இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2007 இதழ் 88 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
உயிர்ப்பு நாடகங்கள்- வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு!

- என்.கே.மகாலிங்கம் -


உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு மார்ச் 24 இல் யோர்க்வுட் நூலக தியேட்டரில் நடந்ததுஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு மார்ச் 24 இல் யோர்க்வுட் நூலக தியேட்டரில் நடந்தது. இதன் முக்கியத்துவமும் சிறப்பும் இந்நாடகங்கள் தனியப் பெண்களால் எழுதப் பெற்று, நடிக்கப்பெற்று நடத்தப் பெற்று வருகிறது என்பது மட்டுமல்ல. இந்நாடகங்கள் பெண்களின் பிரச்சினைகளைத் தாங்களே சொல்ல இதை நல்ல தளமாக்கி வருகிறது. இந்த வெளியைக் கண்டடைந்தது நல்ல முயற்சியே. இந்நிகழ்வுகளை நடத்துவதில் பல இடையூறுகள், கஷ்ரங்கள் இருக்கும் என்பது என் அனுமானம். அவற்றையும் மீறி நடத்தப்படுவது பாராட்டுக்குரியது.

நாலு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. முதலாவது, அணங்கு நாடகம். சீதை, கண்ணகி, மணிமேகலை ஆகிய காவியப் பாத்திரங்களைக் கேள்விக்குட்படுத்தும் பெண்ணிய நோக்கு அதன் உள்நோக்கம். அருங்காட்சியகத்தில் அப்பாவைகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்;றி சுற்றுலா வரும் பள்ளிச் சிறார்களுக்கு அனைவரும் அறிந்த பொருளில் அங்குள்ளவர்கள் விளங்கப்படுத்துவார்கள். பின்னர், அருங்காட்சியக நேரம் முடிவடைகிறது. அப்போது கணவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அவ்விடத்துக்குள் நுழைகிறாள். அங்கு பொம்மைகளாக இருந்த சீதை, கண்ணகி, மணிமேகலை உயிர்பெற்று, வந்தவளுடன் உரையாடுகிறார்கள். அதுவே நாடகத்தை வளர்க்கவும் நாடகத்தின் செய்தியையும் கூற உபயோகிக்கப்பட்ட உத்தி. நாடக உத்திகள் பழையவைதான் என்றாலும் நாடகம் வளர்ந்து செல்கிறது.

கண்ணகி, சீதை ஆகியோரின் மரபுரீதியான பெண்களுக்குரிய குணங்களும் குறிப்பாக, கற்பும், கணவனுக்கு கீழ்ப்படிவும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. கணவனே இப்பாத்திரங்களுக்குரிய ஒரேயொரு வில்லன். அந்த வில்லனிடமிருந்து தப்புவது எப்படி என்பதைக் கண்டுபிடித்து விட்டால் நாடகத்தின் முடிச்சை அவிழ்த்து சுகமாக முடித்து விடலாம். மணிமேகலையின் துறவுதான் சரியான முடிவு என்பது கணவனிடமிருந்து தப்பி வந்தவளின் முடிவு. அதை அவள் மணிமேகலையுடன் தர்க்கித்து அடைகிறாள். அதனால், மற்றவர்களையும் அவள் தன்னுடன் அழைத்துக் கொண்டு மணிமேகலையின் புத்த துறவின் நம்பிக்கை கொண்டு அழைத்துச் செல்கிறாள். அத்துடன் நாடகம் நிறைவெய்தி இருந்தால் நாடகம் ப+ர்த்தியாகி இருக்கும் என்பது என் எண்ணம்.

பெண்கள் எல்லாரும் துறவு பூண்டுவிட வேண்டும் என்று நாடாகாசிரியர் முடிவெடுக்கிறார் என்று அவருக்குரிய சுதந்திரத்தை விட்டு விடலாம். ஆனால் துறவுக்கு அழைத்துச் சென்ற அல்லது துறவையே அழுத்தும் மணிமேகலைக்கு உதயகுமாரன் தியானநிலையில் வந்து மனச்சஞ்சலத்தைக் கொடுக்கிறான். அவளால் காமத்தைத் துறக்க முடியவில்லை. உதயகுமாரன் மணிமேகலை காமகோள நடன அபிநயம் நடக்கிறது. முற்பிறப்பின் உண்மை அறிந்த, பழவினையின் காரணமாக மணிமேகலையாக மாதவியின் வயிற்றில் பிறந்த, உதயகுமாரனை முற்பிறப்பில் கணவனாக அடைந்திருந்த, இளமையில் உதயகுமரானில் திரும்பவும் காதல் வயப்பட்ட மணிமேகலைக்கு அறவண அடிகளின் அறவுரைகள் எல்லாம் வீணாகப் போய் திரும்பவும் தியானத்தில் காம உணர்வு மீள்கிறதாகக் காட்டுவதால், கண்ணகியும் சீதையும் புதிதாகக் கணவனிடம் காமத்தை அறிந்த பெண் காமத்தைக் கடந்து உயர்ந்து நிற்கிறாள் என்று காட்டப்படுகிறது. அது நாடகாசிரியர், துறவையும் ஆழ் தியானத்தையும் சரிவர உணரவில்லை என்பதையே காட்டுகிறது.

இருந்தாலும், இவ்விடத்தில் இடம் பெற்ற நடன அபிநயம் சிறப்பானது. றெஜியின் கம்பீரமான ராஜ தோற்றமும் அசைவுகளும், தர்சினியின் அசைவுகளும் இருவரதும் அபிநயங்களும் பார்க்க அழகாய் இருந்தன. மொத்தத்தில் கருத்துக்களில்; எத்தனை தான் பிரச்சினைகள் இருந்தாலும் இந்நாடகம் தொய்வில்லாமல் பார்க்கக் கூடியதாக இருந்தது.

அடையாளம் ஒன்று என்ற நாடகம் மற்றது. மன உளைச்சலால் ஒரு பெண் தன் இரு குழந்தைகளையும் கொன்று போடுகிறாள். இக்கரு கனடாவில் தமிழ்க் குடும்பங்களில் சிலவற்றில் நடைபெற்ற ஒன்றே. மிகத் தேவையானதும் அவசரமாக அலசப்பட வேண்டியதுமான பிரச்சினை இது. மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவற்றுக்குக்குரிய காரணங்களை அறிய முற்பட வேண்டியது மிக மிக அவசியம். அதுவும் கலைஞர்களுக்கு மிகவும் பெரிய பொறுப்பும் பங்கும் உண்டு. அதை எடுத்து நாடகமாக்கியதற்கு சுமதிரூபனை வரவேற்க வேண்டும். மன உளைச்சல் அல்லது மன அழுத்தத்திற்குக் காரணங்கள் சிலவற்றை தன்பேச்சு மூலம் அவர் சொல்ல வருகிறார். ஆனால் அவை இன்னும் ஆழமாக அப்பிரச்சினையை அலச முயற்சிக்கவில்லை என்றே எண்ணுகிறேன். அவர் இந்நாடகத்தை எழுதத் தூண்டியதாகச் சொல்லும் யுரிபிடஸின் மெடெனா நாடகத்தில், மெடெனா தன் இரு குழந்தைகளையும் தன் கணவன் ஜேசனைப் பழி வாங்குவதற்காக அவனிடம் அவர்களை விட்டுச் செல்லக் கூடாதென்பதற்காகவே, அவனுக்கு வரப் போகிற மனைவியையும் அவளின் தகப்பனையும் நஞ்சூட்டிக் கொல்கிறாள். தன் பிள்ளைகளையும் குத்திக் கொல்கிறாள். அங்கே பழிவாங்கும் குணம், கணவன் தன் பிள்ளைகளை அனுபவிக்கக்கூடாது என்ற குணம் அவளிடம் மேலோங்கி நிற்கிறது. அப்படியான ஒரு மனம் இங்கு குழந்தைகளைக் கொன்ற பெண்களுக்கும் இருந்திருக்கலாம் அல்லவா? அந்த இருண்ட, கொடுமையான, பழிக்குப் பழி வாங்கும் மனத்தை விட்டு மன உளைச்சல், மன அழுத்தம் என்ற மேலோட்டமான கருத்துக்களுடன் மட்டும் இப்படியான மனங்களை அளக்க வேண்டுமா? கலைஞர்களுக்கு இன்னும் ஆழமான, மற்றவர்களுக்குப் புலப்படாத பிராந்தியங்களுக்குச் செல்லும் துணிச்சலும் ஆழமும் வேண்டும்.

அடையாளம் 2 என்ற நாடகம் மற்றது. பாரம்பரிய தமிழ்க் குடும்ப கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் பிறந்து விட்டால், அவனுடைய குடும்பத்திற்காக அவன் தன்னைத் தியாகம் செய்யும் கதையை குறியீடு மூலமாகச் சொல்லுகிறது. சுமதிரூபன் அடக்குமுறைத் -controlling –தாயாக வந்து, ஆரம்பத்தில் சுந்தரலிங்கம் என்று அதட்டலுடன் கூப்பிட்டு படிப்படியாக தன் குரலைக் குறைத்து அடக்கி வாசித்துக் கடைசியில் தேய்ந்து விடும் குரலில் தன் நடிப்புத் திறமையை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் காட்டிச் செல்கிறார்.

தோற்ற மயக்கம் நாடகக் கதையின் சாரம் தெளிவாகப் புரியாவிட்டாலும் சத்யா, அபிராமி, பவானி ஆகியோரின் திறமையான நடிப்பு பார்வையாளர்களை நாடகத்தை வெகுவாக ரசிக்கப்பண்ணி விட்டது. மொத்தத்தில் நாடகங்கள் பார்க்கக் கூடியவையாக இருந்தன. இரண்டு மணிநேரம் மகிழ்ச்சியாகவே செலவழிந்தன. சுமதிரூபன், நடிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

mahalingam3@hotmail.com

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner