இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுகதை!
சுமை!

 -குமரவேலன் -

தந்தைசர்மா மருத்துவச் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையிலேயே இறந்து விட்டார். உடல் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த துக்கச் செய்தி அறிவிக்கப்பட்டது.  சர்மா மத்திய அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சமூக நல அமைப்புகள், ஆஸ்திக சமாஜம், பஜனைமண்டலி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு உழைத்தவர். அதனால் சுற்றுவட்டாரத்தில் நன்றாகவே அறிமுகமானவர்.மதிப்பும் மரியாதையும் சம்பாதித்துக் கொண்டவர். சிறிது நேரத்துக்குள்ளேயே அங்கே நிறைய ஜனங்கள் கூடிவிட்டார்கள். மாலைகள் சடலத்தை அலங்கரித்தன. கண்ணீர்,அழுகைகள், துக்க விசாரிப்புகள். அதற்கான பதில்கள் இப்படி அந்த வீடே சோகத்தை அப்பிக்கொண்டு களை இழந்து காட்சி தந்தது.

சர்மாவிற்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மூர்த்தி அமெரிக்காவில் சாப்ட்வேர் எஞ்சினியர். கல்யாணமாகி அங்கேயே ஏழெட்டு வருஷங்களாக இருக்கிறான். இரண்டாமவன் சென்னையிலேயே சார்ட்டர்டு அக்கவுண்டண்டாகத் தொழில் புரிகிறான்.
சர்மா உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமாக இருந்தபோதே டாக்டர்களின் ஆலோசனைப்படி. அமெரிக்காவில் இருக்கும் மூர்த்திக்கு உடனடியாகப் புறப்பட்டு வரும்படி ஈ-மெயில் அனுப்பப்பட்டது. அவனும் குடும்பத்தோடு வந்து சேர்ந்து விட்டான்.

ராவ் கான்ஸரால் இறந்ததால், ரோஜாப்பூ, ஊதுவத்தி மணங்களைத் தாண்டி ஒரு வாடை வர ஆரம்பித்தது. கால தாமதம் செய்வது நல்லதல்ல என்று பெரியவர்கள் அபிப்பிராயப்பட்டதால், உடனடியாக ஈமக்ரியைகளும் செய்து முடிக்கப்பட்டன. "மரண ஊர்திக்குச் சொல்லுங்கள்.அதுதான் செளகரியம். உடனடியாக வரட்டும்" என்றார் ஒருவர்.

"அது தேவை இல்லை. அப்பா கூடிய மட்டும் எல்லாருக்கும் உதவணும்னு நினைப்பவர் .தன் பணம் நிறையப் பேருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கை உடையவர். மத்தவங்களுக்கு வேலை கொடுத்து, அதற்குரிய கூலியைத் தாராளமாகக் கொடுத்து சந்தோஷப்படறது அவர் வழக்கம்.. அதனால் அவர் உடலை மயானம் வரைத் தூக்கிச் செல்ல மூன்று ஆட்களைஅமர்த்துங்கள். அதைத்தான் அப்பா விரும்புவார்.."

"என்னப்பா சுத்த விவரம் புரியாத ஆளாயிருக்கே. ஓரு உடலை சுமக்க நாலு பேர் வேணும்ங்கற சின்ன கணக்குக் கூட உனக்கு டென்ஷனில் மறந்துட்டுதா, மூணு பேரு வேணும்ங்கறே" என்றார் அடுத்த வீட்டு அய்யாசாமி.

"அது கூட எங்களுக்குத் தெரியாதா என்ன? நான் சொன்னதுக்கும் தகுந்த காரணம் இருக்கு...நாங்க
சின்னக் குழந்தைகளாயிருந்தப்போவே அம்மா காலமாயிட்டாங்க.அப்பாவுக்கு எங்க மேல ரொம்பப்
பிரியமாம். எப்பவும் எங்களைதூக்கி வச்சுகிட்டுக் கொஞ்சிகிட்டிருப்பாராம். வெளிய போறப்போவெல்லாம் எங்களைஅடிக்கடி ஆசையோடு தூக்கிகிட்டு போவாராம். நடக்கவே விடமாட்டாராம்.அதை இப்போ
நினைச்சுப்பாக்கறப்போ துக்கம் தொண்டையை அடைக்கிது. சின்னப் பையனா இருந்தப்போ எனக்கு ஒரு பைத்தியக்கார எண்ணம் அடிக்கடி தோணும். 'நம்மை அப்பா தூக்கறாப்பிலே நாமும் கஷ்டப்பட்டு அப்பாவை ஒரு நாள் ஆசையோட தூக்கணும்'னு. அந்த ஆசையை நிறைவேற்றிக்க இப்போ ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. அதனாலே அப்பா அந்திம பயணத்திலே அவருடைய உடம்பை ஒரு தோள் குடுத்து நானும் தூக்கிகிட்டுப் போயி அவரைக் கரை சேர்க்கத் துடிக்கிறேன். அதுதான் என் மனசுக்குத் திருப்தியா இருக்கும். அவருடைய ஆத்மாவும் சந்தோஷப்படும்..." என்றான் குரல் தழுதழுக்க.

"அப்பா அம்மாவை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு ஜாலியா இருக்கணும்னு நினைக்கிற பசங்க இருக்கிற இந்த நவீன யுகத்திலே, இப்படி பாசத்தோட இருக்கிற பிள்ளைங்களும் இருக்காங்கன்னு நினைக்கறப்போ ஆச்சரியமாத்தான் இருக்கு".என்று அதிசயத்துப் போனார்கள் கூடியிருந்த அனைவரும்.

E-MAIL: thambudu@hotmail.com

 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner