இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏபரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
'டொராண்டோ': ஏப்பிரல் 6, 2008!
இலங்கை இனப்பிரச்சனையும்
சர்வேசத்தின் பங்களிப்பும்!

'சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பின் அடுத்த கூட்டம் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு Scarborough Village (மார்க்கம்- கிங்சன் சந்தியில்) நடைபெறவுள்ளது.'சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பின் அடுத்த கூட்டம் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு
Scarborough Village (மார்க்கம்- கிங்சன் சந்தியில்) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சுவீடன் நாட்டில் இருந்து, இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பாகவும், இலங்கையில் சமாதானம் ஏற்படவேண்டும் என்றும் மிக நீண்டகாலமாகவும், மிக ஆர்வமாகவும் செயல்பட்டு வருகின்ற Camilla Orjela Ph.D அவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இவர் தற்போது சுவீடன் நாட்டு Goteborg University ல் Peace and Research துறையில் பணியாற்றிவருகின்றார்.

Kanishka Goonewardena Ph.DCamilla Orjela Ph.D அத்தோடு இந்த நிகழ்வில் ரொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி Kanishka Goonewardena Ph.D அவர்களும் கலந்து கொண்டு இனப்பிரச்சனை தொடர்பாக பேசுகின்றார். கனிஸ்க இலங்கை இனப்பிரச்சனையில் நீதியான தீர்வு சிறுபான்மை இனங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீண்டகாலமாக செயல்பட்டுவருகின்றார். இனப்பிரச்சனை தொடர்பாகவும், மனித உரிமைகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை இவர் ஆங்கிலத்தில் எழுதி அவை சர்வதேச ரீதியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து இலங்கை சமாதான முயற்சிக்காக 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' என்ற அமைப்பு செயல்பட்டுவருகின்றது. இந்த அமைப்பில் தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள், மற்றும் முஸ்லீம்களும் அங்கம் வகிக்கின்றனர். எந்த கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் ஆதரவு இல்லாமல் சுயாதீனமாக இலங்கையில் நீதியான சமாதானம் ஏற்படுவதற்கான இந்த 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பு செயல்படுகின்றது

இலங்கையின் இனப்பிரச்சனையில் மிக்க ஆர்வமும், இலங்கையில் சமாதான முயற்சிகளில் ஆர்வத்துடன் செயலாற்றியவரும், இலங்கை அரசு தனது சிறுபான்மை இனங்களுடன் தனது அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மிக ஆணித்தரமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற கனேடிய அரசியல் வாதியான பொப் ரே இந்த 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' கடந்த நவம்பரில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். குறிப்பிடத்தக்கது.

Camilla Orjela Camilla Orjela Ph.D இதுவரை பதினைந்து தடவைகள் இவர் சென்றுள்ளார். இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் எல்லாரையும் சந்தித்து உரையாடியுள்ளார். அது மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், மற்றும் புலிகள் தரப்பில் தமிழ்செல்வன், புலித்தேவனையும் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இவர் உரையாடியுள்ளார். இவருடைய கலாநிதி பட்டத்திற்காக இவர் எழுதியதே இலங்கைப்பிரச்சனையைப் பற்றி தான் என்றால் (”Civil Society in Civil War: Peace Work and Identity Politics in Sri Lanka” என்னும் தலைப்பில் இவர் ஆய்வு செய்துள்ளார்) இலங்கை விடயத்தில் எவ்வளவுக்கு இவர் ஆர்வமான உள்ளார் என்பது தெரியும்.

Camilla Orjela Ph.D ஒரு பத்திரிகையாளரும் கூட. இவர் Utblick என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இந்த சஞ்சிகை IOGT-NTO's International Institute ஆல் வெளியிடப்படுகின்றது. இந்த சஞ்சிகையின் முக்கிய நோக்கம் சமாதானமும்- முன்னேற்றமும் ஆகும் ( Peace- and Development issues). அதே சமயம் இவர் SASNET's board உறுப்பினராக ஐனவரி 2004ம் ஆண்டில் இருந்து அங்கம் வகிக்கின்றார்.

சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பின் அடுத்த கூட்டம் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு Scarborough Village (மார்க்கம்- கிங்சன் சந்தியில்) நடைபெறவுள்ளது

தகவல்: செழியன் chelian@rogers.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner