இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2008 இதழ் 107  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அயலுலக அரசியல்!
பிணம் தின்னும் கழுகுகள்!

- சந்தியா கிரிதர் (புது தில்லி) -


1.

ஒரிஸா மாநிலத்திலுள்ள கந்தமால் என்ற இடத்தில் மனிதர்கள் வேட்டையாடும் மிருகங்களாக மாறி ஜீரணிக்க முடியாத சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்கள். கந்தமால் அகதிகள்ஒரிஸா மாநிலத்திலுள்ள கந்தமால் என்ற இடத்தில் மனிதர்கள் வேட்டையாடும் மிருகங்களாக மாறி ஜீரணிக்க முடியாத சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்கள். இந்தச் சம்பவம் மக்களின் மனதை வெகு ஆழமாக காயப்படுத்தியுள்ளது. பச்சைப்பசேலென்று குன்றுகள், அடர்த்தியான காடு, நீர்வீழ்ச்சி ஆகிய இயற்கை வளம் நிரம்பிய கந்தமால் என்ற இடம் இறைவனால் வரையப்பட்ட அழகிய ஓவியமென்று சொல்லலாம். அண்மையில் நடைபெற்ற அத்துமீறிய வெறுப்பான சம்பவம் மக்களுடைய காய்ந்துபோன கண்களை கூசவைத்தது. “கந்தமால் உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்று தொங்கும் பெரிய பலகையைக் காணலாம். பலகையில் அச்சடிக்கப்பட்டுள்ள ‘அன்பு’ என்ற வார்த்தை வெறும் பலகையோடு நின்றுவிட்டது. உண்மையில் கந்தமால் மனிதனையே மனிதனுக்கு எதிரியாக மாற்றுவதில் வெற்றி கொண்டது.

ஒரிஸாவில் ஆதிவாசி ஜனத்தொகை மொத்த ஜனத்தொகையில் 22 சதவிகிதம் வகிக்கிறது. ஒரிஸாவில் ஆதிவாசிகள் 62 பிரிவினைகளைக் கொண்டது. பிறப்பிலே ஆதிவாசிகள் இயற்கையை கடவுளாக நம்பி அன்றhட பொழப்பை நடத்தி வருகிறhர்கள். கள்ளங்கபடமில்லாத இந்த ஆதிவாசிகள் அமைதியை நேசிப்பவர்கள். ஆறுலட்ச ஜனத்தொகையையுடைய கந்தமால் ஆதிவாசிகள் இரண்டு பிரிவினையாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்ச ஜனத்தொகை இந்து கந்த ஆதிவாசிகளென்றும், மிச்ச மூன்று லட்ச ஜனத்தொகை தலித் கிறிஸ்துவ ஆதிவாசிகளென்று கந்தமாலில் வாழ்கிறார்கள். கந்தமால் தலித் கிறிஸ்துவ ஆதிவாசிகள் படித்து, நல்ல வேலையுள்ளவர்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது. குறைவில்லாத செல்வமும், பணப்புழக்கமும் கிறிஸ்துவ ஆதிவாசிகளிடையே நிலவியதால், அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். கந்தமாலின் இன்னொரு பக்கம் போதாமை, பசி, பற்றாக்குறை ஆகியவைகளால் பாதிக்கப்பட்ட இந்து ஆதிவாசிகளின் நிலமை இந்த இரண்டு பிரிவினர்களிடையே மாபெரும் பிளவை உருவாக்கியது. ஏற்றத் தாழ்வின் கொந்தளிப்பு இந்து ஆதிவாசிகளின் மனதில் தீயைப் போல கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இந்தத் தீயில் எண்ணெய்விட்டு பத்தவைத்தது போல விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவரான ஸ்வாமி லஷ்மணாநந்தாவின் படுகொலை மாபெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. வீட்டிற்குள் புகைந்து கொண்டிருந்த தீப்பொறி காடெங்கும் தீக்குழம்பாக பரவியது. ஓரிஸாவினுடைய பசி, பட்டினி, பற்றhக்குறை ஆகிய மூன்றும் இணைந்து மதச்சார்புடைய ஆதிவாசிகளை உருவாக்கியது.

மதத்தினுடைய உண்மை தத்துவத்தை எடுத்துரைக்கத் தவறிவிட்ட விஸ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பு, இருதரப்பினிடையே போராட்டத்தை உருவாக்கி, மனத்திருப்தி அடைந்தது. அவர்களுடைய ஈரமான நெஞ்சத்தில் குளிர் காய்ந்தது. மதத்தையே மூச்சாக சுவாசிக்கும் காவிக்காரர்கள் வன்முறையை கையாண்டு தங்கள் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டார்கள். இந்தச் சம்பவத்தை ஜனநாயகம் வன்மையாக கண்டிக்கத் தவறிவிட்டது.

1999ஆம் ஆண்டில் கிறிஸ்துவரான கிராம்ஸ்டைன்ஸ் (Grahmstains) என்பவரும் அவருடைய இரு மகன்களும் ஒரிஸாவில் தீவைத்துக் கொல்லப்பட்டார்கள். 1999ஆம் ஆண்டில் கிறிஸ்துவரான கிராம்ஸ்டைன்ஸ் (Grahmstains) என்பவரும் அவருடைய இரு மகன்களும் ஒரிஸாவில் தீவைத்துக் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தை இன்றும் நம்மால் மறக்க முடியவில்லை. கந்தமாலில் மீண்டும் இந்து கிறிஸ்துவ மதப்பிரச்சினை பல உயிர்களை பலியாக்கியது. அங்குள்ள கிறிஸ்துவர்கள் உயிருக்கு பயந்து வீடுவாசலை விட்டுட்டு காட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இந்து ஆதிவாசிகள் ஆயுதங்கள், தீப்பந்தகள் ஏந்திக் கொண்டு கிறிஸ்துவ ஆதிவாசிகளின் உயிர்களோடு Nரையாடினார்கள். கந்தமாலின் வெத்துப் பாதையை கறைபடிந்த பாதையாக மாற்றிய இந்தக் கொடூரமான சம்பவம் மனிதநேயத்தை மண்ணோடு மண்ணாக புதைத்து விட்டது. ஆதிவாசிகளிடையே மதப்பிரச்சனையை உருவாக்கி தொலைவில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் விஸ்வ இந்து பரிஷித்தை என்ன வார்த்தைகளால் சொல்லிப் பாராட்டுவது? மனிதனே மனிதனுக்கு எதிராக வன்முறையை கையாண்டு மனிதகுலத்தை கொளுத்தி சாம்பலாக்கிய கொடூரமான சம்பவம் கந்தமாலை மட்டும் உலுக்கியது மட்டுமில்லாமல் மொத்த மனிதகுலத்திற்கும் ஒரு சவாலாக நிற்கிறது. கர்நாடகாவில் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை கொடுத்து உதவினார்கள். இதனால் கர்நாடாகவில் எண்ணற்ற இந்துக்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொள்ள பலவந்தப்படுத்தப்பட்டார்கள். இந்தச் செய்தி உண்மையா அல்லது புரளியா என்று சற்றுகூட ஆராயாமல் கர்நாடகாவில் மதச்சார்புடைய கலவரத்தை நடத்திய பஜரங்தல் என்ற அமைப்பு மனிதனுடைய வெறித்தனமான செயலுக்கு துணைசென்றது. நாட்டின் அமைதியைக் குலைத்து கலவரத்தை உருவாக்கிய மதச்சார்ப்புடைய அமைப்புகளை பயங்கரவாத இயக்கத்தோடு இணைத்துப் பேசப்படுவது தவறhக தோன்றவில்லை. தீவிரவாதிகளும் வன்முறையை கையாண்டு அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடுகிறhர்கள். அதுபோலவே மதச்சார்ப்புடைய அமைப்பும் வன்முறையை மக்களிடையே தூணடிவிட்டு மனத்திருப்தி அடைகிறது. மனிதம் தழைப்பதற்கு உலகெங்கும் அன்பு நெஞ்சங்களும், உதவிக் கரங்களும் பாடுபட்டாலும அமைதியை ஜPரணிக்க முடியாத ஒரு சில பிணம் தின்னும் கழுகுகள் உலகின் ஏதாவது ஒருமூலையில் கலவரத்தை உருவாக்கி தாகத்தை தணித்துக் கொள்கிறது.

வெறுப்பு என்ற கள்ளிச் செடியை வேரோடு பிடுங்கி எறிந்து அன்பையும் மனிதநேயத்தையும் வளர்க்க பாடுபட வேண்டும்;. இதற்கு எந்த மதமும் தடையாக இருந்ததில்லை, இருக்கவும் இருக்காது. மதம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு வேஷம் போடும் ஒருசில அமைப்புகளை கிள்ளி எறிய பொதுமக்கள் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும். இதற்காக சற்றுகூட தாமதிக்காமல் செயல்படுவோம்.


2.

கந்தமால் அகதிகள்ஒரு காலத்தில் பெருமையோடு பேசப்பட்டு வந்த இந்திய ஜனநாயகம் இன்று உலக மக்களுக்கு கேலிக்கூத்தாகிவிட்டது. பொன்னான அக்ஷரத்தால் பதிக்கப்பட்ட இந்திய பண்பாடு, கலாசாரம் பற்றிய பெருமையும், சிறப்பும் மண்ணோடு மண்ணாக மக்கி விட்டன. மதச்சார்புடைய சங் பரிவாரம் என்ற அமைப்பு இந்தியாவை பல கூறுகள் போட்டு, மக்களிடையே பாகுபாட்டு உணர்வுகளை கொணர்ந்து மாபெரும் மதக்கலவரத்தை உருவாக்கியுள்ளது. ஆர் எஸ் எஸ், விஸ்வ இந்து பரிஷத். பஜரங்தல் ஆகிய மூன்றும் இணைந்த சங் பரிவாரம் ஒவ்வொரு மாநிலத்திலும் தனது விஷக்கிருமிகளின் உதவியால் சமூகத்தில் வெறுப்பு, வஞ்சகம் போன்ற வியாதியை தீவிரமாக பரவவிட்டு முதுகிற்கு பின்னால் குத்தி கொலை செய்யும் வீரனைப் போல தனது சாதனையின் வெற்றியை பறை சாற்றிக் கொள்கிறது. வேறுபாடு, பாகுபாடு இவைகளை அறியாத அப்பாவி ஆதிவாசிகளிடையே மதம் என்ற தீக்குச்சியை ஏற்றி அந்தத் தீயில் இன்னும் கோசம் எண்ணெய்யை விட்டு ஏற்றுவது போல கலவரத்தை உருவாக்கி அமைதியில்லாத சூழ்நிலையை கொடுத்துள்ளது. இருப்பவன் இல்லாதவன், ஒரு பக்கம் ஏழ்மை, பற்றாக்குறை, பஞ்சம், இன்னொரு பக்கம் பணப்புழக்கம், ஆடம்பரம், பணக்காரத்திமிர் இவை அனைத்தும் இணைந்து சமூகத்தின் அடிப்படை தேவைகளான சட்டம், காவல், வளர்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றை வேரோடுவேராக பிடுங்கி எறிந்தது. சங் பரிவாரம் கள்ளங்கபடமில்லாத ஆதிவாசிகளுக்கு இவைகளை அறியவைத்து அவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. அவர்களுக்குள்ளிருந்த கொந்தளிப்பு நெருப்புக்கணலாக மாறி விஸ்வருபம் எடுத்தது. இவையே ஆதிவாசிகளை வன்முறையைக் கையாளச் செய்தது. அவர்கள் நாட்டின் பொது உடைமையை சேதம் செய்து, பல அப்பாவி மக்களின் உயிர்களை பலியாக்கினார்கள். சங் பரிவாரம் பாதுகாப்பிற்கு உத்திரவாதமில்லாத நிம்மதியற்ற வாழ்க்கையை சமூகத்திற்கு கொடுப்பதில் பெரிதும் உதவியது. மக்கள் சட்டத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்தார்கள். சங் பரிவாரத்தின் கொள்கைகள் ஒரு காலத்தில் ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி நாசியின் கொள்கையை நினைவு கூறுகிறது. சர்வாதிகாரி நாசி சமூகத்தின் பல்வேறு மதத்தினரிடையே சண்டையை கிளறிவிட்டு, சின்ன பிரச்சனையை மாபெரும் கலவரமாக மாற்றி, அமைதியை குலைத்து நாட்டினுயை பதவியைக் கைப்பற்றினான். தற்சமயம் சங் பரிவாரமும் வௌ;வேறு மதத்தினரை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, அவர்களிடையே ஜhதிப்பிரச்சனை, மதப்பிரச்சனையை உருவாக்கி, நாட்டினுடைய அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்கிறது. இந்த சங் பரிவாரம் மக்களுக்கு பயத்தiயும், பீதியையும் கொடுத்து, அதர்மத்திற்கும், அநீதிக்கும் துணையாக நின்றது. மதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு முரண்பாடான, முறைகேடான செயல்களில் ஈடுபடுத்திப் கொண்டுள்ள இந்த சங் பரிவாரத்தின் நிழலில் வளர்ந்து வருகிற பாரதிய ஜனதா கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் பதவியைக் கைப்பற்ற எடுத்துக் கொண்டுள்ள ஒரு அவதாரமே என்று மக்கள் திட்டவட்டமாக கருதுகிறார்கள். இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் அப்பாவி மக்களின் கதி என்னவாகும்? என்பது பெரிய கேள்விக்குறியாக தற்சமயம் நிற்கிறது. 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல், 1993ஆம் ஆண்டு மும்பை கலவரம், 2002ஆம் ஆண்டு குஜராத் இந்து முஸ்லிம் கோத்ரா கலவரம், 2008ஆம் ஆண்டு கந்தமால் மதக்கலவரம் ஆகிய அனைத்து நிகழ்வுகளிலும் நாட்டினுயை சட்ட ஒழுக்கம் தவறி, மக்களுக்கு அநீதியை இழைத்து, சமூகத்தின் அமைதியை நிலைகுலைய வைத்தது. இந்தக் கலவரத்திற்கு காரணமான அடிப்படை குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கு அரசாங்கம் மக்களுடைய கண் துடைப்பதற்காக கமிஷன் ஒன்றை அமர்த்தியது. குஜராத்தில் நடந்த இந்து முஸ்லிம் கலவரத்திற்கு துணை நின்ற முதலமைச்சர் நரேந்திர மோதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கிற்கு அரசு நாநாவதி கமிஷனுக்கு ஏற்கனவே தனது முடிவை பற்றி அறியவைத்து, அதனை நியமித்தது. முன்பே எடுத்துள்ள தீர்ப்பின் முறைப்படி நாநாவதி கமிஷன் நரேந்திர மோதியின் மீது எவ்வித குற்றச்சாட்டுமில்லை என்ற தீர்ப்பு கொடுத்து, மோதியை வழக்கிலிருந்து விடுவித்தது. எந்த வழக்கிற்கும் பாரபட்சம் கொள்ளாமல் நீதியை வழங்க வேண்டுமென்று நீதிதேவியின் கண்கள் மூடப்பட்டுள்ளன. நீதிதேவியின் மூடிய கண்கள் கோத்ரா சம்பவத்தின் உண்மையை அறிந்து கொள்ள தவறி விட்டது. நீதிமன்றத்திற்குரிய மதிப்பையும், மரியாதையையும் மோதியின் பணமும், பதவியும் மண்ணில் புதைத்து விட்டது. இம்மாதிரி தீர்வுகள் சங் பரிவாரத்தை பலப்படுத்தி, அவர்களுக்கு வன்முறையை ஆயுதமாக்கிக் கொள்ள உறுதுணையாக நிற்கிறது. தன்னை எதிர்த்து போராட எவருக்கும் துணிவும், தைரியமும் கிடையாது என்ற ஆணவத்தில் சங் பரிவாரம் பயகரவாதத்தில் ஈடுபடுத்திக் கொண்டு வன்முறையை நடத்தி வருகிறது. பதவியில் இல்லாத சங் பரிவாரத்தின் கைகளில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களின் நிலை, இதே சங் பரிவாரம் பதவியேற்ற பின்பு எப்படியிருக்கும் என்பது மிகவும் சிந்தனைக்குரியது. மக்கள் நிதானமாக முடிவெடுத்து வரும் தேர்தலில் தெளிவான எண்ணங்களோடு ஓட்டுக்களை அளிக்க வேண்டும். மக்களின் சரியான முடிவு நல்ல தலைவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்கிறது. மதவாத அமைப்புகளோடு ஈடுபடுத்திக் கொண்டுள்ள கட்சிகள் பதவியை கைப்பற்றினால் நாட்டினுடைய பாதுகாப்பு, சட்டம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய நான்கு சக்கரங்களும் ஆட்டம் கண்டு கொள்ளும் என்ற நினைப்பு மக்களின் மனதிலும் உணர்விகளிலும் ஆழமாக பதிந்து விட்டது. மதக்கலவரத்தை தடுக்க தவறிவிட்ட அரசாங்கத்தையும், சட்டத்தையும் ஒரு சில பிணம் தின்னும் கழுகுகளிலிருந்து காப்பாற்றுவது இன்றைய சூழ்நிலையில் மக்களுடைய முக்கிய பொறுப்பாகும் என்பதை மறக்காமல் செயல்படுவோம்

sandhya_giridhar@yahoo.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner