இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

ஒற்றைச் சாளரத்தில் நுழைந்த நான்கு திசைக் காற்று!

- சொல்வலை வேட்டுவன் -


கானல் காடு என்ற மலைப் பிரதேசத்தில் கவிஞர்கள் சந்தித்து கலந்துரையாட விவாதிக்க தமிழக கவிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் திலகபாமா. 35 கவிஞர்கள் ஒன்றினைய நாளும் நிகழ்வும் வடிவமைத்து 6.10.07 மற்றும் 7.10.07 சந்திக்க திசைகளின் மையத்தில்

கானல் காடு என்ற மலைப் பிரதேசத்தில் கவிஞர்கள் சந்தித்து கலந்துரையாட விவாதிக்க தமிழக கவிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் திலகபாமா. 35 கவிஞர்கள் ஒன்றினைய நாளும் நிகழ்வும் வடிவமைத்து 6.10.07 மற்றும் 7.10.07 சந்திக்க திசைகளின் மையத்தில்
சுழலும் காற்றென வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த கவிஞர்கள் பட்டி வீரன் பட்டியில் 6ம் தேதி சந்தித்து இரு குழுக்களாக இரு
வாகனங்களில் ஏறி ஒன்றரை மணி நேர மலைப் பாதை பயணத்திற்கு பின் மங்களம் கொம்பு எனும் சிற்றூரை அடைந்தோம். அங்கிருந்து தங்குமிடத்திற்கு நடைபாதையாய் கிளம்பினோம். மனிதனின் பெயர் சூட்டலுக்கு உட்படாமல் தனித்துவமாய் ஆதி வாசியின் சிரிப்பை போல , காற்றோடு கை கோர்த்து சிரித்துக் கொண்டிருந்தது. விதவிதமான பூக்கள் காற்றோ அந்த மதிய பொழுதில் கூட இளம் பனியை தன்னோடு கரைத்து கொண்டு மலையேறிக் கொண்டிருந்த கவிஞர்களின் கன்னங்களில் தடவி வரவேற்றபடியிருந்தது. நவீன கவிதையை அர்த்தப் படுத்த வாழ்பனுபவத்தை துழாவித் துழாவி செல்வதைப் போல் நாங்கள் மலையடிப் பாதையில் சூழ்ந்திருந்த செடி கொடி
விலக்கி பயணித்த படியிருந்தோம்.

சிவந்திருந்த காபி பழத்தை கொத்திக் கொண்டிருந்த மஞ்சள் பறவை கவிஞர்களை பற்றி தெரிந்திருக்கும் போலும். பதறி படபடத்து மிளகு
கொடிக்கு தாவியது.30 நிமிட நடைபயணத்தில் நாங்கள் எங்கள் கூடாரத்தை அடைந்தோம். அருகே ஒரு ஓடை ஓசையின்றி அவசரப்
படாமல் நடந்து கொண்டிருந்தது. மது கோப்பையில் மிதக்கும் பனிக்கட்டிகளாய் கரையோர கூழாங்கற்கள் அதில் நனைந்து
சில்லிட்டிருந்தது. தரையிருந்து 3000 அடி உயரத்தில் இருந்த இந்த காடும் அதன் பச்சையும் போதை போலிருந்தது இந்த இன்பத்தால்
தான் பாரதி இதை இறைவன் நந்த லாலாவாக பார்த்தானோ தெரியாது . இந்த மயக்கத்தை தவறவிட கூடாது என்பதாலேயே
திலகபாமா மதுவுக்கும் புகைத்தலுக்கும் தடை விதித்திருந்தார். மதிய உணவு முடிந்து....

அவரவர் பற்றிய அறிமுக உரையும் அதை தொடர்ந்து ஒரு சில கவிதையை வாசிக்கும் படி திலகபாமா அழைப்பு விடுக்க புல்

அவரவர் பற்றிய அறிமுக உரையும் அதை தொடர்ந்து ஒரு சில கவிதையை வாசிக்கும் படி திலகபாமா அழைப்பு விடுக்க புல்
தரையில் முழு வட்ட கவிஞர்களின் அமர்தலில் முதல் கவிதையும் அறிமுகமும் ஆய்வு பட்ட மாணவ மாணவிகளிடமிருந்து
துவங்கியது . கவிதை வாசிப்பினும் அறிமுக குறிப்புகளிலும் ஒரு விசயம் தெளிவானது . வந்திருந்தவர்கள் மொத்தம் 35 பேர் அதில்
4 விதமான மனோ பாவங்கள் நிலவியது. பொன்னீலன், தோதாத்ரி, உள்ளிட்ட மார்க்சீயப் படைப்பு மனநிலைவாதிகள்,பிரம்மராஜன்
அமிர்தம் சூர்யா , பா.வெங்கடேசன் , பழனிவேள். உள்ளிட்ட நவீன கவிதையின் உன்னத பதாகை பிடிக்கும் மனநிலை வாதிகள்
ரங்கநாயகி , திலகபாமா,கமலாம்பாள் உள்ளிட்ட பெண் உடல் மொழிக்கு எதிரான பெண்ணிய வாதிகள் , தமிழ் மணவாளன் வே. எழிலரசு சொர்ண பாரதி , விஜயேந்திரா ஆகியோர் விழி.பா. இதயவேந்தன், பழமலய் ஆகியோர்

விழி .பா. இதயவேந்தன் அறிமுக கவிதையில் மட்டுமன்றி கருத்தியல் சார்பிலும் பழமலய்க்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாயிருக்க இவர்களோடு விரிவுரையாளர் பெரியசாமி ராஜா மற்றும் ஆய்வு பட்ட மாணவ மாணவிகள் சேர்ந்ததாய் ஒரு
தோற்றம் கொள்ள ....கவிதையியல் குறித்தான அல்லது இன்றைய கவிதையின் அடுத்த நகருதல் என்பதான விவாதம் தொடராமல்
நவீன கவிஞர்கள் மக்கள் பிரச்சனையை கவிதையில் பதிவு செய்யாதது ஏன் என்று பெரியசாமி குரலெடுக்க மக்கள் மொழி கவிதையின் அவசியம் / உன்னதம் பற்றி பழமலய் இடையிடையே தன் குழுவாதத்தை முன் வைக்க , அன்பை பற்றிக் கவிதை எழுதினால் அது பௌத்தத்தை பற்றியது தான் தனியாக பௌத்தம் என்ற சொல்லோடு எழுத வேண்டியதில்லை என வெங்கடேசன் மறுதலிக்க தான் எழுதிய ஆயிரக் கணக்கான கவிதைகளை இது கவிதையில்லை அதை நானே மறுதலிக்கிறேன் என்று சொன்ன இராமலிங்க அடிகள் சிறந்த கவிஞர் என்றும் தமிழில் இன்று எவனாவது இப்படி நேர்மையான கவிஞன் உண்டா என்ற வாதம் பழமலய் துவங்க பழனிவேள் இடைமறித்து அவ்வாதத்தை தடுத்து நவீன கவிதையின் அரசியல் மற்றும் போக்கு குறித்து பேச ய்த்தனிக்க வேண்டும் என குரல் கொடுத்தும் அது தொடராமல் பெண்ணின் உடல் மொழி அரசியலுக்கு வாதம் முன்னகர ரங்கநாயகி முகம் சுளிக்க , ப்ரியா இப்போக்கை கண்டிக்க திலகபாமா உடனடியாக இப்பேச்சு தொடரக் கூடாது என இடை மறித்து தடுத்து நிறுத்தினார். இந்த கட்டுப் பாடற்ற சுதந்திரமான தர்க்க வெளியை கொஞ்சம் கட்டுப் படுத்து எல்லை மீறாத படி கவின் கவி நடுவரைப் போல் செயல் பட்டு சாதுர்யமாக தகவமைத்தார். அரைநாள் அறிமுக விவாதம் இவ்வாறாக அமைந்தது பின் முகாம் நெருப்பு , குளிர் பாடல்கள் பரஸ்பர கை குலுக்கல் உறக்கம் என் இரவு நீண்ட படியிருந்தது.கூட்டாக கவிஞர்களோடு விடியற்காலை வாக்கிங் என்ற பெயரில் மலை உலா வந்தது . வாழ்க்கையின் இன்னொரு வாசலை திறந்து பார்த்தது போலிருந்தது . மலை நெல்லி சுவைத்து காட்டு பழம் ருசித்து ஒளிவட்டம் கழற்றி விட்டு கவிஞர்கள் கும்மாளமிட்டு நடந்த அபூர்வ காட்சிதான்.

காலை சிற்றுண்டிக்கு பின் பேராசிரியர் தோதாத்ரி ஆண்டாளை பற்றிய ஒரு ஆய்வு பார்வையாகி உரை நிகழ்த்தினார்" ஆண்டாளை
இன்றைய உடலரசியல் கோட்பாட்டோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. ஆண்டாளின் வாழ்வும் பாடலும் தாந்திரீகம் விவசாயத்தை தாய்
வழி சமூகத்தை உள்வங்கியது. பிற்காலத்தில் தான் பக்தி இலக்கியத்தில் அவள் திணிக்கப் பட்டாள்" என்றும் தாந்தரீகம் பற்றிய சடங்கு முறைகளை விவரித்து ஆண்டாள் எனும் பெண் கவிஞரை துவக்கமாக வைத்து இன்றைய பெண் கவிதை சூழலுக்கு தனது உரையை நகர்த்தினார்.

அதை தொடர்ந்து பேராசிரியரும் நவீன கவிஞருமான பிரம்மராஜன் " படைப்பாளியின் அகந்தையும் வாசக திமிரும்" என்ற தலைப்பில்
நவீன கவிதையின் கட்டு மானம் / புரிதல்/ அர்த்தப் படுத்தலில் / அரசியல்/ நிராகரிப்பின் திமிர் போன்ற புள்ளிகளை உள்ளடக்கிய
காத்திரமான கட்டுரை வாசித்தார். " ஒரு இடத்தில் கூட தமிழ் அறிஞர்கள்/ உரையாசிரியர்களை குறிப்பிடாமல் முழுக்க முழுக்க
வாயில் நுழையாத எங்கள் மண் மொழி சாராத அறிஞர்களின் மேற்கோளால் அடுக்கப் பட்ட கட்டுரையால் எனக்கு என்ன பயன்?" என்ற பழமலய்யின் ஒற்றை முனகலோடு வேறு எந்த ஒரு எதிர்வினையும் கேள்வியுமின்றி அக்கட்டுரை ஆணவ தொனியில் நின்று அடங்கியது.

மூன்றாவதாக பெரியசாமி ராஜா தோள்சீலைப் போராட்டம் பற்றிய தனது உரையை நிகழ்த்தும் முன் " உடலரசியல் என்ற பெயரில்
உடலை ஆயுதமாக்குவதாகச் சொல்லி கவிதை வெளியில் பெண் உடல் ஆணின் மறைமுக நுகர்வு பொருளாகி போனதும் - அதற்கு
முற்றும் எதிர் துருவத்தில் பெண்கள் தனது உடல் பார்வை பொருளாக விரும்பாது மேல்சட்டை அணிய , மார்பகத்தை மூட
வரலாற்றில் செய்த போராட்டங்களும் தியாகங்களூம் நினைவு கூறுவது பெண் கவிதை வெளியில் அவசியமானது"என்றார்.
பெரிய சாமி ராஜாவின் உரைக்கு பின் பொன்னீலன் மிக நீண்ட உரையாற்றினார். கிறிஸ்த்துவத்திடமிருந்து நாம் பெற்றத், சாத் கலகம்
மற்றும் அதன் வெளிப்பாடு தோள் சீலை போராட்ட படிநிலைகள் அதன் வெற்றி என ஒரு வரலாற்று காலத்தை நம்முன் நிகழ்த்தி
காட்டினார். ஒரு பெண் துணிந்து தன் மார்பகத்தை மறைக்க ஜாக்கெட் போட்டதும் அதற்கு ஜமீன் அதிகாரி முலை வரி கட்ட சொன்னதும்
கோபம் கொண்ட பெண் முலை இருந்தால் தானே அதை நான் மூட வேண்டும். உனக்கு வரி கட்ட வேண்டும். அது இல்லாவிட்டால்
எப்படி வரி கேட்பாய் என்று அதிகாரியின் வாளைப் பிடுங்கி தனது முலை அறுத்த சம்பவத்திற்கு பின் தான் போராட்டம்
உச்சகட்டத்தை அடைந்தது இன்று எல்லாரும் நாகரிகமாய் அலங்காரமாய் மூடிக் கொண்டிருக்கிறோம் என்றார். இப்படி போராடிய
பெண்கள் உள்ள நாட்டில் தான் எழுத்திலே / கவிதையிலே முலைகளை யோனிகளை உலாவ விடுகிறார்கள் என்ற மறைமுக ஆதங்கம் அரூபமாய் வெளிப்பட்டது.

இறுதியாக வே. எழிலரசு இலக்கியவாதிகளின் இருப்பும் அரசியலும் தான் அவர்களின் எழுத்தின் வடிவத்தை / பாடுபொருளை
தீர்மானிக்கிறது என்ற உள்ளீடற்ற இலக்கியத்தின் அரசியல் பற்றி கட்டுரை வாசித்தார்.நேரமின்மையால் பல படைப்பாளி களின்
கட்டுரைகள் வாசிக்க முடியாமல் போக அவற்றை தொகுத்து நூலாக கொண்டு வர முடிவெடுக்க பட்டது.

கவிதைக்கு மட்டுமேயான கவிஞர்கள் சந்திப்பாக நிகழ்த்தாமல் கவிதையோடு சமூகம் / வரலாறு தமிழின் தொன்மம் இவற்றோடு
இச்சத்திப்பு நிகழவும் குறிப்பிட்ட குழுவை அழைக்காமல் பல்வேறு இசம் மற்றும் அரசியல் சார்ந்த பலதரப் பட்ட கவிஞர்களை
அழைத்ததும் அவர்களுக்குள் ஒரு ஒத்திசைவை நிகழ்த்த முடியுமா? அல்லது கொடுக்கவும் பெறவும் ஏதேனும் ஒரு புள்ளியில் சந்திக்க
முடியுமா? என்ற ஆவலின் பொருட்டு இரண்டாவது முறையாக எந்த விதமான வார்த்தை வன்முறையுமின்றி மகிழ்ச்சியோடு கைகுலுக்க
வைத்து மலையிறக்கி மனதில் நிற்கும் படி வழி அனுப்பி வைத்தார் அமைப்பாளரும் கவிஞருமான திலகபாமா.

கானல் காடு கவிஞர் அரங்கில் பங்கேற்ற படைப்பாளிகளின் கட்டுரைகள் நூலாக்கம் பெற்று விடுபட்ட பகுதிகளின் முக்கியத்துவம் வெளிக் காட்டும் படி முழுமையை தமிழ் சூழலில் முன் வைக்க மீண்டும் ஜனவரியில் இப்படைப்பாளிகள் கூடுவார்கள் எனற எதிர்பார்ப்போடு அவரவர் சராசரி இயல்பு வாழ்வுக்கு திரும்ப ஆயுத்தமானோம்.

mathibama@yahoo.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner