இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!

கணேசன்!

-நாகரத்தினம் கிருஷ்ணா-

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாஇந்தியக் கலாச்சார அமைப்பின் சார்பில் குப்தா தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தான். போல் அருணாசலம், கிருஷ்ணசாமி, பஅ£ர் அஹமது, சஞ்சய் மெஹ்ரா, பாலா நாயர், தல்வீந்தர்சிங், கிருஷ்ணாராவ், பன்சீர்படேல், சுனில் பண்டாரி என வரிசையாக இந்தியத் திருவாளர்களும் திருவாட்டிகளும் நமஸ்தேக்களுடன் கட்டித்தழுவவொரு சந்தர்ப்பம். ஆண்கள் தோத்தி, குர்த்தாக்களிலும், பெண்கள், புடவைகள், பஞ்சாபிகளிலும் அ¡ம்பெய்ன் கோப்பைகளுடன் முடிச்சு முடிச்சாக நின்று எதிரணியிலிருக்கின்றவர்களின் உடலையும் உடையையும் இமையிறக்கிப் பார்த்துவிட்டுத் தொடரும் உரையாடலில் டில்லியில் கற்பழிப்பு, நாயுடு மீதான நக்சலைட்டுகள் தாக்குதல், மணிசங்கர ஐயர் என விவாதிக்கப்பட வேண்டுமென்றால் எங்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம்

அக்டோபரிலேயே தொடங்கிவிட்ட குளிருக்காக இந்தியப் பாரம்பரிய உடைகளுக்கு(?) மேலே கம்பளி உடைகளைக் கவசமாக்கிக்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த மண்டபத்திற்குள் நுழைந்தால், வழக்கம்போல இந்தியத் துணைக்கண்டமும், பிரான்சுமாக உறவாடிக் கொண்டிருந்தன. எந்த நிகழ்ச்சியிலும் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தன்னை வலிந்து அடையாளப்படுத்திக்கொண்டிருப்பதைக் கவனித்ததுண்டா? அப்படித்தான் அந்தப் பெண்ணின் தோற்றமும். இரண்டாவது முறையாக என் கண்களில் அவள் விழுந்தபோது, பெண்ணென்ற அந்தஸ்தை இழந்து பெண்மணியாகியிருந்தாள். இனரீதியாகச் சொல்லவேண்டுமென்றால், அவளொரு பிரெஞ்சு பெண்மணி. மன்மதராசா தனுஷ¤க்குப் புடவைச் சுற்றியத் தோற்றம்., மாறாக முகத்தில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையில் வருகின்ற நாயகிகளின் வசீகரம். புடவைத் தலைப்பினை, இடதுகை நுனிவிரல்களால் திரும்பத் திரும்ப முறுக்கேற்றிக்கொண்டிருந்தாள். பூனைரோமமிட்ட முழங்கால்கள். மருதாணியிற் சிவந்த பாதங்கள். சிறிய மார்பும், தொளதொள ரவிக்கையுமாக, செயற்கைக் கனாகாம்பரச் சரத்தை முன் தலையிற் கிளிப்பிலிட்டு கொஞ்சமாக வலது தோளில் ஊசலாட, வயதினை மறைக்க முயற்சி செய்த ஒப்பனை. துணைக்குப் 'பளிச் பளிச்' கேமரா புன்னகை. குத்துவிளக்குகளுக்கும், அகல்விளக்குகளுக்கும் அக்கறையாகத் திரியைச் தூண்டி எண்ணெய் ஊற்றினாள்.

மண்டபத்தின் தொங்கலின் புதுச்சேரி பசில் தபலா வாசிக்க பண்டாரி சிதாரில் சிணுங்கிக் கொண்டிருந்தான். எனக்குத் தெரிந்து பசீல் 'என்னடி ராக்கம்மாவுக்கு' மட்டுமே ஒழுங்காக தபலா வாசிப்பான். பண்டாரியின் புனே நண்பன் 'முதாகி' தனது பிரஞ்சு மனைவி தோளில் வலது கையினை மாலையாக்கிக்கொண்டு, இடதுகையை அடிக்கடி நீட்டி, அரே வாஹ்வாஹ்! என்று எலிக்குரலில் கீச்சிடுவதை ரசித்துவிட்டு ஓவர்க்கோட்டினைக் கழட்டிக் கொண்டிருந்தபோது, குப்தா ஓடிவந்தான். அதுர்க்கா பூஜையை இப்போதுதான் முடித்தோம். நீங்கள் கொஞ்சம் லேட்அ என்றான். வாட்சைப் பார்த்தேன். அவன் முகத்திலிருந்தது கிண்டலா, வருத்தமாவெனக் கொள்ளமுடியவில்லை. இரண்டு மணிநேரத் தாமதத்தை 'கொஞ்சம் லேட்' என வருணித்ததால் இந்தச் சந்தேகம். அவன் பார்வை எனது மனைவி கைகளிலிருந்த தூக்கிலிருந்தது. நாங்கள் எடுத்து வந்திருந்ததைப் பறித்துச்சென்று உரியவர்களிடம் சேர்ப்பித்துவிட்டுத் திரும்பியவன், எங்களை உட்காரவைத்துவிட்டுக் காணாமற்போனான்.

என் மனைவிக்குத் தமிழ் பேசுகின்றவர்கள் வேண்டும். தூரத்திலிருந்த மதாம் கௌசல்யாவைப் பார்த்துவிட்டாள். இனி நிகழ்ச்சி முடியும்வரை அவர்களிருவரையும் பிரிக்க முடியாது. கௌசல்யா சென்னை குரோம்பேட்டையில் ஜனித்து அமெரிக்காவிற்குப் பறந்து, அங்கே லாபில் கண்ட பிரஞ்சுக்காரன் 'வல்மியை ' மணந்து இப்போது பத்துவருடங்களாக அவளுக்குப் பிரான்சு வாசம். எல்லோரும் கைதட்டவே கவனம் திரும்பியது. எதிரேயிருந்த மேடையைப் பார்த்தேன். பண்டாரி தன் சித்தார் வாசிப்பை முடித்திருந்தான். "குமார்.. ! " என்ற அழைப்பைக் கேட்டுத் திரும்பினேன். குஜராத்தைச் சேர்ந்த பன்சீர். அவன் முதுகை உரசிக்கொண்டு சற்றுமுன் நான் விவரித்த பிரஞ்சுப் பெண்மணி, கூடவே அவள் புருஅன். "உன்னிடம் பேச வேண்டுமாம்அ அப்போதையிலிருந்து, இங்கே தமிழ்நாட்டினர் யாருமில்லையா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்". என்றான். "ஏன்? என்ன விஅயம்?" என்று கேட்க நீயே பேசிப்பார் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். அப்போதுதான் அவ்ர்களைக் கூர்ந்து கவனித்தேன். அமெரிக்க அதிபர் 'ஜார்ஜ் புஷ்'யையும், பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியாவையும் ஆள்மாற்றி உடுத்திய தோற்றம்.. அவன் தன்னை 'மர்த்தன்' எனச் சொல்லிக் கொண்டான். அவள் 'மரி ' யென்றாள். நான் 'குமார் ' இவள் என் மனைவி எனச்சொல்ல பின்னர் கைகுலுக்கிக் கொண்டோம்.

இருவருக்கும் நாற்பதுவயதுக்குமேற் கொடுக்கலாம்.. அவனுக்கு முன்வழுக்கை. குள்ளமாகவிருந்து எடைபோட்டிருந்ததால், அனுதாபத்தைச் சம்பாதிக்கும் தோற்றம். அவளைப்பற்றிய வர்ணனை கொஞ்சம் அதிகமாகவே ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி வேண்டாம். அவனைவிட அவள்தான் பேசினாள். என் அனுபவத்தில் பெரும்பாலான பிரெஞ்சுக் காரர்களின் வாய்ப்பாட்டு பழகிவிட்டிருந்தது. இந்தியாவுக்குப் போயிருக்கிறேன் என ஆரம்பிப்பார்கள், பெரும்பாலும் டில்லி, பனாரஸ், க்ரா ஜெய்ப்பூராகவிருக்கும். திடுமெண்று கதம்பப் பூச்சரங்கள் விற்கின்ற யா, எருமைமாடுகளுக்கிடையில் ரிக்அ¡, அலகுக் குத்திய பக்தர்களென தாங்கள் ரசித்தக் இந்தியக்காட்சிகளை நிழற்படங்களாகக் கொண்டுவந்து நம்மைச் சீண்டுவார்கள். இந்தியர்கள் மிகவும் நல்லவர்களென ஆரம்பித்து, இந்தியாவின் வறுமை, பசி, பட்டினிச் சாவு என, முகமுழுக்கச் சோகத்தினை வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிடுவார்கள். இவளதுப் பேச்சும் அந்த ரகம்ந்தான். இடைக்கிடைத் தன்னைப்பற்றியும் சொல்லாமலில்லை.

அவன் தகப்பன்வழியிற் கிடைத்த சொத்தினைக்கொண்டு அவர்களுக்குக் கிராமத்தில் ஒரு பண்ணையும், வீடுமிருப்பதாக அறிய முடிந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்த உரையாடலில் என் பங்கோ, அவளது புருஷனின் பங்கோ ஏதுமில்லை. அவள் பேசுவதை நான் காதில் வாங்குகின்றேனா என்ற அக்கறையேதுமில்லை. நிறையப் பேசினாள். பக்கத்தில் புருஅன் காதினைக் குடைந்து கொண்டிருந்தான், உபயம் கார்ச்சாவி..

அவள் பிரசங்கத்திலிருந்து புரிந்து கொண்டதை வேண்டுமானால் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அவள் பண்ணையில் செம்மறியாடுகள் வெள்ளாடுகள், கோழிகள் வளர்க்கிறாள். சந்தை நாட்களில் முட்டைகள், கோழிகள், பாற்கட்டிகளை விற்றுவருவது அவளின் வழக்கம். இதில் மர்த்தனின் பங்கு வீட்டிலிருந்துகொண்டு (விட்டத்தைப் பார்த்ததுபோக மீதி நேரங்களில்?) அவைகளைப் பராமரிப்பது.. இது தவிர அவர்களுக்குச் அசொந்தமாக ஒரு சிறிய விலங்குப் பண்ணை இருப்பதாகவும். அதில் ஆசிய, ஆப்ரிக்க விலங்குகளை வளர்ப்பதாகவும், அடுத்த அ¡யிற்றுகிழமை பண்ணையிற் கொண்டாடவிருக்கும் தீபாவளிக்கு அவசியம் வரவேண்டுமென்றும் அவள் முடித்தபோது பக்கத்திலிருந்த மர்த்தன் சாதுவாகத் தலையாட்டினான்..

என்ன விலங்குகளைப் பார்க்கவா? என் பிள்ளைகள் விலங்குக¨ளைப் பார்த்து அதிசயப்படுகின்ற வயதையெல்லாம் தாண்டிவிட்டார்களே என்றேன்.

"இல்லை நீங்கள் ' கணேசனுக்காவது ' நாங்கள் கொண்டாடும் தீபாவளியில் கலந்து கொள்ளவேண்டும்"

கணேசன் "என்ன யானைக்குட்டியா?"

"இல்லை எங்கள் வளர்ப்பு மகன். சென்னைக்கருகே ஓர் அநாதை இல்லத்திலிருந்து சிலமாதங்களுக்கு முன்னதாகத் தத்தெடுக்கப்பட்ட சிறுவன். உங்களைப் பார்த்தால் அதிகச் சந்தோஷப்படுவான்" சொன்னவள் விடுவிடுவென்று நடந்து சென்று திரும்பவும் வந்தாள். அவள் வலது கரத்தில் நான்கு அல்லது ஐந்துவயது மதிக்கும்படியான சிறுவன். முதன் முறையாக அந்தப் பெண்ணிடம் எனக்கு ஒரு வித மரியாதை. சிறுவனிடம் "'உன் பெயரைச் சொல்" என்றாள். அவன் தயங்கினான். "உங்கள் ஊர் யானைத் தலை கடவுளின் பெயரை வைத்திருக்கிறோம்" என்று என்னிடம் சொன்னவள், மீண்டும் அந்தச் சிறுவன் பக்கமாகத் திரும்பி "எங்கே சொல்லு!." வற்புறுத்தினாள். அவன் வாய் திறப்பதாகயில்லை.. அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த, அவனும் பிடிவாதமாக மறுத்தான். எனக்குச் சங்கடமாகவிருந்தது. "வேண்டாம் விட்டுவிடுங்கள்" என்றேன். மெல்ல அவன் கைகளைப் பற்றி என்னருகே கொண்டுவந்தேன். என் பார்வைக்குள் முழுவதுமாக வந்தான். வறுமைக்கோட்டிற்கு மேலே இழுத்துவந்திருந்த உடல். மாநிறம். களையான முகம், முகத்திலிருந்து உள்வாங்கிய கண்கள், தேடுகின்ற பார்வை. அணைத்துக் கொண்டேன்.

"எப்படி உங்களோடு ஒட்டிக் கொண்டான் பார்த்தீர்களா? அப்போ.. அடுத்த அ¡யிற்றுக் கிழமை எங்கள் பண்ணையில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அவசியம் எதிர்பார்க்கலாமா?"

அச்சிறுவனின் கண்களைப் பார்த்தவாறு, "அவசியம் வருகிறேன்" என்றேன்.

அதற்கடுத்த அ¡யிற்றுக்கிழமை குடும்பத்தோடு, பிரஞ்சுப் பெண்மணியின் குடும்பமிருந்த கிராமத்தை அடைந்து, அவர்களின் பண்ணைக்குச் சென்றபோது எனக்குமுன்னதாக இரு ஆப்ரிக்க, ஒரு வியட்நாமிய, இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுக¨ளைச் சேர்ந்த குடும்பத்தினர் இருந்தார்கள். கணவன் மனைவி இருவரும் எங்களை வரவேற்றுத் தீபாவளி வாழ்த்துக்களைச் சொன்னார்கள். பண்ணையின் முகப்புகளில் தீபாவளி வாழ்த்துகள் எனத் தமிழ், உட்பட பல்வேறு மொழிகளில் எழுதிக் கட்டியிருந்தார்கள்.

பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்..

அந்தப் பெண் பிரசங்கத்தினை ஆரம்பித்தாள். "இது ஆப்ரிக்க குரங்கு, அது வியட்நாம் வாத்து, அதோ அது இந்தியாவிலிருந்து வந்திருக்கும் கழுதை, அங்கிருப்பது பெருதேசத்து லாமா ஆடு. ஒவ்வொன்றிற்கும் அதன் தேவைக்கேற்ற சூழலை ஏற்பாடு செய்துள்ளோம்.. அவைகளைப் பாரமரிப்பதற்கென்று விலங்கியல் மருத்துவர், விலங்குகள் பராமரிப்பில் பட்டயம்பெற்ற செவிலியர்...."

வந்திருந்த குடும்பங்கள், விலங்குகளைத் தீண்டி ஆனந்திக்க, "கணேசன் எங்கிருக்கிறான்?" என் மனைவி.

"அதோ அங்கே.." விலங்குப் பண்ணைக்கு அருகிலிருந்த வீட்டையும், சிறிய விளையாட்டுத் திடலையும்காட்டினாள்.

"தனியாகவா?"

"இல்லையே!.. அவனோடு நான்கு சிறுவர்கள் உள்ளார்கள்.. வாருங்கள் அழைத்துப் போகிறேன்."

அவள், வந்திருந்த மற்ற குடும்பங்கள், நாங்கள் என அனைவரும் அவ்விடத்தை அடைந்து வெளிக்கதவினைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தபோது அங்கே கணேசனோடு நான்கு சிறுவர்கள்.

கைதட்டி சிறுவர்களை அழைத்தாள்.. "விளையாடியது போதும். உங்களைத்தேடி. யார் வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.."

அவர்கள் தயங்கியவாறு மெல்ல முன்னேறி எங்களை நோக்கிவந்தார்கள்..

"முன்னால் வருபவன் ஆப்ரிக்காவின் கமரூன் நாட்டுச் சிறுவன் வீக்கோ, அவன் பின்னே வருபவன் வியட்நாமிய சிறுவன் கிம், அடுத்து இந்தியாவிலிருந்து கணேசன். பிறகு சிலி நாட்டிலிருந்து சாக்கோ.. இவர்களுக்கான உணவுகள், படிப்பதற்கு, விளையாடுவதற்கான நேரங்கள் அனைத்துமே முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன".... தொடர்ந்து சொல்லிக்கொண்டு போனாள். பெரும்பாலான வார்த்தைகள் சற்று முன்னர் அறிமுகப்படுத்திய விலங்குப் பண்ணைக்கு உபயோகப்பட்டவை.

கணேசன் பக்கத்தில் வந்து நின்றிருந்தான். சிறிது நேரம் என்னையும் என் மனைவியையும் பா¡ர்த்துக்கொண்டிருந்தவன். அருகிலிருந்த ஆப்ரிக்கச் சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு விலகி நடந்தான்.

nagarathinam.krishna@neuf.fr

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner