இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2010  இதழ் 124  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை

(ஒரு) மாற்றம்

- தமயந்தி கிரிதரன் -
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

[
கூர் 2010 கனடாக் கலை இலக்கிய மலருக்காக தமயந்தி கிரிதரனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்ட சிறுகதை. இங்கு தமிழ் மொழிபெயர்ப்பையும் இதன் ஆங்கில மூலத்தினையும் ஒருசேர வாசிக்கலாம். ]

இருள் ஒரு போர்வையைப் போல் என்னைச் சுற்றிக் கவிந்து போர்த்தியது. உண்மையில், அது ஒரு போர்வை தான். என்றும் பாதுகாப்பான கருவறைத்தோற்றநிலையில் என்னை சுருட்டிக்கொண்டிருந்தேன்.அந்த சொகுசான, கதகதப்பான போர்வை ஒரு புதுத் தாய் தன்னுடைய குழந்தையை அரவணைத்துக் கொள்வதைப் போல் என்னைத் தழுவிக்கொண்டது. அந்தப் பாதுகாப்புணர்வு எப்போதுமே தோலின் அந்த மென்மடிப்புகளின் நடுவே அமைந்திருக்கிறது; குழந்தையைப் பெற்றெடுத்ததால் இன்னும் கூடுதலாக மென்மையாக்கப்பட்ட, அடர்வாக்கப்பட்டஅந்தப் புதுத்தோலின் மென்மடிப்புகளில். குழந்தை பிறந்தவுடனேயே, அந்த உணர்வு என்றைக்குமாய் அந்தத் தாயிடம் நிலைகொண்டுவிடுகிறது – பிள்ளைப்பேற்றின் போது உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்புச்சத்து போன பிறகும் கூட.இருள் ஒரு போர்வையைப் போல் என்னைச் சுற்றிக் கவிந்து போர்த்தியது. உண்மையில், அது ஒரு போர்வை தான். என்றும் பாதுகாப்பான கருவறைத்தோற்றநிலையில் என்னை சுருட்டிக்கொண்டிருந்தேன்.அந்த சொகுசான, கதகதப்பான போர்வை ஒரு புதுத் தாய் தன்னுடைய குழந்தையை அரவணைத்துக் கொள்வதைப் போல் என்னைத் தழுவிக்கொண்டது. அந்தப் பாதுகாப்புணர்வு எப்போதுமே தோலின் அந்த மென்மடிப்புகளின் நடுவே அமைந்திருக்கிறது; குழந்தையைப் பெற்றெடுத்ததால் இன்னும் கூடுதலாக மென்மையாக்கப்பட்ட, அடர்வாக்கப்பட்டஅந்தப் புதுத்தோலின் மென்மடிப்புகளில். குழந்தை பிறந்தவுடனேயே, அந்த உணர்வு என்றைக்குமாய் அந்தத் தாயிடம் நிலைகொண்டுவிடுகிறது – பிள்ளைப்பேற்றின் போது உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்புச்சத்து போன பிறகும் கூட.

நான் இன்னமும் என்னுடைய பாட்டியின் முக்காலியைவிட உயரமாகிவிடவில்லை. மற்றவர்களுக்கு அல்லது தனக்குப் பயன்படும் வகையில் உறுதியாக, திடமாக இருக்கவேண்டி பழைய சிந்தூர மரத்திலிருந்து வெட்டியெடுத்தத ஒரு துண்டைக்கொண்டு அவள் தயார் செய்தது. அந்த முக்காலி சின்னதாக இருந்தது. நானும் தான். அநத சமயத்தில் என்னுடைய தங்கை பிறந்திருக்கவில்லை. எனவே, நான் மற்றவர்களுக்கு அல்லது எனக்கே கூட எப்படி உறுதியும் திடமுமாக இருக்கவேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் என்னுடைய பெற்றோர்களைச் சார்ந்தபடியிருந்தேன். ஏனெனில், அது மட்டுமே நான் என்ன செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவேண்டிய தேவையாக இருந்தது. சார்ந்திருத்தல். அவர்களைச் சார்ந்திருத்தல். ஏனெனில், அவர்கள் பாதுகாப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இன்று அப்படியில்லை.

நாள் வழக்கம்போல் தான் ஆரம்பமானது. மேகமூட்டத்தோடு, கொஞ்சம்போல் சூரியன் எட்டிப்பார்த்துகொண்டிருக்கும்படியாக. ஜன்னல்களுக்குப் பக்கத்தில் என்னுடைய சாய்விருக்கையில் கோணல்மாணலாக என்னைக் கிடத்தியிருந்தேன். அது என்னுடைய புதுநாளின் தொட்டிலாகியிருந்தது (அதற்குப் பிறகு அது எனக்குத் தேவைப்படவில்லை என்பது வெளிப்படை). பழைய இலக்கியநூல்களில் நமக்குக் காணக்கிடைக்குமே, அது போன்ற அழகான கையால் தீட்டப்பட்ட சித்திரங்களைக் கொண்டு மிகுந்த பிரியத்தோடு அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தைப் படித்தேன்.அந்த வயதில் நான் வெறும் படங்களை மட்டுமே வாசித்துக்கொண்டிருந்தேன், காரணம் அப்பொழுதெல்லாம் எனக்கு “வாஷ்-ரூம்” (சுத்திகரிப்பு அறை) என்ற வார்த்தையை மட்டுமே எழுத்துக்கூட்டிப் படிக்க, அர்த்தம் புரிந்துகொள்ளத் தெரிந்திருந்தது. காலம் செல்லச்செல்ல நான் நிறைய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வேன் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது.

நான் தினசரி உண்டு வளர்ந்திருக்கும் உணவை – சாதம், கறி – அம்மா சமைத்துக்கொண்டிருந்தாள். தினமும் நான் அரிசிச்சாதம், கறியை உண்பது வழக்கமாக இருந்தது. உண்மையாகவே சொல்கிறேன், இது ருசிமரத்துப் போவதில்லை; இது வெறுமே, ஒரு சம்பிரதாயமாக, ஒரு சௌகரியமாக, ஒரு எதிர்பார்ப்பாக மாறிவிடுகிறது. உணவில் சேர்க்கும் நறுமணப்பொருட்களின் வாசனை வீடு முழுக்கப் பரவியது. நான் குறிப்பிட்டதுபோல், அது ஒரு வழக்கமான நாள் தான். ஒரேயொரு விஷயம் தவிர்த்து. அன்று சலவைநாள். எல்லா சலவைநாள்களையும் போலவே அன்றும் நான் கீழ்தளத்திற்கு, அங்குள்ள பொது சலவையறைக்கு அம்மாவோடு சேர்ந்து போய்வர வேண்டும். எங்களுடைய குடியிருப்பு இருந் த அடுக்குமாடிக் கட்டிடம் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் தனது சுவர்களுக்குள்ளாகவே வைத்திருந்தது; ஒரு சலவை அறை, குப்பை கூளங்களை அகற்றும் அறை, யாருக்கும் புரியாத ஒரு மேல்தள அறை, யாரும் புரிந்துகொள்ள விரும்பாத ஒரு தரையடித்தளம், தவிர, நீச்சல்குளம் இல்லை. அது பரவாயில்லை. எப்படியிருந்தாலும், எனக்கு நீந்தத் தெரிந்திருக்கவில்லை.

சலவை அறைக்குச் செல்வதென்றால் எனக்கு எப்பொழுதுமே கொஞ்சம் பரவசமாய், படபடப்பாய் இருக்கும். எப்பொழுதுமே நாங்கள் அங்கே சில பேரைப் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண்மணிகள். அவர்கள் என்னை எப்பொழுதுமே அன்பு பாராட்டி ஏகத்துக்குக் கொண்டாடினார்கள். உண்மையிலேயே, அது மனதை மிகவும் ஈர்க்கும் விஷயம். அவர்கள் என்னுடைய ஒருகாலத்தில் கொழுகொழுவென்றிருந்த கன்னங்களைக் கிள்ளி எனக்கு இனிப்புகள் தருவார்கள். நான் அவற்றையெல்லாம் இயல்பாக எடுத்துக் கொண்டு விடுவேன். ஆனால், என்னுடைய பெற்றோர்கள் நான் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குக் கற்றுத்தந்திருந்ததால் நான் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்பது எனக்கு ஞாபகமிருந்தது. வழக்கமாக நான் அந்த இனிப்புகளை யெல்லாம் என் பற்களால் அரைத்து நொறுக்கி(நாகரீகமாக நடந்து கொள்வதாகக் காட்சியளித்தவாறே) கையில் கிடைத்தவுடன் அவற்றை விழுங்கித் தீர்ப்பேன். அவர்கள் எப்பொழுதுமே என்னைப் பார்ப்பதில் ஆனந்தமடைவதாகத் தோன்றும். நான் பெருமை பீற்றிக்கொள்வதாக நினைக்கவேண்டாம். உள்ளது உள்ள்படியே கூறுகிறேன் – ஆனால், நான் சொல்வதைப்போல் தான் எல்லாம் இருந்தது. அவர்கள் வேறு எந்தக் குழந்தைக்காவது இனிப்பு வழங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. கொடுத்திருக்க மாட்டார்கள் என்று நம்பவே எனக்கு விருப்பம்..

வழக்கமாகச் செல்வதுபோல் சலவையறைக்குச் செல்ல என்னுடைய அம்மா என்னை அழைப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தபடி என்னுடைய சாய்விருக்கையில் சோர்ந்து படுத்துக்கிடந்தேன் நான். நான் படித்துக்கொண்டிருப்பதாய் பாவ்லா செய்துகொண்டிருந்தேன் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. நான் யாரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கவில்லை.

ஒருவேளை, அவள் என்னை வேண்டுமென்றே தவிர்க்கிறாளோ என்னவோ. ஒருவேளை நான் படிப்பதுபோல் பாவனை செய்துகொண்டிருந்ததால் என்னைக் கடுப்பேற்றுவதற்காகவே அவள் சலவையறைக்கு நாளை செல்வதாக இருக்கிறாளோ என்னவோ. இப்படியெல்லாம் அபத்தமான எண்ணங்களை நான் ஓடவிட்டுக்கொண்டிருந்ததற்கு, அம்மா என்னிடம் வந்து அவளுக்கு ஏற்கனவே என்னுடைய பதில் தெரிந்திருந்த அந்தக் கேள்வியைத் தன்னுடைய தாய்மொழியில் கேட்கும்வரை என்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது தான் முக்கிய நோக்கமாக இருந்தது: “ என்னோடு வந்து துணிகள் சலவை செய்யப்படுவதைப் பார்க்கவேண்டுமென்று உனக்கு ஆசையாக இருக்கிறதா?”

ஆனால், அதற்கு பதில் அம்மா இவ்வாறு கூறினாள்: நான் கீழ்த்தளத்திற்குச் சென்று துணிகளையெல்லாம் சீக்கிரமாக சலவை இயந்திரத்தில் போட்டுவிடுகிறேன். இன்று என்னால் அங்கே அதிக நேரம் இருக்க முடியாது. வேறு வேலைகள் இருக்கின்றன. நீ இங்கேயே இரு. நான் உடனேயே திரும்பிவந்து விடுவேன். சரியா?”

இது என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சு? நான் உடனேயே அடக்கமாட்டாமல் கத்திவிட்டேன். “ அம்மா, அது பாதுகாப்பில்லை -- துணிகளுக்கு! யாராவது அவற்றைக் களவாடிவிடுவார்கள்”.

“ நீ சொல்வது அபத்தம், நம்முடைய உள்ளாடைகளை யாரும் திருட விரும்பமாட்டார்கள்!”, என்னுடைய அம்மா கேலியாகச் சிரித்தாள். அவள் சொன்னது சரிதான். என்னுடைய சொந்த ஜட்டியைத்
திருடக்கூட நான் விரும்பியதில்லை. அம்மா எங்களுடைய அழுக்குமூட்டையை நேர்த்தியாகப் பொட்டலம் கட்டியெடுத்துக் கொண்டு நான் அவளைத் தடுத்துநிறுத்த முற்படுவதற்கு முன்பாகவே, விடைபெறுவதாய் என்னை முத்தமிட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். வேண்டுமென்றே தான் அம்மா அப்படிச் செய்தாள் என்பதை நான் அறிந்திருந்தேன்.

அவள் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். மணமூட்டப்பட்ட உணவுப்பண்டங்களின் வாசனை இன்னமும் காற்றில் பரவியிருந்தது, என்றாலும் அது ஒரு திக்கற்ற வாசனையாக அமைந்தது. அதற்குமேலும் என்னால் படிப்பதுபோல் பாவை செய்துகொண்டிருக்க இயலவில்லை; அந்த கரிக்கட்டைசக்கோட்டுருவங்கள் இப்போது விடுவிக்கப்படவேண்டிக் காத்துக்கொண்டிருக்கும் பொறியிலகப்பட்ட உருவங்களாய் மாறின. நான் அவற்றை விடுவிக்க விரும்பவில்லை. சூரியன் மேகங்களூடாய் எட்டிப்பார்க்கத் துணியவில்லை; அதுவும் அச்சத்திலாழ்ந்திருந்தது. நான் அமைதியாக, எனில் துரிதமாக ஜன்னல்களுக்கு அருகில் இருந்த சாய்விருக்கையிலிருந்து என்னை விலக்கிக்கொண்டு அறையின் குறுக்காய் பாய்ந்து சென்று என்னுடைய படுக்கையில் ஓடி விழுந்தேன்.

ஆக, அங்கே, அதோ நான் என்னுடைய தாயிடமிருந்து எனக்குக் கிடைக்கும் பாதுகாப்புக்கு இணையான ஒரு பாதுகாப்பை பதற்றத்தோடு தேடியவாறு என்னுடைய போர்வைகளின் கீழ் கிடந்தேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது’ பின், திரும்பவும், எனக்கு வார்த்தைகளையும், நேரத்தையும் எப்படிப் படிப்பது என்று தெரிந்திருக்கவில்லை. இன்னமும் இருந்துகொண்டிருந்தது என நான் அறிந்திருந்த சூரியவொளியில் படுத்துக்கொண்டு சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கவில்லை. என்னை மனமகிழ வைப்பதற்காக மட்டுமே இருப்பதாக நான் அறிந்திருந்த அந்தக் கோட்டோவியங்களை நான் ரசிக்கவில்லை. என்னுடைய போர்வைக்குள்ளிருந்து, அதாவது, சூரியவன் கனத்த மேகத்திரளிலிருந்து எட்டிப்பார்க்கத் துணீயவில்லை என்று நான் எப்படிக் கருதெனேனோ அவ்வண்ணமே., எட்டிப்பார்க்க நான் துணியவில்லை

என்னுடைய படுக்கையின் ஒரு பாதுகாப்பான எனில் தனியாக அப்பால் ஒதுங்கிய மூலையில் என்னைப் புதைத்துக்கொண்டேன். இங்கே கண்டிப்பாக பாதுகாப்பாகத்தான் இருந்தது. என்றாலும், அது தான் உண்மையில் செய்யவேண்டிய ஒன்றா? என்னுடைய மனதில் இடம்பெற்றுவிட்ட அந்தக் கைவரை உருவங்களோடு என்னால் விளையாட முடிந்திருக்காது. என்னுடைய அம்மா திரும்பிவருவாள் என்று அவள் வருகைக்காய் இருளின் நிச்சயத்தில் காத்திருப்பது என்னுடைய நாளைக் கழிப்பதற்கான வழியேயல்ல. என்னை நானே ஒரு நிச்சயத்தில் ஒளித்துக்கொண்டிருப்பது எந்தவிதத்திலும் வாழ்க்கையாகாது. எனது அம்மா தந்த அந்த நீடித்திருக்கும்படியான கதகதப்பை என்னுடைய போர்வை எனக்குத் தரவில்லை.

அது வெறும் ஒரு போர்வை மட்டும்தான். குளிராக இருக்கும் நேரங்களில் நம்மை கதகதப்பாய் வைத்துக்கொள்ள உதவும்படியான மனிதனால் தயாரிக்கப்பட்ட ஒரு துண்டுத்துணி. அவ்வளவு தான். உதவிசெய்யும் கரம் மட்டுமே: எல்லா நாட்களுக்கும் நாம் சார்ந்திருக்க் முடிந்த ஊன்றுகோல் அல்ல.

நான் என்னை போர்வைகளுக்குள்ளிருந்து நழுவி வெளியேகினேன். நிச்சயமின்மை இன்னமும் என்னுடைய ம்னதின் மூலை முடுக்குகளில் வாழ்ந்துகொண்டிருந்தது, என்றாலும் சூரியன் இன்னமும் அங்கேயேதானிருந்தது. அதனுடைய கதிர்கள் திரைச்சீலையினூடாய் , அது எப்போதும் செய்வதுபோல்- உள்ளே கசிந்து பரவின. மிகவும் கவனமாக என்னுடைய அசைவுகளை/ நகர்வுகளை படுக்கையிலிருந்து வெளியேற்றி என்னுடைய சாய்விருக்கை பொருந்தியமர்ந்திருந்த வரவேற்பறைக்குள் நுழைந்துகொள்ளும்படியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தினேன்.நான் முன்பு அச்சுறுத்துவதாக நான் உணர்ந்த பக்கத்தில் அந்த நூல் திறந்துகிடந்தது. எல்லாமே வெகு இயல்பாக இருந்தன.

சில சமயங்களில் ஒருவருடையதேயான முட்டாள்தனம், தனதேயான அற்பத்தனங்கள் குறித்த பிரக்ஞை மட்டும் ஒருவரிடம் குடியேறிவிட்டாlலே போதுமானது – அதன் பின் அவருடைய நடவடிக்கைகள் மாற்றமடைந்துவிடும்.

என்னளவில் அது நிச்சயம் போதுமான நேரம் தான்.

என்னுடைய அம்மா போய்வர சுமார் ஐந்துநிமிடங்கள் தான் ஆகியிருந்தது. கையில் அந்த வயது முதிர்ந்த பெண்மணிகளில் ஒருவரிடமிருந்து கிடைத்திருந்த, நேர்த்தியாகப் பொதியப்பட்டிருந்த எலுமிச்சைமஞ்சள் நிற இனிப்புப்பண்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டாள்.அதை, நாகரீகமாக நடந்துகொள்ள ஏறத்தாழ மறந்துவிட்ட அளவில், இயல்பாக அவளுடைய கையிலிருந்து பறித்துக்கொண்டு என் அம்மாவுக்கு நன்றி கூறினேன் (ஆம், அதை நான் நினைவுவைத்திருந்தேன்). அந்த இனிப்புப்பண்டம் அதுவாகவே கரைந்துபோகும்வரை என் நாக்கிலேயே அமர்ந்த்திருக்க மகிழ்ச்சியோடு நான் அனுமதித்த நாள் அது.
*
நன்றி: கூர் 2010 மலர்

 


Short Story: A CHANGE
 
By Thamayanthi Giritharan


Darkness wrapped around me like a blanket. Actually, it was a blanket. I had curled myself into the ever-safe fetal position. The plush, warm blanket hugged me like a new mother hugs her child. That feeling of protection was always in between those soft folds of skin; the new skin that was made softer and thicker with childbirth. As soon as the child is born, that feeling remains with the mother forever – even after the baby fat is gone. Darkness wrapped around me like a blanket. Actually, it was a blanket. I had curled myself into the ever-safe fetal position. The plush, warm blanket hugged me like a new mother hugs her child. That feeling of protection was always in between those soft folds of skin; the new skin that was made softer and thicker with childbirth. As soon as the child is born, that feeling remains with the mother forever – even after the baby fat is gone.

I was not yet taller than my grandmother’s stool, a wooden piece she whittled out of old oak. The stool was small, and so was I. My sister was not born yet so I did not yet understand how to be strong for others, or for myself. I relied on my parents for everything because that was all I needed to know how to do. Rely. Rely because I know they will protect. But not today.

The day started as a normal day, cloudy with a bit of the Sun peeking through. I was sprawled on my couch next to the windows, which became my new day crib
(apparently I did not need it anymore). I read a book fondly decorated with the rich, hand-drawn illustrations you would find in the old classics. At this age, I just read images since I only knew how to read the word “WASHROOM” and understand what it meant. I knew I would learn more words with time.

My mother was cooking the food I have grown with, rice and curry. I ate rice and curry every day. Honestly, this does not become bland; it just becomes a custom, a
comfort, an expectation. The spicy aromas pervaded the apartment. Like I said, it was a normal day, except for the fact being that it was Laundry day and, like every
Laundry day, I was to accompany my mother downstairs to the communal laundry room. Our apartment building had everything you needed within its walls: a laundry room, a garbage disposal room, an attic no one understood, a basement no one wanted to understand, and no swimming pool. That was okay, I didn’t know how to swim anyway.


I was always a bit excited to go to the laundry room. We always saw some people there, mostly elderly ladies. They always found me adorable. It’s quite fascinating
really. They’d pinch my once-chubby cheeks and give me sweets. I’d take them with ease – but I remembered to be polite because my parents taught me to be civil. I would usually crunch them with my teeth (while appearing civil) and gobble them up almost instantly. They always seemed happy to see me. I’m not being pompous; it was just the way it was. I wonder if they gave candy to the other little kids. I shall hope not.

I was languishing on my couch waiting for my mother to summon me for the routine trip to the laundry room. She knew I was pretending to read; I was fooling no one.
Maybe she was purposely avoiding me. Maybe she was to do the laundry tomorrow just to spite me because I was fake reading. Of course, I was thinking such ludicrous thoughts so I could keep myself busy till my mother would ask in her native tongue a question she already knew the answer to, “You want to come watch clothes being washed with me?”

Instead, she said this, “I will go downstairs and quickly put the clothes in the washer. I can’t stay there long today because there’s other work to do. Just stay here and I’ll be right back, okay?”

What was this crazy talk? I immediately burst out, “Amma, that’s not safe… for the clothes! Someone will steal them!”

“Silly, no one will want to steal our underwear!” my mother giggled. She was right. I didn’t even want to steal my own underwear. She deftly packed up the dirty load and kissed me goodbye before I could stop her. I knew she did that on purpose.

She left me. The smell of spicy foods still hung in the air, but it was a forlorn scent. I couldn’t pretend to read anymore; the charcoal sketches now became trapped figures waiting to be released. And I didn’t want to release them. The Sun did not dare peek through the clouds; it too was frightened. I quietly, but quickly, removed myself from the couch next to the windows and darted across the room and dove into my bed.

So here I was, under my covers frantically searching for a protection equivalent to my mother’s. An hour seemed to have passed; then again, I didn’t know how to read words or time. I didn’t bask in the sunlight I knew still existed and enjoy myself with those hand-drawn images I knew were there to only entertain me. I did not dare to peek out of my covers, like how I thought the Sun dared not to peek through the thick of cloud.

I had burrowed myself within a safe, but isolated, corner of my bed. It was certainly safe here, but was it really something to do? I wouldn’t have been able to play with the hand-drawn figures in my mind. Waiting in the certainty of darkness for my mother to come back was no way to spend my day. Hiding myself in a certainty was no way to live.

The blanket did not give me the lingering warmth my mother gave me.

It was just a blanket; a manmade piece of cloth used to help us keep warm in times of cold. Just a helping hand, not a crutch to rely on for all your days.

I slid myself out from beneath the covers. Uncertainty still lived in the nooks of my mind, but the Sun was still there. Its rays seeped through the curtains, as it always had. I carefully manoeuvred my movements out of my bed and into the living room where my couch resided. The book lay open at the page I had earlier felt to be so menacing. It was all so normal.

Sometimes the realization of one’s own stupidity is enough to change one’s ways.

It was definitely enough for me.

My mother was only gone for five minutes or so. She came back with a neatly wrapped piece of lemon-yellow candy from one of the older ladies. I snatched it with ease, almost forgetting to be polite and thanking my own mother (I remembered, of course). It was a day I happily let the candy sit on my tongue until it melted away.


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்