இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சமுகம்!

சமூக சேவகி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி!
சமூக சேவகி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி!அண்மையில் மறைந்த செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நினைவாகத் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.. இன்றைய ஈழத்தமிழர்களின் இடர்சூழ்ந்த காலகட்டத்தில் இவரது பங்களிப்பைப் பலர் பல்வேறு காரணங்களுக்காக நினைவு கூர்வர். சைவசமயத்திற்கு இவர் ஆற்றிய பணிகளுக்காக ஆன்மிகவாதிகள் இவரை நினைவு கூர்வர். ஆயினும் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழ் மக்களுக்காக இவர் பலவேறு வகைகளில் ஆற்றிய சமூகத்தொண்டுகளுக்காக அனைவருமே இவரைப் பாராட்டுவர். இறுதிவரை செல்வியாகவேயிருந்து இவராற்றிய ஆசிரியப் பணியும், பல்வேறு அமைப்புகள் மூலம் குறிப்பாகத் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அனாதைச் சிறுமிகளுக்காக துர்க்கா மகளிர் இல்லம் அமைத்துதவியது, போர்க்காலச் சூழ்லில் அகதிகளாக்கப்பட்ட முதியவர்களின் புகலிடமாக ஆலயத்தைப் பாவித்தது, பல்வேறு பொது நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கியது, தனது பிறந்த நாள் அறக்கட்டளை மூலம் வறியவர்களுக்கு உதவியது, மற்றும் சிவத்தமிழ்ச்செல்வி அன்னையர் இல்லம் மூலம் சேவையாற்றியது ஆகியவையும் இவரது மிகவும் முக்கியமான சமூகப் பணிகள். இந்த வகையில் இவரது இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பாரியதொரு , துன்பமானதொரு இழப்பு. இவரது நினைவாகத் தினக்குரலில் வெளிவந்த கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.

தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார்!

துர்க்காதுரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி தனது 83 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே நேற்று நண்பகல் 12.15 மணியளவில் அவர் காலமானார்.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான அறங்காவலரான துர்க்காதுரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி 07.01.1925 ஆம் ஆண்டு பிறந்தார்.

1929 ஆம் ஆண்டு மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த இவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார்.

1940 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார்.

1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கில பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.

1952 ஆம் ஆண்டு பாலபண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்த இவர், அதனைத் தொடர்ந்து இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1961 ஆம் ஆண்டு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் திருப்பணிச் சபை அங்கத்தவராக இணைந்து கொண்டதுடன் 1964 ஆம் ஆண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார்.

தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றிய இவருக்கு 1966 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தால் "செஞ்சொற் செம்மணி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதே ஆண்டே அவர் துர்க்காதேவி தேவஸ்தான தனாதிகாரியாக பதவியேற்றுக் கொண்டார்.

1970 ஆம் ஆண்டு காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் இவருக்கு "சிவத்தமிழ்ச் செல்வி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அத்துடன் மலேசியா, சிங்கப்பூரில் சொற்பொழிவாற்றிய போது "திருவாசகம் கொண்டல்' என்றபட்டமும் அகில இலங்கை இந்துமாமன்றத்தால் "சிவஞான வித்தகர்' என்ற பட்டமும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தால் "துர்க்கா துரந்தரி" என்ற பட்டமும் யாழ்.பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதி பட்டமும் இலங்கை அரசினால் கலாசூரி என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1977 ஆம் ஆண்டு துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக சபை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட இவர் உடனடியாகவே சித்திரத்தேர் திருப்பணியை ஆரம்பித்தார்.

தங்கம்மா அப்பாக்குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன் ,இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன.

அத்துடன் துர்க்கா மகளிர் இல்லம், சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூரில் துர்க்கா தேவி மணிமண்டபம் என்பன ஆரம்பிக்கப்பட்டதுடன் பல பொது நிறுவனங்களுக்கும் நிதியுதவிகளை வாரி வழங்கி தொண்டாற்றினார்.

தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் அறநிதியத்தை ஆரம்பித்து அதன் மூலமும் பல்வேறு உதவிகளை வறியவர்களுக்கு வாரி வழங்கினார்.

போர்க்கால சூழ்நிலைகளில் கூட சிறிதளவேனும் மனம் தளராது மக்களின் துயர் துடைக்க விடா முயற்சியுடன் அயராதுழைத்தார். தனது இல்லங்களை இடத்திற்கிடம் மாற்றி துன்பமுற்றவர்களை தேடிச்சேர்த்து ஆதரவு வழங்கி பராமரித்தார்.

சைவத்திற்கும் தமிழுக்கும் இவர் ஆற்றிய தொண்டு அளப்பெரியது. இவரது இந்தப் பணி உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களால் காலம் காலமாக நினைவுகூரப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையிலேயே திடீரென நோய் வாய்ப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி கடந்த சில வாரங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நண்பகல் 12.15 மணியளவில் காலமானார்.

நன்றி: தினக்குரல்.
http://www.thinakkural.com/news/2008/6/16/importantnews_page52786.htm


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner