இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2006 இதழ் 76 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 1 

- குரு அரவிந்தன் -

Kavinjar Vairamuthuஅது வேறு உலகம். பூமிப்பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகாிக் கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம். இப்படித்தான் இந்த இதிகாசம் தொடங்குகிறது! வேறு உலகம் என்றதும் தமிழீழம் தான் மனக்கண் முன்னால் வந்து நிற்கின்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வட, கிழக்குப்பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை போன்ற இடங்களைச் சுற்றிவர இருக்கும் பகுதிகளில் ஏதோ ஒன்றைப் பற்றித்தான் இந்தக்கதை சொல்லப்படுகிறதோ என்ற எண்ணம் சட்டென்று எழுகிறது. வறண்டநிலம் என்று ஆசிரியரால் சொல்லப்பட்டாலும் இவைஎல்லாம் என்றுமே மறக்கமுடியாத தமிழர்களின் பாரம்பாிய சொர்க்கபூமியல்லவா?

கருவேலமரம்,பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூரன்கொடி, முதலான வானத்துக்குக்கோாிக்கைவைக்காத தாவரங்களும் நாி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் - கழுகு, பருந்து, காடை, கெளதாாி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண்மண்டலம்.

கரும்பாறையிலும்,சரளையிலும்,சுக்கான்கல்லிலும்,முள்மண்டியநிலங்களிலும் தொலை ந்துபோன  வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் 'பொழைப்பு'.
தமிழீழ மண்ணிலே பிறந்தவன், என்றுமே மறக்கமுடியாத தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள் மீண்டும் கண்முன்னால் நிழலாடுகின்றன. இதைவிட தமிழீழ மண்ணலே பனை. தென்னை, வேம்பு, பூவரசு, முருங்கை, தாளை, ஆல், அரசு, வாகை, ஈச்சமரம் போன்ற பலமரங்களும், ஆமணக்கு, கொவ்வை, எருக்கலை, தொட்டச்சுருங்கி, குப்பைமேனி, காந்தள் போன்ற பலசெடிகொடிகளும், காகம், புலுனி, செம்பகம், மைனா, மீன்கொத்தி, கலகக்குருவி போன்ற பறவை யினங்களும் என்றுமே எங்கள் கண்ணைவிட்டு மறையாதன. ஏனென்றால் அவைகளோடு நாங்களும் ஒன்றாய் வாழ்ந்திருக்கிறோம். தாயிலும் மேலாம் எங்கள் தாய்மண். தாய்கூடப் பத்து மாதம்தான் சுமப்பாள், ஆனால் தாய்மண்ணோ கருவில் இருந்து, எருவாய்போனபின்பும்கூட,காலமெல்லாம் எங்களைச்சுமப்பவள் அல்லவா?

பாரம்பாியமாய் வாழ்ந்த இந்த மண்ணிலே தொலைந்துபோன, பறித்தெடுக்கப்பட்ட எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் இன்று தமிழர்களாகிய எங்களின் ஒரே மூச்சாகி  நிற்கிறது என்பதை இங்கே சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றார் இந்த நூல் ஆசிாியரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

உள்ளே நுழைகிறேன்... 

செல்பேசியில் பேசிக்கொண்டே தங்களுக்குள் சிாித்துக் காலத்தைப் போக்கும் வேலையற்ற பைத்தியங்கள் போல அல்லாது, கோடை வெயிலை நிலா வெளிச்மாக்கி வேர்வை சிந்த, மாடுகளோடு பேசுவதுபோல தனக்குள் பேசிக்கொண்டு உழுது கொண்டிருக்கும் ஏர்க்காரர்கள்.

முண்டாசு, கலப்பை, தார்க்குச்சி, அரைஞான் கயிறு, தூக்குச்சட்டி, அம்மி, குழவி, துவையல் - புலம் பெயர்ந்த நாடுகளில், வழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கும் இது போன்ற பல சொற்களை ஞாபகமூட்டுகிறார் ஆசிாியர்.

'மண்ணுதான் சாப்பாடு, மண்ணுதான் மருந்து நம்மளுக்கு.." பிறந்த மண்ணின் மகிமையை எவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொல்லும் ஆசிாியர், ஆட்டுப் புழுக்கையும், கோமியமும் சேந்தா பொட்டக்காடும் பொன் விளையும் என்கிறார்! தமிழீழ விவசாயிகளோ ஆட்டுப் புழுக்கை, மாட்டுச்சாணகம் மட்டுமல்;ல தினமும் கூட்டிப் பெருக்கிச் சேகாிக்கும் குப்பையைக்கூட வீணாக்காமல் ‘கூட்டெருவாக’ மண்ணில் கலந்து பசளையாக்குகிறார்கள்.

கோழிகளின் கூவலில் விடியக் காத்திருக்கும் கிராமம்.தட்டான்பூச்சிகளும்  சில்வண்டுகளும், காடைகளும், வெள்ளெலிகளும், இரை தேடி வந்துபோன பாம்பின் தடமும், தலைகாட்டி மறையும் கீாிகளும் சொல்லமுடியாத அனுபவங்கள். தமிழீழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காணக்கூடிய காட்சிகள்.

கோழிக்கறி எப்படி வைப்பது என்று சொல்லித் தரும்போது, வீட்டிற்கு வந்து 
போன விருந்தினர்கள் மட்டுமல்ல, வேள்வி இறைச்சியும் குத்தாிசிச் சோறும் கூடவே ஞாபகம் வருகிறது. புலம் பெயர்ந்த நாட்டில் தினமும் கோழிக்கறி சாப்பிட வசதி இருந்தாலும், பிறந்த மண்ணில் அரப்பு, சீயாக்காய், எண்ணெய் தேய்த்து, கண் எாிய சனிநீராடி (முழுக்குப்போட்டு), அம்மாவின் கையால் சமைத்த வேள்வி இறைச்சியும், குத்தாிசிச் சோறும் சாப்பிட்டது போல வருமா? அதை நினைக்கும்போது மண்வாசனை போல, பெருஞ்சீரகத் தூள், கறுவா, கறிவேப்பிலை கலந்த கோழிக்கறி கொதிக்கும் வாசனை பல்லாயிரம் மைல்களைக் கடந்து இங்கேயும் எங்களை நாவூறத்தானே வைக்கிறது. இன்னொருமுறை வாழ்வதற்கு வாய்ப்பில்லாத அந்த இறந்த காலத்தை நினைக்க, எங்கள் விழிகளிலும் நீர் முட்டத்தானே செய்கிறது. 

இருமலுக்கு நாட்டுவைத்தியம் சொல்லித்தருகிறார். நாித்தோலை கருகியும் கருகாமலும் சுட்டு, வெற்றிலையில் வைத்து தேனில் குழைத்துக் கொடுத்தால் இருமல் வந்த இடம் தொியாமல் போய்விடும் என்கிறார். நாங்கள் கொத்து மல்லிக் கசாயம் என்று சொல்வதை, சுக்கு,மிளகு, திப்பிலி, தூதுவளைக் கசாயம் என்கிறார்.

ஊரடித் தோட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, கிணற்றை நம்பி தக்காளி, கத்தாி, மிளகாய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு இந்த நான்கும்தான் அந்த மண்ணுக்கு ஒத்து வரும் என்கிறார். எந்த எந்த மரங்களுக்கிடையே, எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை இப்படிச் சொல்கிறார்.

'நண்டூர நெல்லு நாியோடக் கரும்பு
வண்டியோட வா(ைழ தேரோடத் தென்ன"

தமிழீழக் கிராமங்களில் அனேகமாக வீட்டிற்கு ஒரு கிணறாவது இருக்கும். குடிநீருக்கு மக்கள் அதை நம்பித்தான் இருப்பார்கள். அதைச் சுற்றி பத்துப்பன்னிரண்டு தென்னைமரங்கள், வாழைமரங்கள், கமுகு, எலுமிச்சை, தோடை மாமரம், பலா, ஈரப்பலா போன்றவை நடப்பட்டிருக்கும். அதைவிட தோட்டக் கிணறு கொஞ்சம் ஆழம் கூடியதாக இருக்கும். அந்தக் கிணற்று நீரை நம்பித்தான் சிறு தோட்டம் செய்வார்கள். தக்காளி, மிளகாய், வெங்காயம், கத்தாி, மரவெள்ளி, வெண்டி, வாழை என்று அவரவர் வசதிக்கும், மண்ணின் தன்மைக்கும் ஏற்ப பயிர் மாறுபடும். சில இடங்களில் உருளைக்கிழங்கு, நிலக்கடலை, பயறு, பீற்றூட், கரட், திராட்சை கூடப் பயிாிடுவார்கள். எலியோட வரகு என்று சமீபத்தில் கேட்ட ஒரு நாட்டுப்பாடல் வரிகூட இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. 

'மண்ணுந் தண்ணியுந் தாண்டா குடியானவன் கும்பிடுற சாமி' என்று ஒரு பாத்திரத்திற்கூடாகச் சொல்கிறார் ஆசிாியர். இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடலோரம் தமிமீழத்திற்குச் சொந்தமானது மட்டுமல்ல, அதன் சாித்திர முக்கியத்து வத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கரையோர மக்கள் கடல் வளத்தையே நம்பியிருக்கிறார்கள். முக்கிய துறைமுகங்களான திருகோணமலை, பருத்தித்துறை, காங்கேசந்துறை போன்றன இக் கடல் பரப்பிலேயே இருக்கின்றன. சமீபத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவிலும், பாதிப்பிலும் இருந்து கரையோர மக்கள் இன்னும் முற்றாக மீளவில்லை. எந்தக் கடலன்னை காலா காலமாய் அவர்களை வாழவைத்தாளோ, அதே கடலன்னை அவர்களை வஞ்சித்த போது அந்தத் துயரத்தை அவர்களால் தங்கமுடியவில்லை. பாதிப்புக் குள்ளான இக்கரையோர மக்களை, தமிழர்கள் என்பதால் மனிதாபிமானமற்ற முறையில் அரசும் சேர்ந்து பட்டினிபோட்டு வதைப்பதுதான் மிகப்பெரிய சோகக்கதை!

ஒரு கதாபாத்திரம் டீக்கடையில் ஒரு சிய்யம்- ஒருவடை -ஒருடீ என்று சாப்பிடும் விதத்தை சுவாரஸ்யத்துடன் சொல்லுகின்றார் ஆசிரியர். தமிழீழ தேனீர் சாலைகளில் பொதுவாக தேனீர், கோப்பி, உழுந்து வடை, பருப்புவடை, சூசியம், போண்டா, வாய்ப்பன்,வாழைப்பழம் என்பன பொதுவாக இருக்கும். சூசியத்தைத்தான் இங்கே 'சிய்யம்' என்று ஆசிரியர் குறிப்பிடு கின்றார். கோதுமை மாவோடு வாழைப் பழத்தைப் பிசைந்து எண்ணெய்யில் பொாித்து எடுக்கப்படும் பலகாரம் வாய்ப்பனாகும். இதைவிட வெதுப்பகத்தில் தயாரிக்கப்படும் சீனிப்பாண், ரோஸ் பாண், பச்சைப்பாண் போன்ற உணவு வகைகளும் தேனீர்ச்சாலையில் கிடைக்கும். 

வானத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்தில் இருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத்தான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும், கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பொிதுதான் என்று கதாபாத்திரமான பேயத்தேவாின் மனைவி இறந்தபோது ஆசிாியர் இப்படித்தான் குறிப்பிடுகின்றார்.

தமிழீழ மக்களுக்கு இழப்பு, அதுவும் இளமையில் இழப்பு என்பது அவர்களின் அன்றாடவாழ்வில் ஒரு அங்கமாகப் போய்விட்டது. சொல்லியழுவதற்குக்கூட யாருமின்றி ஏதிலியாய், இன்று ஈழத்தமிழன் சொந்தமண்ணிலே அவதிப்படுவதைப் பார்த்து அணைக்க வேண்டியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?

இதையாரிடம் சொல்வது? யாரைநோவது?

பிணங்களுக்கு, கிடந்த திருக்கோலம் அல்ல அமர்ந்த திருக்கோலம்தான் கள்ளிக் காட்டுக் கலாசாரம் என்கிறார் நூல் ஆசிாியர். ஒரு நாற்காலியில் உயிர் உள்ள ஆள்போல் உட்கார வைத்து அலங்காரம் செய்து, வசதிக் கேற்ப தேர்கட்டித் தூக்கிச் செல்வார்களாம். மூத்த மகள்தான் இங்கே கொள்ளி வைக்கிறாள்.

அம்பலத்தில்தோிறக்கி,அரளிப்பூச்சூறையிட்டு செல்லத்தாயி குடம் சுமந்து மூன்று முறை சுற்றிவர அாிவாள் மூக்கில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு துளைபோட்டு 'மூணாம் சுத்தில கொடம் ஒடச்சுத் திரும்பிப் பார்க்காம நடதாயி" என்று நாவிதன் சொல்வதாகவும், சாத்திரம் சடங்கு முடித்துக் குழிக்குள்ளே பிணம் இறக்கி, இடக்கையால் மண் தள்ளி, தலைமாட்டில் கள்ளி நட்டு பொழுது மசங்க வீடுவந்ததாகவும், எட்டாம் நாள் 'உருமாக்கட்டு' என்றும் ஆசிாியர் இங்கே குறிப்பிடுகின்றார். 

             -தொடரும் - 

kuruaravinthan@hotmail.com
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner