக்கங்களைக் கொடுக்கவில்லை. உலகின் கடைசி இளம் தலைமுறை டியாக்கோ என்ற வாலிபரை உலகம் இழந்த இந்த செய்தியை, தனது வேலைக்குப் போகும் வழியில்,கடைகளில் காட்டப்படும் டெலிவிசன் மூலம் கேட்டபடி, அரச உத்தியோகத்தனான தியோடர் Fபாரன் என்பவர், கடையில் ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு தனது ஒவ்வீசுக்குள் நுழைகிறார். வழியெங்கும் மக்கள் றிக்காடோ இறந்தசெய்தியால் அழுது கொண்டிருக்கிறார்கள்.

ஏனோதானோ என்று தனது வேலையை வேண்டாவெறுப்பாகச் செய்யும் தியோ, ''இன்று றிக்காடோ இறந்ததால் எனக்கும் மிகவும் சோகமாகவிருக்கிறது. நான் இங்கிருந்து செய்யும் வேலையை வீட்டுக்குப்போயிருந்து செய்யப்போகிறேன்'' என்று தனது மனேஜரிடம் சொல்லிவிட்டு வெளியேறுகிறான். உலகில் என்ன நடந்தாலும் உண்மையாக கவலைப்படாத தியோ வேலையில் பொய்சொல்லிவிட்டு வெளியேறும்போது, ஒருசிலரால் வழிமறித்துக் கடத்தப்படுகிறான்.

கடத்தப்பட்ட தியோ fபாரனின் கட்டிய கண்கட்டுகளைத்திறந்தபோது தனது பழைய காதலி ஜூலியன் ரெயிலர் என்பவளின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறான். அவள் சமூகப்புரட்சி செய்யும் கூட்டத்தில் ஒருத்தி என்பதும் தெரிகிறது. அவனுக்கு ஒன்றும் புரியாமல், ''ஏன் என்னைக் கடத்திக் கொண்டு வந்தீர்கள்'' என்று கோபமாகக் கேட்கிறான்.'' எங்களுக்கு ஒரு உதவிதேவை, அதைச்செய்வதற்கு நீதான் சரியானவன் என்று நினைக்கிறோம், நீ உயிரோடு இருக்க விரும்பினால் எங்களுக்கு உதவி செய்'' என்று தியோவின் பழைய காதலி ஜூலியன் சொல்கிறாள்.

'' நான் ஏன் உதவிசெய்யவேண்டும்''?

'' நாங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முக்கிய கடமை உன் உதவியில்லாமல் நடக்காது என்று நினைக்கிறோம்''

'' நான் அந்த உதவியைச்செய்வேன் என்று நீ ஏன் நினைக்கிறாய்?''

''நீ உயிர்வாழ ஆசைப்படுபவன் என்று எனக்குத்தெரியும், அத்துடன் நான் உன்னை நம்புகிறேன்''

' நீ எதிர்பார்க்கும் உதவியை நான் செய்வேன் என்பதை என்ன ஆதாரத்துடன் நீ நினைக்கிறாய்?''

'' நாங்கள் செய்யவேண்டியவேலைக்கு அரசாங்க அத்தாட்சிப்பத்திரம் தேவைப்படுகிறது, அந்தப்பத்திரத்தை அரச பதவியிலிருக்கும் உனது சொந்தக்காரனிடமிருந்து நீ எங்களுக்கு எடுத்துத் தரவேண்டும்''

'' நீங்கள் முன்னெடுத்திருப்பது என்ன வேலை?''

'' இவ்விடமிருந்து ஒரு அகதிப் பெண்னைக் கடத்திக்கொண்டுபோய்ப் பாதுகாப்பான இடத்தில் விடவேண்டும், தெருக்கள் முழுதும் அராஜகம் தலைதூக்கி அமைதியற்ற பயங்கரநிலை தோன்றியிருக்கிறது''
''அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?''

'' இங்கிருந்து தப்ப அரசாங்க அனுமதியுள்ள பத்திரம்தேவை, முதல்வேலையாக உனது சொந்தக்காரனைச் சந்தித்துப் பத்திரம் பெறவேண்டும்''

இந்தச் சம்பாஷணையைத்தொடர்ந்து, தியோ, அரச பதவியிலிருக்கும் தனது சொந்தக்காரனைப் பார்த்து உதவி கேட்கிறான். இங்கிலாந்தில், சமூகநிலை மிகவும் குழம்பிப் போயிருக்கிறது. உலகெங்கும் பல பிரச்சினகல் நடப்பதால் உலகின் பலபாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிலாந்தைநோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தெருக்கள் முழுதும் அகதிகளாலும், வன்முறைக்காரர்கள், திருடர்கள், ஏழைகள்,வீடற்றோர் என்போரால் நிறைந்திருக்கிறது. சமூக நிர்வாகம் சீர்குலைந்து எல்லாஇடங்களிலும் அனர்த்தம் தலைவிரித்தாடுகிறது.அரசபடைகள் ஆயுதங்களுடன் அனர்த்தங்களை அடக்கிக் கொண்டிருக்கிறார்கள்

தனது சொந்தக்காரனிடம் போன தியோ, தனக்குத் தெரிந்த ஒருபெண் இங்கிலாந்தின் தென்மூலையிலிருக்கும் பெக்சில் என்ற இடத்திற்குப்போக அரசாங்கமனுமதி தேவைப்படுகிறது என்று கேட்க'' சமூக நிலை சீர்கெட்டிருக்கும் இந்தநிலையில், யாரையும் இங்கிருந்து வெளியேற அரசாங்கம் அனுமதிக்காது அதுவும் முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்ணுக்கு நான் அனுமதிப்பத்திரம் தரமுடியாது, நீ எனக்குச் சொந்தக்காரன் என்ற முறையிற் எனக்குத் தொல்லை கொடுப்பதால், நீயும் அந்தப்பெண்னுடன் சேர்ந்து போவதானால் மட்டுமே நான் உனக்கு அனுமதிப்பத்திரம் தருவேன்''

தன்னைக்கடத்தியவர்களுக்குத் தன் சொந்தக்காரனிடமிருந்து அனுமதிப்பத்திரத்தை வாங்கிக்கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள நினைத்த தியோ, இப்போது தன்னையறியாத ஒரு புதுசூழ்நிலைக்குள் தள்ளப்பட்டதை உணர்கிறான். அனுமதிப்பத்திரத்துடன் வந்தவன், தனது பழைய காதலியுடனும் அவளின் சினேகிதியான மிரியானுடமும் அவளாற் குறிப்பிடப்பட்ட இளம் (கறுத்தநிறப்) பெண் கீய் என்பவளுடனும் காரிற் பிரயாணம் செய்யும்போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஜூலியான் இறந்து விட, மிரியானும் தியோவும் கீயுடன் தப்புகிறார்கள்.

ஒருகாட்டுக்குள் தனியாகவாழும் தியோவின் சினேகிதனான முதிய மனிதன் மைக்கல் கேன் வீட்டில் அடைக்கலம் புகுந்த தியோவுக்கு, கீய் என்ற கறுத்த இன இளம்பெண் தாய்மையடைந்த்திருப்பது தெரிகிறது. பதினெட்டு வருடங்களுக்குப்பின் இந்த உலகத்தில் பிறக்கப்போகும் முதற் குழந்தை பிறக்கத் தான் உதவி செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட குழப்ப சூழ் நிலையில் கீயுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான். ஆரம்பத்தில் அவனைக்கடத்திக் கொண்டுபோனவர்கள், பலவருடங்களுக்குப்பின் இந்த உலகத்தில் தரிக்கப்போகும் அற்புதக்குழந்தையைத் தங்கள் சொத்தாக்க,கீயையும் தியோவையும் துரத்துகிறார்கள். தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஜூலியனாவையும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவநேரத்தில் கொலை செய்தவர்களும் அவர்களே என்பதை மிரியாம் சொல்கிறாள். அவன் அதையிட்டுச் சோகம் கொள்வதைப்பார்த்து நீயேன் மனவருத்தப்படுகிறாய் என்று கேட்கிறார்கள்.

தீயோவும் ஜூலியானவும் ஒருகாலத்தில் காதலர்களாக இருந்தவர்கள்.தீயோவுக்கும் ஜூலியானாவுக்கும் ஒரு குழந்தைபிறந்ததும் அந்தக்குழந்தையும் வைரஸ் தொற்றுநோய் பரவிய காலத்தில் இறந்துவிட்டது. கடந்த இருபது வருடங்களாக அவனுக்கும் ஜூலியானுக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை. இப்போது ஜூலியான், பதினெட்டு வருடங்களுக்குப்பின் பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் தாய்க்கு உதவி செய்யமுனைந்ததால் இறந்து விட்டாள்.

தியோFபாரன், எப்படியும் கீய் என்ற பெண்ணுக்கு உதவிசெய்யவேண்டும் என்று முடிவு கட்டுகிறான். இவர்களைத் தேடிவரும் கூட்டத்தினர் தியோவின் வயோதிப நண்பரையும் கொலை செய்கிறார்கள். சமூகம் சீர்கெட்டபின் முதியோர் , பெண்கள் என்றுபாராமல் யாரும் கொலை செய்யப்படுவார்கள் என்பது காட்டப்படுகிறது. எத்தனையோ இடர்களைத்தாங்கிக் கடைசியில் தன் உயிரையும் தியாகம் செய்து தியோ அந்தப்பெண்னையும் அவளுக்குப்பிறந்த குழந்தையையும் வெளியுலகுக்குப் பயந்து கடலில் ஒரு படகில் வாழும்,'' மனிதப்பாது காப்புக் குழுவிடம்'' ஒப்படைக்கிறான்.

தற்போது வெளிவந்திருக்கும் படங்களில், இந்தப்படம் ஏன் சிறந்தது என்று பேசப்படுகிறது என்றால் , இந்த உலகம் போகும் போக்கில், எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சினைகளை காணப்போகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்தப்படம். தங்கள் பேராசையால் உலகை மாசுபடுத்தும் உலகில் இனி மானுடமே அழியப்போகிறது என்ற உண்மையை இப்படம் மூலம் வெளிப்படுத்துகிறார் டைரக்டர் அல்போன்ஸோ. 2027ம் ஆண்டில், உலகின் இள வயதுப் பேர்வளியின் வயது பதினெட்டு என்றால் 2009ம் ஆண்டுக்குப்பின், உலகில் குழந்தைகள் பிறக்கமாட்டாது என்று இந்தப்படம் சொல்கிறது. இன்று உலகில் நடக்கும் அணு ஆயுதப்போட்டி மட்டும்தான் குழந்தைகள் பிறக்காததற்குக் காரணமாக இருக்கபோகிறதா அல்லது மக்களின் வாழ்க்கை முறையும் உலகின் மலட்டுத்தனதுக்குக் காரணமாகப் போகிறதா என்று பல கேள்விகள் பிறக்கின்றன.

09.09.06ல் வடகொரியா தனது இரண்டாவது அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை செய்திருக்கிறது. ஈரான் நாடும் கூடிய விரைவில் தனது அணுகுண்டு உற்பத்தியைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் உட்படப்பல நாடுகள் அணு குண்டுகள் வைத்திருக்கின்றன. அமெரிக்கா 130 நாடுகளில் 8000 அணுகுண்டுத் தளங்களை வைத்திருக்கிருக்கிறது.

மத்தியகிழக்கில் தொடரும் போர்ச்சூழ்நிலையில், சண்டையில் ஈடுபட்டிருக்கும் ஒருத்தர் அணுகுண்டின் உதவியை நாடினால் உலகில் பலகோடி மக்கள் ஒரு சில நிமிடங்களில் பொசுங்கிப்போவார்களென்பது தெரியப்பட்வேண்டிய விடயம். பேராசை பிடித்த ஒருசில மனிதர்களின் வாழ்க்கைமுறை இயற்கையைக் கேலிசெய்வதுபோல் தொடர்கிறது. வசதிக்கு மட்டுமல்லாது செல்வச் செருக்கைக்காட்ட ஒன்றுக்கு மேல் பலகார்களை வைத்திருப்பதும் அதனால் உலகு மாசு படுவதற்கு ஏதுவாக இருப்பதுபற்றியும் பலர் அக்கறைப்படுவதில்லை. ஆண்கள் மலடாவற்கு அவர்களின் வாழ்க்கை முறைகள் ஏதுக்களாயிருக்கின்றன. அதிகப்படியான மது, கொழுப்பு, உடற்பயிற்சியற்ற உடம்பு, என்பன குறிப்பிடப்படவேண்டிய சில விடயங்களாகும்.

பெண்களைப் பொறுத்தவரையில், மேற்கு நாடுகளில் அதிக காதலர்களை வைத்திருக்கும் பெண்கள்,அந்தப்பழக்கத்தால் வரும் பாலியல் நோய்காரணமாகத் தங்கள் கர்ப்ப விருத்திக்குத் தடைசெய்யும் கிருமிகளின் ஆளுமைக்கு ஆளாகிறார்கள். இங்கிலாந்தில் பத்துவீதமானபெண்கள் பாலியல் நோய்க்கிருமிகளால் மலட்டுத்தன்மையடைகிறார்கள். மேற்கு நாடுகளில் உடலை அழகாக வைத்திருப்பற்காகச் சாப்பாட்டைத் தவிர்க்கிறார்கள், இதுவும் ஒருவிதத்தில் குழந்தை உண்டாக்குவதற்குத் தடையாகவிருக்கும். ஏழைகளும், பணக்காரர்களும் ஆண்பெண் என்றபேதமின்றி போதைப் பொருட்களைப் பாவித்துத் தங்கள் சுகாதாரத்தைகெடுத்துக்கொள்கிறார்கள். குழந்தைபெறும் வயதில் இந்த ' டையற்றிங்' விடயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வறுமையானநாடுகளில் வாழும் பெண்கள், தேவையான சத்துப்பொருட்கள் உடம்பில் இல்லாத்தால் குழந்தைகல் தரிப்பது கஷ்டமாகலாம். அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் அயிட்ஸ் நோய் மிகத்தீவிரமாகப்பரவி வருகிறது. பல நாடுகளிற் தீவிரவாதம் நெருப்புபோல், பலவீனமான இளைஞர்கள் மனதில் பற்றியெரியப்பண்ணப்படுகிறது.

இந்தப்படத்தில் , உலகம் எப்படித்தான் தாறுமாறாகப் போனாலும் மனிதநேயம் வாழும் என்ற நம்பிக்கை மையப்பொருளாகச் சொல்லப்படுகிறது. அது மிகவும் அசட்டையான மனிதனான தியோவின் உருவிலோ அல்லது கறுத்தப்பெண்ணான கீய்க்கு உதவி செய்யும் மிரியம் என்ற வெள்ளைக்கார மாதுவின் உருவிலோ தொடரலாம்.

''சில்ட்றன் ஒவ் மென்'' - ஆண்களின் குழந்தைகள் என்ற பெயரை ஏன் இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி பிறக்கலாம்.
கீய் என்ற கறுத்தப்பெண்ணுக்கு, தான் தாயாகப் போவது தெரிய வரவே சிலகாலம் பிடிக்கிறது. ஒன்று, அவள் வளரும் காலத்தில் அவள் எந்தக் கற்பவதியையும் காணவில்லை. யாருக்கும் குழந்தை பிறந்ததாகக் கேள்விப்படவுமில்லை. அவளுக்குப் பல ஆண் சினேகிதர்கள் இருந்தபடியால்,அவளின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தகப்பன் யாரென்று தெரியாது.பலரின் குழந்தையாயிருக்கலாம் என்று கிண்டலுடன் சொல்கிறாள். நீண்ட காலத்தின்பின் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததும் அவளைச்சுற்றியிருக்கும் ஆண்வர்க்கம் அவளின் குழந்தையை வைத்து இலாபம் தேட முயற்சிக்கிறது. அவளைக் கடத்துவதிலிருந்து அந்தக்குழந்தையை எங்கு கொண்டுபோவது, யாரிடம் கொடுப்பது என்பதெல்லாம் ஆண்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தப்படம் வழக்கம்போல்' ஒரு வெள்ளை மனிதனாற்தான்'' மனிதம் காப்பாற்றப்படும் என்பதைத், தியோ என்ற வெள்ளை மனிதன் கீய் என்ற கறுபுப்பெண்ணைக்காப்பாற்றுவதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. பழங்கால நம்பிக்கையின்படி, உலகம் மிகவும் மோசமான நிலையில் சின்னாபட்டு அழியும்போதும் எங்கேயோ ஒரு 'கறுத்த இன உயிர்' வாழ்ந்து கொண்டிருக்கும் என்று சொல்லப்படுவதை இன்னொருதரம் இறுக்கமாக்ச் சொல்வதுபோலிருக்கிறது.

இப்படத்தின் வெற்றிக்குக்காரணம் ஆழமான கருத்தைக்கொண்ட கதைமட்டும் காரணமல்ல. யதார்த்தமான விதத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான காட்சிகள் லண்டனின் முக்கியமான இடங்களான் ட்ரவால்கர் சதுக்கம், பற்றசி பவர் ஸ்டேசன் போன்ற இடங்களிற் படமாக்கப்படிருக்கிறது. செல்வச்செளிப்பும், கம்பீரமுமான இவ்விடங்கள், இன்னும் இருபது வருடங்களில், தொடரப்போகும் சமூகசீரழிவால் அடையாளம் தெரியாத விதத்தில் இருளும், உடைவுகளுடனும் மாறுவதைத் தத்ரூபமாக்ச் சித்தரிக்கும் விதத்தில் கமெரா வேலை செய்திருக்கிறது. சூழ்நிலையை யதார்த்தமாக்க ஒலியும் ஒளியும் மிகத்திறமான விதத்தில் இப்படத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்துக்குள் அளவுக்குமீறி உள்நுழையும் அகதிகள் எப்படி அடக்கப்படுவார்கள், அடைத்துவைக்கப்படுவார்கள் என்பதைக்காட்டும் காட்சிகள் எதிர்காலத்தைப்பற்றிய பயத்தை மனதில் தோற்றவைக்கிறது.

தாய்மையடைந்த இளம் பெண் கீயுடன், ஒரு உடைந்த கட்டிடத்திற்குள், அகப்பட்டுக்கொள்ளும் தியோ அவளுக்குப்பிரசவ வலிவந்ததும், துப்பாக்கிகுண்டுகள் பாய்ந்து விழுந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரசவம் பார்க்கும் காட்சி படம்பார்க்கும் அத்தனைபேரின் மனத்தையும் நெகிழச்செய்யும். அதேமாதிரி, அவர்களைத் துரத்தி வருபவர்கள் கீயின் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு, பதினெட்டு வருடங்களின் பின் ஒரு குழந்தையின் வரவு கண்டு,ஆண்டவின் அற்புதம் நடந்துவிட்டதாக முழங்காலில் நின்று வணக்கம் செய்வதும் மனமுருகும் காட்சிகளாகும்.
இன்றைய உலக சந்ததியின் தாய் எனப்படுபவள் பத்து மில்லியன் வருடங்களுக்குமுன் ஆபிரிக்காக் கண்டத்தில் பிறந்த கறுத்தப் பெண் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இனி வரும் மானுட விருத்திக்கும் ஒரு கற்றுப்பு இனப்பெண் மூலகாரணியாயிருக்கலாம் என்பதை இப்படம் மறைமுகமாகச் சொல்கிறது.

இப்படத்தின் கதாபாத்திரமாக நடிக்கும் கிலைவ் ஓவின் ஆங்கிலப்படங்கள்பார்க்கும் பலருக்குப் பரிச்சயமானவராகும். கடந்தவருடம் வெளிவந்து வெற்றிவாகை போட்டு, ஒஸ்கார் விருதில் இவருக்குச்சிறந்த துணை நடிகர் என்ற விருதை வாங்கிக் கொடுத்தபடமான 'குலோசர்'(Closer) என்ற படத்தில், ஹொலிவூட்டின் 'பெரிய' நடிகையான ஜூலியா ரொபேர்ட்டின் கணவராக நடித்து, கோடிக்கணக்கான கன்னிகளைத் தன் நடிப்பால் கவர்ந்திருப்பவர். அத்துடன் கடந்தவருடம் வெளிவந்த மிகவும் 'அக்ஸன்' படமான ' சின் சிட்டியில் (Sin city) நடித்தபின், இனிவரப்போகும் ஜேம்ஸ் பொண்ட் படத்திற்குக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கபடவிருந்த ஆங்கில நடிகர்களில் ஒருத்தர். அதேபோல் ஆங்கிலப்படங்கள் பார்ப்பவர்களுக்கு. ஹாலிவூட் நடிகையான ஜூலியானா மூர் பற்றிச் சொல்லத்தேவையில்லை. பிரபலமான குணசித்திரநடிகையாகப் பேர்பெற்றவர்.

சில்ட்றென் ஒவ் மென் படத்தில் கிட்டத்தட்ட எல்லக்காட்சியிலும் வரும் நடிகை, கிலாயா ஹோப் அஷிமி என்ற இளம் கறுத்த நடிகை கடந்த வருடம் வெளிவந்த, றுவாண்டா படுகொலைகளப்(1996) பிரதிபலித்த 'டோக்ஸ்' (Dogs eat dogs) படத்தின் நடித்து உலகப்புகழும் பல பரிசுகளும் பெற்றவர். இந்த இளம் நடிகை இப்போது, நான் எனது முதுகலைப்படிப்பைத் தொடர்ந்த லண்டன் சர்வகலாசாலையின்
(SOAS-School of African andOriental Studies ) மாணவியாகப்போவது பற்றிப் பற்றிப் பெருமையடைந்தேன். தனது நடிப்புத் திறமையைப்பற்ற்ப் பெருமையடித்துக்கொள்ளாமல்,'' நடிப்பு தனது பகுதிநேர வேலை'' என்று தாழ்மையுடன் சொன்னது இவரின் சிறந்த மனப்பான்மையை எடுத்துக்காட்டியது.

Children Of Menஇப்படத்தின் தத்துவத்தைத் தங்கள் நடிப்பில் மூலம் வெளிப்படுத்தியவர்களில், பழம்பெரும் ஆங்கில நடிகர் மைக்கல் கேன்,
(Micheal Cain),பாம் பெறிஸ் (Pam Ferris) சிவெடெல் எஜியோஜி (Chiwetel Ejiofor) என்போர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. பெண்கள் பலவிதத்திலும் ஆண்களின் சொத்தாக நடத்தப்படுவது இப்படத்திலும் அப்பட்டமாகத் தெரிகிறது, ஆனாலும் ஆண், பெண், நிறம், வர்க்கம் என்றபேதம் பாராது மானுட வளர்ச்சிக்கு உதவிசெய்ய ஒருகூட்டம் (தியோ போன்ற) இருக்கும் என்ற நம்பிக்கையையும் இப்படம் சொல்கிறது.

rajesbala@hotmail.com

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner