இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'

'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 

என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
குட்டிக்கதை!
மீண்டும் வருமோ எனது தேசம்!

குகன்


சிறுமி ரம்யாசூரியனை நோக்கி ஒரு படகு செல்வதுப் போல் காட்சி.தமிழக எல்லையை நுழைந்து தமிழகத்தை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது. ரம்யா தன் சிறு பொம்மை வைத்துக் கொண்டு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் வருகிறாள்.

" தாத்தா... நாம்ம எங்க போரோம்...! அம்மா, அப்பா எப்போ வருவாங்க்"

ரம்யாவின் மழலைக் கேள்விக்கு அவள் தாத்தா சங்கரன் கண்ணீரில் பதில்ளித்தான்.

" நாம்ம வேற ஊருக்கு போறோம்...நாம்ம போனதும் அவங்க வருவாங்க"

இலங்கை ராணுவ தாக்குதலில் ரம்யாவின் அப்பா,அம்மா இருவரும் கொல்லப் பட்டனர்.தன் பேத்தி ரம்யாவின் உயிரையாவது காப்பாற்ற தமிழகத்தில் அகதிகளாக் சங்கரன் வருகிறான். மழலைப் பேச்சு துடுக்கெனும் குணம் ரம்யாவுக்கு.... று வயது தான் இருக்கும். இலங்கையில் என்ன நடக்கிறது என்றுக் கூட தெரியாது.புது ஊருக்கு போகும் மகிழ்ச்சியில் இருக்கிறாள்.

"தாத்தா. ஊருக்கு போனதும் ஹேமாவுக்கு ஒரு அழகான பொம்மை வாங்கனும். அவளுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருது"

பாவம் ஹேமாவும் அவள் பற்றோரும் ராணுவ தாக்குதலில் இறந்ததை அந்த பிஞ்சுக் குழந்தைக்கு எப்படி சொல்லி புரிய் வைப்பது.

இலங்கை அகதிகள் எல்லோரும் ரமணாதப்புரத்தில் வந்தடைந்தனர். ஒவ்வொருவரின் மனதில் தாய் நாட்டை இழந்த சோகம், உறவுகளை இழந்த தூக்கம். னால் ரம்யாவுக்கு மட்டும் புது ஊருக்கு வந்த மகிழ்ச்சி.

அரசாங்க அதிகாரி ஒவ்வொருவரின் பெயரை எழுதிக் கொண்டு இருந்தார்.ரம்யா சையாக மேஜையில் இருக்கும் அதிகாரியின் பேனாவை எடுத்தாள்.

"ஏய் யார் நீ !... போய் உன் இடத்துல உக்காரு..." மிரட்டலாக பேசினார்.ரம்யா பயந்து தன் தாத்தாவிடம் ஒடி வந்தாள்.

"ஏன் தாத்தா எல்லோரும் இங்க வந்தோம்.எல்லோரும் ஏன் அலுவுறாங்க !. அம்மா, அப்பா எப்போ வருவாங்க ?"

"வருங்வாங்கம்மா ......"

"இங்க இருக்குறவங்கள பார்த்தா பயமா இருக்கு. நம்ம ஊருக்கே போலாம் தாத்தா.."

"முடியாதும்மா... அங்க சண்டை நடக்குது. நாம போகக் கூடாது !"

"ஏன் சண்டை நடக்குது ?"

தாத்தாரம்யாவின் கேள்விக்கு சங்கரனால் பதில் சொல்ல முடியவில்லை. இருந்தும் சங்கரன் பதில் அளித்தான்.

" சண்டைப் போட்டு யாரு ஜெய்கிறாங்களோ அந்த இடம் அவங்களுக்கு சொந்தம். சண்டை முடிஞ்சதும் நாம போலாம்"

"தாத்தா ! அங்க சண்டை எப்போ முடியும்... நாம ஏப்போ திரும்பி அங்க போவோம்"

இதற்கு பதில் ??????

ஒவ்வொரு இலங்கை தமிழர்களுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காலமே உன்னிடமாவது பதில் உண்டா......

jbkannan@rediffmail.com

 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner