இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2009 இதழ் 114  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!

அழியும் விளிம்பில் ஈழத்தமிழர்கள்

- சந்தியா கிரிதர் (புது தில்லி)

கிளிநொச்சியில் இலங்கை இராணுவம்...ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடக்கும் சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போதும், செய்தித் தாளில் படிக்கும் போதும் நிஜமாகவே நம்முடைய கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாக பெருகுகின்றது. மேலும் இணையதளத்தின் மூலம் கிடைத்த புகைப்படங்களை பார்க்கும் போது இவ்வளவு ஈவு இரக்கமில்லாமல் இலங்கை இராணுவம் அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது கொலைவெறியோடு தாக்குதல் நடத்திருப்பது நம்மைப் போன்ற தமிழர்களின் மனது வெந்த புண்ணில் மீண்டும் காய்ந்த எண்ணெய்யை கொட்டுவது போல வெம்பிபெம்பி தவிக்கிறது. விடுதலைப்புலி இயக்கத்திற்காக இந்த அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் தியாகமாக பறிபோகின்றன. இலங்கை பிரதமர் ராஜபக்ஷே விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு தீவிரமாக எடுத்துக்கொண்ட 49 நாட்கள் உள்நாட்டு யுத்தத்தில் விடுதலைப்புலிகளை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கியதோடு மட்டுமில்லாமல் அங்கு வாழும் தமிழினத்தையும் நசுக்கி அழிப்பதிலும் மும்மரமாக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டிருக்கிறார். தமிழனத்தையே அழித்து விட்டால் இனி இலங்கையில் மீண்டும் இன்னொரு பிராபகரன் உருவெடுக்க வாய்ப்பிருக்காது என்ற எண்ணத்தோடு செயல்பட்டிருக்கிறார். சிங்கள குடிமகனும் தீவிரவாதியாக மாறமாட்டானென்று ராஜபக்ஷே எந்த வகையில் உறுதியாக எண்ணுகிறார். இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களமக்களின் உரிமைப்பங்கை நிர்பந்தமாக பறிப்பதாக தோன்றுவதால், தமிழர்கள் வாழும் பகுதியில் விமானம் மூலம் குண்டுகள் வீசியெறிய ராஜபக்ஷே விமானப்படையினருக்கு ஆணை பிறப்பித்தார். ஒரு காலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஜகஜகவென நிரம்பி வழிந்த பொதுஜனக்கூட்டம் இன்று மனித நடமாட்டமில்லாமல் விரிச்சோடி அங்காங்கே இரத்தக்கரைகள் படிந்த சாலைகள், இடிந்து போன வீடுகள், பிளந்து போன உயிர்கள், அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் மாமிச பிண்டங்கள் என்று சுடுகாடாக தோற்றமளிக்கிறது. இதனை ராஜபக்ஷே பார்வையிடச் சென்றார். அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தை அம்மாவென்று தம[ழ[pல் கூவியதால் இலங்கை இராணுவ வீரர்கள் தங்களுடைய பூட்ஸ் கால்களால் ஒரே மிதிமிதித்து அந்தக் குழந்தையுடைய அழுகைச் சத்தத்தையும் மூச்சையும் சட்டென்று நிறுத்தி விட்டார்கள். நிறைமாதக் கர்ப்பிணி பெண்மணியை, ஈழத்தமிழர் என்ற காரணத்திற்காக நான்கு வீரர்கள் அவளை எட்டி உதைக்கும் புகைப்படம் ஒவ்வொரு இந்தியத் தமிழனின் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது. வீரர்கள் உதைத்த பிறகு அவளுடைய வயிற்றில் வளரும் அந்த சின்ன உயிர் துடித்து சிதைந்து அவளுடைய உயிரோடு கரைந்து போகும் காட்சி உண்மையிலே என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. அந்த சிறிய ஆன்மா

உலகத்தில் நடக்கும் அவலங்களையெல்லாம் பார்க்காமல் அவளுடைய கர்ப்பகிரஹத்தில் கரைந்து விட்டது. தாயும் சேயும் துடிதுடித்து சாகும் காட்சி ஒவ்வbhரு தமிழனையும் இரத்தக்கண்ணீர் சிந்த வைக்கிறது, உள்ளத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்துகிறது, தமிழர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குகிறது, போராட்டங்கள், மனித சங்கிலி ஊர்வலமென்று நடைபெற்று வருகிறது. இதனால் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதா? ஈழத்தமிழின மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கபட்டதா? அவர்களுடைய நலனையும் கருத்தில் வைத்துக் கொண்டு ராஜபக்ஷே நல்லதொரு நடவடிக்கை எடுக்க முயன்றாரா? அல்லது மிச்சமீதியுள்ள தமிழின மக்களையும் கரை அதாவது இறைவழி சேர்த்த பிறகு ராஜபக்ஷே இராணுவ தாக்குதலை நிறுத்துவாரா? இராவணன் ஆண்ட இலகையில் இன்று ராஜபக்ஷே மறுபடியும் இராவணன் ரூபத்தில் உலகத் தமிழர்களுக்கு காட்சி தருகிறார். வினை விதைப்பவன் வினை அறுப்பான் அதுபோல ராஜபக்ஷே போர் என்ற வினையை விதைத்திருகிறார், இந்த வினைக்கு ராஜபக்ஷே நல்லதொரு முடிவை வெகு விரைவில் எடுக்க வேண்டும். இப்போது ஈழத்தமிழர்களால் இலங்கைக்கு பிரச்சனையென்று ராஜபக்ஷே கொலைவெறியோடு தமிழர்களை அடித்து நொறுக்குகிறார், திடீரென்று சிங்களமக்களால் பிரச்சனை ஏற்பட்டால் அப்போது ராஜபக்ஷே சிங்களமக்களையும் அடித்து நொறுக்குவாரா? ராஜபக்ஷே மனசாட்சியில்லாத மனிதனென்ற வகையில் சேர்த்துக் கொள்ளலாம். ஆளவந்தான் திரைப்படத்தில் காட்டிய மனிதன் பாதி, மிருகம் பாதி கமல் வடிவத்தில் இன்று ராஜபக்ஷே நம்மிடையே உலவி வருகிறார்.

மனித உரிமைக்காக இந்திய அரசாங்கம் இலங்கை அரசிடம் தெளிவான பேச்சு வார்த்தை நிகழ்த்தவில்லை. போரை நிறுத்தும்படி இந்திய வெளியுறவு அமைச்சகம் ராஜபக்ஷேவிடம் கோரிக்கையோ அல்லது மனுவையோ கொடுத்ததாக தெரியவில்லை. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் எந்த வகையிலும் உதவி செய்வதற்கு முயற்சி எடுக்காமல் கொந்தளிக்கும் தமிழ்மக்களோடு இணைந்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இந்திய அரசின் மெத்தன போக்கு இலகையிலுள்ள ஈழத்தமிழர்கள் இனத்தையே அழித்து விடும். எல்லாம் முடிந்த பிறகு நாங்கள் இதை செய்திருப்போம், அதை செய்திருப்போமென்று சொல்லிக் கொள்வதில் பயனில்லை, பலனுமில்லை. இன்று ஈழத் தமிழர்கள், நாளை இந்தியநாட்டுத் தமிழர்களா? என்ற கேள்விக்குறி அம்பாக ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலே பாய்கின்றது.

sandhya_giridhar@yahoo.com\
ஏபரல் 27, 2009


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner