இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2009 இதழ் 116  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

பதிவுகள்: படைப்பாளிகளே! நன்றி! நனறி!
- வ.ந.கிரிதரன்
-

பதிவுகள்: படைப்பாளிகளே! நன்றி! நனறி!!அண்மையில் ஜெயமோகனின் வலைப்பதிவில் 'வரவுப் பெட்டி' என்றொரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதிலவர் தனது கணித்தமிழ் இலக்கிய அனுபவங்கள் பற்றிக் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருந்தார்: "....பின்பு ·பாரம் ஹப் என்ற விவாத தளத்தில் நுழைந்து கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்தேன். அறிமுகம் இல்லாத காரணத்தால் சொந்தப்பேரில் சொந்த மின்னஞ்சலில் எழுதினேன். திண்ணை இணையதளத்திலும் அப்போது ஒரு விவாதக்களம் இருந்தது. அதிலும் எழுதினேன். அவ்வளவுதான் தினமும் என் வரவுப்பெட்டி நிறைய கடிதங்கள். பெரும்பாலும் கண்களை பிதுங்க வைக்கும் வசைகள். நான் எப்போதுமே வசைகள் நடுவே வாழ்ந்தவன். ஆனால் இணையவசைகளை கணேசபுரம் சந்தையில்கூடக் கேட்டதில்லை.தொடர்ச்சியாக நான் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். திண்ணையில் அனேகமாக எல்லா வாரமும் எழுதியிருக்கிறேன். பின்பு ஒரு விஷயத்தைக் கண்டுகொண்டேன் , திண்ணையின் விசித்திரமான ஜனநாயகம் ஒரு விபரீத விளைவை உருவாக்குகிறது. நாம் அதில் ஒரு கட்டுரையை தீவிரமாக எழுதினால் உடனே அதற்கு எதிர்வினையாக பத்து வசைகளையும் அவதூறுகளையும் அதில் அச்சேற்ற வாய்ப்பளிக்கிறோம். நம் கட்டுரையின் முக்கியத்துவம் மூலம் அந்த வசைகளுக்கும் முக்கியத்துவத்தை சம்பாதித்து அளிக்கிறோம். அதற்கு பதில் சொல்லப்போனால் அந்த வசைகளின் எண்ணிக்கையும் முக்கியத்துவமும் அதிகரிக்கும். ஆகவே திண்ணையில் எழுதுவதை மட்டுப்படுத்திக் கொண்டேன். ஆயினும் வேறு வழி இல்லை, அதுவே ஒரே மின் ஊடகம். என்னைப்பற்றிய மிக மோசமான வசைகள் திண்ணையில் தான் இப்போதும் சாஸ்வதப்படுத்தப் பட்டுள்ளன..."

மேற்படி அவரது வலைப்பதிவுக் குறிப்பில் ஒரு இடத்திலும் 'பதிவுகள்' இணைய இதழ் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. மிகவும் ஆச்சரியமாகவிருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் தனது பதிவுகளில் 'பதிவுகள்' பற்றிக் குறிப்பிடாததற்குக் காரணங்கள் எதுவாக இருந்தாலும் அது அவரது தனிப்பட்ட உரிமை. எழுத்தாளனொருவரைப் பார்த்து இப்படித்தான் எழுதவேண்டும் என்று வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். எனவே மேற்படி பதிவில் ஜெயமோகன் பதிவுகளைப் பற்றிக் குறிப்பிடாதது பற்றி நாம் எந்தவிதக் கேள்வியினையும் எழுப்பப் போவதில்லை. ஆனால் அவருக்குள்ள உரிமைபோல் எமது கருத்துகளை எடுத்துரைப்பதற்குள்ள உரிமையின் அடிப்படையில் எம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதில் எந்தவிதத் தவறுகளுமிருப்பதாக நாம் கருதவில்லை.

பதிவுகள்: படைப்பாளிகளே! நன்றி! நனறி!!பதிவுகளின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து அவ்வப்போது ஜெயமோகன் பலவேறு சமயங்களில் பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பிப் பங்களித்துள்ளார். பதிவுகளில் மற்றும் பதிவுகளின் விவாதத் தளத்தில் நிகழ்ந்த பல்வேறு விவாதங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துத் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார். இவ்விதமாகப் பங்குபற்றிய இணைய இதழொன்றின் பெயர் கூட ஜெயமோகனுக்கு ஞாபகம் வராமல் போனது ஆச்சரியமளிக்கிறது. இவரைப் பொறுத்தவரையில் இவரது கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த நூல்களில் கூட அக்கட்டுரைகள் வெளிவந்த பதிவுகள் பற்றிய நன்றிக் குறிப்புகள் கூட வெளிவருவதில்லை. எழுத்தாளர் ஜெயமோகனின் ஞாபக மறதி மிகவும் ஆச்சரியத்துக்குரியது. இருந்தாலும் பதிவுகளுக்கு அவ்வப்போது பங்களிப்புச் செய்ததற்காகவும், விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டதற்காகவும் பதிவுகள் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொள்கிறது. ஆனால் ஜெயமோகன் போன்ற படைப்பாளிகள் புனைகதைகளுடன் நூற் திறனாய்வு, விமர்சனம் போன்ற துறைகளிலும் தம் கவனத்தைத் திருப்புவர்கள். சில பதிவுகளை, உண்மைகளை மறைக்க முயல்வது இவர்களது தேர்வுகளின் தகுதிகள் பற்றிய சந்தேகங்களுக்கு வழிவகுத்து விடும். அத்துடன் அவர்களது அத்துறை பற்றிய பங்களிப்புகள் இத்தகைய காரணங்களினால் காலப்போக்கில் காணாமற் போய்விடும் அபாயத்திற்கும் வழி சமைத்துவிடும்.

பதிவுகளில் பல எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவருகின்றன. வெளிவந்திருக்கின்றன. எழுத்தாளர் ஜெயபாரதன், வெங்கட் சாமிநாதன், கே.எஸ். சிவகுமாரன், புதியமாதவி, திலகபாமா, லதா ராமகிருஷ்ணன், ஆபிதீன், தாஜ், யமுனா ராஜேந்திரன், சந்திரவதனா செல்வகுமாரன், சுமதி ரூபன், திண்ணை தூங்கி, இளங்கோ, நெப்போலியன், டாக்டர் எம்,கே. முருகானந்தன், டாக்டர் நடேசன், அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, குரு. அரவிந்தன், தா.சிவபாலு, ஜெயந்தி சங்கர், வைகைச்செல்வி, தேவகாந்தன், செழியன், என்.கே.மகாலிங்கன், நாக. இளங்கோவன், முனைவர் இளங்கோவன், முனைவர் துரை குமரன், றஞ்சனி, கி.பி.ராஜநாயஹம், சாரங்கா த்யாநந்தன், நவஜோதி யோகரட்ணம், நாகரத்தினம் கிருஷ்ணா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், வேதா இலங்காதிலகம், ஆல்பேர்ட், கனிஷ்கா, தேவேந்திரபூபதி, பிச்சினிக்காடு இளங்கோ, ஆதவன் தீட்சண்யா, மட்டுவில் ஞானகுமாரன், சுவிஸ் ரவி, சுவிஸ் றஞ்சி, சாந்தினி வரதராஜன், இளங்கோவன் )பாரிஸ்),... இவ்விதம் பலரைக் குறிப்பிடலாம். எழுதிய அனைவரினதும் பெயர்களை முழுமையாகப் பட்டியலிடுவது சாத்தியமற்றது. பதிவுகளின் பக்கங்களைப் புரட்டிப பார்ப்பதன் மூலம் அனைவரையும் அறிந்து கொள்ளலாம். ஆரம்ப எழுத்தாளரிலிருந்து , பண்பட்ட எழுத்தாளர்வரை அனைவரினது படைப்புகளையும் பதிவுகள் வெளியிட்டு வருகின்றது.

பதிவுகளுக்கு எழுதும் படைப்பாளிகள் பதிவுகள் பற்றி என்ன கருத்துகளை வைத்திருக்கின்றார்கள்? பதிவுகளைப் பற்றி எங்காவது நினைவு கூர்ந்திருக்கின்றார்களா? தாங்கள் வெளியிட்ட நூல்களில் தமது படைப்புகள பதிவுகளில் வெளிவந்த விபரங்களைப் பெருமிதத்துடன் பதிவு செய்திருக்கின்றார்களா? இவற்றை ஓரளவாவது அறிவதற்கு இணையத்தில் நடத்திய தேடலில், மற்றும் கிடைத்த நூல்களில் காணப்பட்ட விபரங்களைப் பரிசீலித்ததில் கிடைத்த விபரங்கள் மகிழ்ச்சியினைத் தந்தன. பதிவுகளின் படைப்பாளிகளில் பலர் பதிவுகளை மறந்துவிடவில்லையென்பதை அறிய முடிந்தது.

பதிவுகளில் எழுதிய பலர் தமது படைப்புகளை வெளியிட்டிருக்கின்றார்கள். அவற்றில் சில வருமாறு:

1.'கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ'வன் கவிதைத் தொகுப்புகள்:
a. உயிர்க்குடை (சந்தியா பதிப்பகம், தமிழகம்): மறக்காமல் பதிவுகள்.காமுக்கும் நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றார். b. பூமகன் (மக்கள் பதிப்பகம், சென்னை): நூலின் ஆரம்பத்தில் 'என் நிலைக்கண்ணாடிகள்' என்று பதிவுகள் இணைய இதழினையும்
குறிப்பிட்டிருக்கின்றார். ஆசிரியரைப் பற்றிய குறிப்பிலும் பதிவுகள் இதழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. ஜெயந்தி சங்கர் - 'முடிவிலும் ஒன்று தொடரலாம்' (சிறுகதைகள்); ஆசிரியரைப் பற்றிய குறிப்பில் இவரது கட்டுரைகள் கதைகள் வெளிவரும் மின்னூடகங்களிலொன்றாகப் 'பதிவுகளும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

3. றஞ்சனி கவிதைகள் (இமேஜ் & இம்பிரெஷன் , சென்னை): இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் பலவற்றைப் பிரசுரித்த ஊடகங்களிலொன்றாகப் பதிவுகளுக்கும் நன்றி கூறப்பட்டிருக்கின்றது.

3. புதியமாதவியின் நூல்கள்:
a. சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள் (கட்டுரைகள், விமர்சனங்கள்; வள்ளி சுந்தர் ,சென்னை வெளியீடு)
b. மின்சார வண்டிகள் (குறுநாவலும், சிறுகதைகள்) - மருதா, சென்னை வெளியீடு.. பதிவுகளுக்கு நன்றி கூறப்பட்டுள்ளது.
c. நிழல்களைத் தேடி (கவிதைகள்) - அன்னை இராஜேஸ்வரி, சென்னை வெளியீடு. மின்னித்ழ்களிலொன்றாகப் பதிவுகளுக்கும் நன்றி கூறப்பட்டுள்ளது.
d. ஹே ...ராம்! (கவிதைகள்) - மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மனற வெளியீடு. மறக்காமல் புதியமாதவி பதிவுகளுக்கு நன்றி கூறியிருப்பதோடு பதிவுகளின் இணையத்தள முகவரியினையும் பதிவு செய்திருக்கின்றார்.

4. கவிஞர் புகாரியின் கவிதை நூல்: சரண்மென்றேன் (காவ்யா வெளியீடு). நன்றி என்று பதிவுகளையும் மறக்காமல் நினைவு கூர்ந்திருக்கின்றார் கவிஞர்..

5. நவஜோதி ஜோகரட்ணம் (கவிதைகள்); தனது கவிதைகள வெளிவந்து ம்கிழ்வைத் தந்த ஊடகங்களிலொன்றாகப் பதிவுகளையும் கவிஞர் தன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

6. டாகடர் எம்.கே.முருகானந்தன்: 'மறந்து போகாத சில..) (இலக்கிய விமர்சனங்கள்). இத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் சில வெளிவந்த ஊடகங்களிலொன்றாகப் பதிவுகள் இணைய சஞ்சிகையினையும் ஆசிரியர் நினைவு கூர்கின்றார்.

7. கவிஞர் வேதா இலங்காதிலகம் தனது 'உணர்வுப் பூக்கள்' கவிதைத் தொகுப்பில் 'என் தமிழ்ப் பயணத்தில் களமாக, துணையாக இருந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி' என்று இணையத்தளமான பதிவுகளுக்கும் நன்றி தெரிவித்திருக்கின்றார்.

8. கவிஞர் திலகபாமா (சிவகாசி) தனது சூரியாள் கவிதைத் தொகுதியில் 'இக்கவிதைகளில் சிலவற்றை வெளியிட்ட திண்ணை.காம், பதிவுகள்.காம், சொல்புதிது ஆகியோருக்கு என் நன்றி' என நன்றி தெரிவித்திருக்கின்றார்.

9. ஆபிதீன் உயிர்த்தலம் (சிறுகதைகள் தொகுப்பு). எனி இந்தியன் பதிப்பக்ம், சென்னை வெளியீடு. ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான உயிர்த்தலம் நூலுக்கான முன்னுரையில் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுவார்: எனது இந்த இரண்டாவது கதைத் தொகுப்பு வெளிவர பெரிதும் காரணமான பிரியத்திற்குரிய சகோதரர் பி.கே சிவகுமார் , ‘Go Ahead’ சொன்ன கோ. ராஜாராம், கதைகளை விரும்பிக் கேட்ட தமிழகத்தின் சில வீரதீரப் பத்திரிகைகள் - ‘ஆபாசம்’ , ‘பிரச்னைக்குரியது’ என்று - தயங்கித் திருப்பி அனுப்பும்போதெல்லாம் உள்ளடக்கம் உணர்ந்து அவைகளை ஒரு வார்த்தை கூட வெட்டாமல் சர்வ சுதந்திரத்துடன் பிரசுரித்த ‘திண்ணை‘ ஆசிரியர் குழு - ‘பதிவுகள்’ ஆசிரியர் நட்புமிகு வ.ந. கிரிதரன் , கணையாழி - புது எழுத்து - படித்துறை சிற்றிதழ் ஆசிரியர்கள் , விளக்கக் குறிப்புகளுக்கு உதவிய ஹமீது ஜாஃபர் நானா, மெய்ப்பு பார்த்து நல்ல ஆலோசனைகளையும் வழங்கிய நண்பர் ஹரன் பிரசன்னா, மற்றும் சிறப்பாக வெளியிடும் ‘எனி இந்தியன்’ பதிப்பகத்தாருக்கு நன்றி'..

10. சி.ஜெயபாரதன்: வானியல் விஞ்ஞானிகள் (தமிழினி வெளியீடு). நூலில் ஆசிரியர் பற்றிய குறிப்பில் இவரது ஆக்கங்கள் வெளிவந்த மின்னூடகங்களிலொன்றாகப் பதிவுகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆசிரியர் தனது வலைப்பதிவில் மேற்படி நூல் பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: என் விஞ்ஞான நூலுக்கு அணிந்துரைகள் எழுதிய திரு கி. வ. வண்ணன், முனைவர் ஐயம்பெருமாள் ஆகியோர் என் மதிப்பிற்கும், அன்புக்கும், நன்றிக்கும் உரியவர். நூலைப் படித்துச் சரிபார்த்து அரிய கருத்துகளை இருவரும் கூறிப் பிழைகள் திருத்தப்பட்டன. அரைநூற்றாண்டு குடும்ப நண்பர் திரு. கி. வ. வண்ணன் என்னுடன் பாரத அணுசக்தி ஆய்வு உலை ஸைரஸிலும் [CIRUS Research Reactor], கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்திலும் பணி புரிந்தவர். முனைவர் ஐயம்பெருமாளை எனக்கு அறிமுகப் படுத்திய கவிஞர் வைகைச் செல்வி [ஆனி ஜோஸஃபின்] அவர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றி. இந்நூலைப் பொறுமையுடன் சீர்ப்படுத்திப் படங்களுடன் பின்னிச் சிறந்த விஞ்ஞான பதிப்பாக வெளியிட்ட தமிழினி அதிபர் வசந்த குமார், மணிகண்டன் அவர்கள் இருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி. எனது விஞ்ஞானக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்ட திண்ணை வலையிதழ் அதிபர்கள் திரு ராஜாராம், திரு துக்காராம், பதிவுகள் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆகியோர் மூவருக்கும் எனது நன்றி. படங்கள் உதவிய அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பனின் ஈசா (ESA) மற்றும் பல்வேறு அகிலவலை விண்வெளித் துறைகளுக்கு என் நன்றி உரியதாகுக.

பதிவுகள்: படைப்பாளிகளே! நன்றி! நனறி!இவ்விதமாகப் பதிவுகளில் எழுதும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் ஒவ்வொன்றாக் நூலுருப்பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. தங்கள ஆக்கங்களை நூலுருவாக்கி தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கும் அதே சமயம் அவர்களது படைப்புகள் வெளிவந்த ஊடகங்களையும் மறக்காமல் நன்றியுடன் நினைவுகூர்ந்திடும் அவர்களது பண்பு எம்மைச் சிலிர்க்க வைக்கிறது. கூடவே பெருமிதவுணர்வும் பொங்குகின்றது. நண்பர்களே! உங்களது இலக்கியப் பயணம் மேலும் சிறப்புற எமது வாழ்த்துகள்.

ngiri2704@rogers.com

இணைய இதழ்கள் பற்றி .....

தமிழில் இணைய இதழ்கள்!இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  ....உள்ளே
தமிழில் இணையத்தள வளர்ச்சி பற்றியதொரு கருத்தரங்கு! - முனைவர் மு. இளங்கோவன் -.உள்ளே

தமிழில் இணைய இதழ்கள்! - முனைவர் க.துரையரசன் ... உள்ளே
தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்! - பத்ரி சேஷாத்ரி - .. உள்ளே
தமிழ் இணைய இதழ்கள் - ஒரு முன்னோட்டம்! - சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., .. உள்ளே
தமிழில் இணைய இதழ்கள்! - முனைவர். மு. இளங்கோவன் .. உள்ளே
இணைய இதழ்களில் பெண்ணியப் படைப்புகள்!
- முனைவர் துரை. மணிகண்டன்... உள்ளே

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?.. - பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)...உள்ளே
வலைப்பூ இலக்கியத்தின் வளமை! -முனைவர் மு. பழனியப்பன்,தமிழ் விரிவுரையாளர்,..உள்ளே

இணையத்தில் தமிழின் மறுமலர்ச்சி! - முனைவர் துரை. மணிகண்டன் [விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.உள்ளே

'பதிவுகள்' பற்றிச் சஞ்சிகைகள் சில...

நேரத்தை உபயோகமான முறையில் செலவழிக்க விரும்புபவர்கள் ஒரு முறை பதிவுகள் இணையத் தளத்துக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு வரலாம். அந்த அளவுக்கு பதிவுகளில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தீவிர இலக்கியம் மட்டுமல்லாமல் அத்தனைத் துறைகளிலும் தீவிரம் தெரிகிறது. அரசியல், கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், நிகழ்வுகள், சினிமா, அறிவியல், தமிழ் பத்திரிகைகள், தமிழ் இதழ்கள், தமிழ் இலக்கிய பக்கங்கள், ..எனப் பலதரப்பட்ட விசயங்கள் குறித்தும் இந்த இணையத் தளத்தின் வழியாக அறிந்து கொள்ள முடியும்....உள்ளே.

பதிவுகள்' பற்றித் 'தென்றல்'....உள்ளே.
'பதிவுகள்' பற்றித் தமிழ் 'கம்யூட்டர்' .உள்ளே.
'பதிவுகள்' பற்றி விகடனில்..
...மிகுதி உள்ளே

பதிவுகள் பற்றி 'காலச்சுவடு'... உள்ளே
பதிவுகள் பற்றி 'கீற்று.காம்'..... உள்ளே
வலைப்பதிவொன்றிலிருந்து....உள்ளே
தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில்...உள்ளே
பதிவுகள் பற்றிய ஆய்வுகள்....உள்ளே
கனடாச் சிறப்பிதழ்: வாழ்த்துகிறார்கள்உள்ளே.


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்