இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2008 இதழ் 106  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கவிதைகள் அக்டோபர் 2008!

பதிவுகள் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!

கவிதை வாசிப்போம் வாரீர்!ஹைக்கூ - துளிப்பாக்கள்
- மாமதயானை[புதுவை]


எந்த பனித்துளிக்குள்
ஒளிந்துகிடக்கிறது……
என் கவிதை.

நிலவை படம்பிடிக்க
முடியாத வருத்தத்தில்……
வற்றியகுளம்.

தெளிந்தநீரில்
முகம்பார்த்தபிறகும்……
தெளியாத மனசு.

பாவலர்கள் எழுதிவிடுவார்களோ
பயந்துமுட்புதரில் மறையும்……
நிலவு.

நிசப்தமாய் இரு
இசை கேட்கலாம்……
ம ழை வ ரப்போகிறது.

தரிசுநிலக்காட்டில்
தவறி விழுந்த காகிதத்தில்……
அ றுவ டைக்கால கவிதைகள்

ஆயிரம்பேர் அழைத்தலும்
ஆகாயத்தில் தான்……
நிலவு.

பச்சைபசேலென
அ டர்ந்த மரக்காட்டில்……
கோடாளிச்சத்தம்

அ ழகிய வண்ணத்துபூச்சி
ப றக்கும் திசையெல்லாம்……
உடன் பறக்கும்மனசு.

manisen37@yahoo.com

 


கவிதை வாசிப்போம் வாரீர்!புதைகுழி வீடு !

-எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -


அத்திவாரத்தை
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !

முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !

உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !

பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !

இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !

விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !

அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !

உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?

rishanshareef@gmail.com

 


கவிதை வாசிப்போம் வாரீர்!அகரம்.அமுதாவின் கவிதைகள்!

அன்னை பாரதம்!

எம்மதமும் சம்மதமாம்
இந்தியாவின் தேர்தலில்...
மும்மதத்தில் குத்துவெட்டு
முடியவில்லைக் கூக்குரல்...

கத்தியின்றி இரத்தமின்றி
பெற்றெடுத்த பாரதம்...
முற்றுமின்று இரத்தமின்றி
ஓடவில்லை ஆறெதும்...

காடுவெட்டி நாடுசெய்து
கண்டதுதான் என்னவோ?
வீடுகட்டி வாழும்கீழ்மை
விலங்குகள்நாம் அல்லவோ!

வாக்களித்து வாக்குவாங்கி
வாழ்க்கைபெற்ற பேர்களே!
வாக்களித்தோர் வாழ்வினிலே
வளர்ச்சியில்லை பாரிலே...

கள்ளமின்றிப் பள்ளமேடு
கடந்துசெல்லும் ஆறுகள்...
கல்லைக்கொண்(டு) அணையெழுப்பக்
கழயெலாம் பாலைகள்...

அன்னையென்று பாரதத்தை
அன்றுத்தொட்(டு) இன்றுமே
சொன்னதெல்லாம் போதுமடா
சொன்னசொல்லைக் காப்போமே!


***

எல்லாமுமாகிய அண்ணலே!

விடியாத நாட்டிற்கு
விடிவெள்ளி நீதான்!
விடியலை வழங்கவந்த
வைகரையும் நீதான்!

துருப்பிடித்த உணர்வுகளைத்
துலக்கியவன் நீதான்!
துயிலோடும் தன்மானம்
ஊட்டியவன் நீதான்!

சுதந்திரப் பேச்செடுத்த
சூறாவளி நீதான்!
சுதந்திரம் பொழியவந்த
சூழ்மழையும் நீதான்!

பாரதத் தேரிழுக்கப்
புனைந்தவடம் நீதான்!
பாரதத் தேரோட்டிய
சாரதியும் நீதான்!

இந்தியா ஈன்றெடுத்த
இளையமகன் நீதான்!
இந்தியாவை ஈன்றெடுத்த
இளந்தாயும் நீதான்!

வெள்ளையனை விரட்டவந்த
வில்லம்பும் நீதான்!
கொள்கைகளை வளர்க்கவந்த
கோமகனும் நீதான்!

ஆய்தம்போல் தனித்துநின்ற
அகிம்சைவாதி நீதான்!
ஆயினும்என்? தேசத்தின்
அருஞ்சொத்தே நீதான்!

எல்லாமு மாகிய
அண்ணலும் நீதான்!
எல்;லாரது நெஞ்சிலும்
நிறைந்தவனும் நீதான்!


****

அருவி!

நான்
வேர்களை முகட்டில்
விரித்து
கீழ்நோக்கி வளர்கின்ற
தண்ணீர் மரம்...

விண்ணை முட்டும்
மலையென்னும் மரத்தின்
ஒற்றை விழுது...

உடலெங்கும் வெள்ளிச்
சலங்கைகள் கட்டி
நின்றாடும் நர்த்தகி...

குன்றுகளின் கூந்தல்...
பாறையாம் பானைகள்
பொங்கி வழிகின்ற
பொங்கல்...

நான்
நிற்பதாலேயே
ஆறுகள் நடக்கின்றன...

பாறைகள் என்
விளையாட்டு பொம்மைகள்...

நீங்கள்
கற்களை உரச
தீ பிறக்கும்
நான் உரச
மணல் பிறக்கும்!

நான் விழுகையில்
என் வீரிடலை
சங்கீதம் என்று
சாற்றுகிறீர்கள்

என் பேதைப்பருவத்தை
அருவி என்று
ஆர்க்கிறீர்கள்

மங்கைப் பருவத்தை
ஆறு என்றுக்கூறி
அணைக்கிறீர்கள்

என் மூப்பை
கடல் என்றுக்
கட்டியம் கூறுகிறீர்கள்

என்றேனும் நீங்கள்
எண்ணியதுண்டா?
அலைகள் யாவும்
எழுந்துநிற்கத் தோற்று
வழுக்கி விழுகின்ற
அருவிகளே என்பதை?


agramamutha08@gmail.com

************************

கவிதை வாசிப்போம் வாரீர்!செம்மதி கவிதைகள்!

என் நிலை என்ன?


காணவில்லைக் கணவரை-அவர்
காணமல்போனவர் பட்டியலில்
காலங்கள் கடக்கின்றன கண்ணீரோடு
அதரவு யாரும் இல்லை
அனாதரவாய் நானிங்கே-என்
அருமைப் பிள்ளைகளை
ஆளாக்க வேண்டி
அயராது உழைக்கையிலே
ஆந்தை விழிகள் பல-என்னை
துகில் உரியப் பார்க்கிறது
அடி மனதில் வலியுடன்
ஆத்மதிருப்திக்காய்
ஆலயம்செல்கையிலெ
அயலவரும் குத்திகதை பேசிடுவார்
மனசெல்லாம் ரணமாச்சு
தமிழர் பண்பாடு என்று
குங்குமம் எடுத்து வைக்கையிலே
யாருக்காக இந்தப்போட்டு
எனவசைபாடுது பல குரல்
பொட்டின்றி பூவிழந்து
விதியில்நான் சென்று விட்டால
விசித்திரமாய்ப் பல கண்கள்மேயும்
என்உடம்பில்
துணையில்லை என்ற துணிவுடன்
நோகுது ஜயோ நெஞ்சம்
என்னவனைக்காலன்தான் கவர்ந்தானோ -இல்லை
என்னைக் காப்பாற்ற வருவாரோ?

எனக்கே என்னைப்புரியவில்லை
என்நிலை என்ன தெரியவில்லை???

*****

முதுகில் வரையப்பட்ட பயங்கர ஓவியங்கள்

நீ
நீயாகவேஇருந்தாய்
உன்மனததில்
சாத்தானின் சகாக்கள்
ஊடுருவும்வரை
நீ என்னை
அன்புடன்
கட்டியணைக்கிறாய்
என்றே நான்
நம்பினேன்
உன் கால்களால்
படுகுழி ஒன்றுதோண்டப்படுவதை
அறியாது
நீ அன்பு போர்த்து
வந்தாய்
நான்
உன்னை நம்பினேன்
பற்கள் வெளித்தெரியும்படியான
உதடு பிரிப்புக்களை
அழகிய சிரிப்பு என்றே
நான் ஏமாந்தேன்
என்முதுகில் நீ வரைந்த
பல பயங்கர
ஓவியங்களை
என்னால்
காணமுடியாது போயிற்று
நானும் நீயும்
சேர்ந்திருந்த
இறுதிக் காலங்களை
நினைத்துப்பார்க்கிறேன்
இருண்டதும்
கொடூரமானதுமாய்
எனக்குள் பல
கேள்விக்குறிகளாய்
சிதறிக்கிடக்கின்றன.
இப்போதெல்லாம்
உன்னைப்பற்றிய
நற்கருணை
ஆராதனைகள்
எனக்குள்
இடம்பொறுவதில்லை
எனது பாதங்கள்
வலிகளைத்தாங்கி
தொடர்ந்து பயணிக்கிறது......

chemmathy@gmail.com


********

கவிதை வாசிப்போம் வாரீர்!கண்ணில் மையெழுதி

- சத்தி சத்திதாசன் -


கண்ணிரண்டில் மையெழுதி - எனைக்
கணப்பொழுதில் உன் வசமாக்கி
காணமல் போனவளே ! ஏனெனை
கனகத்தே தவிக்க விட்டாய் ?

கார்முகிலாய் கூந்தல் விரித்து - உன்
கருவிழியால் கதை பேசி
காதல் எனும் கடலினிலே
கவிழ்த்து விட்ட காரிகையே !

வானத்திலே வலம் வரும் அந்த - வட்ட
வண்ண நிலவாக பூவதனம் அமைந்தவளே
வந்திடலாம் அமாவசை நிலவதற்கு
வாராது ! வாராது ! உன் நினைவின் முடிவெனக்கு

வஞ்சியென்று உன்னை நானும் விளித்ததினால் - நீயும்
வஞ்சித்து பார்ப்பதென்று முடிவெடித்தாயோ சொல்?
விஞ்சி நிற்கும் நினைவுகள் எந்தன் நெஞ்சில்
விடையறியா வினாவாக்கி நீயெங்கே சென்றாயோ ?

காலமகள் கணக்கினிலே பொன்மானே ! - உனக்
காணாத பொழுதெல்லாம் சூனியமாய் போகுதடி
காதலது நோய் தானோ ? காலனவன் ஆயிதமோ ?
காத்திருந்து காத்திருந்து காற்றோடு போவேனோ ?

ttp://www.thamilpoonga.com
ssakthi@btinternet.com

************************************

கவிதை வாசிப்போம் வாரீர்!கீதா மதிவாணன் கவிதைகள்!

புலம்பெயர்தல்


பிறந்த நாட்டை விட்டு,
பேசியத் தமிழை விட்டு,
வளர்ந்த ஊரை விட்டு,
வளர்த்த உறவை விட்டு
புலம் பெயரும் பறவைகள் போல
இடம் பெயர்ந்து செல்கிறோம்!

வேரை மண்ணில் விட்டு,
விண்ணில் கிளையைச் செலுத்தும்
உயரமான ஊசியிலை மரங்களைப்போல
வாழ்வை இங்கே விட்டு,
வளத்தைத் தேடிச் செல்கிறோம்!

காற்றடித்தால் கலைகின்ற மழைமேகம் போலச்
சிதறியோடும் எம் நினைவுகளைச்
சேகா¢க்க நினைக்கையில்,
கனவு வந்து கலைக்க,
கனவுக்கும் நனவுக்கும் இடையில்
ஊசலாடிக்கொண்டே உயரப்பறக்கிறோம்!

ஆயுளில் பாதியைப் பிறந்த மண்ணில் கழித்து,
மீதியை வேற்றுமண்ணில் கழிக்க விரைகிறோம்;
கூடவே,
குழந்தைகளின் குழந்தைப்பருவத்தையும்
அவரறியாமல் எடுத்துச் செல்கிறோம்!

புலம்பெயர்ந்த பறவைகள்
இனம்பெருகித் தாயகம் திரும்பும்;
ஊசியிலை மரத்தின் உத்திராட்ச விதைகள்
மண்ணில் விழும்;புதியவை முளைக்கும்;
கலைந்துபோன மேகங்கள் மீண்டும்
வானில் கூடி மழை தரும்;
எங்கள் வாழ்வும்,
மலர்ந்து, மணம் வீசி,
தாயகத்தில் நிலைபெறும் நாள்வரும் என்றே
நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்!


மௌனம்

மௌனம் எனக்குப் பிடிக்கும்,
அது என்னைக் காயப்படுத்தாதவரை;
மௌனம் அழகு; ஆனால்
உன் மௌனமோ,
என்னை அழச்செய்யும்;
மௌனத்திற்கு மொழி தேவையில்லை;
உன் மௌனம் பேசாத பேச்சில்லை;
என்னை நோகடிக்க,
நீ கையிலெடுக்கும் ஆயுதம்,
மௌனம்!
உன்னெதிரில் நிராயுதபாணியாக நான்!
உனக்கெதிராய் ஆயுதம் பிரயோகிக்க
எனக்கு ஆசையில்லை;
அமைதியை விரும்புகிறேன்;
அதற்காக,
உன் மௌனத்தையே
எனக்குப் பரிசாய் அளிக்காதே!
மௌனம் எனக்குப் பிடிக்கும்,
அதை,
நீ கையாளாதவரை!

குழந்தையின் தேடல்

ஒவ்வொரு அரிசியிலும்
அதற்குண்டானவரின் பெயரிருக்கும்
என்றாள் அம்மா;
தந்தை வாங்கித்தர மறுத்தபின்னரும்
தேடுகிறது குழந்தை,
எந்தப் பஞ்சுமிட்டாய்ப் பொட்டலத்தில்
தன்பெயர் இருக்கக்கூடும் என்று!

வெற்றி

வார்த்தைச் சாட்டைகளை
நீ சொடுக்கும் ஒவ்வொரு முறையும்
புன்னகைத்து வைக்கிறேன்;
சொல்லம்பு தைத்த வேதனையை
உள்ளுக்குள் வாங்கிப் புதைக்கிறேன்;
அடிக்க வரும் வேளைகளில்
அமைதியாய் அடங்கிப் போகிறேன்;
என் எதிர்வினை வெறுமையாய்ப் போனதில்
திகைத்து நீ பின்வாங்குகிறாய்;
வெற்றிக்களிப்பில் நான்!
ஆனாலும்,
அடக்கிவைத்த என் துயரம்,
ஏதாவது ஒரு கண்ணீர்த்துளியில் வெளிப்பட்டு
என் தோல்வியை உன்னிடம்
பறைசாற்றிவிடுமோ என்று சிறிது
அஞ்சத்தான் செய்கிறேன்!

எல்லாம் அவள் விருப்பம்

திருமணம் நிச்சயமானது!
உனக்குப் பிடித்த நிறத்தில்
புடவை எடுத்துக்கொள் என்று
ஒப்புதல் தந்தார் அப்பா;
எந்த மாதிரி நகை வேண்டும் என்று
நச்சரித்தாள் அம்மா;
உன் ஆசைப்படியே
அழைப்பிதழ் அச்சடிப்போம் என
உறுதியளித்தான் அண்ணன்;
மாப்பிள்ளை யாரென்பது மட்டும்
முடிவு செய்யப்பட்டது,
அவள் சம்மதம் தேவைப்படாமலே!

ஊடல்

உனக்கும் எனக்கும்
பிணக்குவந்தபோது,
கவிதையின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது;
எனக்குள் வாழும் கவிதாயினி,
என்னைக்கேளாமலே
என் சோகத்தையும்,
உன்மீதுள்ள என் கோபத்தையும்
கவிதையாய் வடித்தாள்;
என்னிடம் காட்டி,
கருத்துக் கேட்டாள்;
சரியாகத்தான் சொல்கிறாளென்று
எண்ணியபோது,
நீ வந்தாய்;
என் ஊடலை உடைத்து
என்னை அரவணைத்தாய்;
உன் பிடியில் இருந்தபோது,
நான் அவளிடம் சொன்னேன்,
'நீ எழுதியவை யாவும் பிதற்றல்;
கிழித்துப்போடடி' என்று!

அறுந்த காதல்

என் அறைக்குள் வாழும்
அந்த வாலறுந்த பல்லி,
உன்னை எனக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது;
முரண்பட்ட கருத்துகளால்
முற்றுப்பெற்ற நம் காதலை
நீ வெட்டிவிட்டபோது,
துடிதுடித்தது என் மனம்,
அந்தப் பல்லியின் அறுந்த வாலைப்போலவே!
மற்றுமொரு வால் வளர்ந்தாலும்,
அசலுக்கும், நகலுக்குமான வேறுபாடு
அதில் நன்றாகவேத் தெரிகிறது!

geetha.mathivanan@yahoo.co.in


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner