இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசமபர் 2008 இதழ் 108  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கவிதைகள் டிசம்பர் 2008!

பதிவுகள் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!

புளொறன்ஸ் நைற்றிங்கேல். (12-5-1820.,- 13-8-1910.)

- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ்,டென்மார்க்) -


புளொறன்ஸ் நைற்றிங்கேல். (12-5-1820.,- 13-8-1910.)செல்வந்தத் தம்பதி வில்லியம் எட்வேட்
இல்லாள் பிரான்சிஸ் நைட்டிங்கேல் தவத்தால்
இல்லத்தில் ஆயிரத்தி எண்ணூற்றி இருபதில்
செல்வமகள் உதித்தாள், வைகாசி பன்னிரண்டில்.
மனிதநேயம் தவமிருந்த காரணத்தால் ஒரு
இனிய பெண்ணாய் சேவையை முத்தமிட்டு
மனிதநேயத்தில் வாகை சூட, கோதை
புனித சேவாமிர்த மகுடியோடு பிறந்தார்.

இத்தாலி புளொறன்ஸ் நகரில் உதித்ததால்
சொத்தானது பிறந்த நகரத்து நாமம்.
உத்தம உயர் குடும்பப் பெண்ணாயிவருக்கு
திருமணத்தோடு துயரற்ற வாழ்வு பெற்றவராசை.
இருபத்தி நான்கு அகவையில் பூந்தோட்டத்தில்
”நிறைபணியாக்கு!” இறையழைப்புக் கேட்டதாம்.
குறையற்ற பணி எதுவெனச் சிந்தனை….
துறையாம் தாதிப் பணியிலார்வமாய்ப் புகுந்தார்.

நிறையுடைத் தாதியாக ஜேர்மன் கைசவேத்தில் பயிற்சி.
முறையோடு வைத்தியசாலை மேலதிகாரியாய் உயர்ச்சி.
போர்வீரர் தாதியாக பிரபலமாய் ஊன்றினார்.
கிறிமியன் போரால் துருக்கியிலும் தொடர்ச்சி.
தாதிப் பணிக்கு நவீன அத்திவாரம்
ஆதியில் உருவாக்கிய சாதனை ஏந்திழையாள்.
தாதித் தொழில் பெண்மைக்கு மதிப்பெனும்
தகுதி உருவாக்கிய முதல் வனிதாமணி.

தாதியாய் கௌரவமடைந்த உலக முதற்பெண்.
தன் பாதையில் நடக்க, ஒளியூட்ட
சோதியாம் விளக்கேந்திய சீமாட்டிக்கு
ஏந்திய காரணப் பெயரோடு புகழொளி!
பிரித்தானிய தபால்தலையில் கௌரவ முகமானார்.
பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம்
பரிசை செஞ்சிலுவைச் சங்கத்தால் பெற்றார்.
விரிவான திட்டங்களை மகாராணியிடம் உரையாடினார்.

நைட்டிங்கேல் தாதிப் பயிற்சிக் கல்லூரியை
பிரித்தானிய சென்தோமஸ் வைத்தியசாலையில் ஆரம்பித்தார்.
பரந்த சேவையால் மனிதத்திற்கு நிழல் கொடுத்தவருக்கு
விரிந்தது தொண்ணூறாம் வயதில் மரணசாசனம்.
உறவுமலர்க் காடெனும் உலகில் தன்னலமற்று
உகந்த சேவைப் பாலூட்டிய ஒப்பில்லா மாதா.
உதாரணமாக நிலமிசை வைத்தியசாலைகளில் இன்றும்
நிழற்படமாய் நீடுவாழும் ஆராதானைக்குரிய அன்னை.

vetha@stofanet.dk

கீறல்கள், கிறுக்கல்கள்!

- வேதா. இலங்காதிலகம். -


வேதா. இலங்காதிலகம்.

மண்ணில்; மழழையின் கீறல்கள்
வெண் கட்டியாற் கோடுகள்
கரிக்கட்டி கொண்டு கிறுக்கல்கள்
உன்னத அறிவின் முகிழ்;வே.
ஆதிமனிதன் கீறல்களும் என்றோ
அறிவு வீதீயில் நிரூபணம்.
சோதி மழலையின் கீறலும்
போதி தருகின்ற பாதையே.

முன்னேறும் நரம்பின் இயக்கம்
தன்னார்வ நிதான அபிவிருத்தி
கன்னாபின்னா கிறுக்கலின் முடிவு.
பின்னிய கிறுக்கல்கள் நேராகும்.
பன்மை வரைவுகள் சீராகும்.
கீறல், கிறுக்கல் தேறலாகும்.
மீறல்களால் எழுவது சீறல்கள்.
சீறல்களின் மனப்படிமம் கீறல்கள.;

வேரிடும் காதல் மலர்வில்
சீரிய கவிவரி பீறல்
பூரண கவிதைக் கிறுக்கல்கள்.
ஈரமண்ணில் நண்டின் கீறல்
சாரமிகு கற்பனைக்குத் தூறல்.
பாரநெஞ்சின் வேதனைக் கீறலில்
பாரிய தாக்க வெளிப்பாடில்
வீரதீரக் கவிக் கிறுக்கல்கள்.

உதட்டுக் கீறல்களில் வழிந்து
உருகும் அன்பின் கிறுக்கல்;
கன்னல் விரியல் முத்தம்.
கண்களின் மன்மதக் கீறலால்
காதல் கிறுக்குப் பிடிக்கும்.
கீறலின் விதையுள் விருட்சம்.
கிறுக்கல்கள் நவீன ஓவியமாகும்.
கீறல்; கிறுக்கல்களுக்கும் அர்த்தமுண்டு.

vetha@stofanet.dk

**********************************

வெற்றியும் தோல்வியும்

- கீதா மதிவாசன் -


கவிதை வாசிப்போம் வாரீர்!தோற்றுப் போனதற்காகப் பெருமைப்படு,
நண்பனே! ஏனெனில்,
போட்டியில் பங்கேற்பவனுக்கே
வெற்றியும் தோல்வியும் சாத்தியம்!

வெறும் பார்வையாளனாக நின்று
வேடிக்கைப் பார்ப்பதினும்,
போட்டியிட்டுத் தோற்பது
பன்மடங்கு உயர்வென்று நினை!

ஓட்டப்பந்தயத்தில் கூட,
முதலில் வந்தவனை விட்டு
மூன்றாமிடத்தில் வந்தவனுக்குதான்
முதலில் பா¢சு வழங்கப்படுகிறது!

வீழ்வது தோல்வியென்று
யார் சொன்னது தோழா?
வீழ்ந்த நீ எழுந்தோடாவிடில்
அதுவன்றோ பெருந்தோல்வி?

பத்துபேர் பாய்ந்தோடினாலும்
பதக்கம் ஒருவனுக்குதானே என்று
ஒத்துக்கொண்டு ஒன்பது பேர்
ஓடாமலா இருக்கக்கூடும்?

புலியின் பதுங்கல்,
பாய்ச்சலுக்கன்றி, பயத்தினால் அல்ல!
உன் தோல்வியும் கூட
வெற்றிக்கான பாய்ச்சலாகவே இருக்கட்டும்!

வெற்றியைக் கொண்டாடும் வேளையிலும்
உன் தோல்விகளை நினைவில் கொள்!
எதிர்பாராத பொழுதுகளில் அவற்றை
என்றேனும் சந்திக்க நோ¢டலாம்!

வெற்றியா? தோல்வியா?
என்பதல்ல வாதம்;
ஆடுகளத்தில் நீ இருக்கிறாயா என்பதை மட்டும்
அடிக்கடி உறுதிபடுத்திக்கொள்!

உயரே தொங்கும் மாங்காய்க்காக
கல்லுயர்த்தும் சிறுவனைக் கவனித்துப்பார்!
கையெறியும் கற்கள்
தோல்வியைத் தழுவுகின்றனவே என்று
கைவிட்டுப் போவதில்லை எந்நாளும்!
கடைசியில் ஒரு காயாவது
அவன் கைகளில் வீழும்;
அதுவரை களைப்படைவதில்லை,
அவன் கரமும் மனமும்!

உன் தோல்விகளையே கற்களாக்கி,
கவனம் சிதறாமல்,
வெற்றிக்கனியைக் குறிபார்த்து எறிய
கற்றுக்கொள் அவனிடம்!

எத்தனை முறை கல்லெறியப்படுகிறது
என்பதல்ல கணக்கு!
கனி கைவசப்படுகிறதா என்பதில்
இருக்கவேண்டும் உன் கவனம்!

வெற்றியைக் கொண்டாட
எவராலும் இயலும்;
தோல்வியை ஏற்றுத் துவளாதிருக்க
ஒரு சிலரால் மட்டுமே முடியும்!

அந்தச் சிலா¢ல் ஒருவனாக நீ இருப்பின்,
வெற்றிக்கோப்பை
விரைவிலேயே உன் கையில் கிட்டும்;
வெற்றிமுழக்கம்
உன் வீட்டுக்கதவைத் தட்டும்!

உயிரின் மதிப்பு

கவிதை வாசிப்போம் வாரீர்!உயிரின் மதிப்பறியாதவர்களே!
உங்கள் தாயைக் கேளுங்கள்!
அவள் சொல்வாள்,
உங்களை இவ்வுலகுக்குக் கொண்டுவர
அவள் பட்ட வேதனையை!

அவளிடம் சொல்லுங்கள்,
அப்பாவி மக்களைக் கொன்றுகுவித்து
நீங்கள் நிகழ்த்திய சாதனைகளை!
அந்தத் தாயுள்ளம்
அணுஅணுவாய்த் துடிப்பதை
அருகிருந்து ரசியுங்கள்!

அவளிடம் விவா¢யுங்கள்,
எத்தனை உயிர்களைப் பறித்தீர்கள் என்று!
எத்தனைப் போ¢ன் அங்கங்களைச்
சிதைத்துச் சின்னாபின்னமாக்கினீர்கள் என்று!

அந்த அவலங்களை அப்படியே படம்பிடித்து
அவளைக் காணச்செய்யுங்கள்!
ஓலங்களையும், ஒப்பா¡¢யையும்
ஒலிநாடாவில் பதிவுசெய்து
அவள் காதுகுளிரக் கேட்கச்செய்யுங்கள்!

அத்தனையும் கேட்டபின்,
அவளுடம்பில் இன்னும்
உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறதா
என்பதைமட்டும்
என்னிடம் வந்து சொல்லுங்கள்!

இரத்தப்பரிசோதனை

கவிதை வாசிப்போம் வாரீர்!இரத்தத்தின் நிறம் சிவப்பென்பதை
இன்னமும் நம்பாத பாவிகளே!
இத்தனை மனிதர்களின்
இதயத்தைப் பிளந்துபார்த்தப் பின்னுமா
நீங்கவில்லை,
நீங்கள் கொண்ட சந்தேகம்?

கோழைகள்

மாட்டை அடக்குபவனே
மகாவீரன் என்று
மார் தட்டிய காலம் அது!

தன் இனத்துக்காக, தாய் நாட்டுக்காக
ஒற்றையில் போருக்குப் போனான்,
உண்மையான வீரன் அன்று!

இன்றோ,
மாட்டை அடக்கவேண்டாம்;
மனதை அடக்கத் தொ¢கிறதா?
அந்த மனதில் புரையோடிப்போன
மதத்தை அடக்கத் தொ¢கிறதா?

உடலில் பலமில்லை;
உள்ளத்தில் தெளிவில்லை;
உணர்வில் பற்றில்லை;
இவர்களிடம் இருப்பதெல்லாம்
மதமோ, இனமோ ஏதோவொன்றின் பெயரால்
வெறிகொண்ட மனமும்,
சகமனிதர் உயிரைப் பறிக்கும்
வேட்கையும் மட்டுமே!

இவர்கள்,
ஒற்றைப்பொத்தானில்
ஓராயிரம் உயிர்குடிக்கும்
வித்தை கற்றவர்கள்!

பிறர் வாழ்வை நாசமாக்குவதே
தம் வாழ்வின் இலக்கென்று
தவறாக போதிக்கப்பட்டு
திசைதிருப்பிவிடப்பட்டவர்கள்!

அங்ஙனம் போதிப்பவரே
உண்மை எதி¡¢கள் என்பதை
அடையாளங்காண இயலாத அறிவிலிகள்!
உயிர்களை நேசித்தறியாத
மனிதப்பிண்டங்கள்!

ஒற்றைவெடியின் தி¡¢யில்
தீவைக்கத் துணிவின்றி,
குப்பைகளைக் கொளுத்தி,
எட்டநின்று அதில் வெடிகளை வீசும்
சிறுவனைப் போன்ற கொழைகள்!

அவன் கொளுத்துவது, குப்பையைதான்!
இவர்கள் எ¡¢த்துச் சாம்பலாக்குவதோ,
எண்ணற்ற மனித உயிர்களையன்றோ?

தாயென்றாலும்.........

கவிதை வாசிப்போம் வாரீர்!வன்மத்தை மனதிலே அடைகாத்து,
வன்முறையைப் பொ¡¢த்தெடுக்கும்
வெறியர் கூட்டமே!
வசைபாடுது வையகம்,
உங்களைத் தாங்கிச் சுமந்த கருவறைகளை!
சிதறியோடும் குருதிக்கடலில்
சிறுதுளி உங்கள் தாயுடையது என்றாலும்,
இப்படிதான் எட்டநின்று
கொக்கா¢த்து, கும்மாளமிடுவீரோ?

geethamathivanan@ymail.com

**********************************

கீறல்கள், கிறுக்கல்கள்!

- வேதா. இலங்காதிலகம். -


வேதா. இலங்காதிலகம்.

மண்ணில்; மழழையின் கீறல்கள்
வெண் கட்டியாற் கோடுகள்
கரிக்கட்டி கொண்டு கிறுக்கல்கள்
உன்னத அறிவின் முகிழ்;வே.
ஆதிமனிதன் கீறல்களும் என்றோ
அறிவு வீதீயில் நிரூபணம்.
சோதி மழலையின் கீறலும்
போதி தருகின்ற பாதையே.

முன்னேறும் நரம்பின் இயக்கம்
தன்னார்வ நிதான அபிவிருத்தி
கன்னாபின்னா கிறுக்கலின் முடிவு.
பின்னிய கிறுக்கல்கள் நேராகும்.
பன்மை வரைவுகள் சீராகும்.
கீறல், கிறுக்கல் தேறலாகும்.
மீறல்களால் எழுவது சீறல்கள்.
சீறல்களின் மனப்படிமம் கீறல்கள.;

வேரிடும் காதல் மலர்வில்
சீரிய கவிவரி பீறல்
பூரண கவிதைக் கிறுக்கல்கள்.
ஈரமண்ணில் நண்டின் கீறல்
சாரமிகு கற்பனைக்குத் தூறல்.
பாரநெஞ்சின் வேதனைக் கீறலில்
பாரிய தாக்க வெளிப்பாடில்
வீரதீரக் கவிக் கிறுக்கல்கள்.

உதட்டுக் கீறல்களில் வழிந்து
உருகும் அன்பின் கிறுக்கல்;
கன்னல் விரியல் முத்தம்.
கண்களின் மன்மதக் கீறலால்
காதல் கிறுக்குப் பிடிக்கும்.
கீறலின் விதையுள் விருட்சம்.
கிறுக்கல்கள் நவீன ஓவியமாகும்.
கீறல்; கிறுக்கல்களுக்கும் அர்த்தமுண்டு.

vetha@stofanet.dk

**********************************

குந்தி இருந்த நிலமொன்று
கைமாறிப் போகிறது….!

-  மட்டுவில் ஞானகுமாரன் -

மட்டுவில் ஞானகுமாரன்

ஒரு ஏழையின் இருபதாண்டுக்
கடும் தவமே
கைமாறிப்போகும் இந்தக் கல்வீடு

போரிலே போனவை போக
குந்தி இருக்கவென்று
எஞ்சிய
காணியே
இன்றோடு களவாடப்படுகிறது.

நான் தவழ்ந்த மண்ணை தரிசிக்கவும்
ஏன்னைத் தழுவிய தென்றலை
பரிசிக்கவும்
இன்றோடு தடையாகிறது.

வயிற்றுக்கு
சோறூட்ட மறுந்திருந்தாலும்
நீர் ஊற்ற மறந்தறியா
மரங்களுக்கு
விடைகொடுக்கும் சமயமிது

படிப்புச் செலவுக்கு
தீனி போடவோ அன்றி
வறுமையின் கொடுவாய்க்கு
தாள்ப்பாள் போடவோ
எண்ணிய தந்தை மீது
வருத்தமில்லை

ஏனெனில்
இது வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
ஏழைகள் வாழும் பூமி
வாழைகள் போலவே
தொடருகிறது
இந்தத் தீ

ஒவ்வொரு ஓட்டையும் கேள்
சொல்லும்
சுவர் எழுப்ப என்
தாய்பட்ட பாட்டையும்
விற்ற தோட்டையும்

ஒவ்வொரு கல்லையும் கேள்
சொல்லும்
கடன் தந்தவர் என் தந்தைக்குத்
தந்த தொல்லையை

இந்த மண்
புல்
புதர்
முளைக்காத நாகசாகி ஆகினால் என்ன
துளிநீர் கிட்டாத
சகாராவாக மாறினால் என்ன
அது தான்
அது தான் நமக்கான பூம்புகார்

ஈன்ற பின்னரும்
வயிறைவிட்டு பிரிய மறுக்கும்
கங்காருக்கு இழைத்தவனா நான்.

தாய் மண்ணை தாரைவார்க்கும் அளவுக்கு
தைரியம் உள்ளவனா
இவன்.

இந்த மண்ணின்
ஒவ்வொரு துகளிலும்
என் முன்னோரின் மூச்சிருக்கிறது.
இந்த மூச்சுக்கு முடிவுரை எழுதிடவே
வட்டிக்காரன் எனும்
வேட்டைக்காரன் வருகிறான்.

அந்த தனவானின் பெட்டிக்குள்ளே
பூ+ட்டிக்கிடப்பது
ஒரு வீட்டின் பத்திரமல்ல
ஒரு ஏழையின் ஆத்மா

பணக்கோழியின்
அளவென்னவோ கடுகுதான்
ஆன போதிலும்
அது போட்ட வட்டி முட்டையோ
மட்டும் மலையளவானது.
அதைக்கட்டி முடிக்க வக்கற்றுப் போனதினாலேயே
களவுபோகிறது
இவனது வளவு.

ஆங்கே தங்க வயல்களில்லை
எண்ணைக் குளங்களுமில்லை
ஆனாலும்
எண்ண முடியாத
ஒரு பிரபஞ்சத்தின் குழந்தை
அந்த அழகே
இன்றோடு கைமாறிப் போகிறது.

(ஒரு வட்டிக்காரனின் சூழ்ச்சி இரையாகி எனது இருப்பிடம் பறிக்கப்பட்ட போது)

maduvilan@hotmail.com

**********************************

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ. -

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ. -

மயிரில் மையிட்டு
உயிரில் பொய்யிட்டு வைக்கும்
நாகரிக ஊனப்புத்தி உன் புத்தியென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

மூடிக் கிடத்தல்களை விட
ஆடிக் கழித்தல்களில் அரங்கத்தோடு சேர்த்து
அங்கங்களுமதிரும் அரைகுறை அம்மண
அந்நிய கலாச்சார ஒத்தூதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

வடித்துத் தீர்த்துக் களைத்த
இல்லாதார் வியர்வையுறிஞ்சி
உன் பித்தட்டிட்டு நிரப்பும்
உயிர் பேணா உயர் ஜாதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

உன் ஒத்தார்களுக்கு உச்சங்களும்
பின் மத்தார்களுக்கு மிச்சங்களுமெனும்
மூர்க்க முதலாளி ஜாதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

வெண் பால் சுரக்கும் தாய் முலை விட்டு
வன் கள் வடியும் அந்நிய முலை தேடியோடும்
அறிவு கெட்ட அந்நிய ஆதரவன் நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே
இறந்தும் போகிறேன் பட்டிக்காட்டானாகவே.

junaidhasani@gmail.com
www.junaid-hasani.blogspot.com.

**********************************

நகைப்பா

- மாமதயானை -


கவிதை வாசிப்போம் வாரீர்!மழைக்காரன் வருகின்றான்
மெல்லமெல்ல
எழைகளின்புன்னகையைப்போல

எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள்திருநங்கைகள்
சாயம்போனவாழ்க்கை

அப்பா என்னை
அடிக்கும்பொழுதெல்லாம்
அம்மாவிற்கும் வலிப்பதெப்படி

manisen37@yahoo.com

**********************************

மணிவிழா!

- ராஜிட் அகமட் -


கவிதை வாசிப்போம் வாரீர்![எனக்கு இந்த மாதம் அறுபது வயதாகிறது அதுதான் மணிவிழாவாம் அதையொட்டிய சிந்தனைகள் கவிதையாக]

மணிவிழா
மனிதர்களுக்குத்தான்
மணிவிழாக்கள்

மனிதர்களுக்காய் வாழும்
மாடு மரங்களுக் கில்லை
மணிவிழாக்கள்

இயற்கையை
அண்டி மட்டுமே மாடு மரங்கள்
அண்டியும் தாண்டியும் மனிதர்கள்

தாண்டியதால்தான் இன்று....

சகதி நீச்சல்கள்
சக்தி விரயங்கள்

மல்லாந்து துப்பும் மதங்கள்
மலர்களைத் தூற்றும் மதியினர்

கந்தகர் கலந்த காற்றுக்கள்
வெந்துபோன காதல்கள்

காலன்களாய் வாகனங்கள்
கலப்பட தானியங்கள்

ஆக்ஸிஜன் முட்டும் சொற்கள்
ஆலம் கக்கும் பற்கள்

மனைவி மக்கள் நூல்களில்
மண்டை குடையும் சிக்கல்கள்

தாக்கியும்
தாங்கியும் இதயங்கள்

மாடு மரங்களுக்கேது
இத்தனை வலிகள்

நியாயம்தான்
இத்தனையும் தாங்கும்
மனிதனுக்குத்தான் தேவை
மணிவிழாக்கள்

rajid_ahamed@yahoo.com.sg

**********************************

கோடி கொடுத்துத் தேடினால்
-
சக்தி சக்திதாசன் -


கவிதை வாசிப்போம் வாரீர்!சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் கோடி
சொல்லில் முடிக்கும் நிமிடங்கள் தேடி

அள்ளத் தவிக்கும் உணர்வுகள் கோடி
அள்ள முடியா நிமிடங்கள் தேடி

மெல்ல முடியா உணர்வுகள் கோடி
மெல்லத் தெரியா நிமிடங்கள் தேடி

தள்ள முடியா சோகங்கள் கோடி
தள்ளத் தெரியா நிமிடங்கள் தேடி

உள்ள ஊஞ்சலில் ஆடிடும் நினைவுகள் கோடி
உள்ளே புதைத்திடும் நிமிடங்கள் தேடி

வெல்ல முடியா யுத்தங்கள் கோடி
வெறுமையான நிமிடங்கள் தேடி

கிள்ளிப் பார்த்து நகைத்திடும் உறவுகள் கோடி
கிள்ள முடியாமல் தொலைந்திடும் நிமிடங்கள் தேடி

புள்ளி போடாக் கோலங்கள் வரைந்தது கோடி
புள்ளி போட்டே இணைந்திடும் நிமிடங்கள் தேடி

தெள்ளத் தெளிவாய் விளக்கிட முயன்ற வேளைகள் கோடி
தெளிந்த மன ஓடையில் நிமிடங்கள் தேடி

என்னைப் புரியாத உள்ளங்கள் உலகில் கோடி
என்னைப் புரிந்திட்ட உள்ளத்தின் நிமிடங்கள் தேடி

http://www.thamilpoonga.com

**********************************

வாலாட்ட கற்றுக்கொள்….

கவிஞர் ஈழநிலா (பொத்துவில் அஸ்மின்)


பொத்துவில் அஸ்மின்

 

கேள்வி கேட்பவர்க்கு
கேழ்வரகும் இல்லையப்பா…
‘ஆமா’போடப்பா…
அத்தனையும் கிடைக்குமப்பா…

பாழான உலகத்தில்
பல்லிளித்து முன்னேறு…
குழிதோண்டி நீ உயர்ந்து
குலப்பெருமை நிலைநாட்டு….

வாள்பிடிக்க எண்ணாதே…?
வாய்காட்டி நிற்காதே…
வாலாட்ட கற்றுக்கொள்
வாழ்க்கை இருக்குதப்பா…

காகம் அழகென்று
கருத்துரைத்தால் அதிகாரி…
புறாப்போன்று இருக்குதென்று
புன்னகைக்க பழகிக்கொள்…

பதவிபெற வேண்டுமென்றால்
பாய்விரிக்கக் கத்துக்கொள்..
முதல்பரிசு வேண்டுமெனில்
முதலிரவுக் கொத்துக்கொள்….

‘இன்டர்வியுவில்’ சித்திபெற
‘இங்கிலிசும்’ உனக்கெதற்கு…?
காசுபணம் இருக்கிறதா….
கழுதைக்கும் இடமிருக்கு…

எதிர்த்துப் பேசாதே…
எதிர்காலம் மடிந்துவிடும்
எடுபிடியாய் மாறிக்கொள்
‘எம்பி’யாய் மாறிடலாம்…

உண்மையாய் உழைக்காதே…
உன்தலைக்கு வேட்டுவரும்..
பொறுப்பாக நடிதம்பி
பொன்பரிசு வீடுவரும்…

சமூகம் என்றோ டாதே..
சாவுமணி அடிப்பார்கள்…
சுயநலத்தை கையில்கொள்
சுகத்தோடு வாழ்ந்திடுவாய்….

kavingerasmin@yahoo.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner