இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2008 இதழ் 102  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா!
பாலஸ்தீனமும் இலங்கையும்: இரும்புச் சுவரின்
பின்னால் சில பாடங்கள்!

- ஜெயன் மகாதேவன் (ஆஸ்திரேலியா )-

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற சிட்னி அரபுத் திரைப்படவிழா 2008 இல், பலஸ்தீனப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்ட இரும்புச் சுவர் (The Iron Wall) என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இஸ்ரேலிய அரசு தனது சியோனிசவாத (Zionism) இன அழிப்புக் கொள்கைகள் மூலம் பலஸ்தீன மக்களை எவ்வாறு தொடர்ந்து நிர்மூலமாக்கி அழித்து வருகிறது என்பதை படம் தெளிவாக எடுத்துக் காட்டியது. 52 நிமிடங்களில் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்கும் துன்பங்களையும் கொடுமைகளையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறந்த முறையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் இது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திரையரங்கில் கேட்ட பல விசும்பல் ஒலிகள் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தின.

படத்தின் இயக்குனர் மொஹமட் அல்அதார் ஒரு பலஸ்தீனர். மனித உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் செயல்வீரர். 2002
இல் மானிட உயர்வுக்கான மார்ட்டின் லூதர் கிங் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய அரசினாலும், சியோனிஸ யூதர்களாலும் இழைக்கப்படும் கொடுமைகளை, பலஸ்தீனர் அல்லாதவர்களே படத்தில் விபரிக்கிறார்கள். இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகள் அநீதியானவை என்று கருதும் இஸ்ரேலிய யூத அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், இஸ்ரேலிய இராணுவத்திலிருந்து விலகிய போர்வீரர்கள் எனப் பலதரப்பினரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்களுடைய கருத்து சரியானது என நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்கள் படத்தில் காட்சிகளாக விரிகின்றன.
இக்காட்சிகள் படத்திற்காக அமைக்கபட்டனவாக இல்லாமல், அவை உண்மையாக நடைபெறும் போது படம் பிடிக்கப்பட்டவையாக இருப்பதால், அக்காட்சிகளின் வீரியம் மனதில், மனச்சாட்சியில் ஓங்கி ஆணி அடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இன்று இரு அரசு முறை அமைப்பை அமெரிக்க ஆட்சியாளர்கள் இஸ்ரேலிய - பலஸ்தீனர்களுக்கான (கண்துடைப்பு) தீர்வாக முன்வைக்கிறார்கள். இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பினால் பலஸ்தீன மக்களுக்கு வழங்கப்படும் (ஒட்டுமொத்தமான) கூட்டுத் தண்டனை, இராணுவ உதவியுடன் குடியேறிய யூதர்களின் இடையறாத தொல்லைகள் - பலஸ்தீன வீடுகளுக்கு கற்களை வீசுதல்,
வீட்டின் சுவர்களைப் பெயர்த்தல், புல்டோசர்களைக் கொண்டு பலஸ்தீனர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கி தமது தொடர்மாடி வீடுகளை விஸ்தரித்தல், பலஸ்தீனர்களது விவசாய நிலங்களை எவ்வித நஷ்டஈடும் வழங்காமல் அபகரித்தல் - போன்ற நடைமுறைகளின் மூலம் ஒரு நிலையான பலஸ்தீன அரசு அமைவது எவ்வாறு அசாத்தியமாக்கப்படுகிறது என்பதை 2006 ல் வெளியான இப்படம் தெளிவாகக் காண்பிக்கிறது.

பலஸ்தீனர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து தனது மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற காரணத்துடன் இஸ்ரேலிய அரசு 14 அடி உயரமான கொங்கிறீற் மதில் சுவர் ஒன்றை கட்டி எழுப்பி வருகிறது. இச்சுவர் பலஸ்தீன மக்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு விவசாயநிலங்கள் பெருமளவில் அபகரிக்கப்பட்டு பலஸ்தீன கிராமங்களை சுற்றி வளைத்து நிரந்தரமான சிறைக்குள் அடைத்துக் கொள்ளும் முறையிலும் அமைக்கப்படுகிறது. 1948 ல் ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானிக்கப்பட்ட இஸ்ரேல் - பலஸ்தீன எல்லை 195 மைல் நீளமானது. ஆனால் இச்சுவர் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் போது அது 420 மைல் நீளமானதாக இருக்கும். சர்வதேச நீதிமன்றம் இச்சுவரானது சட்டவிரோதமானதும், மனித உரிமைகளை மீறுவதானதுமென கண்டித்துள்ள போதிலும் இஸ்ரேலிய அரசு இச்சுவரை நிர்மாணிப்பதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

படத்தின் ஒரு சிறுபகுதியாக ஹெப்றோன் (Hebron) நகரத்தில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஜெருசெலத்தில் இருந்து 30 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹெப்றோன் 150,000 பலஸ்தீனர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் ஒரு நகரம். அங்கு குடியேறிய 700 தொடக்கம் 800 வரையான யூதர்கள் இஸ்ரேலிய ராணுவத்தின் துணையுடன் மேற்கொள்ளும் கொடுமைகள் கண்முன்னே ஒரு சோக சித்திரமாக விரிகின்றன. வெடிச்சத்தம் கேட்டதாகப் பாவனை செய்து கொண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் பலஸ்தீன மக்களது வீடுகள்மீது துப்பாக்கியால் குண்டு மழை பொழிகின்றனர். குழந்தைகள், பெண்கள் காயப்படுவதும் அவர்களுக்கு தாமதமாக மருத்துவ உதவி கிடைப்பது அல்லது முழுமையாக மறுக்கப்படுவதும் சாதாரணமாக நடைபெறும் சம்பவங்கள். இராணுவத்தின் உதவியுடன் பலஸ்தீன பயிர் நிலங்களில் யூதர்கள் நீச்சல் தடாகங்களுடன் கூடிய தொடர்மாடி வீடுகளைக் கட்டி குடியேறுகின்றனர்.
அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பலஸ்தீனர்களின் பயிர் நிலங்களுக்குள்ளேயே செலுத்தப்படுகின்றது. இதன் காரணமாக பலஸ்தீனர்களின் விளை பயிர்கள் அழித்தொழிக்கப்படுகிறது. இதைவிடக் கொடூரம், பலஸ்தீனர்களின் வாழ்வாதாரமான ஒலிவ் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுவது. ஒரு ஒலிவ் மரம் வளர்ந்து பலன் தருவதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் அதைப் பராமரிக்க வேண்டும் (பின்பு 100 ஆண்டுகளுக்கு மேல் அவை பலன் தரும்). பல ஆண்டுகளாக கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட ஒலிவ்மரங்களை
யூதர்கள் இராணுவத்தின் துணையுடன் இயந்திர அரிவாளால் சில நிமிடங்களுக்குள் அநியாயமாக வெட்டி எறிவதும், அதைத் தடுப்பதற்காக ஓடிவந்த பலஸ்தீன இளைஞனை இராணுவத்தினர் குப்புற நிலத்தில் கிடத்தி அவனது முதுகில் தமது பூட்ஸ்களை ஊன்றியவாறு கைகளில் விலங்குமாட்டிக் கைது செய்வதும் மிகவும் நெருடலான காட்சி. இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீன மக்களது தன்மானத்தை ஆயுதமுனையில் அழித்தொழிப்பதன் மூலம் அவர்களை நடைப்பிணங்களாக மாற்றுகிறார்கள். இத்தனை கொடுமைகளை அனுபவிப்பதற்கு அந்த மக்கள் என்ன தவறு செய்தார்கள்? பலஸ்தீனர்களாக பிறந்ததைத்தவிர அவர்கள் வேறு எந்தத் தவறும் செய்யதாக தெரியவில்லை. தமது வாழிடத்திலேயே அவர்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்படும் அவலத்தை தடுப்பதற்கு ஏன் எவரும் தயாரில்லை?

வீட்டுக்கு வந்த பின்பும் ஹெப்றோனின் துயரம் மனதை விட்டு நீங்காமல் இருந்தது. இன்று அங்கே நடந்து கொண்டிருக்கும் கொடுமை எமது வாழிடத்திலும் ஒரு நாள் நடந்துவிடுமோ என்ற பயம் அடிமனதில் பற்றிக்கொண்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சம்பந்தன் அவர்கள் அவசரகால சட்ட நீடிப்பு மீது பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தற்செயலாக கவனத்தை கவர்ந்தது. வெறும் கட்சிப் பிரச்சாரத்திற்காக அன்றி, அவருடைய மனச்சாட்சியின் குரலாக, தான் சார்ந்திருக்கும் மக்கள் இனம் எதிர்காலத்தில் அனுபவிக்கப்போகும் துயரங்களை முன்னுணர்ந்து அதைப் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த துணிசெயலாக அந்த உரை தோன்றியது. வழமையான தமிழ் கட்சிப் புலம்பலாக அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது.

“தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கே இராணுவத்தினருக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன. விகாரைகள் அந்த நிலங்களில் நிறுவப்படுகின்றன. கிழக்கில் 75 வீதமான தமிழர்கள் இருக்கும்போது அரசாங்க வேலைகளில் 100 வீத சிங்களவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்திற்கென நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கபட்டு செயற்படுத்தப்படுகிறது” (நன்றி: தினக்குரல்)

கிழக்கு மாகாணத்தில் ஐனநாயகத்தை ஏற்படுத்த முனைப்புக் கொண்டுள்ளோரும் ஆயுத முனையில் தோர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி சிறிதேனும் சிந்திப்பார்களா? அல்லது அப்படியொரு நிகழ்ச்சிநிரலே கிடையாது என அடித்து வாதிட்டு தமது அரசியல் எஜமானர்களின் நல்லெண்ணத்தைப்பெற போட்டி போடுவார்களா? அல்லது அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் அந்த நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்படுவதை கண்டும் காணாமல் இருந்து தமது பதவிகளையும் (உயிரையும் கூட) காப்பாற்றிக் கொள்வார்களா? மிகக் குறுகிய எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசத்தில் அனுபவிக்கக்கூடிய துயரங்களுக்கு வழிகோலுவதில் பங்கெடுத்துக் கொள்வார்களா?

இந்தியாவிலிருந்து வெளிவரும் Economic & Political Weekly என்ற சஞ்சிகை தனது அண்மைய (April 5 - 14, 2008) இதழில் இலங்கையில் பயங்கரவாதமும் ஐனநாயகத்தின் பின்னடைவும் (Terrorism and Democratic Regression in Sri Lanka) என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் அரசியல்துறை பேராசிரியராகப் பணிபுரியும் கலாநிதி நீல் டிவோற்ரா (Dr. Neil Devotta) இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். இலங்கையில் தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களுக்கு வரக்கூடிய ஆபத்தை அவர் இக்கட்டுரை மூலம் கோடிட்டுக் காட்டுவதாகவே தோன்றுகின்றது.

“இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வொன்றைத் திணிக்கலாம் என நம்புவதில் ராஐபக்ஷ அரசாங்கம் முதலாவதல்ல. ஆனால் சிறுபான்மை மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவது பற்றிய சர்வதேச அபிப்பிராயத்தை வெறுப்பு நிறைந்த இறுமாப்புடனும், வெட்கமற்ற முறையிலும் புறந்தள்ளுவதில் இந்த அரசாங்கம் முதலாவதாக உள்ளதுடன் சிறுபான்மை மக்கள்மீது அநியாயமான வன்முறையைப் பலவந்தமாகத் திணிக்கிறது. அது ஏன் அவ்வாறு செயல்படுகிறது எனில் அதன் சித்தாந்தம் சிங்கள பெளத்த மேலாதிக்க வாதத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்த சித்தாந்தம் சிறுபான்மை மக்களது நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை நிர்ப்பந்தித்து அவர்களது தன்மானத்தை அழிப்பதில் முனைப்பாக உள்ளது. இதற்கு சிங்கள பெளத்த பெரும்பான்மையினரின் ஆதரவுடன் இராணுவ ரீதியான தீர்வினை அமுல்படுத்த விழைகிறது”

சிங்கள மக்களின் தன்னியல்பான இடப்பெயர்வு எதிர்க்கப்பட வேண்டியதல்ல. நட்புணர்வு, சகோதரத்துவ மனப்பான்மை, வேறுபட்ட கலாசாரத்தின்மீது சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளுடன் சிங்கள மக்கள் சிறுபான்மை மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியேறுவது வரவேற்க்கப்படவேண்டியதே. புதியதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் விருப்பத்துடன் மனிதர் எவரும் எந்த இடத்திற்கும் இடம் பெயர்ந்து கொள்ளலாம். அத்தகைய இடப்பெயர்வுக்கு அரசியல் பின்னணி எதுவும் அவசியமில்லை. ஆனால் அரச இயத்திரத்தின் உதவியுடன் பாரம்பரியக் குடிமக்களை, மண்ணின் மைந்தர்களை தமது அதிகாரத்திற்கு கீழ்ப்படிய வைக்கும் நோக்கத்துடன் ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் நடைமுறைப்படுத்தலின் அம்சமாக, ஒரு நயவஞ்சகமான கொள்கையின் வெளிப்பாடாக இடம்பெயர்ந்து குடியேறுதல் எதிர்க்கப்பட வேண்டியதாகும். இல்லாவிடின் கிழக்கில் பாரம்பரியமாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரு பேரினவாத அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களைத் தொடர்ச்சியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒருநிலப்பகுதியில் பாரம்பரியமாக வாழும் மக்கள் கூட்டம் தமது வாழ்வாதார உரிமைகளை இழப்பதற்கு இத்தகைய குடியேற்றக் கொள்கை அடிப்படையாக அமைந்துவிடக் கூடாது. பலஸ்தீனத்தில் இன்று நடப்பதை வெறும் சம்பவங்களாக நாம் அலட்சியப்படுத்துவோமானால் அது எமது மண்ணில் நிகழும் போது அதைத் தடுத்து நிறுத்த முடியாத இழிநிலைக்கு நாம் தள்ளப்படுவது தவிர்க்க முடியாதது.

யூலை 1983 இன அழிப்புக்குப் பின்னர் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்தின் ஜெனரல்கள் இலங்கை ஜெனரல்களுக்கு ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்கினார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அப்போது இந்தியாவின் பிரதமராயிருந்த இந்திரா காந்தி அம்மையாரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனோபாவம் இந்த கூட்டுக்கு எதிராயிருந்தது. ஆனால் இன்று இலங்கைத் தீவில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மேலாதிக்கவாதமான சியோனிசத்தின் மலிவுப் பதிப்பு நடைமுறைப் படுத்தப்பட ஆரம்பித்து விட்டதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அது இந்திய அரசின் ஆசிர்வாதத்துடன் அரங்கேறுவதுதான் கொடுமையானது.

ஹெப்றோனில் நடப்பதை மேலும் அறிந்து கொள்ள:
http://www.independent.co.uk/news/world/middle-east/our-reign-of-terror-by-the-israeli-army-811769.html
http://www.independent.co.uk/opinion/commentators/mario-vargas-llosa-how-arabs-have-been-driven-out-of-hebron-811770.html
இரா. சம்பந்தன் பா. உ. அவர்களின் பாராளுமன்ற உரை:
http://www.thinakkural.com/news/2008/4/10/mainnews_page49032.htm
Dr. Neil DeVotta வின் கட்டுரையை முழமையாகப் படிக்க:

http://www.epw.org.in/uploads/articles/12105.pdf
புகைப்படங்கள் உதவி:
Sydney Arab Film Festival 2008.
Zope. gush-shalom .org
The Independent (London)

கட்டுரையாளரின் மின்னஞ்சல் முகவரி: jmdeva@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner
 

<img border="0" src="images/colombo_a.jpg" width="133" height="126" align="left" alt="இப்போது மாறியிருக்கும் அறையோ உல்லாசியொருத்தியால்- ஒருவனால் வடிவமைக்கப்பட்டதைப் போலிருந்தது. குளிர் சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, படுக்கை, குளியலறை எல்லாமே பிரமாண்டம். கட்டிடங்களைக் காசாக்கும் கொழும்பில் அவ்வறையைப் பிரம்மச்சாரிகளுக்கு மாத வாடகைக்கு விடுவார்களெனில் பத்துப் பேராவது படுத்து உருளலாம்.">