இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி  2008 இதழ் 97  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

.ஊடறு அஞ்சலி!
நினைவைத் தாக்கிய செய்தி: ' சிந்தனை' ஆசிரியர் 'பரா மாஸ்ரர்' மறைவு!    - றஞ்சி (சுவிஸ்)
' சிந்தனை' ஆசிரியர் 'பரா மாஸ்ரர்' மறைவு!புகலிடத்தில் நம் எல்லோராலும் பரா அங்கிள், பரா மாஸ்ரர் என அன்பாக அழைக்கப்பட்டு வந்த தோழர் பரா அவர்கள் (பரராஜசிங்கம் நேற்றிரவு (16.12.07) திடீரென காலமானார். அவரின் பிறந்த தினத்தன்றே மரணமும் அவரைத் தழுவிக்கொண்டது. இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகர்த்தாவும் இலக்கியச்சந்திப்பு நிகழ்வுகளின் முன்னோடியும் சிந்தனை சஞ்சிகையின் ஆசிரியரும் இடதுசாரி அரசியலாளருமாக பல பரிமாணங்களில் செயற்பட்ட அவருக்கு வயது 73. இவர் ஜேர்மனியிலுள்ள ஸ்டுட்காhட், பேர்லின் நகரங்களில் தனது புகலிட வாழ்வை மேற்கொண்டு வந்தவர். இடதுசாரியச் சிந்தனை கொண்ட இவர் இலங்கையில் பல தொழிற் கட்சிகளின் வேலைத் திட்டங்களிலும், அதன் போராட்டங்களிலும் பங்குபற்றியவர்.

தோழர் பரா அவர்கள் புகலிட இலக்கியத்துறையில் மட்டுமல்ல மாற்று அரசியலிலும், தலித்தியத்திலும் ஈடுபாடுகொண்டவராக இருந்தார். அத்தோடு அவர் மனிதஉரிமைகள் மீதான அக்கறைகொண்டவராக இருந்ததோடு, மனிதஉரிமை மீறல் சம்பவங்களை அவ்வப்போது பரவலாக்கி வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதை ஓய்வில்லாது செய்துவந்தவர், சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராடிவந்தவர். கடந்த ஒக்டோபர் மாதம் பிரான்சில் நடைபெற்ற தலித் மாநாட்டின் நிகழ்ச்சியில் பங்குபற்றி தனது ஆய்வுரையை வழங்கியிருந்தார். இதுவே அவர் கடைசியாக பங்குகொண்ட நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.

இவர் மல்லிகாவின் கணவரும், உமா, சந்தூஸ் ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார். குடும்ப வட்டத்துள் மட்டும் நின்றுகொள்ளாமல் இவர்கள் எல்லோரும் இந்த பொதுப்பரப்புகளில் செயற்பட்டதானது தோழர் பரா அவர்களின் உழைப்பின் மீதான நேர்மையைச் சொல்லிநிற்கிறது. அவரின் பிரிவு தரும் துயரில் இவர்களுடன் பங்குகொள்கிறது ஊடறு. அவருக்கு எமது கண்ணீர் அஞசலிகள்!

For funeral arrangements and other related information kindly contact: Sivarajan: + 49 711 441 17 69 - Suseendran: + 49 178 938 18 11 - Mahadeva Vasudevan Tel. +49 421 849 80 80 - Mobile: +49 172 430 52 24

தகவல்:  ranjani@bluewin.ch

கவிஞர் ரஞ்சனி அஞ்சலி!
பரா மாஸ்டருக்கு எம் கண்ணீர் அஞ்சலி!

- றஞ்சினி -


இன்றிருந்தவர் நாளை இல்லை ! மரணம் சாதாரண நிகழ்வென்று ஒவ்வோருவருடைய இறப்பும் எம்மை பலவீனப்படுத்தி ,பலப்படுத்திவிட்டுச்செல்கிறது. பரா மாஸ்டரின் இறப்பும் எமக்கு எதிர்பாக்காத ஒன்று . அவரை ஓராண்டிற்குமுன் சந்தித்தபோது நலமாகத்தான் இருந்தார் கடசிவரைக்கும் அரசியல் ,இலக்கியமென்று இயங்கிக்கொண்டிருந்தவர் திடீரென்று எம்மை விட்டு பிரிந்தது நம்பமுடியாத வேதனை , எல்லா வயதினருடனும் நண்பராக பழகும் குணம் அரசியல் ,இலக்கியம் மட்டுமல்ல எல்லாவிடயங்களையும் ரசித்து தானும் ஒருவராக கலந்து கொள்ளக்கூடிய கலை உணர்வுள்ள ஒரு மனிதரை இழந்து நிக்கிறோம், மல்லிகா அன்ரி எப்போதும் எல்லாத்திலும் இவரின் பலமாக இருந்தவர் ,மல்லிகா அன்ரிக்கும் , உமா , சந்தூஸ் , முரளி ,பிள்ளைகள் மற்றும் ,உறவினர் அனிவருக்கும் எமது ஆழ்ந்த ஆறுதலும் கண்ணீர் அஞ்சலியும் .இவரது சிரித்த முகம் இவரது அரசியல் இலக்கிய ஈடுபாடுகளும் எப்பவும் எம் நினைவில் இருக்கும் .

தகவல்: shanranjini@yahoo.com

உயிர்நிழல் அஞ்சலி!
முடியாத இழப்பு!

புகலிட இலக்கியச் சந்திப்பின் நிறுவன கர்த்தாக்களில் முக்கியமானவரும், எண்பதுகளின் சிறுசஞ்சிகைகளின் பரப்பில் 'சிந்தனை'யின் ஆசிரியரும், புகழிட அரசியல் களத்தில் மிகவும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் தன் பங்கை இறுதிவரை ஆற்றிக் கொண்டிருந்த எங்கள் தோழர் பரா அவர்கள் இன்று எம்முடன் இல்லை. 2007 ஆண்டு டிசம்பர் மாதம் 16ந்த் திகதி பின்னிரவில் இவர் எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

73வயதாகிய தோழர் பரா எவ்வயதினருடனும் தோழமையுடன் உறவாடும் பண்புள்ளவராகவிருந்தார். எந்தச் சந்திப்புகளிலும் உற்சாகத்துடனும் சோர்வற்றும் கலந்து கொண்டிருந்தார். புகலிட அரசியல் இலக்கியப் பரப்பில் ஈடு செய்யப்பட முடியாத இழப்புகளின் தொடர்ச்சியில் இப்போது தோழர் பராவும் அடக்கம்.

தோழர் பரா பற்றிய அவசரமான குறிப்பொன்றுடன் உயிர்நிழல் தனது தோழமையான அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது. இந்த வெறுமையான கணமொன்றில் மல்லிகை, உமா, முரளி, சந்தூஸ் ஆகியோரின் மன்ச்சுமையிலும் உயிர்நிழல் பங்குபற்றிக் கொள்கிறது.

தொடர்புகளிற்கு:
உமா-முரளி: 00 49 306 162 78 08
சிவராஜன்: 00 49 711 441 17 69
சுசீந்திரன்: 00 49 178 938 18 11 cnsusee@gmail.com

தகவல்: exilpub@gmail.com

ஒரு புலத்து இலக்கியத் தந்தையின் இழப்பு!

- என்.சரவணன் (நோர்வே) -

புலம்பெயர்ந்த இலக்கிய, அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமான, மிகுந்த தோழமை அன்பையும் தனக்குரிதாக்கியிருந்த மரியாதைக்குரிய தோழர் பராவின் இழப்பு மீண்டும் ஒரு இழப்பின் வலியை குத்திற்று நிற்கிறது. கடந்த இலக்கிய சந்திப்புகளே அவரது உறவை ஏற்படுத்தியிருந்த போதும் சமூக அரசியற் செயற்பாடுகள் குறித்து சில பல தடைவகள் அவரோடு உரையாடிய சந்தர்ப்பங்களை நினைவுகூர்ந்து பார்க்கிறேன். அவரின் விடாப்பிடியான கொள்கை, அவரின் இலட்சியம், இளமைமிக்க அவரின் செயற்பாட்டு வேகம் எல்லோராலும் மதிக்கப்பட்டு வந்தது. புலத்தில் செயற்பட்ட பல்வேறு அமைப்புக்களும் சிறிது காலங்களில் காணாமல் போனபோதும் இலக்கியச் சந்திப்பு இன்றளவிலும் நின்றுபிடிப்பதற்கு காரணமாக இருந்தவர் என்பதை அத்தனை தோழமை உள்ளங்களும் அறிவார்கள். ஒரு தந்தையை இழந்தது போன்ற உணர்வை எமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது தோழர்! பிள்ளகைள் சந்துஸ், உமா, துணைவியார் மல்லிகா மற்றும் அனைவருடனும் துயர் பகிர்ந்து கண்ணீருடன் வழியனுப்புகிறோம்.

nsarawanan@yahoo.no

பரா மாஸ்டர் என அன்பாக நாம் அழைக்கும்,  தோழர் பராவும் இன்றில்லை!

- கரவைதாசன் (டென்மார்க்) -

2007 டிசம்பர் மாதம் 16ந்திகதி பின்னிரவு 23.30 மணியளவில் இவர் காலமாவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியையும் துக்கத்தினையும் தருவிக்கிறது. என்னில் ஒரு துண்டம் இல்லாமல் போவதுபோல் உணர்கின்றேன், வலிக்கிறது. எஞ்சி இருக்கும் இறுதி நம்பிக்கைகளையும் உசுப்பி நிற்கிறது. இலக்கியச்சந்திப்புகளினதும் சமாதானத்திற்கான கருத்தரங்குகளினதும் நினைவுகளில் மனம் கரைகிறது. தாயகத்தில் இடதுசாரி அரசிலிலும் தொழிற்சங்க அரசியலிலும் நீண்டகாலம் அவர் கொண்ட அனுபவம் புகலிடச் சூழலில் மறுத்தோடி வாழ்வில் எங்களுக்கு வலிய தோள்களைத் தந்தது. தொடர்ந்து வரும் தோழர்களின் இழப்புகளின் வரிசையில் பராவின் இழப்பு எமது கனவுகளின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளை தகர்த்து பயம் கொள்கிறது.

முதுமையை எட்டி உதைத்து நின்று பத்திரிகை வெளியீடு, அரசியல் , இலக்கியம், விமர்சனம், குறும்படவிழாக்கள் என உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தவர், சாவை எட்டி உதைக்க முடியாமற் போனது எங்கள் சோகம். இவரின் பிரிவில் துயருறும் மல்லிகா அன்ரி, உமா, சந்துஸ், முரளி மற்றும் தோழர்கள் அனைவரின் கரங்களைப் பற்றி நிற்கிறேன்.

karavaithasan@yahoo.dk

துயரத்தில் பங்குகொள்ளுதல்!

- அதீதா - கற்சுறா -

எங்களிடம் ஒவ்வொரு காலமும்
ஒரு வெற்றிடம்
இருந்து கொண்டிருந்தது.
எப்படியும் யாராவது ஒருவரால்
பொத்திப்பிடிக்கப்பட்ட போதும்
எம்மை விட்டு மிக நளினமாக
வெளியேறி வெறுமையாய்
இருக்கவிட்டுப் போகிறது.
நித்திரையில்.
நடுவீதியில்.
ஒரு வெற்றிடம் எம்மை
எப்போதும் துரத்துகிறது.

மற்றது
அதீதா - கற்சுறா

matrathu@hotmail.com.

ashokyogan@hotmail.com

simon.vimal@yahoo.no


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner