இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2009 இதழ் 114  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
ஆஸ்திரேலியா என் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா என் ஆஸ்திரேலியா!

- நடேசன் -

1. காட்டுத்தீ

எந்தக்காலத்திலும் இல்லாமல் இந்த கோடைகாலம் எப்பொழுது முடியும் என காத்திருந்தேன். விக்ரோரியாவில் இந்தக் காலத்தில் பற்றிய காட்டுத் தீ 210 மனித உயிர்களை பறித்து விட்டது. இரண்டாயிரத்துக்கு(2029) மேற்பட்ட வீடுகள், இதைவிட தொழிற்;சாலைகள், விவசாயப் பண்ணைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்களுடன் காட்டு விலங்குளும் ஆயிரக்கணக்கில் கருகிவிட்டன. ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இவ்வளவு அதிகமானவர்கள் ஓரே நேரத்தில் இறந்தது இல்லை. மனித உயிர்களுக்கு பெருமதிபபு அளிக்கும் இந்த நாட்டின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்டும் விக்ரோரியன் பிரீமியர் ஜோன் பிரம்பி ஆகியோர் கண்ணீர் விட்டது பார்ப்பவர் மனதை நெகிழவைத்தது.

நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த காலம் தொட்டு மெல்பேனில் சனல் 9 இல் செய்தி வாசித்த பிரயன் நெயிலரும் அவரது மனைவியும் நெருப்பில் ஓன்றாக கருவிட்டார்கள். பிரயன் நெயிலரது முகமும் தெளிவான உச்சரிப்போடு இவர் செய்தி வாசிக்கும் தோரணையும் இன்னும் மனதில் வந்து போய்கொண்டிருக்கிறது. இதே வேளை எனக்கு அறிமுகமான ஒரு மிருக வைத்தியரும் இறந்து விட்டார். இப்படி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என இந்தத் தீயில் கருவிட்டார்கள்.

காட்டுத்தீ

மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் விடயம் மிகவும் பாதிக்கப்பட்ட இடமான மரிஸ்வில் (Marysville)  கடந்த ஈஸ்டர் விடுமுறையின் போது இரண்டு நாட்கள் அங்கு தங்கி அந்தப் பகுதியின் அழகை இரசித்துள்ளேன். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் தெற்கு வடக்காக மலைத்தொடர் விக்ரோரியாவில் இருந்து குயின்ஸ்லாண்டு வரை செல்கிறது. இந்தப்பகுதியில்தான் ஆஸ்திரேலியாவின் பெரிய ஆறுகள் பாய்கின்றன. இந்தப்பிரதேசத்தில் மேற்குப் பகுதி கோடைகாலத்தில் காய்ந்துவிடும். சாதாரணமாக 40 சென்ரிகிரேட் வெப்பம் இந்த மலைப்பகுதிகளில் கிட்டத்தட்ட 45 சென்ரிகிரேட்டுக்கு போய்விடும்.

யூக்கலப்ட்ஸ் மரத்தை முதன்மையாக கொண்டகாடுகள் பலவிதத்தில் நெருப்பு பற்றும் தன்மை கொண்டவை. மரங்களில் உள்ள எண்ணையும் காடுகளுக்கு அடிப்புறத்தில் சேர்ந்துள்ள சருகுகள் இலகுவாக தீ பற்றும் எரிபொருளாகிறது. இத்துடன் கோடைவெப்பமும் வேகமான காற்றும் தீயை பல மடங்கு வேகத்துடன் பரவச் செய்கிறது.

இந்த நிலையில் ஆட்கள் எறியும் சிகரட் துண்டுகளும் அல்லது வேண்டுமென தங்களது திரில் உணர்வுகளுக்காக நெருப்பை கொளுத்துபவர்களும் இந்த காட்டுத் தீயின் காரண கர்த்தாவாகிறார்கள். இவர்கள் நெருப்பு பற்றி எரிவதை பார்த்து சந்தோசமும் உயிர்கள் உடைமைகள் அழிவதில் ஒருதிருப்தியும் காணும் ஒரு மனநோயாளர்கள் போல் இருக்கிறார்கள். இவர்களை ஆரம்பத்திலேயே இனம்கண்டு அறிந்து கொள்வதே தீயைத்தடுக்க ஒரே வழியாகும்

தற்போது மறிஸ்விலில் முப்பத்திஎட்டுப்பேரை கருக்கிய தீயை கொளுத்திய நபரை விக்ரோரியா பொலிஸ் அடையாளம் கண்டு விட்டது. இதேபோல் பதினொருவரை பலிகொண்டு முப்பது வீடுகளும் அழிந்த சேர்ச்ஹில் காட்டுத்தீ சம்பவத்துக்கு பொறுப்பான ஒருவரின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

வழமையான காட்டுத் தீயில் காடுகள் எரிந்தாலும் ஆஸ்திரேலிய காடுகளில் உள்ள மரங்கள் முற்றாக அழிவதில்லை. ஓரு சில வருடத்தில் மீண்டும் அடையாளம் தெரியாது துளிர்த்து விடும்.இது ஒருவிதத்தில் காடுகள் இயற்கையாக தங்களை
புதுப்பித்து கொள்ளுதல் போன்றது.

ஆஸ்திரேலியா என் ஆஸ்திரேலியாகடந்த இருநாறு வருடங்களாக காடுகளை அழித்து விவசாயம், மிருக வளர்ப்புகளில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய குடியேற்றவாசிகள் ஒரு புறமாக இருக்கும் போது அறுபதுக்குப் பின் வந்த இயற்கைத்தன்மையையும் வனங்களையும் விரும்பும் மேல்தட்டு மத்திய வர்க்கத்தினர் காட்டுப்பிரதேசங்களை வாங்கியும் அதன் மத்தியில் வீடுகட்டிக்கொண்டு தாங்கள் இயற்கையோடு வாழ்பவர்கள் என்று தங்களை தாங்களே காதலிக்கும் மன நிலையில் வாழத் தொடங்கியதால் ஆஸ்திரேலியாவில் காடுகள் மத்தியில் பலர் வாழத் தொடங்கினார்கள். இவர்கள் வீடுகளை சுற்றியுள்ள காடுகளை சுத்தமாக வைக்கவோ அங்கு உள்ள மரங்களை வெட்டவோ இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. வெப்பமான கோடைகாலத்தில் இவர்களின் நிலைமை வீட்டருகே பெற்றோல் நிரப்பிய டாங்கரோடு வாழும் நிலை போன்றது.

இந்தக் காட்டுத் தீயில் தப்பியவர்களை சந்தித்தேன் அவர்களது அனுபவங்கள் கேட்பது மனத்தில் அதிர்வுகளை உருவாக்கும். ஓரு இலங்கை பறங்கியர் கூறினார் தனது கர்ப்பிணி மகள் பிரசவவேதனையில் ஆஸ்பத்திரிக்கு ஐந்து நிமிடம் முந்தி சென்றதால் தீயில் இருந்து தப்பக் கூடியதாக இருந்தது என்றார். ஆஸ்திரேலியர் ஒருவர் தனது தோட்டத்தில் நின்றபோது ஒரு கூட்டம் பறவைகள் பறந்து வந்து தனக்கு முன்பாக விழுந்து துடிதுடித்து இறந்தன என்றும், அத்துடன் தீ இராசட்சத பந்து போல் மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சியை நோக்கி சென்றதை தான் பார்த்ததாகவும் கூறினார்.

இந்தத் தீயில் இறந்தவர்களது இறுதிகணக்கு நிட்சயமாக சொல்லுவதில் அரசாங்கத்திற்கு பிரச்சினை உள்ளது. இறந்தவர்களில் சிலர் முற்றாக சாம்பராகிவிட்டதால் அடையாளம் காண்பது கஷ்டம். அடையாளம் காணாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை உடனடியாகச் சொல்லமுடியாது. இதனால் இறுதி எண்ணிக்கையை சொல்வதற்கு பலகாலம் தேவைப்பட்டது.

கட்டுரையாசிரியர் நடேசன்இந்தவிடயம் என்னை ஆச்சரியத்துடன் பெருமைப்படவைத்தது. ஓவ்வொரு மனிதன் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல அவன் இறந்த பின்பும் அவனது தனித்தன்மை அவன் இருக்கும் நாடு மதிக்கும் போது அவன் பெருமை அடைகின்றான். இது ஒருவனை அந்த நாட்டுக்காக இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் பண்ணவைக்கிறது. ஆஸ்திரேலியாவில் நான் கொண்டிருந்த மதிப்பை இந்த ஒரு விடயம் பலமடங்காக உயர்த்தியது.

uthayam@optusnet.com.au


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner