இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி  2008 இதழ் 97  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல் / பொருளாதாரம்!
இந்திய பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியும் சமநிலையும்!

- சந்தியா கிரிதர் (புது தில்லி) -


இந்திய பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியும் சமநிலையும்!அண்மையில் இந்தியப் பொருளாதார நிலை பன்மடங்கு வளர்ந்து உயர்ந்து விட்டது. எதனால் இந்த பன்மடங்கு வளர்ச்சியை இந்தியா காண நேரிடுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. 1900 லிருந்து 1950 வரை இந்தியப் பொருளாதாரம் நூற்றுக்கு ஒரு சதவிகித வளர்ச்சியைப் பெற்றது. ஐம்பது ஆண்டுகளில் இந்தியா எந்தத் துறையிலும் வளர்ச்சி அடைய முடியவில்லை. 1950 லிருந்து 1960 வரை பொருளாதார வளர்ச்சி 1 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகித உயர்வு பெற்றது. இந்த புத்தாண்டுகளில் 2.5 சதவிகித அதிக வளர்ச்சியை பெற முடிந்தது. இந்த வளர்ச்சியை பெற முடிந்தது. இந்த வளர்ச்சியும் சொல்லும்படியான வளர்ச்சியில்லை. 1970இல் இந்திய பொருளாதரத்தின் நிலை உயர்ந்தது. இந்தியா விவசாயத்துறை, தொழில்துறை, சேவைத் துறை (service department) அனைத்திலும்
வளர்ச்சியைக் கண்டது. 1993ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் தரம் உயர்ந்தது. ஆறு சதவிகித வளர்ச்சியைக் கண்டது. கடந்த நான்கு
ஆண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதம் எட்டமுடியாத சிகரத்தை பிடித்து விட்டது. இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அகப்படியின் படி
ஒன்பது சதவிகிதத்தை தாண்டி விட்டது என்று சொல்லலாம். இத்தகைய வளர்ச்சியைக் கண்ட இந்தியப் பொருளாதாரம் மிகவும்
பெருமைக்குரியது. வளர்ந்துவரும் நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவின் வளர்ச்சி மிகவும் போற்றத்தக்கது.

மக்களின் வாங்கும் சக்தியை பொருட்டு 1975 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கீட்டின் அடிப்படையில் வளர்ச்சி அடையாத பின்தங்கிய 109
நாடுகளில் இந்தியா 90ஆவது இடத்தை பெற்றிருந்தது. இதே பட்டியலின்படி 52 நாடுகள் ஏழ்மையின் பிடியில் சிக்கி அங்குள்ள மக்கள் வறுமையால் வாடி வதங்கினர். மக்களின் நிலமை மிகவும் பாpதாபமான நிலையிலிருந்தது. 1984ஆம் ஆண்டில் இந்தியா இதே பட்டியலில் 89ஆவது இடத்தை பெற்றது. 1994 லிருந்து 2004 வரை இந்தியா 75ஆவது இடத்தை அடைந்தது. ஆனால் இதே சமயத்தில் சீனா இந்தப் பட்டியலின் அடிப்படையில் 52 வது இடத்தைப் பற்றிக் கொண்டது. இந்தியா விவசாயத்திலும் தொழிலிலும் வேகமான வளர்ச்சியைக் கண்டது மிகவும் ஆச்சரியத்துக்குரியது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க ஆரம்பித்தன. மேலும் அயல்நாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் குடிபுகுந்தன. பல தொழிற்சாலைகளும் தொடங்கலாயின. இந்த தொழிற்சாலைகளில் போதிய தொழில் நுட்பங்களும் புதுமையான அணுகுமுறையும் பின்பற்றப்பட்டன.

ஜனத் தொகை பெருகிக் கொண்டு சென்றhலும் அதற்கேற்றவாறு தொழில் வளமும் அதிகாpத்து வந்தன. வேலை வாய்ப்புகள்
அதிகாpத்தன. தகுதிக்கு ஏற்றhற்போல வேலையும் கிடைத்தது. இதனால் வருமானமும் பெருகியது. வருமானம் பெருகியதால்
உற்பத்தியும் பெருகியது. உற்பத்தி பெருகியதால் அயல்நாட்டு வர்த்கமும் சிறப்பாக நடைபெற்றது. அந்நிய செலவாணி கையிருப்பு
தொகையும்
(foreign exchange reserves) அதிகாpத்தது. 1960 லிருந்து 1970 வரை சுமார் 50 சதவிகித ஜனத்தொகை வறுமைக் கோட்டின்
கீழே வாழ்ந்து வந்தார்கள். இன்று 2 சதவிகித ஜனத்தொகை (2%) வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கை மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

1960 இல் மக்களிடையே பண சேமிப்புத் திட்டம் அதிகமாக புழங்கவில்லை. ஆனால் 1964 இல் யுனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா
(Unit trust of India) என்ற நிதி துறையொன்று துவங்கப்பட்டதால் மக்களிடையே சேமிப்பு உணர்வு அதிகாpத்தது. சிறு துளி பெரு வெள்ளம் போல சிறியளவில் தோன்றிய டிபாஸிட் மாபெரும் சமுத்திரத்தை உருவாக்கியது. மேலும் 1969ஆம் ஆண்டில் வங்கிகள் தேசியமாக்கப்பட்டதால் மக்களிடையே பணம் சேமிக்கும் தன்மையும் அதிகாpத்தது. மக்கள் பணத்தை வங்கியில் சேமிக்கத் தொடங்கினர். இந்த வங்கிகள் மக்களின் சேமிப்புத் தொiயை பல துறைகளில் முதலீட்டு செய்து டிபாஸிட்டை பன்மடங்கு பெருகச் செய்தது மட்டுமில்லாமல் தொழில் வளத்தையும் பன்மடங்காக உயர்த்துவதில் பொpதும் கை கொடுத்தது. சேமிப்பு தொகையும் முதலீடும் ஒன்றhக இயங்கியதால் இந்தியா மாபெரும் உயர்ந்த சிகரத்தை அடைந்தது.

1977 லிருந்து 1990 வரை அந்நிய செலவாணி கையிருப்பு தொகை 5 கோடி டாலர்களாக இருந்தன. இன்று இதே கையிருப்பு தொகை 200
கோடி டாலர்களாக உள்ளன. தொழிலும் வர்த்தகமும் இணைந்து இயங்கிதால் பின்தங்கிய நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை
வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் ஒன்றhக இணைக்கப்பட்டது.

இன்று இந்தியாவின் நேஷனல் இன்கம் அதாவது நாட்டினுடைய உற்பத்தியினால் கிடைக்கும் வருமானமும் வளர்ச்சியும் 34
சதவிகிதத்தில் (34%) நிற்கிறது. இதுவே இந்தியாவின் பொருளாதாரத்தின் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்கு அளிக்கிறது.

இரண்டாவதாக இயற்கை வளமும் தொழிலாளிகளின் சிரத்தையும் அயல்நாட்டு நிறுவனங்களை இந்தியப் பொருளாதாரம் தன்
வசப்படுத்திக் கொள்ள பொpதும் உதவின. இந்தியாவில் அமொpக்க நிறுவனங்கள் இயங்கத் தொடங்கின. வேலைவாய்ப்பும் பெருகின.
அயல் நாடுகளிலும் நம்நாட்டு மக்கள் வேலை சேய்யத் தொடங்கினர். அவர்கள் அனுப்பும் தொகையால் அந்நிய செலவாணி கையிருப்புத்
தொகையும் பெருகின.

கடைசியாக பொருளாதாரத்தோடு சமுகமும் வளர்ச்சி பெற்றது. மக்களின் வாழும் முறையும் மாறியதால் இதுவே தொழிலுக்கு புதிய
பாதையை அமைத்துக் கொடுத்தது. எல்லா துறைகளிலும் புதுமைiயைக் கண்ட இந்தியப் பொருளாதாரம் புதிய வரலாற்றை படைத்தது. நேற்றுவரை வளர்ச்சியடையாத பொருளாதாரம் இன்று உயர்ந்த சிகரத்தை எட்டியது பொpதும் போற்றத்தக்கது. இதே நிலையை என்றும் தக்கவைத்துக் கொள்வது நமது கைகளிலேதான் உள்ளது.

sandhya_giridhar@yahoo.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner