இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2006 இதழ் 82 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
விளிம்பு நிலை மக்களின் குரலாக லண்டனில் ஒலிக்கும் 33வது இலக்கிய சந்திப்பு!

- ராஜேஸ் பாலா -


இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்'' அரசியல்வாதிகளாற் பாவிக்கப் படும் அரசியற்கருத்துக்கள் ஒரு கலையுடன் (கலைஞருடன்) உள்ளிடும் துணிவற்றன. ஏனென்றால் இது வரைகாலமும் நடந்த சம்பவங்களின் சாட்சியங்களை முன்வைத்துப் பார்க்கும்போது, அரசியவாதிகளுக்கு 'உண்மை' என்ற விடயத்தில் அக்கறை கிடையாது. தங்கள் அதிகாரத்தை 'எப்படியும்' தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். உண்மைகளைத் தெரிந்து கொள்ளாத அறியாமையாக்குள் பொதுமக்களை வைத்திருப்பது அவர்களின் (ஆதிக்கவாதிகளின்) அதிகாரத்தை தக்கவைத்திருப்பதற்கு இன்றியமையாத விடயமாகும். அரசியல் வாதிகளின் பொய்களை மெய்யென நம்பிக்கொண்டு, தங்களின் வாழ்க்கையே உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என்பது தெரியாமலேயே பெரும்பாலான பொதுமக்கள் வாழ்கிறார்கள். அரசியல்வாதிகளால் அழகாகப்பின்னிய பொய்மை என்ற வலைக்குள் நாங்கள் (பொது மக்கள்), அகப்பட்டுக்கொண்டு அரசு கொடுக்கும் 'கருத்துக்கள்' என்ற ' பொய்ச்சாப்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்''  - ஹறோல்ட் பின்ரர் (2005ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப்பெற்ற இலக்கியப் படைப்பாளி).

சாதாரண மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்கவாதிகளால் சாதாரண மக்களின் சுயசிந்தனை வளர்ச்சிக்கான காரணிகள் தடுக்கப்படுகின்றன. சுயசிந்தனைப் படைப்புக்கள் தடுக்கப்படுகின்றன. சுயசிந்தனைப் படைப்பாளிகள் அடக்கப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள். சிலர் கொல்லப்படுகின்றனர். இலங்கையிற் பல தமிழ்ப் படைப்பாளிகளுக்கு என்ன நடந்தது என்று எங்கள் பலருக்குத் தெரியும்.  பல உதாரணங்கள் உலகிற் பலபாகங்களிலுமுள்ளன.

1970ம் ஆண்டின் இலக்கியப்பரிசைப் பெற்ற அலெஷ்சாண்டர் சொல்சொனிவிச் அன்று சோவியத் யூனியனின் ஆதிக்கத்திலிருந்த கொயூனிஸ்டுகளால், தங்களின் கொள்கைக்களுக்குச் சவாலாக எழுதிய குற்றத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சிணையைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிக்கொணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், இந்திய அரசின் பலவிதமான நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கவேண்டியிருப்பது இன்று நடந்து கொண்டிருக்கிறது.

அடக்கப்படுவதாலும் சிறையிலடைக்கப்படுவதாலும், கொலை செய்யப்படுவதாலும் சுதந்திர சிந்தனைகள் அழிக்கப்படுவதில்லை. ஒரு பேனை உடைக்கப்பட்டால் அந்த இடத்தை எடுக்க ஆயிரம் பேனாக்கள் உருவாகும். துப்பாக்கியின் குண்டுகளைவிடச் சத்தியம் என்ற மையால், தர்மத்தின் கருத்துக்களைக் கோர்வைகளாக்கி இலக்கியம் படைப்பவர்கள் உலகம் இருக்கும் வரைக்கும் மறக்கப்படமாட்டார்கள்.

உண்மையைச் சொன்ன குற்றத்தால் விஷம் கொடுத்துக் கொலைசெய்யப்பட சாக்ரட்டீசைச் சரித்திர வரலாற்று மூலம் தெரிந்தவர்கள் நாங்கள். உண்மையைச் சொல்வதும் அதைப் பொதுமக்கள் உணரும் விதத்தில் தெளிவாகச் சொல்வதும், விளிம்பு நிலை மக்கள்பற்றியும் அவர்களின் விடுதலை பற்றியும் எழுதுபவர்களினதும் முக்கிய கடமையாகும்.மனித உரிமைபற்றி அக்கறை கொண்ட எந்தக் கலைஞனும் தனது ஆக்கத்தை மனித மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கத் தயங்கமாட்டான்.

இன்று இலங்கையில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு மெளனமாக இருப்பது, அங்கு நடக்கும் கொடுமைகளுக்குச் சம்மதம் தெரிவிப்பதற்குச் சமமாகும். அரச பயங்கரவாதத்திற்கும் ஆயுதம்தாங்கியோரின் அதிகாரத்திலும் மனித உணர்வுகள், ஊனமாகப்பட்டிருக்கின்றன- ஊமையாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப்பகுதிகளில் அமுலில் இருக்கும் அடக்கு முறைகளாற் தமிழ் மக்கள்,பல்விளக்கவும் பசியாற உணவுண்ணவும் மட்டும் வாய்திறக்கிறார்கள். தன்னுணர்வை வெளிப்படுத்தும் கவிதைபாடுபவனின் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. இயற்கையின் அழகை ரசித்துக் கவிபைடைக்கும் மெல்லுணர்வுகள் வலிய துப்பாக்கி முனைகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தாலாட்டுப்பாடும் தமிழ்த்தாய், தான் பெற்ற மகனின் பிணம்பார்த்துக் கதறுகிறாள். மணப்பெண்ணாக வேண்டிய இளம்பெண்கள் பிணக்குவியல்களாக மாறுகிறார்கள். காதல் நினவுவரும் வயதில் கொலையுணர்வுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது . அடுத்த மனிதனில் அன்பும் ,நேசமும் வைப்பது ' தேசத் துரோகமாகத்' திரிபு படுத்தப்படுகிறது. ஒரு தனி மனிதன் இருப்பது, நிற்பது, நடப்பது, அழுவது, சிரிப்பது, போன்ற சாதாரண மனித இயல்புகள் அசாதாரணமாக்கப்பட்டிருக்கின்றன.

மனித உரிமைகளற்ற விளிம்பு நிலை மனிதர்களாக ஈழத் தமிழ்மக்கள் அலைகிறார்கள். விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் குழுவில், அகதிகளாக அலையும் மக்கள்,அடக்கப்பட்ட பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள்,சாதி, சமயத்தின் பெயரில் ஓரம்கட்டப்படுவோர், குரல் கொடுக்க வழியற்ற விதவைகள்,குடும்பத்தின் அன்பும் ஆதரவுமின்றி அவதிப்படும் வயது வந்த முதியவர்கள் என்று பல தரப்பட்டோர் அடங்குவர். விளிம்பு மனிதர்களுக்குக் குரல் கொடுக்க,ஈழத்தமிழ் இலக்கிய உலகில், ஈழத்தின் வடக்கில் இருந்த சாதிக்கொடுமையை எதிர்த்து எழுதிப் புதிய சிந்தனைப் பிரவேசத்திற்கு மூலகாரணிகளாக இருந்த டானியல் போன்றவர்களுக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும்.அவரைத் தொடர்ந்து இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் 'புதிய சிந்தனைகள்' தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

பிறந்த நாட்டிலேயே அனாதைகளாக்கப்பட்ட எங்கள் தமிழரின் குரலைப் புலம் பெயர்ந்த இடங்களில் ஒலிக்கப்பண்ணிய சிறு பத்திரிகைகள் இலக்கியச் சந்திப்பு நடக்க மூல காரணிகளாக இ¢ருந்தவர்களாகும். இலங்கைச் சிங்களப் பேரினத்தின் அடக்கு முறைக்கொடுமைகளாற் புலம் பெயர்ந்த தமிழ்ப்படைபாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் சேர்ந்து பேர்ண் நகரிற் 1988ல் தொடங்கிய இலாக்கியச் சந்திப்பு பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி தனது 33வது சந்திப்பை லண்டனில் தொடர்கிறது. இலக்கியப் படைப்பாளிகள், ஆர்வலர்கள் சேர்ந்து தொடங்கிய இலக்கியசந்திப்பு இன்று மனித உரிமைக்குரல் கொடுக்கும் ஒரு சந்திப்பாக வளர்ந்த்திருக்கிறது.

லண்டனில் நடக்கும் சந்திப்பு 'ஈழத்தமிழ்ப்படைப்புக்களும் மனித உரிமைகளும்'' பற்றிய விடயங்களை முன்னெடுக்கிறது. இலங்கை, ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், கனடா,நோர்வே இங்கிலாந்து, அமெரிக்கா என்று எட்டு நாடுகளிலிருந்து படைப்பாளிகளும் பார்வையாளர்களும் பங்கு பற்றுகிறார்கள். பலர் இதுவரையும் நடந்த இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்றவர்கள், பலருக்கு இதுவே முதற்தடவையாகவிருக்கும். இன்று இங்கு நடக்கும் சந்திப்பு சிந்தனைக்கு விருந்தாகவும் சினேகிதங்களுக்குப் பாலமாகவும் இருக்கவேண்டும். கருத்துரையாடல்கள் காத்திரமாகவிருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் முன்னெடுக்கப்படவேண்டும். விளிம்பு நிலை மக்களுக்காக நடக்கும் இந்தச்சந்திப்பில் புதிய கருத்துக்களும் கலந்துரையாடல்களும் இடம்பெறவேண்டும்.

புலம் பெயர்ந்த நாடுகளிலும் தாயகத்தில் எங்கள் மக்களின் நடக்கும், அரசியல் பொருளாதார வாழ்க்கை மாற்றங்களைப் பிரதிபலிக்கும் சந்திப்பாக இச்சந்த்திப்பு அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பை நடத்த அன்புள்ள பல இலக்கிய சினேகிதர்கள் மனத்தாலும் பணத்தாலும் உதவிசெய்தார்கள்.
ஈழத்தில் எங்கள் உறவுகள் படும் துயர்களைச் சுட்டிக்காட்டி, அந்தத் துயர்கள் தொடராதிருக்கவும், அங்கு நடக்கும் பலதரப்பட்ட அடக்கு முறைகளும் நிறுத்தப்படவேண்டும் என்றும் சில தீர்மானங்கள் இச்சந்திப்பில் முன்னெடுக்கவேண்டும். எத்தனையோ தடவைகளில் எத்தனையோவிதமான சோதனைகளைக் கண்ட இலக்கியச்சந்திப்பு இன்னும் பல்லாண்டுகள் தொடரவேண்டும், தொடர்ந்து பணிசெய்யவேண்டும்.

rajesbala@hotmail.com

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner