இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
இலங்கை இலக்கிய முன்னோடி எழுத்தாளர் செ. கணேசலிங்கன்!

- ரஸஞானி -


இலங்கை இலக்கிய முன்னோடி எழுத்தாளர் செ. கணேசலிங்கன்![-அண்மையில் தமிழகத்தில் வசித்துவரும் ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களிலொருவரான செ.கணேசலிங்கன் தனது எண்பதாவது வயதினைப் பூர்த்தி செய்தார். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் செ.கணேசலிங்கனின் சிறுகதைகள், நாவல்கள் பல முக்கியமானவை. தடம் பதித்தவை. 'ஆண்மையில்லாதவன்' போன்ற இவரது பல சிறுகதைகள் குறிப்பிடப்படவேண்டியவை. நாவல்களிலும் 'சடங்கு', 'செவ்வான்ம்', 'நீண்ட பயணம்', 'மண்ணும் மக்களும்' போன்றவை முக்கியமானவை. இவரது நாவல்களை வெறும் பிரச்சாரப் படைப்புகளாக ஒதுக்கி விட முடியாது. டால்ஸ்டாய், ததாவ்ஸ்கி போன்றவர்கள் தங்களது படைப்புகளில் கையாண்ட மதப் போதனைகளை வைத்து மட்டும் எவ்விதம் அவர்களது படைப்புகளைக் கணிப்பிட முடியாதோ அவ்விதமே செ.கணேசலிங்கனின் படைப்புகளில் ஊடுருவியிருக்கும் பொருளின் தீவிரத்தை வைத்து மட்டும் அவரது படைப்புகளை எடை போட முடியாது.அவரது பவளவிழா நினைவாகப் பதிவுகளில் வெளிவந்த ரஸஞானியின் கட்டுரை - செப்டம்பர் 2003இதழ் - 45 - இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.]

இலங்கை இலக்கிய முன்னோடி எழுத்தாளர் செ. கணேசலிங்கன் தற்பொழுது தமிழ்நாட்டில் “குமரன் பதிப்பகம்“ - என்ற பதிப்பகத்தையும் நடத்திக் கொண்டு - Front Line சஞ்சிகையிலும் பத்திரிகையாளராக பணியாற்றுகின்றார். தமிழில் அரசியல் சார்ந்த நாவல்களை எழுதும் ஆற்றல் மிக்கவராக இவர் இனம் காணப்பட்டவர். மாக்ஸீய சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்பட்ட கணேசலிங்கன் சிறந்த மனிதநேயவாதி எனவும் விதந்து பேசப்படுபவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமைமிக்க கணேசலிங்கன், சிறுகதை, நாவல், விமர்சனம் ஆய்வு முதலான துறைகளில் ஏராளமான நு¡ல்களை எழுதியவர்.

மற்றுமொரு பிரசித்தி பெற்ற நாவலான 'சடங்கு' - பேராசிரியர் கா. சிவத்தம்பியின் முன்னுரையுடன் வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. நிலமானிய சமூக ஒடுக்குமுறையைச் சித்தரித்தது,““மண்ணும் மக்களும்“ - என்ற நாவலை எழுதினார்இவரது “நீண்டபயணம்“ - என்ற முதலாவது நாவல் வடமாகாண சாதி ஒடுக்குமுறையை சித்தரித்தது, 'செவ்வானம்' நாவலுக்கு பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய நீண்ட முன்னுரையே - பின்னர் அவரால் விரிவாக எழுதப்பட்டு வெளிவந்த “தமிழ் நாவல் இலக்கியம்“ - என்ற பிரபல்யமான நூலாகும். கணேசலிங்கன் மற்றுமொரு பிரசித்தி பெற்ற நாவலான 'சடங்கு' - பேராசிரியர் கா. சிவத்தம்பியின் முன்னுரையுடன் வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. நிலமானிய சமூக ஒடுக்குமுறையைச் சித்தரித்தது, ““மண்ணும் மக்களும்“ - என்ற நாவலை எழுதினார். இலங்கையில் - புரட்சி ஏதோ ஒரு வடிவத்தில் தோன்றும் வாய்ப்பு நேரலாம் என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நாவலாக எழுதிக் காண்பித்தவர்.

பெரும்பாலும் இவரது கருத்துக்கள் மிகவும் ஆழ - அகல பரிமாணங்கள் கொண்டவை. சுருக்கமாகச் சொல்வதாயின் 'சீரியஸா'ன எழுத்தாளர். ஆனால் - மிகவும் மென்மையான சுபாவம் மிக்கவர். மிகவும் அமைதியாக அடக்கமாக பலருக்கும் உதவும் மனப்பாங்கு கொண்டவர். சென்னையில் இவரது இலக்கிய நண்பர்கள், பவளவிழாக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொண்டு ஒரு குழுவும் நியமித்து செயல்படத் தொடங்கிய வேளையில் - “தமக்கு அப்படியொரு வைபவம் - மலர் வெளியீடு அவசியமில்லை““ எனக் கூறி மறுத்தவர். இலங்கையில் வெள்ளவத்தையில் இயங்கிய இவரது விஐயலஷ்மி புத்தகசாலை 1983 ஆடிக்கலவரத்தில் முற்றாக எரிந்து நாசமாகியது. இலங்கையில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெரிதும் உதவிய இந்த புத்தகசாலையை கொடியவர்களிடம் இழந்த போதிலும் - சென்னையில் புகலிடம் கொண்டு ஈழத்து படைப்பாளிகளின் நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு அயராமல் உழைத்தார்.

தென்னிந்திய சினிமா உலகத்தின் பன்முகத்தோற்றத்தை சித்தரித்து இவர் எழுதிய “கவர்ச்சிக்கலையின் மறுபக்கம்“ நாவலும், பெண்ணடிமைத்தனம் தொடர்பாக இவரால் எழுதப்பட்ட பல நாவல்களும் குறிப்பிடத் தகுந்தன.

திரைப்பட இயக்குநர் பாலேமகேந்திரா கூட இவரை தனது மூத்த சகோதரர் என்று வர்ணித்துக்கூறிய பேட்டி அண்மையில் தினக்குரலில் வெளியானது.

கொழும்பில் நீண்டகாலம் “குமரன்“ மாத இதழை நடத்தினார். அவ்விதழ் - கலை, இலக்கிய, அரசியல், அறிவியல் ஏடாக வெளியானது. இன்று - இலங்கையில் மிகுந்த கவனத்தைப் பெற்ற கவிஞரான புதுவை இரத்தினதுரை ஒரு காலத்தில் “வரதவாக்கியான்“ - என்ற புனைபெயரில் ஏராளமான கவிதைகளை எழுதியதும் இந்த குமரன் இதழில்தான். ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் - ““தான் குமரன் இதழ்களைத் தொடர்ந்து படித்தே அரசியல் அறிவு பெற்றதாக ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் அ.ந. கந்தசாமி அந்திமக் காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் அவருக்கு அருகே இருந்து பலவிதத்திலும் பணிவிடை புரிந்த முன்மாதிரியாளர் இந்த கணேசலிங்கம்தான். [அறிஞர் அ.ந.கந்தசாமியின் வாழ்வுக்கு வழிகாட்டும் உளவியல் நூலான 'வெற்றியின் இரகசியங்கள்' தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக வெளிவரக் காரணமாகவிருந்த இவர் , இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 'எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பக' வெளியீடாக வெளிவந்த அ.ந.க.வின் 'மதமாற்றம்' நாடகம் நூலாக வெளிவரவும் கணிசமான ஒத்துழைப்பு நல்கியதோடு அந்நூலுக்கு நல்லதொரு முகவுரையினையும் எழுதியவர். அ.ந.க.வின் வெளிவராத நாவலான செ.க.விடமிருந்த 'கழனி வெள்ளம்' 1983 ஆடிக் கலவரத்தில் செ.க.வின் எரிந்த உடமைகளுடன் எரிந்து போனதாகவும் அறியக் கிடக்கின்றது. அ.ந.க.வின் 'கழனி வெள்ளம்' நாவலினைப் பற்றி செ.க.அறிமுகம் செய்தால் அது நிச்சயம் பதிவு செய்யப் படவேண்டிய செயலாகவிருக்கும்....- ஆசிரியர் - ]

இலங்கையில் கார்ல்மாக்ஸ் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட பொழுது கணேசலிங்கன் வழங்கிய ஆக்கபூர்வமான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நேரடியாக கண்ட என். சண்முகதாஸன் - இவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

பெண்ணடிமைத்தனத்திற்கு - திருக்குறள் விமோசனம் அளிக்கவில்லை என்பதை ஆய்வு மூலம் நிரூபிக்கும் நூல் ஒன்றையும் எழுதி விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

பேராசிரியர்கள் க. கைலாசபதி, இந்திரபாலா உட்பட பல முன்னணி விமர்சகர்கள், ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை பதிப்பித்துமுள்ள கணேசலிங்கனின் மிகப் பெரிய பலம் - அவரிடம் இயல்பாகவே குடிகொண்டுள்ள அமைதியும் அடக்கமும்தான். ஒருவகையில் இவர் ஒரு நிறைகுடம்.

““கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக் கொண்டு முற்போக்கு, பிற்போக்கு பேதமற்ற நட்புறவை சகல எழுத்தாளரோடும் கொண்டுள்ள ஒரு - சிலவேளை ஒரே - ஈழத்து எழுத்தாளர் இவர்““ - என்று ““இலக்கு““ சஞ்சிகை செ. கணேசலிங்கனைப் பற்றி 1996 மே இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலமும் கணேசலிங்கனின் பரிமாணம் வெளிச்சமாகிறது.

செப்டம்பர் 2003இதழ் - 45


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner