இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'

'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 

என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
அ. முத்துலிங்கம்: ஒரு பார்வை!
 
- சாந்தினி வரதராஜன் ( ஜேர்மனி) -
.
தமிழ் எழுத்தாளர்: அ.முத்துலிங்கம்எழுத்து என்பது ஒரு தவம். அதை எழுதி முடித்தபின்போ அல்லது எழுததீர்மானித்த பின்போ அதற்கான தலைப்பை தீர்மானிக்க எழுத்தளார்கள் மௌனமாக ஒரு போரட்டத்தை நடத்திக்கொண்டு இருப்பார்கள். ஏன் எனில் ஒரு வாசகன் அறிமுகமற்ற படைப்பாளியின் படைப்பை ஒரு முறை திரும்பி பார்க்க வைப்பதில் தலைப்பு முதல் இடம்வகிக்கின்றது. அந்தவகையில் திரு. முத்துலிங்கம் அவர்களின் கதைகளை நான் ரசித்தவைகளை உங்களோடு பகிரவருமுன் அதற்கு என்ன தலைப்பை கொடுக்கலாம் என போராடியது எனக்கு மட்டுமே புரியும். தலைப்பை படித்தவுடன் பலர் நெற்றியை சுருக்கியிருக்கலாம். பலராலும் பாராட்ட பெற்ற மிகப்பெரிய எழுத்தாளரை வெறும் சிலந்தியோடு ஒப்பீடு செய்து எழுதியிருக்கின்றேன் என திட்டியியும் இருக்கலாம். பூச்சிகளில் சிலந்தியின் புத்திசாலிதனத்தை நான் மிகவும் ரசித்திருக்கின்றேன். தனது எச்சிலால் வலைபின்னும் பொழுது மிகக்கவனமாக ஒரு கலைஞ்சன்போல் ரசித்து ரசித்து பின்னுமாம் பல நாட்கள் கஸ்ரப்பட்டு பின்னிய வலையில் சிறு பிழை ஏறப்பட்டாலும் அதை கலைத்துவிடுமாம். நேர்த்தியாக பின்னப்பட்டிருப்பதை உற்று நோக்கினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இப்படி பின்னப்பட்ட வலைகளை ரசனை இல்லாதவர்கள் கலைத்துவிடுகிறார்கள் என திருமதி மேனகா காந்திpயின் கட்டுரையில் படித்திருக்கின்றேன். அந்த வலையில் சிக்கிய பூச்சிகள் வெளிவருவதே இல்லை. அதே சமயம் சிலந்தி தனக்கென ஒரு வழியையும் அமைத்து அதன் பாதையால் மட்டுமே ஊhந்து செல்லுமாம். இவைகளை மனதில் பதித்து எழுதப்பட்ட தலைப்பே மனிதச் சிலந்தி.
 
ஒரே ஒரு ஊரிலே ஒர் ராஜா இருந்தாராம் என்றுதான் சிறு வயதில் கதைகள் ஆரம்பிக்கும் கதைகளை அம்மா சொல்லும் பொழுதெல்லாம் என்னிடமிருந்து ம் ம் என்ற ஒற்றைச் சொல் வெளிவந்து கொண்டேயிருக்கும். ம் என்ற சொல்லை நான்தான் சொல்ல வேண்டும் அக்காவுக்கு அதை சொல்வது கூட  சோம்பல்;;;.  ம் என்று வாய் சொல்லிக் கொண்டே இருக்க மனமோ ராஜாவையும் அவரின் மகள் இளவரசியையும் கற்பனை செய்யதபடி இருக்கும். அப்பொழுது என்னை மறந்து ம் கொட்டுவது நின்றுவிட்டால் நித்திரை ஆகிவிட்டோம் என அம்மா நினைத்து கதையை நிறுத்திவிடுவா. நாங்களும் உறங்கிவிடுவோம். அடுத்த நாள் எங்கள் ஞாபசக்தியை பரிசோதிக்க அம்மா கேட்பா ஏதோட விட்டனான்? நாங்களும் அம்மா மறந்திட்டா என நினைத்து ஆரம்பத்திலிருந்து  விட்ட இடத்திலிருந்து புள்ளிக்கோலம் தொடுப்பதுபோல் தொடுத்து விடுவோம். அன்றும்  அதே ராஜாவில் தொடங்கி கதை இடையறுந்து தொங்கும.; இப்படியே சில கதைகள் விக்கிரமாதித்தன் கதைபோல பல காலம் நீண்டு கொண்டே போனது. அக்கதையில் என்னால் மறக்க முடியாத கதை சிந்துபாத் என்ற கதையும், சிலையைத்தேடி என்ற யப்பான் காட்டுன் கதையும். அன்று ஆரம்பித்த கதைகேட்டல் கதை சொல்லல் இன்று மட்டும் தொடர்ந்து கொண்டே போகின்றது. நல்ல ஒரு படைப்பை வசித்து விட்டால் அதை ரசிக்;கும் மனோபாவம் உள்ளவர்களுக்கு நான் ரசித்தவைகளை படித்து காட்டவேண்டும் அல்லது அவர்களையும் படிக்கவைக்க வேண்டும்  ஏந்த ஒரு எழுத்து நல்ல வாசகர்களை அப்படி தூண்டுகின்றதோ அவையே சிறந்த படைப்பு என்பது எனது கருத்து.

நீண்ட நாட்களாக வாசிப்பதற்கு எதுவுமின்றி பைபிள் கதைகளை திரும்ப திரும்ப அலுக்காமல் வாசித்து கொண்டே இருந்தேன்.  நான் இருக்கும் கிராமத்தில் எனக்கும் நூல்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்த காலமது. எனது வாழ்க்கையில் அது ஒரு இலையுதிர் காலம். பின்பொரு நாள் திரு பத்மாநாப ஜயா மூலமாக வசந்தம் எனது வாசல் தேடி வந்தது. அப்பொழுது ஜயாவின் தமிழினி ஊடாக வெளிவந்த கிழக்கும் மேற்கும் என்ற தொகுப்பில் திரு முத்துலிங்கம் அவர்களின் எலுமிச்சை கதையை வாசித்த பொழுது எனக்குள் எழுந்த உணர்வுகள் ஏராளம். அன்றுதான் தேடத்தொடங்கினேன். யார் இந்த எழுத்தாளர்? இவரின் படைப்பக்கள் எங்கெல்லாம் வெளிவந்துள்ளன? என ஒரு தேனியைப்போல் தேடினேன். சிறு சிறு துளியாக சேகரிக்கப்பட்டவை  ஒரு தேன் கூடானதுபோல் அத்தனை கதைகளையும் அற்புத பொக்கிஷமாக சேகரித்து விட்டேன். என்ன ஆச்சரியம் தூர இருந்து ரசிக்கும் வானம் போல் நினைக்கத் தோன்றியது. வானம் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கும். எங்களால் வானத்தை பார்க்க முடியும், ரசிக்க முடியும் அது மட்டுமே முடியும். அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் மழைக்கரங்களால் வானம் பூமியை தொடுவதுபோல். வளரும் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் மிக சாதாரணமானவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பண்புள்ள எழுத்தாளர் என்று சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இவரின் ஒவ்வொரு எழுத்தும் வெள்ளைத்தாளில் எழுதும்  வெறும் ஊர்வலம் அல்ல. சிறுகதைகளை பற்றி தெளிவற்று இருக்கும் வாசகனுக்கு தெளிவுபடுத்தியிருக்கும் எழுத்து என சொல்வது மிகையாகாது. அவரின் அனுபவங்கள் கதையாகி எமை மெல்ல கவர்கின்றது. 

எலுமிச்சை கதையில் மட்டுமல்ல இவரின் பல கதைகளில் வலம் வருபவர் பற்பன் நாய் கடித்த வேதனையைவிட பற்பனுக்கு காட்டி மகிழ விழுப்புண் அதிகமாகிவிட்டதே என்ற குழந்தை மனதை மிக அழகாக பல இடங்களில் வெளிபடுத்தி சிரிக்கவைக்கின்றார். நல்லவிலைகொண்டு நாயை விற்பதற்கு நாயிடம் கேட்பதுண்டோ? என பாரதியார் பாடியதுபோல் எங்கள் வீட்டு நாயின் எதிர்காலம் நாயை ஒரு வார்த்தைகூட கேட்காமல் தீர்மானிக்கப்பட்டது என்ற வார்த்தை பிரயோகம் எமது நாட்டில் தீர்மானங்கள் அனைத்தும் பிறரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்காக காத்துக்கிடக்கும் என்பதை நினைவுபடுத்துகிறார். இறுதியில் எல்லோரும் ருசித்து ஊறுகாயை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் ஆனால் ஒருவருக்கும் வீரனின் ஞாபகம் வரவேயில்லை. என்ற ஆதாங்கமான வெளிப்பாடு மனதை பிசைந்து கொண்டிருந்தது. நன்றி மறக்கும் மனிதர்களின் மனதை மிக அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.வாழ்க்கையில் எற்பட்ட பல அனுபவங்களை படைப்பாக்கி வெளிக்கொண்டு வரும் பொழுது எத்தனையோ முகம் கொண்ட மனிதர்களை மிக எளிமையான வரிகளில் அறிமுகப்படுத்துகின்றார். அப்படி வெளிவந்த கதைகளில் நான் இரண்டாவதாக வாசித்த கதை ஜந்தாவது கதிரை. மிகவும் நகைச்சுவையாக நகரும் கதை இது. அக்கதையில் மனைவியாக வரும் பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமே மிகவும் ரசித்து சிரிக்கவைக்கின்றது. அவளின் குதிக்கால் வெடிப்பில் ஒட்டியிருந்த செம்பாட்டு மண் மறைவதற்கு ஆறுமாதம் எடுத்தது: ஆனால் அவள் கனடாவிலேயே பிறந்து வளர்ந்ததுபோல் லீவாய் ஜீன்ஸ்ம் ரீ சேட்டும் போட்டுக்கொண்டு குதிரைபோல் நடந்து கடன் அட்டையில் கணக்கு தீர்த்துக்கொண்டிருப்பாள். இப்படி மிகவும் நகைச்சுவையுடன் நகர்ந்த கதை இறுதியில் அந்த வீட்டில் பின்பு ஜந்தாவது கதிரை வாங்கும் கதை எழும்பவே இல்லை என முடித்து. கதையில் வரும் கணவர்pன் முதுகில் எல்லோரும் அமர்ந்து விட்டார்கள் என்பதை மிக அற்புதமாக வெளிபடுத்திய விதம் அந்த பாத்திரம் மிகவும் அனுதாபத்துக்குரிய பாத்திரமாக வாசித்த அத்தனை உள்ளங்களிலும் படிந்திருக்கும்படி எழுத்தாளர் முடித்திருந்தார் உண்மையுpலையே பல நாட்களாக மனதுக்குள் எதையெல்லாமோ யோசிக்கவைத்தது. இவரின் படைப்புக்களை படிக்கும் பொழுதும் படித்து முடிக்கும் பொழுதும். சில நிமிடங்கள் மௌனமாகி கதை பேசிக்கொண்டே இருக்கும். பின் எங்கு சென்றாலும் கதை கூடவே நடக்கும், பேசும். நல்ல படைப்புக்கள் இப்படித்தான் வாசகனை நெருடிக்கொண்டே இருக்கும் என்பதற்கு முத்துலிங்கம் அவர்களின் கதைகள் உதாரணமாக அமைந்திருக்கின்றது.

மனிதர்கள் முன்புபோல் இல்லை. பொழுதுகளும் அதுபோல்தான் அதனால் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. மனம் பலதையும் கற்பனை செய்து பயப்படுகின்றது. காலம் தன்பாட்டில் கைகளை விலத்தி ஓடுகின்றது. என்பதை பிரதிபலித்த கதை கொழுத்தாடு பிடிப்பேன். இக்கதையில் அன்பான கணவரும் அருமையான அப்பாவுமாக வலம்வரும் பாத்திரத்தை மிக நெருங்கிய சொந்தம் எப்படி உயிரோடு சாகடித்தது என்பதை அந்த வீட்டின் கதவு தானாகவே பூட்டிக்கொள்ளும் ஆபத்தானது என்று மிக அருமையாக விளக்கியுள்ளார். அதுமட்டுமல்ல தனிமை ஒரு பூச்சியின் வரவைக்கூட மிக ஆவலாக எதிர்பார்த்படி இருக்கும் என்பதை கரப்பான் பூச்சியை காணாவிட்டால் மனம் பதைபதைக்கும் என்ற வரிகளும். யாருமே பார்க்கவராத சிறையில் நகை சுற்றிவரும் மெல்லிய தாள்போல இரண்டு பக்கமும் இங்தெரிய அவள் எழுதும் கடிதமும் வரவேயில்லை என்ற வரிகள் மனைவியின் மென்மையான அன்பை அதை அப்பயே வெளிப்படுத்தும் வரிகளையும் மிக அழகாகா வாசகர்கள் விளங்கிக்கொள்ளட்டும் என்ற படிமத்தில் எழுதப்பட்ட மனதை உருக்கிய கதை இது.

இவரின் கதைகளை வாசிக்கும் பொழுது புழுதி படிந்த வீட்டை மழை வந்து கழுவிவிடுவதுபோல் எனக்குள் ஓர் கற்பனை எழுந்து கொண்டே இருக்கும். எந்த எழுத்தை படித்தாலும் சுழிக்குள் அகப்பட்ட இலையைப்போல் என்னால் எழுந்த வர முடிவதே இல்லை மனமும் அதற்கு இசைவதும் இல்லை. மீண்டும் மீண்டும் அதற்குள் ஆழ்ந்துவிட துடிக்கும். நல்ல தோழியுடன் பகிர்ந்து கொள்ள தூண்டும். ஏந்த எழுத்தை வாசிக்கும் பொழுது இள்னுமொரு படைப்பாளியை எழுத தூண்டுகின்றதோ அதுவே சிறந்த படைப்புக்கு உதாரணம் ஆகும். அப்படி இவரின் கதைகள் என்னை எழுத தூண்டியுள்ளது.  

அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதை தொகுப்பை இரு வருடங்களுக்கு முன்பு புத்தக திருவிழாவில் கண்டபோது எனக்குள் எழுந்த ஆனந்தத்தை என்னால் விபரிக்கவே முடியாது பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாசகர் கூட்டத்தை விலத்தி விலத்தி சிறு குழந்தைபோல் அந்த நூலை கையில் எடுத்தபொழுது கிலோவை சொல்லி சொல்லி அக்கா அதை  திரும்பவும் எடுத்த இடத்திலேயே பறித்து வைத்த பொழுது. சிறுவயதில் சவுக்கார நுரையால் பப்பாதடி கொண்டு ஊதி ஆனந்தப்பட்ட முட்டை சட்டென்று உடைந்ததுபோல் என் மனம் உடைந்த நொறுங்கியது.. ஆனால் சில மாதங்களின் பின் அந்நூல் என்வீட்டு வாசலில் நின்று சிரித்த பொழுது தொலைந்த குழந்தையை கண்ட தாயைப்போல் நான் மகிழ்:ந்து சிரித்தேன். சில எழுத்துக்களை ஒரு முறை படித்தால் மூடிவைத்துவிடுவோம். ஆனால் இவரின் எழுத்தை எத்தனை முறை படித்தாலும் வித்தைகாட்டுபவன் ஒளித்துவைத்திருந்தவைகளை எடுத்து எடுத்து காட்டுவதுபோல் புதுப்புது விடயங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.. அப்படியான கதைகளில் பருத்திப் பூ என்ற சிற கதை புலம்பெயர்ந்த நாட்டில் கற்பிக்கப்படும் ஆண்டு ஒன்பதாவது தமிழ் நூலில் இடம்பிடித்துள்ளது பெருமைக்குரிய விடயமே. அக்கதையை படித்த பிள்ளைகள் எவரும் இனி சிறு துளி நீரைக்கூட வீண்விரயம் செய்யமாட்டார்கள். ஏந்த ஒரு படைப்பும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவரின் பல கதைகள் கட்டியம் கூறிக்கொண்டே இருக்கின்றது.

காளான்கள் எல்லாம் தம்மை அரசமரம் என நினைத்த கனம் கொள்ளும் காலத்தில் அகன்று பரந்து நிற்கும் அரசமரமொன்று மௌனித்து நிற்பதுபோல் சிறு குழந்தை மனதோடு மகிழ்ந்த ஒரு தந்தையின் மனதை பூமாதேவி எனும் கதையில் மிக அழகாக நகர்த்தியுள்ளார். எம்கையிலிருந்து தொலைக்கப்பட்ட காலங்கள் எம்மனதில் ஆழமாக இடம்பிடித்திருப்பவை அப்படித்தான் அந்த தந்தைக்கும்: அந்த சின்ன மகளோடு களித்த காலங்கள். சிறுவயதில் நாலுநாள் பிரிந்த துயரை வெளிப்படுத்திய விதமும் கால நகர்வில் எல்லாமே நகர்ந்து போக சலவைக்கூடமும், கட்டிடங்களும், மரங்களும் அந்த ஆசையாத சொத்துக்கள் அத்தனையும் அப்படியே இருக்க ஞாபகங்களை தள்ளிவிட்டு செல்லும் இயந்திர காலத்தை வெளிப்படுத்திய விதம் மிக மிக அற்புதம். இக்கதையில் பூமாதேவி என சலவை இயந்திரத்தையோ  பூமித்தாயையோ குறிப்பிடவில்லை பிள்ளைகள் தரும் வேதனையை தாங்கும் அந்த தந்தையின் இதயம்தான் பூமாதேவி என குறிப்பிட்டிருக்கிறார் எனநினைக்கின்றேன். 

அ. முத்துலிங்கம் அவர்கள் ஒரு முறை  முன்னுரையில் . இவரின் நண்பர் வெறும்தாளையும் பேனாவையும் எடுத்தால் ஒரு சிறுகதையை எழுதி முடித்துவிட்டுத்தான் எழுந்து வருவராம். அவரைப்பார்த்து நான் பல நாட்களாக ஆச்சரியப்பட்டிருக்கின்றேன் என எழுதியிருந்தார். ஆனால் முத்துலிங்கம் அவர்கள் ஒரு கதையின் கருவை பல மாதங்களாக காவிக்கொண்டு திரிவார் என்று அவரின் எழுத்தின் மூலம்  அறிந்திருக்கின்றேன். அப்படி காவித்திரியும் விடயங்களை ஒரு கைதேர்ந்த கட்டிடக்கலைஞன்போல் கட்டி எம்முன்னால் வைக்கப்படும்பொழுது அது எப்படிப்பட்ட அஸ்திவாரம் மூலம் எழுப்பட்டிருக்கின்றது என பிரமிக்கவைத்திருக்கின்ற கதைகள் ஏராளம் ஏராளம் அப்படி ஆச்சரியப்பட வைத்த கதைகளில் ஒன்று அம்மாவின் பாவாடை என்னை எப்பவுமே பிரமிக்கவைக்கும் இவரின் படைப்புகள் ஒரு பெண் பெண்சார்ந்த விடயத்தை எப்படி மிக நுனுக்கமாக வெளிப்படுத்துவரோ அப்படியான எழுத்தை இவரின் கதைகளில் காணலாம் அம்மாவின் பாவாடையில் அம்மா நாட கோர்க்கும் விதத்தை மிக அழகாக பக்கத்திலிருந்து ரசித்து பார்த்து எழுதியதுபோல் எழுதியிருக்கிறார். அதிலும் அம்மா அடிக்கடி நாட கோர்க்கும் ரகசியம் வெகு காலத்தின் பின்தான் அவருக்கு விளங்கியிருக்கிறது. அம்மாவின் இரு பாவடைக்கும் ஒரு நாடாதான் உள்ளது. சில நேரம் சிரிக்கவைக்கும் விடயம் அடுத்த வினாடி கவலைப்படுத்திவிடும் எப்போதும் இவர்pன் கதைகள் நகைச்சுவையோடு தொடங்கி இறுதியில் கவலையில் அழுத்திவிடும். அதற்கிடையில் சிந்திக்கவும் வைத்துவிடும்.

இந்தக் கதையில் அப்பாவைபற்றிக்கூறும் பொழுது அவரின் முகம் பின்னேரத்து வெய்யிலை ஒத்து இருக்கும் என்பதன் குறியீடு சோம்பல் நிறைந்தவர் என்பதை ஒரு வரியில் விளக்கிவிட்டார். அதே வேளை அம்மா கடந்துபோகும் பொழுதெல்லாம் வாசனை மட்டும் நகராமல் அப்படியே இருக்கும் பிஞ்சாக வாய்ப்பில்லாமால் உதிர்ந்து கிடக்கும் கொய்யாப்பூக்கள் அவளின் கால்களில் ஒட்டிக்கொள்ளும். ஏன்ற வரிகள் அம்மாவின் வாழ்வு வீணாகி விழுந்து கிடக்கின்றது என எவ்வளவு அர்த்தபூhவமாக எழுத்தாளர் விபரித்துள்ளார். அது மட்டுமல்ல அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் உள்ள வேறுபாட்டை வாசனையோடும் வேர்வையோடும் ஒப்பிட்டு ஒரு வார்த்தை பிரயோகத்தின் மூலம் விளக்கிய விதம் இவரால் மட்டுமே முடியுமென நினைக்கின்றேன். இக்கதையில் வரும் குழந்தை பாத்திரத்தை விளக்கும் பொழுது கதிரையிலிருக்கும் பொழுது கால்கள் எட்டுவதே இல்லை என்பதும் அவர்கள் எட்டாத உயரத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அந்த வீட்டில் பழையது எதுவும் இல்லை என்பதை பங்குனி மாதத்து பனங்காய் பணியாரம் என குறிப்பிட்டிருப்பதும், மிச்சம் விட விருப்பமே இல்லாத சோடவைபற்றிய சிந்தனையும், இறுதியில் மாடு அம்மாவின் பவாடையை சாப்பிட்டபோது உயிர் எழுத்தின் ஒலியை மட்டும் உதிர்த்த அம்மா அதன்பின் கலகலவென அம்மா சிரித்ததே இல்லை என்று முடித்து அந்த சோகத்தை விட்டு எழுந்துவர இனி முடியாத என்று நினைக்கும் அளவுக்கு கதை அமைந்திருந்தது. இக்கதையிலும் எத்தனை நுனுக்கமான நகைச்சுவை இருந்ததோ அத்தனையும் அள்ளிக்கொண்டு ஓடும் நதியைப்போல்  இறுதியில் என்னைச் சுற்றி ஒரு மௌனம் அல்லது வெறுமை அமர்ந்திருப்பதுபோல் எனக்குள் ஒரு பிரமை தோன்றிவிடும்.

ஒரு கதை எத்தனை பக்கங்களை தொட்டு  நகர்கர்ந்தன என்பதைவிட அத்தனை பக்கங்ளிலும் என்ன பதியப்பட்டிருக்கின்றன என்பதுதான் முக்கியம். அல்லது இன்னும் தொடர்ற்திருக்கலாமே என வாசகர்களை எந்த படைப்பு நினைக்க தூண்டுகின்றதோ  அதுவே சிறந்த படைப்பாகும். அந்தவகையில் இவரின் கொம்பு ளானா என்ற கதை தன்னுடைய சுய விருப்பங்களை அழித்தெறிந்து விட்டு குடும்பத்துக்காகவே வாழும் ஒரு பெண்னை கொம்பு ளா
என உருவகித்து எழுதப்பட்டிருக்கின்றது. இந்த  கொம்பு ளானா சுயநலம் கருதாமல் தமிழுக்கு உழைப்பதை யாரும் அறியவில்லை இந்த வார்த்தையில் சொல்ல முடியாத பெரும் துயர் பத்மாவதியிடம் சிக்கிக்கிடக்கின்றது. அவளிடமிருந்து வெளிவந்த  வார்த்தைகளைவிட விழுங்கப்பட்ட வார்த்தைகள் ஏரளாம் ஏரளாம். அந்த வார்த்தைகள் இதுவாகத்தான் இருக்கும் என வாசகர்கள் தீர்மானித்துவிடுவார்கள். அந்த இருளை கிழித்து அவளால் வெளிவர முடியவும் இல்லை அவள் விரும்பவும் இல்லை. அதை விளங்கிக்கொள்வதற்காக எழுத்தாளர் அடிக்கடி சுட்டிக்காட்டிய வார்த்தை அவர் சொன்னால் சரியாத்தான் இருக்கும். அந்த தேவதையின் சிறகு வளைந்து கிடந்தாலும் நல்ல காலம் பிடரியில் கண் இல்லை என்ற சொற்பிரயோகம் பெண்அடிமைத்தனம் நிறைந்து கிடக்கும் வீட்டை விளங்காமல் வளரும் குழந்தை அப்படியே வளரட்டும் என்பதை மறைமுகமாக எழுத்தாளர் சுட்டிக்காட்டி விதம் மிக அற்புதம். இக்கதையில் சொல்லப்பட்ட வார்த்தைகளைவிட சொல்லாமல் விட்ட வார்த்தைகள் மௌனபாஷையாக வாசகர்களின் மனதில் நிச்சயம் பதியமிடப்பட்டிருக்கும்.

மழையை பிடிக்காத ரசிக்காத மனிதர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதேபோல்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகளை ரசிக்காத படைப்பாளிகளோ, வாசகர்களோ இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். பட்டங்களை மனதில் சுமந்து கொண்டு திரியும் சில எழுத்தாளர்கள் தமக்குள் ஒரு வட்டம் அமைத்து ஒருவரை ஒருவர் புகழ்பவர்கள் நிறைந்திருக்கும் உலகில் தரமான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் விஷவார்த்தைகளை தெளித்து அழித்துக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் நல்ல படைப்புகளை எங்கு கண்டாலும் அதை யாரிடமாவது சொல்லி மகிழ ஆசைப்பட வேண்டும். அல்லது படைப்பாளியிடம் தாம் ரசித்த விடயங்களை கூறி பாராட்ட வேண்டும். நல்ல விடயங்களை கூற தகுதி தேவையில்லை. அதை ரசிக்கும் மனோநிலை ரசித்தவைகளை வெளிப்படையாக சொல்லி மகிழும் திறந்த மனம் இருந்தால் போதுமென்றே நினைக்கின்றேன். அந்த வகையில் எழுத்தாளரின் எழுபத்தைந்து கதைகளையும் ரசித்து ரசித்து படித்துவிட்டு ஒரு சிலதை மட்டும் வெளிப்படுத்தியிருக்கின்றேன். நல்ல நூல்களை தேடிப்படியுங்கள் இது கூட இவரின் கட்டுரையே.

svaratharajah@hotmail.com
 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner