இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிஸம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
பனிதூங்கும் இரவில்...!

-நாவாந்துறை டானியல்ஜீவா-


நாவாந்துறை டானியல்ஜீவா-கடந்த ஒருவருட காலமாகத்தான் தேன்மொழியும் முருகனும் ஒரே தொழில்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார்கள். முருகன் தேன்மொழிக்கு இண்டு வாரத்திற்கு முன்புதான் வேலையில் சேர்ந்தான். தேன்மொழி வேலைக்கு வந்தபோது அவளுக்கு வேலையை பழக்கும் பொறுப்பை மேற்பார்வையாளர் முருகனிடம் ஒப்படைத்து விட்டார்.ஆக மிஞ்சிப் போனால் ஒரு எட்டு மணித்தியாலத்தில் வேலையை பிடித்துவிடலாம்.

ஆனால் தேன்மொழி வேலையை பிடிப்பதற்கு ஒருவாரம் சென்றது.

முருகனும் தேன்மொழியும் ஒரு பிளாஸ்ரிக் பை தயாரிக்கின்ற தொழிற்சாலையில்தான் வேலை. அநேகமாக மிசின் ஓட ஒருவரும் அந்த மிசினில் உற்ப்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை அடுக்கி பெட்டியில் அடைத்து லேபல் ஒட்டுவதற்கு இன்னொருவரும் வேலை செய்வார்கள். பெண்களும் ஆண்களும் கலந்து வேலை செய்யும் இந்த வேலைத் தளத்தில் தூக்கிப் பறிக்கிற வேலையை பெரும்பாலும் ஆண்கள் செய்வர்.

எல்லா நேரத்திலும் முருகனும் தேன்மொழியும் சேர்ந்து வேலை செய்வது குறைவு. தேன்மொழிக்கான பயிற்சிக் காலத்தில் மட்டும் தான் ஒன்றாக இருவரும் தொடர்ச்சியாக வேலை செய்தார்கள்.

தேன்மொழி கனடாவிற்கு வந்து மூன்றாண்டுகள் முடிவுற்றது. இரண்டாண்டுகள் தன் கூடப்பிறந்த சகோதரனின் வீட்டில் வாழ்ந்து வந்தாள். பல நச்சரிப்புக்கும், குத்தல் கதைக்கும்,குள்ளநரிக் குணத்தையும் பொறுத்துக் கொண்டே வாழ்ந்தாள்.இன்னும் வந்த கடனில் பத்தாயிரம் டொலர் மட்டுமே அவளுடைய சகோதரனுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் பத்தாயிரம் டொலரால்தான் ஒருநாள் பெரிய பிரச்சினை வெடித்தது. அண்ணனாலும் அண்ணியாலும் அடிச்சுத் துவைக்காத குறையாக அவள் கேவலப்படுத்தப்பட்டாள்.அன்று இரவோடு இரவாய்
நண்பிக்கு ரெலிபோன் அடிச்சு வீட்டை விட்டு வெளியேறி நண்பியின் வீட்டில் ஒருவாரம் தங்கிவிட்டு ஒரு பேஸ்மென்ற் வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தவிட்டாள்

அவள் இருக்கும் வீட்டுக்காரர் கிரேக்க நாட்டுக்காரர். நல்ல பண்பானவர்கள். வெள்ளையருக்கு உரித்தான கலாச்சாரத்தோடு வாழ்பவர்கள். தேன்மொழிக்கு இருபத்தெட்டு வயதிருக்கும். முருகனுக்கும் கிட்டத்தட்ட முப்பது முப்பத்தியொன்று இருக்கும். முருகன் இன்னும் பட்ட கடனிலிருந்து மீளமுடியாமல்
தவிப்பவன். தன் சகோதரனை பிரான்சுக்கு எடுத்துவிட்டான். ஆனால் சகோதரன் இன்றுவரை ஒரு சல்லிக்காசும் திருப்பிக் கொடுக்கவில்லை. மருமகனை கனடாவிற்கு எடுத்து விட மருமகன் ஜந்து மாதம் மட்டும் முருகனோடு இருந்துவிட்டு
அவனும் வேறு இடத்துக்கு போய்விட்டான். அவ்வப்போது தொலைபேசியில் மருமகனோடு கதைத்தாலும் அவன் தனக்கு தருமதியான காசுப் பிரச்சனையைப் பற்றி கதைத்தால் தொலைபேசியை அடித்து வைத்துவிடுவான். அதனால் கடன் முட்டி கடனை அடைப்பதாற்காகவே வாழ்பவன் போலவே ஒவ்வொரு நிமிடமும் துயருடன் தொடர்கிறது அவனது வாழ்க்கை.

அவனும் அவளும் வேலைத் தளத்தில் ஒன்றாக வேலை செய்யும் நேரத்தில் சில வேளையில் அவள் ஏதேனும் சாப்பாடு கொண்டுவந்தால் இவனுக்குக் கொடுப்பதும், இவன் ஏதேனும் சாப்பாடு கொண்டுவந்தால் அவளுக்கு கொடுப்பதுமாக உறவு வளர்ந்தது. ஒருநாள் இருவரும் ஒரேநேரத்தில் வேலை தொடங்கி ஒரே நேரத்தில் முடிவடைந்தபோதுதான் அவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவள்; “என்னை இண்டைக்கு என்னுடைய வீட்டில் கொண்டு
போய் விடுகிறியா முருகன்” என்று கேட்டதற்கு, அவன்
“அதுக்கென்ன கொண்டுபோய் விட்டால் போச்சு”என்றான்.

வீட்டின் முன்புறம் கார் வந்து நின்றது. கதவை திறந்து இறங்கும் போது அவள் கட்டாயப்படுத்தி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். “ஏதேனும் குடிக்கிறியளா முருகன்”

“ம.;. ம்..தேத்தண்ணி போடுங்க பிரச்சினையில்ல… நான் வந்ததுக்கு ஒன்றும் குடிக்காமல் போனால் ஏதும் குறையாக நினைப்பியள்...”
“குறையா…! அடிப்பன்” சிரிச்சுக் கொண்டு சொன்னாள். “இந்தா றிமோட். ஏதேனும் ரீவியில பார்த்துக்கொண்டு இருங்கோ. நான் பத்து நிமிசத்தில தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்திடுவன்.”

இரண்டு கப்பில் தேத்தண்ணியைக் கொண்டு வந்து வலது கையில் இருந்த தேத்தண்ணிக் கப்பை முருகனிடம் கொடுத்தாள். அவன் வாங்கிக் கொண்டே “தாங்ஸ்” என்றான்.

வெளியில் மெல்ல மெல்ல இருள் கவி;ந்து வந்தது. குளிர்காலம் என்பதால் நேரத்தோடு இருட்டிவிடும். பேஸ்மன்ட் அறையில் இருந்த சூடேற்றி இயந்திரம் மெல்லிய சத்தத்துடன் இயங்கிக் கொண்டிருந்த சத்தம் வெளியில் வந்தது. ஆனாலும் கொஞ்சம் குளிராகத்தான் இருந்தது. தேத்தண்ணியை ஒரு முறடு குடித்துவிட்டு; தேன்மொழி கேட்டாள்@ “முருகன் இண்டைக்கு ஏதும் அவசரமாய் செய்ய வேண்டிய அலுவல் ஏதும் இருக்கா..?

“இல்ல தேன்மொழி… ஆனா வீட்டிற்கு போக வேணும்…”

“என்னத்துக்கு..?”

“ஒன்றுமில்லை, ஆனா நான் போகணும்.”

“அது தான் என்னத்துக்கு எண்டு கேக்கின்றன், பிள்ளை குட்டியா.. வீட்டில் காத்து கொண்டிருப்பாக எண்டு பொய் சொல்லிப் போட்டு ஓடுறத்துக்கு”

“சரி நான் போகல்ல, ஆனா இரவுச் சாப்பாடு ஒன்டும் செய்ய வேண்டாம். எங்கட வீட்டுக்காரர் வைத்திருப்பாங்க”

“எங்களுக்கு தெரியாத வீட்டுக்காரரா ..? சாப்பாடோட அறை வாடைக்கெண்டு சொல்லு வாங்க. ஆனா சாப்பாடு கொடுக்க மாட்டாங்க. எத்தனை பொடியள் கடையிலை சாப்பிட்டுக்கொண்டு திரியிறவியள் எண்டு எங்களுக்கு தெரியாதோ?’

“உதெல்லாம் எப்படியுங்க தெரிஞ்சு வைச்சிருக்கிறியள். நிறைய தமிழ்ப் பெடியளை தெரியுமோ..?

“என்ன எனக்கு தெரியாமல் இருக்குது. கனடாவுக்கு வந்தவுடன என்னுடைய அண்ணன் வீட்டில் எனக்கு நடந்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா.. பிற்பாடு வேலைக்கு போன பிறகு நிறைய தமிழ்ப் பொடியளோடு வேலை செய்தனான். அவங்க ஒவ்வொருவரிட்டையும் ஒவ்வொரு சோக வரலாறு இருக்கும். எல்லாத்துக்கும் அடிப்படையாக இருப்பது காசுதான். என்னுடைய அண்ணனுக்கும் எனக்கும் பகை வந்ததே பணத்தால்தான். ஓரு பத்தாயிரம் டொலர் கொடுக்க முடியாமல் நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். வந்த காசில் இருபதினாயிரம் டொலர் சீட்டுப் போட்டுத்தான் கொடுத்தனான்.
மிச்சம் பத்தாயிரம் டொலர் இன்னும் கொடுக்கல. அதைக் கொடுத்துப் போட்டுத்தான் அவன் உறவை வெட்டுறது…” என்று கோபம் கலந்த குரலில் சொல்லி முடித்தாள்.

தேத்தண்ணியை முருகன் உறிஞ்சிக் குடித்தபடி கேட்டுக் கொண்டிருக்க தேன்மொழி கண்களால் அடிக்கடி முருகனை அவதானித்தபடியே கதைத்துத் கொண்டிருந்தாள்.

அவன் நெருப்பாய் நெஞ்சில் சுமந்திருக்கும் பண நெருக்கடிக்கு பல நாள் யோசனை நடத்தியும் முடிவுறாமலே போய் அது இன்னும் நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளாய் நெகிழ்ந்து வலியெடுத்தபடியே இருந்தது. திருமணம் பற்றிய தீர்மானம் அவன் எடுப்பதற்கு அதுவே குறுக்குச் சுவராய் நின்று தடுக்கிறது.

தேன்மொழி தேத்தண்ணியைக் குடித்து முடித்து விட்டு குசினிப் பக்கமாக கப்பை கழுவி வைத்துவிட்டு வரும் போது அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அவதானித்தபடியே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“என்ன முருகன் ஒரே யோசனையில் இருக்கிறியள்.” அவள் குரல் கேட்டு ஆழ் மனதிற்குள் உறங்கியிருந்தவன் போல் விழித்துக் கொண்டான்.

“என்னத்த சொல்லுறது. என்னத்த மறைக்கிறதெண்டு தெரியலல்’

“என்னண்டு விளங்கல கொஞ்சம் விளங்கக்கூடிய மாதிரி சொன்னால்தான் நல்லது”

“உங்களுக்கு பத்தாயிரம் டொலர் கடன். அதுக்கே இவ்வளவு பிரச்சினை. ஆனா என்ர பிரச்சினையைப் பாருங்கோ..வெளிநாட்டுக்கு எடுத்துவிட்ட என்ர அண்ணனும் மருமகனும் காசு தரமாட்டேங்கிறாங்க. வீசாகாட் எல்லாம் நிறைஞ்சு காசு கட்ட வேண்டிய நிலைமை. வாழ்நாள் பூராவும் உழைச்சாலும்
கடன் கட்டமுடியாது.” அவன் சொல்லும் போதே சோகம் இழையோடியது. அவன் சொன்னதை பெரிது படுத்தி பார்க்காமல் அவன் விழி மீது பார்வையை நிறுத்தினாள். ஏதோ மின்னலாய் மூளையில் பொறிதட்ட@ “முருகன் ஏன் நீங்க இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறியள்..”

“பொறுப்புக்கள் முடியும் வரை காத்திருக்கிறன்”

“பொறுப்புக்கள் இந்த ஜென்மத்துக்கும் முடியாது…”

“விளங்குது, ஆனா என்ன செய்யிறது..” என்று அடக்கமான குரலில் சொன்னான்.

“நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம்தான் அந்த பிரச்சினையை புரிந்து அதற்கான தீர்வைக் காண வேண்டும்” என்றாள்.
“என்ன தேன்மொழி தத்துவங்கள் எல்லாம் பேசுறீங்கள்”

“எல்லாம் அனுபவத்தில் புறக்கியதுதான்..”

“அது சரி நீங்களேன் இன்னும் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறியள்..?”

“இதுவரை நினைக்கேல்லை” என்று சிரித்துக்கொண்டு முருகனின் கைகளில் அடித்தாள். முருகனின் உடலில் உறங்கிக் கிடந்த உணர்வு விழித்துக் கொண்டது. அவள் கைகளை இறுக பற்றிக்கொண்டு எதுவுமே பேசாமல் அவளுக்கு பக்கத்தில் வந்து உட்காந்து தன் நெஞ்சிற்குள் அவளை புதைத்தான். இருவரும் இனம் புரியாத விரசத்தில் இறுகினார்கள். மறுகணப் பொழுதில் இருவரும் அறைக்கு போனார்கள். கலவி முடிந்து வெளியில் வந்து இருவரும் ஒரு சோபாவில் உட்காந்தார்கள். இருவரும் ஒரு புத்துணர்வோடும் புதுப் பொலிவோடும் இருந்தார்கள். மனம் சலிக்காமல் முத்தம்
தோய்ந்தது அவள் முகத்தில். அவள் பார்வைகள் அவன் மீது ஊடுருவி நிலைத்து நின்றது. அவளுக்கு தன் சகோதரர் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட நாட்களிலிருந்துதான் தனக்கு ஓரு ஆண் துனை வேணுமென்ட எண்ணமும் தோன்றியிருக்கலாம். எந்த உதவியுமின்றி அண்ணனால் நாராய்க் கிழிக்கப்பட்டு நொந்து போன வேளையில்தான் முருகனை வேலை செய்யும் தொழிற்சாலையில் அவள் சந்தித்தாள்.அந்தச் சந்திப்புக்களின் தொடர்ச்சியால் அவன் மீது அவளுக்கு ஓரு பிடிப்பு வந்திருக்கலாம்.

பேஸ்மன் வராந்தாவிலுள்ள சோபாவில் இருவரும் இருந்த போதும் அடிக்கடி தேன்மொழி எழுந்து போய் தன்னுடைய வேலைகள் சிலவற்றை கவனிப்பதும் வந்து உட்காருதுமாகவும் இருந்தாள். இதற்கிடையில் தொலைபேசி அழைப்புக்கள் வரும் போது சுருக்கமான பதிலோடு தொலைபேசியை துண்டிப்பாள்.

பக்கத்து வீட்டுக்காரர் தமிழ் ஆட்களோ தெரியவில்லை காற்றலையில் ஒரு பழைய பாடல் முணுமுணுத்தது.அந்தப் பாடல்களின் வரிகள் முடிவுற்றும் முருகனின் வாய் முணுமுணுத்தபடியே இருந்தது. அந்த கவிச் சொற்களில் அவன் உயிர்த்தெழுந்தான். அவளுக்கோ அந்தப் பாடல் வரிகள் எந்த
உணர்வலையையும் ஏற்படுத்தவில்லை. அவளுக்கு பாடலோ கவியோ கசப்பாய்தான் இருக்கும். நெஞ்செல்லாம் நெடுநாளாய் காசு பற்றிய கனவுதான் நிறைந்திருக்கும். ஒரு பெரிய வீடு வாங்க வேண்டும், வீடு நிறைய சாமான்களை அடுக்க வேண்டும். ஒரு நல்ல கார் வேண்ட வேண்டும். சுய சம்பாத்தியத்தில் முன்னுக்கு வந்து அண்ணன் பொறாமைப்படும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும். இதை விட அவள் இதயத்தில் எந்த இலட்சியத்தையும் இருத்தி வைக்கவில்லை.

இருண்டு விட்டது. இன்னும் வீட்டிற்குப் போக மனமற்று முருகன் சுருண்டு அவள் மடியில் கிடந்தான். வேலைக் களைப்பு அவன் உடலை உசுப்பிய போதும் அவள் அருகில் இருக்கும் சுகம் அவற்றையெல்லாம் தோற்கடித்தது. நெஞ்சை நிமிர்த்தி கையை சோபாவில் ஊண்டிக் கொண்டு எழுந்திருந்தான். உடம்பில் ஒரு வகை அயற்ச்சி அடர்ந்திருந்தது. கண்களில் மெல்லிய சிகப்பு இழையோடிக் கிடந்தது. முருகனின் தலை முடி திசை தெரியாமல் கலைந்து கிடந்தது. தேன்மொழி; நேர்த்தியாக வாரி விடப்பட்டிருக்கும் கூந்தலை வருடிக் கொண்டு “தேன்.. நீ நிஜமாக என்னை காதலிக்கிறீயா..?”

தேன்மொழி அசட்டுச் சிரிப்போடு “ என்ன நிஜக்காதல்.. போலிக் காதல்... அப்படி ஒண்டு இருப்பதாக நான் நினைக்கல்லை..” என்றாள். அவன் என்னத்தையோ பறிகொடுத்தவன் போல வியப்பில் ஆழ்ந்தான்.

“உடம்பெல்லாம் பிசுபிசுத்தபடி இருக்கு. நான் குளிச்சுப் போட்டு வாறன்” எனறு சொல்லிக் கொண்டு குளியலறைக்குப் போனாள்.
கதவை உட்பக்கமாய் பூட்டாமலேயே குளிக்க ஆயத்தமானாள்.

“என்ன தேன்மொழி கதவைப் பூட்டாமல் உடையை மாத்துறாய்..?”

“நீ பாக்காத உடம்பா. இங்க யாரும் வரமாட்டாங்க” என்று சிரிச்சுக் கொண்டு குளிக்கத் தொடங்கினாள். முருகன் கதிரையை விட்டு எழும்பி ரீவிக்குப் பக்கத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீடியோ கசற், டிவிடி என்று ஒவ்வொன்றின் மீது பார்வையை வீழ்த்தினான். எங்கிருந்தோ ஒரு வேகம் வந்தவன் போல திடீரென்று டிவிடி ஒன்றை டக்கெண்டு எடுத்தான். அது வயது வந்தவர்களுக்கு
மட்டும் தயாரிக்கப்படும் படம். முருகன் விக்கித் போனன். மீண்டும் விசர் பிடித்தவன்போல ஒவ்வொன்றாய் உன்னித்து, எதையோ கண்டு பிடிக்கிற வேகத்தோடு அவன் தேடல் தொடர்ந்தது.

மீண்டும் பால் உணர்வைத் தூண்டும் ஆங்கில படக்கொப்பி ஒன்றை கண்டு பிடித்தான். தேன்மொழி பற்றிய நினைப்பெல்லாம் மெல்ல மெல்ல அவனில் மாற்றங் கொள்ளத் தொடங்கியது. அவள் பற்றிய அவன் நினைத்த புனிதமெல்லாம் உடைந்து சிதிலமாகியது. எதோ உடம்பெல்லாம் இரசாயன மாற்றம் ஏற்பட்டு அவளை அருவருப்போடு பார்த்தது அவன் மனசு இருட்டிக்கிடந்த வெளிப்பரப்பை பேஸ்மன் வரந்தாவின் யன்னல் வழியாக பாடலில்
கவனித்துக்கொண்டிருந்த முருகனின் கண்கள் மேய்ந்து கொண்டிருந்த போது தேன்மொழி குளியலறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள். எந்த சலனமும் இல்லாமல் பெரிய துவாய் ஒன்றினால் குறுக்குக் கட்டு கட்டிக்கொண்டு இன்னொரு துவாயால் தலையை துவட்டிக் கொண்டு முருகனுக்குப் பக்கத்தில் வந்து சோபாவில் உட்காhந்தாள். முருகனின் கடும் கோபப் பார்வை அவளை நோக்கி விரிந்தது. பார்வையில் தெறித்த கோபத்தைக் கண்டு எந்த அச்சமும் கொள்ளாமல் “என்னடா உனக்கு நடந்தது..?” என்று சொல்லிக்கொண்டு செல்லமாக முதுகில் குத்தினாள்.

சட்டென்று கோபம் அவனுக்கு வந்தது.

அவள் சிரித்துக் கொண்டே ‘என்ன பிரச்சனை. டக்கென்டு சோர்ந்து போனாய். இதுதான் உன்ர சுபாவமா.?”.

அவன் கோபம் கலந்த குரலில் “என்னுடைய சுபாவம் இரக்கட்டும். உன்னுடைய சுபாவம் என்ன செக்ஸ் படம் பார்ப்பதுதானா”

அழுத்தமாக உதிர்ந்த அவனது வார்த்தைகள் அவளுக்குள் எந்த மாற்றத்தையும் உண்டுபண்ணவில்லை. மிகச் சர்வசாதாரணமாகவே இருந்து கொண்டு றிமோட் கொண்ரோலை எடுத்து பாடிக் கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு “ஏன், அந்தப் படம் பார்த்தால் என்ன..? அவள் அலட்சியமான குரலில் கேட்டாள்.

அந்தப் படம் பார்த்தது சரியா பிழையா என்ற கதைவேண்டாம். அந்த படக் கொப்பி எப்பிடி உன்ர கையுக்கு கிடைச்சுது?” ஏதோ புதையல் ஒன்றைக் கண்டுபிடிச்சது சம்பந்தமாக விசாரணை செய்வது போல அவனுடைய கேள்வி இருந்தது.

“அது முன்ன வேலை செய்த இடத்தில் ஒரு பஞ்சாப்காரன் தந்தது. அவன் என்னோட நல்ல ஒட்டு. ஒருநாள் அவன்ர முதல்
இரவு பற்றி பகிடியாக கேட்க அவன் ஒண்டும் மறைக்காமல் சொல்லிப் போட்டு ஒரு வீடியோ கசற் இருக்குது அதுவும் எங்களுடைய நாட்டுகாரர்கள் நடிச்ச புளுபிலிம். அதை கொண்டுவந்து தாறன். அதைப் பார்த்துப் போட்டு உன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லு” என்று சொல்லிப் போட்டு அடுத்த நாள் கொண்டு வந்து தந்தவன். நான் அதைப் பார்த்துப் போட்டு அவனுக்கு குடுக்க கொண்டு போன போதுதான் அவன் வேலையை விட்டு போய்விட்டான் என்று கேள்விப்பட்டனான். அதுக்கு பிறகு நான் வீட்டுக்கு கொண்டுவந்து விட்டன். பொழுது போக்கிற்காக நேரம் கிடைக்கும் போது பாப்பன்.”

அவள் மனதில் எதையும் ஒளித்து வைக்காமல் வஞ்சகமில்லாமல் சொன்னாள். முருகனுக்கு இன்னும் கொஞ்சம் கூட கோபம் தணியவில்லை. அது பற்றி அவள் எதுவித அக்கறையும் எடுக்கவில்லை.

“அப்ப படக் கொப்பி யார் தந்தது.?”முருகன் கேட்டான்.

“அது ஒரு பிலிப்பைன்ஸ்காரன் தந்தது. ஆனால் அதை நான் திருப்பி அவனிட்ட குடுக்க அவன் என்னையே வைச்சிருக்கச் சொல்லிப் போட்டான். எப்பயெல்லாம் பாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகுதோ அப்பயெல்லாம் நான் பார்ப்பேன். எனக்கு அதைப் பார்ப்பதுகூட பிழையெண்டு தெரியல… செக்ஸ் நம்ம வாழ்க்கையில் ஒரு பகுதி அவ்வளவுதான். ஆதை மூடி மூடி மறைக்கத்தான் பிரச்சனை அதிகமாயிருக்கும் என்றாள்.

வெறிகொண்ட விசர் நாய்போல கோபம் கொண்டு மூர்க்கத்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு “நீயும் ஒரு தமிழ் பெண்ணா..? கலாச்சாரம் பண்பாடுகளை மறக்க எப்படித்தான் மனம் வந்துதோ..?”.

“நான் விலங்கிடப்பட்ட பூச்சியாய் வாழவிரும்பல்ல. எனக்கு செக்ஸ் தேவை இருந்தது. இருக்கிறது. அந்த வறட்சியை அந்த படங்களினுடாக அடைந்தேன். என்னைப் பொறுத்த மட்டில் அது சரியாகத்தான் படுகிறது..” மீண்டும் தான் சொன்னதை உறுதி செய்தவள் போல சொன்னாள்.

“ம்.. எல்லாம் சொல்லுவாய்.. அப்ப இனி..?”

“அதுக்குத்தானே நீ இருக்கி;றாயே..” என்று சிரிச்சுக் கொண்டு சொன்னாள்.

“சரி இனிமேல் இப்படியான படங்களை பார்க்க வேண்டாம்.. என்ன ஓம்தானே.?’

“முருகன் நீ என்னை கட்டுப்படுத்திறியா..? என்னை யாரும் கட்டுப்படுத்துவது எனக்கு பிடிக்காது.”

“அடி மூதேசி தேன்! நீ என் அன்பும் பாசமும் கலந்த வருங்கால மனைவியடி.. உன்னை நான் கட்டுப்படுத்தாமல் வேறையாரடி கட்டுப்படத்துவது..” என்று சொல்லிக் கொண்டு செல்லமாக தேனின் நாடியை இடது கையால் பிடித்துக்கொண்டு கெஞ்சும் குரலில் கேட்டான்.

அவன் சொன்னதை விரும்பியோ விரும்பாமலோ அவள் தலையை அசைத்தாள்.

danieljeeva@rogers.com

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner