இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2009 இதழ் 113  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுகதை!

புகலிடம் தேடி

ஸ்ரீரஞ்சனி


கண் விழித்துப் பார்க்கிறேன். எனது மூன்று வயது மகள் ஆரணி என் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருக்கிறாள். இரவு முழுவதும் தூங்குவதும் விழிப்பதுமாக நிம்மதியற்ற நிலையில் கழிந்ததால் கண்கள் கனக்க உடல் அசதியாக இருந்தது. ஆயினும், வேலைக்குப் போக வேண்டுமே என்ற நினைவு தலைதூக்க மெல்ல மகளின் கையை விலக்கி, அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு எழும்புகிறேன்.கண் விழித்துப் பார்க்கிறேன். எனது மூன்று வயது மகள் ஆரணி என் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருக்கிறாள். இரவு முழுவதும் தூங்குவதும் விழிப்பதுமாக நிம்மதியற்ற நிலையில் கழிந்ததால் கண்கள் கனக்க உடல் அசதியாக இருந்தது. ஆயினும், வேலைக்குப் போக வேண்டுமே என்ற நினைவு தலைதூக்க மெல்ல மகளின் கையை விலக்கி, அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு எழும்புகிறேன்.

நேற்று காணாமல் போன சோபனாவின் முகம் எங்கும் நிழலாடி மனதில் ஒரு இனம் புரியாத படபடப்பை தந்;தது. நாம் கனடாவுக்கு புதிதாக வந்தபோது எங்களது அயலவர்கள் அவர்கள். பின்பு நாமும் அவர்களும் வேறுவேறு திசைகளில் இடம் மாறிவிட்டதால் எங்காவது விழாக்களில் தான் காண்பதுண்டு.

“அன்று காலை பாடசாலைக்குப் போன பிள்ளை வீடு வரவில்லை. பிள்ளை எங்கே, எப்போ, யாருடன், ஏன் போயிருக்கும் என்பது பெற்றோருக்குத் தெரியாது. பாடசாலையால் வர நேரமாகும் என்று மட்டும் தான் தெரியும். இரவு 9மணிக்கும் காணாததால் பொலீசுக்கு அறிவிக்கப்பட்டது” என்ற தமிழ் வானொலிச் செய்தி அடிக்கடி நினைவுக்கு வந்து மனதை அலைக்கழித்தது

குளித்து, உடைமாற்றி காரில் ஏறிக்கொள்கிறேன். சாப்பிட மனசு வரவில்லை. எவ்வளவு கனவுகளுடன் பத்துமாதம் வயிற்றில் சுமந்து பின் பதினைந்து வருடங்கள் மனதில் சுமந்து அந்தப் பிள்ளையை அந்தத் தாய் வளர்த்திருப்பாள் -- என் தாய் மனசு மிக வலித்தது.

நேரத்துடன் போட்டி போட்டபடி ஓடும் வாழ்வில் நின்று, நிதானித்து, என்ன நடக்குது என்றுகூடப் பார்க்க அவகாசமற்ற வாழ்வு பலருக்கு! அண்மையில் நடந்த விபரீதங்கள் வேண்டாத முடிவுகளைத் தான் கோடிட்டுக் காட்டி, பிள்ளை பிள்ளையாக வருமா என்ற சிந்தனையைத்தான் தோற்றுவித்தது.

வகுப்பில் படிப்பிக்க தயாரித்த வேலையை மாணவர்களுக்கு பிரதி எடுத்துக் கொடுக்க photocopy அறையில் நுழைந்த போது சக ஆசிரியர்களும் இதையே பலவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். “அவள், சரியான குழப்படியாம், சொல்லுக் கேட்பதில்லையாம்|” இது ஒருவரின் விமர்சனம்;. “boyfriend இருக்குதாம்|”- சிலருக்கு வெறுவாய்க்கு அவல் கிடைத்தது மாதிரி மற்றவர்கள் வாழ்க்கையை கூறுபோட்டு விமர்சிப்பதில் ஒரு சுகம். இதில் உண்மை இருக்கோ இல்லையே என்பது வேறுகதை.

அவர்களுடன் கூடி நின்று கதைக்கப் பிடிக்கவில்லை. எனது பிரதிகளை எடுத்துக் கொண்டு எனது வகுப்புக்குப் போகிறேன்..

வீடு என்ற சொல்லை chalk board ல் எழுதிவிட்டு திரும்பி என் மாணவர்களைப் பார்க்கிறேன். நான் எழுதுவதை இனம் கண்டு, வாசித்து, படிக்கப் போகும் பாடத்தை ஊகித்து, அதனுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றி கலந்துரையாடுவதற்கான ஆரம்பம்; இது. “சரி வீடு என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். வீடு பலவகையாக இருக்கலாம். பலவிதமான பொருட்களால் கட்டப்பட்டிருக்கலாம். மண்ணால் ஆன சிறிய வீடாகவோ இல்லை பெரிய அரண்மனையாகவோ கூட இருக்கலாம். நாம் அதில வசிக்கும் போது இன்னும் சொல்லப் போனால் அதில் வாழும் போது அது எமது வீடு ஆகிறது.

சாப்பிடவும், குளிக்கவும், உறங்கவும் தான் வீடு என்று இல்லை. அங்கு நாம் எமது மிக நெருங்கிய, எம்மில் மிக அன்புள்ள உறவுகளுடன் வாழ்கிறோம். அங்கு நாம் என்னவும் செய்யலாம். எப்படியும் கதைக்கலாம். எதையும் பரிமாறலாம். நான் இதைச் சொன்னால் மற்றவர்கள் என்ற நினைப்பார்கள், இதைச் செய்தால் என்ன சொல்வார்கள் என்ற கூச்சம், போலி எதுவுமே இருக்கத் தேவையில்லை. நாம் நாமாக இருக்கலாம். எமது ஆசைகளை, குழப்பங்களை, உணர்ச்சிகளை, ஏமாற்றங்களை, வெற்றிடங்களை எதுவானாலும் பங்கிட்டுக் கொள்ளலாம்.

உங்களுக்காக வாழும், நீங்கள் நன்றாகப் படித்து நல்ல வாழ்வு வாழ வேண்டும். நல்ல பிள்ளைகளாக வரவேண்டும் என விரும்பும் உங்கள் மேல் நிபந்தனையற்ற அன்பு செலுத்தும் அம்மா, அப்பாவிடம்தான் எந்தப் பிரச்சினையையும் நீங்கள் முதலில் சொல்ல வேண்டும். அவர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்.”

தமிழ் படிப்பதுடன் மட்டுமன்றி வாழ்க்கைக்கு ஆலோசனை பெறுவதாகவும் இருக்கட்டும் என்று கரைந்துரையாடலை சற்;று ஆங்கிலமும் கலந்து விரிவுபடுத்துகிறேன்.

“ரீச்சர் எங்கடை அம்மாவுக்கு எங்களோடை கதைக்க நேரமே இல்லை” இது ஆஷா. “அம்மா வீட்டுக்கு வந்ததும் சமைப்பா. பிறகு எல்லாம் clean பண்ணுவா. அதன்பின் TV பாத்து போட்டு படுத்திடுவா. நாங்கள் இடைஞ்சல் செய்தால் அவவுக்கு சரியான கோபம் வரும்” தொடர்ச்சியாக ஆஷா சொன்னபோது உண்மையிலேயே என்னால் அதை ஜீரணிக்க முடிவில்லை. என்ன சொல்வது என்றும் புரியவில்லை. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் “சரி அப்பாவுடன் கதைக்கலாம் தானே” என்று ஏதோ சொல்வதற்காகச் சொல்லி வைத்தேன்”

“ரீச்சர் எங்கடை வீட்டிலை மற்ற மாதிரி. அப்பாவை நாம் காண்பது கூட இல்லை. அவருக்கு இரண்டு வேலை. வீட்டிலை நின்றால் நித்திரை கொள்ளுவார். அப்படி இல்லை என்றால் கத்திக் கொண்டு நிற்பார். எங்கடை குழப்படி எல்லாமாக சேர்த்து அம்மா அவருக்கு சொல்லிவிட்டால் கையில் அம்பிடுகிறதை எடுத்து விளாசுவார். போன கிழமை தம்பிக்கு belt ஆல் நல்ல அடி.....” இது நிசாந்.

“I am really sorry. ok இனிப் போதும். இப்படி அடிப்பதை நீங்கள் சொன்னால் உண்மையில் நான் பொலீசுக்கு அறிவிக்க வேண்டும். எனவே இதை நிற்பாட்டுவோம்” என்றேன் குழப்பத்துடன். ஆனால் அவர்கள் விடுகிறபாடு இல்லை.

“ரீச்சர் ஒரு நாள் அக்கா அப்பாவிடம் தனக்கு அவர் அடிக்க ஏலாது என எதிர்த்துப் பேசிய போது அப்பா சொன்னார், “நான் அடிப்பேன். நான் அடிக்கிறேன் என்று உன்னை என்னிடமிருந்து பிரித்து பொலீஸ் கொண்டு போனால் உனக்குத தான் நட்டம். நீ தான் வீட்டிலுள்ள சுகங்களை, சலுகைகளை எல்லாம் தொலைத்து போட்டு நிற்பாய். TV, விதம் விதமான உடுப்புகள், ரீயூசன், அது இது என்று கிடைக்கும் என நினக்கிறியோ? 18 வயதானதும் உழைத்துத்தான படிக்க வேண்டும்|| என்று அவர் மிரட்டியபின் நாங்கள் அவரை எதிர்த்துக் கதைப்பதேயில்லை. ஆனால் எங்களுக்கு அப்பாவைப் பிடிக்காது.” மூச்சு விடாமல் தொடர்கிறான் அர்ஜீன்.

“தாங்கள் சொல்லுறபடி நடக்காவிடால் ஸ்ரீலங்காவுக்கோ அல்லது இந்தியாவுக்கோ அனுப்பி விடுவார்களாம். நாங்கள் எதைக் கதைக்கிறது பிடிக்குதோ இல்லையோ அவை சொல்லுறபடி செய்ய வேண்டியதுதான்” இது பிரியங்கா.

அடியை விட்டால், துன்புறுத்தலை விட்டால் பிள்ளைகளை ஒழுங்குபடுத்த முடியாது என நம்பும் பல பெற்றோர்கள். இவர்கள் எல்லாம் தங்கள் பிள்ளை நல்லவனாக வரவேண்டும் என்பதற்காக அடிக்கிறார்கள். அன்பு என்று சொல்லி வன்முறையைப் போதிக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் கற்பிக்க ஆரம்பித்த போது, “ரகுவரன் வகுப்பில் ஒரு இடத்தில் இருந்து அமைதியாக வேலை செய்வது இல்லை. மற்றவர்களையும் குழப்;புகிறார்” என்று அவனின் அம்மாவுக்குச் சொன்ன போது “பொறுங்கோ, தகப்பனிடம் சொல்லி முழங்காலில் இருக்க வைக்கிறேன்” என்றார். ஜனகன் வகுப்பில் மேளம் தட்டுவான். மற்றவர்களை வேலை செய்ய விடமாட்டான். வீட்டுக்குச் சொல்லவா என்றால் அழத்தொடங்கிவிடுவான். ஏனெனில் வீட்டில் அடிதான் இதற்கு மருந்து.

அதன்பின் பிள்ளையின் வெற்றியில் பெற்றோரின் பங்கு என பெற்றோரை இணைப்பதையே விட்டுவிட்டேன். இது எனது தனிப்பட்ட குறைதான். நான் வளரும்போது வாங்கிய அடிகளின் வலி இன்னும் வலிப்பதால் நான ;பட்ட அவஸ்தை மற்றவர்களுக்கு வேண்டாம் என்பதும் என் கோட்பாடு. வகுப்பில் குழப்பினால் அல்லது வேலை செய்யாவிட்டால் வகுப்பு முடிய நிற்க வேண்டும் என்ற நிபந்தனை எனக்கு இப்ப மிக உதவுகிறது.

ஆனால் இந்தச் சோபனாவின் பிரச்சினைக்குப் பின் இப்படி மாணவர்கள் சொல்வதை, “அம்மாவுடன் கதைக்க appointment வேண்டும், அப்பா பயமுறுத்தித்தான் வாழ்க்கை நடாத்த நினைக்கிறார்|” என்பதை எல்லாம் அசட்டையாக விட்டு விட முடியவில்லை. மற்றவர்கள் கிசுகிசுப்பது போல் சோபனா வீட்டைவிட்டு, வீட்டுப் பிரச்சனையிலிருந்து தப்ப வடிகால் தேடி கொடியவன் ஒருவனின் வலையில் சிக்கியிருக்கலாம். அல்லது தன் பிரச்சனைகளைச் சொல்லி கதைத்து பரிகாரம் தேட வழியின்றி மாட்டுப்பட்டிருக்கலாம்.

தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகளை மதிப்பிட முடியாத சொத்தாக கருதுபவர்கள். தங்கள் குழந்தைகளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்காதவர்கள். வழித்தோன்றல்கள் தான் வாழ்வு என வாழ்பவர்கள். ஆனால், வாழும் சூழலுக்கு ஏற்ப, நடைமுறைக்கு தக்க ஏன் வாழமுடியாமல் இருக்கிறார்கள்? அதற்கேற்ற அறிவு இல்லாமையா? இல்லை வன்முறை, சுரண்டல், உரிமை மறுப்புக்கு பயந்து கனடாவில் புகலிடம் தேடிய பின் கனடா தந்த சுதந்திரத்துக்குப் பயந்து வன்முறையில் அடைக்கலம் புகுகிறார்களா?

பிள்கைள் வேறு ஒரு தலைமுறை சேர்ந்தவர்கள் எனவே நிச்சயம் முரண்பாடுகள் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுவும் கனடாவில் பல்கலாச்சார நாட்டில் நாம் வாழ்ந்த சூழலிலிருந்து மிக வேறுபட்ட சுதந்திர சூழலில் வாழும் எமது பிள்ளைகளை வளர்ப்பது மிகப் பெரிய challenge என்றோ, மிக நுட்பமான கலை என்றோ பலர் உணர்வதில்லை. பிள்ளை வளர்ப்புக்கான புத்தகங்கள், வகுப்புக்கள், பட்டறைகள் எதுவுமே எமக்குத் தேவையில்லை என்பதே பலரது கருத்து. எமது பெற்றோர்கள் எம்மை நன்கு வளர்க்கவில்லையா என்பது நம்மில் பலரது வாதம்.

எமது நாட்டில் அம்மா அடித்தால் பாட்டியிடமே, சித்தியிடமோ, அடைக்கலம் தேடலாம். ஒத்தடம் தரும் அணைப்பைப் பெறலாம். இல்லை எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என் முனைந்தால் கூட வழியில்லை. என்ன தான் செய்ய முடியும்?

ஆனால் இங்கோ ஏற்கனவே பல்வேறுபட்ட மன அழுத்தங்களிடையே வாழும் எம்பிள்ளைகளுக்கு நாமும் மன அழுத்தங்களைக் கொடுக்கும் போது, அவர்கள் வடிகால் தேட எந்த உறவு இருக்கிறது? தற்காலிக சுகம் கொடுப்பவை மதுவும் drugs ம் தான்.

அவர்களை அணைக்கவோ, வழிகாட்டவோ, இல்லை அவர்களின் சுகதுக்கங்களை பங்கு போடவோ நேரமின்றி பிள்ளைகளுக்காகத் தானே செய்கிறோம் என எம் வேலையுடனும் அதன் பிரச்சனைகளுடனும் நாம் ஓட அவர்கள் வீதிக்குச்; சென்று வேண்டத்தகாத விபரீதங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். குழந்தையாகவுமின்றி வளர்ந்த மனிதனாகவுமின்றி இடையே வநநயெபந பருவத்தில் உள்ள பிள்ளைகளின் வாழ்வு போராட்டமாகும் போது அது போதைப் பொருள்களில் சரண் அடைகிறது அல்லது வன்முறையில் முடிவடைகிறது.

இந்த நிலையை மாற்றுவதில் என் பங்கு என்ன? இதே கேள்வி வீடு வந்து, வீட்டுக் கடமைகள் செய்து, பிள்ளையைப் படுக்க வைக்கும் வரை என்னைச் சுற்றி சுற்றி வருகிறது. நான் என்ன செய்யலாம்;? ஏதாவது என் மன அமைதிக்காக நான் செய்ய வேண்டும்;. சுயமதிப்பு பாதிக்கப்பட்டு, கருத்து முரண்பட்டு, அன்பை பறிகொடுத்து, பயத்தில் வாழும் அல்லது வன்முறையை வழியாக நினைக்கும். இந்த பிள்ளைகளுக்கு ஒரு வடிகாலாக அல்லது வழிகாட்டலாக ஏதாவது ஒன்றை அமைக்க வேண்டும்.

வெளியே மழை இடியும் மின்னலுமாக பெரும் மழை பொழிகிறது. மெதுவாக கண்ணை மூடுகின்றேன். கனடா வந்த புதிதில் பெற்றோர்த்துவம் வகுப்பில் படித்தவை நினைவுக்கு வருகின்றன. பிள்ளை முரண்டு பிடிப்பது power struggle அல்லது attention seeking க்காகத் தான் என்பதை ஆசிரியை படங்களுடனும் உதாரணங்களுடனும் விளக்கி எப்படி தாம் நல்ல விடயத்தை செய்து எமது கவனத்தை திருப்பலாம் என்பதை எமது பிள்ளைகள் உணர வைக்கலாம் என விளக்கியது மிகத் தெளிவாக கண்முன் ஊசலாடுகிறது. அதிகாரத்தை எம் கையில் வைத்துக் கொண்டு எப்படி குழந்தையையும் தனது அதிகாரத்தை பாவிக்க விடலாம் என வீடியோ பார்த்த போது நாம் அசந்து போனது கூட மறக்கவில்லை. ஆனால் எல்லா பெற்றோரையும், பாதுகாவலரையும் இப்படியான வகுப்புக்குப் போங்கள், நல்லதை செய்யும் போது பாராட்டுங்கள், தெரிவுகளை மட்டுப்படுத்தி பின் தெரிவு செய்யும் அதிகாரத்தைக் கொடுங்கள் என்று போதிப்பது நடக்கக் கூடிய விடயம் அல்ல.

“சரி நீ சொல்வதும் உன்நிலைப்படி சரி, நீ ஒரு முக்கியமானவன். நிபந்தனையின்றி அன்பு செய்யப்பட வேண்டியவன். நான் உன்பக்கம். ஆனால் ;உன் செயல்களுக்கு விளைவுகளைச் சொல்கிறேன். பின் உன்னால் நல்ல முடிவு எடுக்க முடியும். என்று நாம் நம்புகிறேன்” என்று ஒரு செய்தியை கொடுக்கக் கூடிய ஒரு வழி வேண்டும்

மெல்லிய ஒரு மின்னல் கீற்று அறை யன்னலூடாக துல்லியமாகத் தெரிகிறது. ஆம் அது தான் வழி. உடனடியாக வெற்றி தராவிட்டாலும் நிச்சயமாக வெற்றிதரும் என்று நான் tutor ஆக பாடசாலைகளில் வேலை செய்த போது கிடைத்த அனுபவங்கள் சொல்கின்றன. மாமா, மாமியுடன் வாழும் கேசவன் கண்ணீர் விட்டு அழுவான். தனது வீட்டு அனுபவங்கள் பற்றிக் கோபமாகக் கதைப்பான். பின் வகுப்பு முடிந்து போகும் போது “எல்லோரும் மாமாவுக்கு நன்றியாக இரு எண்டு தான் சொல்லுவினம்;. என்iர் கதையைக்; கேட்கமாட்டினம் உங்களுக்குச் சொன்னதிலை பெரிய ஆறுதலாக இருக்கு” என்பான். “என்னை நீ எப்பவும் அழைத்துக் கதைக்கலாம்” என நான் ஆறுதல் சொல்வேன். அப்படி ஒரு உறவை பாடசாலையில் எனக்குத் தெரிந்த பாடசாலை உத்தியோகஸ்தவர் சிபாரிசில் நான் இலவசமாகத் தொடங்க வேண்டும். கோபத்தை, ஏமாற்றத்தை எப்படி, எவ்விதமாக, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வெளிப்படுத்தலாம். அப்படி வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன என்றெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

என்னை judge பண்ணாமல் என்பக்க கதையைக் கேட்க, என் குழப்பங்களைச் சொல்லி அழ என் உணர்ச்சிகளைக் கொட்ட எனக்காக, கண்ணீர் விட ஒரு உறவு என் teenage ல் எனக்கு கிடைத்திராவிடில் எவ்வளவு மனப் பாதிப்புக்களைப் பெற்றிருப்பேன்.

அதற்கு ஒரு நன்றிக்கடனாக அப்படி ஒரு உறவு அதற்குரிய உகந்த புத்தகங்களைக் கொண்ட நூலக அமைப்புடன், எதையும் எப்படியும் அங்கு சொல்லலாம் என்ற தத்துவத்துடன் ஆரம்பமாகப் போகிறது என்ற நிறைவில் என் மகளை இறுகக் கட்டிக் கொள்கிறேன். புதிய ஒரு விடியலை நோக்கி இரவு மெதுவாக நகர்கிறது. [உதயன் (கனடா) பத்திரிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை].

sri.vije@gmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner