
மரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்
மரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்
(யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவன்)
மலர்வு 09.01.1965 உதிர்வு 22.01.2021
புங்குடுதீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி சுட்கார்ட் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெமினி என்றழைக்கப்படும் திரு.கங்காதரன் அவர்கள் 22.01.2021 வெள்ளியன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.
வானொலிக் கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் காலமானார்..!
இலங்கை வானொலியில் நீண்ட காலம் பணியாற்றிய கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் (20 – 01 – 2021) காலமானார். எமது நீண்டகாலக் குடும்ப நண்பர் சிறிஸ்கந்தராசாவின் மரணம் வேதனை தருகிறது. அறுபதுகளின் பிற்பகுதி முதல் அவரை நன்கறிவேன். அன்று வானொலியில் மாதமொருமுறை யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் சார்பாகக் கிராமசஞ்சிகை நிகழ்ச்சியை எனது சகோதரர் த. துரைசிங்கம் தயாரித்தளிப்பதுண்டு. அந்நிகழ்ச்சியில் அன்று மாணவனான நானும் பங்குபற்றியதுண்டு. அவ்வேளை அந்நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விவியன் நமசிவாயம் கடமையாற்றினார். அவருடன் தயாரிப்பாளராகச் சிறிஸ்கந்தராசா பணியாற்றினார்.
அந்தக் காலங்களில் கொழும்பு செல்லும் வேளைகளில் அவரின் நாரங்கன்பிட்டி வீட்டிற்குத் தவறாது செல்வதுண்டு. பின்னர் எழுபதுகளில் கிராம சஞ்சிகை - கிராம வளம் நிகழ்ச்சிகளுக்கான ஒலிப்பதிவுகளை வடபகுதிக் கிராமங்கள் தோறும் ஒழுங்குசெய்து அவருடன் பயணித்த நாட்கள் நினைவிலுண்டு. தீவுப்பகுதி முதல் வடபகுதியின் குக்கிராமங்கள் தோறும் சென்று நாட்டுபுறக் கலைஞர்களின் திறமைகளை - நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்திட அவருக்கு உதவியதும் மறக்கமுடியாத நினைவுகளே..!
மின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி!
பதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக பல் துறைகளில் 16 மின்னூல்களை (தமிழில் 11 நூல்கள் & ஆங்கிலத்தில் 4 நூல்கள்) வெளியிட்டுள்ளது. அவை தற்போது அமேசன் தளத்தில் விற்பனைக்குள்ளன. வெளியிட்ட மின்னூல்களின் விபரங்கள் வருமாறு:
நாவல்:
1. அமெரிக்கா - வ.ந.கிரிதரன்
2. குடிவரவாளன் - வ.ந.கிரிதரன்
3. வன்னி மண் - வ.ந.கிரிதரன்
4. மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்
5. அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன்
6. கணங்களும் குணங்களும் - வ.ந.கிரிதரன் (தாயகம் பத்திரிகையில் மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய , தாயகம் பத்திரிகையில் வெளியான முதலாவது நாவல்.)
கட்டுரை:
7. வ.ந.கிரிதரனின் கட்டுரைகளின் தொகுப்பு
சிறுகதை:
8. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - வ.ந.கிரிதரன் (25 புகலிடச் சிறுகதைகளின் தொகுப்பு)
கவிதை:
9. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் (44 கவிதைகளின் தொகுப்பு)
கட்டடக்கலை:
10. நவீன கட்டடக்கலைச் சிந்தனைகள் - வ.ந.கிரிதரன் (கட்டடக்கலை, நகர அமைப்புக் கட்டுரைகளின் தொகுப்பு)
வரலாறு / நகர அமைப்பு:
11. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) - வ.ந.கிரிதரன்
அறிவியல்:
12. அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் - (அறிவியற் கட்டுரைகள்,கவிதைகள் & கட்டுரைகளின் தொகுப்பு)
தொடர் நாவல்: கலிங்கு (2006 -5)
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
5
அன்று குணாளன் வரும்போதே திரும்புவதற்கான வேகத்தையும் அவனது நடை கொண்டிருந்ததை சங்கவி கண்டாள். சம்பூரிலே ஆகஸ்டு 28, 2006இல் புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையில் பயங்கரமான சண்டை தொடங்கியிருந்தது. புலிகளின் கையிலிருந்த சம்பூர் எப்போதுமே திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு எறிகணை வீச்சால் ஆபத்தை விளைக்கக்கூடிய வாகுவில் அமைந்திருந்ததை அவர்கள் கண்டிருந்தார்கள். மாவிலாறு வெற்றியின் பின் சம்பூரைக் கைப்பற்ற மும்முனைத் தாக்குதலில் இறங்கியிருந்தன இலங்கை அரச படைகள். யுத்தம் தொடங்கி ஆறுநாட்களாகியும் வெற்றி தோல்வியற்ற சமச்சீரில் போர் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒருபோது பாச்சனூரிலுள்ள புலிகளின் காப்பரணை அரச படைகள் தகர்த்துவிட்டதாக தகவல் வந்தது. இறுதியில் சம்பூரை செப்ரெம்பர் 4இல் கைப்பற்றி இலங்கை ராணுவம் அங்கே நிறுதிட்டமாய் முகாமமைத்தது.
வன்னியில் அதனாலான நிலைகுலைவு வெளியாய்த் தெரிந்தது. மேற்கொண்டு வாகரைமேலான தாக்குதலுக்கு ராணுவம் ஆயத்தம் செய்வதான செய்தியறிந்த மக்கள் குலைந்துபோயிருந்தனர். வன்னியில் அதன் தாக்கங்கள் எல்லைகளில் இயக்க எல்லைக் காவலர்களின் மரணங்களாக விளைந்துகொண்டிருந்தன. அம்பகாமம் காட்டுக்குள்ளாக வந்துகொண்டிருந்த ஆறு விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் சடுதியான தாக்குதலில் பிணங்களாக வீழ்த்தப்பட்டமை, மூன்று நான்கு நாட்களின் முன்னர் போராளிகள் செல்லிடம் வந்து சேராத தகவலில் தேடுதல் நடத்தியபோது தெரிய வந்தது. முதல்நாள்தான் அவர்களது வித்துடலின் விதைப்பு முறிப்பு மாவீரர் துயிலுமில்லத்தில் சகல இயக்க மரியாதைகளுடனும் நடைபெற்றது. இவ்வாறான நேரத்தில், குணாளன் மறுபடி கிளம்புவானாகில், கிளம்புகிற நேரத்தில் எதுவும் கேட்கப்படாதென அவன் சொல்லியிருந்தானெனினும், அவளால் விட்டுவிட முடியாது. முகம் கழுவி உடுப்பை மாற்றிக்கொண்டு அவன் அவசரமாகத் திரும்ப தயாரானான்.
இலங்கையில் பாரதி......
- அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நலம்தானே...? உடல் நலத்தில் அவதானமாக இருக்கவும். இங்கு நாம் நலம். தங்கள் பதிவுகளில் தங்களின் வாசிப்பும் யோசிப்பும் பகுதியில் ( 366 ஆவது அங்கம் ) எழுதப்பட்ட குறிப்புகளைப்படித்துவிட்டு, - கடந்த 2019 இல் வெளியான எனது இலங்கையில் பாரதி நூலில் இடம்பெற்ற இரண்டு அங்கங்களை தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி - அன்புடன் , முருகபூபதி -
இலங்கையில் பாரதி - அங்கம் - 10
ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இலக்கியப்படைப்பாளிகள், கலைஞர்கள், நடன நர்த்தகிகள், ஊடகவியலாளர்கள், இதழாசிரியர்கள் பாரதியின் தாக்கத்திற்குட்பட்டதனாலேயே பாரதியியலிலும் ஈடுபாடுகொண்டிருந்தனர். ஈழத்தில் பாரதி இயல் என்ற பிரயோகத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் க. கைலாசபதி. எமது நாட்டில் இலக்கியச்சிற்றேடுகளில் பாரதி ஏற்படுத்திய பெரிய தாக்கத்தைப்பற்றி எழுதுவதாயின் பல அங்கங்கள் தேவைப்படும். ஏராளமான இலக்கிய சிற்றேடுகள் இலங்கையில் வெளிவந்ததே அதற்கு அடிப்படைக்காரணம். ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுசெய்ய முன்வந்தால் அதற்கு உரமிட்டவை இலக்கியச்சிற்றேடுகளே என்ற முடிவுக்கும் வரமுடியும். இலங்கையில் பாரதியின் சிந்தனைகள் விகசிக்கத்தொடங்கிய 1922 ஆம் ஆண்டிற்குப்பின்னர், 1940 முதல் வெளிவரத்தொடங்கிய சிற்றிதழ்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். தமிழ்த்தேசியப்பத்திரிகையின் வளர்ச்சியில் உதயதாரகை முதல் தற்பொழுது வெளிவரும் காலைக்கதிர் வரையில் கால வரிசைப்படி ஆய்வுசெய்யலாம்.
அதேபோன்று இலக்கியச்சிற்றேடுகளை அவதானித்தால் 1940 இற்குபின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து மறுமலர்ச்சி, கிழக்கிலங்கை மண்டுரிலிருந்து 'பாரதி' கொழும்பிலிருந்து மற்றும் ஒரு இதழ் 'பாரதி' முதலானவற்றிலிருந்து தற்போது கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து ஞானம், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து ஜீவநதி, கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து ' மகுடம்' அநுராதபுரத்திலிருந்து 'படிகள்' - ஆகியனவற்றின் வளர்ச்சியையும் நாம் கண்டுகொள்ளமுடியும். இவைதவிர கவிதைக்கான இதழ்களும் வருகின்றன.
இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் கலைச்செல்வி, மரகதம், மல்லிகை, புதுமை இலக்கியம், வசந்தம், விவேகி, அஞ்சலி, பூரணி, நதி, களனி, அக்னி, நோக்கு, வாகை, மாருதம், கீற்று, மாற்று, ஊற்று, பாடும்மீன், ரோஜாப்பூ, கதம்பம், பூமாலை, குமரன், தமிழமுதம், தமிழின்பம், மாணிக்கம், அலை, குன்றின் குரல், கொழுந்து, தாரகை, புதுசு, அலை, தீர்த்தக்கரை, பொதுமக்கள் பூமி, சுவர், சமர், சிரித்திரன், வெளிச்சம், களம், சுவைத்திரள், கலகலப்பு, அக்கினிக்குஞ்சு, அமிர்தகங்கை, தாயகம்.... இவ்வாறு எண்ணற்ற இதழ்கள் தோன்றி மறைந்தன. பூரணி என்னும் பெயரிலேயே இரண்டு சிற்றிதழ்கள் வந்திருப்பதும் அக்கினிக்குஞ்சு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருந்தும் சிற்றிதழ்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்துள்ளன.
பதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மேலும் ஐந்து மின்னூல்கள்!
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
வசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா!
தாமரையின் கவிதைகளில் மெய்ப்பாடுகள்
கவிதை என்பது ‘வாழ்வின் விமர்சனம்‘ என்பர் மாத்யூ அர்னால்டு. மனிதத்தைப் பாடுவதும் அவனின் மறுமலர்ச்சிக்குத் துணை செய்வதும்தான் கவிதை. தான் வாழும் காலத்தில் தன்னைக் கடந்து சென்ற நிகழ்வுகளையும் பட்டறிவினால் உணர்ந்ததைப் பிறருக்கு உணர்த்தும் வகையிலும் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்குகின்றனர். சமுதாய சீர்கேடுகளானது ஒழிக்கப்பட்டு அக்கேடு மீண்டும் உருவாகாமல் இருப்பதில் கவிஞர்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது.
கவிஞனின் இதயக் கருவறையில் தோன்றுவது கவிதை. தன் வாழ்வியல் அனுபவங்களுக்கு உயிர்கொடுத்து கவிஞன் கவிதையைப் படைக்கிறான். “கவிதைகள் அனைத்தும் ஏதோ ஒரு கருத்தைத் தெரிவிப்பனவாக அமைந்துள்ளன. அந்த ஏதோ ஒரு கருத்தே கவிதையின் உள்ளடக்கமாகின்றது.“1 இலக்கிய வகைகளைத் தீர்மானிப்பதில் உருவத்தைப் போன்றே உள்ளடக்கமும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அவ்வகையில் கவிஞர் தாமரையின் முதல் கவிதைத் தொகுப்பான ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்‘ என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் வார்த்தைகளில் வித்தை காட்டாமல் எளிமையாக உள்ளடக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
தொல்காப்பியர் உரைக்கும் மெய்ப்பாடு
தமிழில் நமக்குத் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உணர்ச்சிகளை வகைப்படுத்தி,
“உய்த்துணர் வின்றித் தலைபடு பொருளின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்“2
அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
அம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்
முன்னுரை
1966- ஆம் ஆண்டு வெளியான தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் புதினம் அன்றைய காலத்தின் ஆசாரங்களைப் பின்பற்றும் அந்தணக் குடும்பமொன்றில் நடைபெறும் வித்தியாசமான வாழ்வியலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமூக கட்டுகளை உடைத்தெறிந்து விட்டு நுட்பமான பார்வையில் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் நிலையில் புதினம் அமைந்துள்ளது. ஒளிவு மறைவின்றி கதாபாத்திரங்களின் மனநிலைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் விறுவிறுப்பாக பதிவு செய்துள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இப்படியொரு புதினம் வெளிவந்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. தி. ஜானகிராமனின் 'மோகமுள்', 'மரப்பசு' உள்ளிட்ட பிற படைப்புகளும் வேறுபட்டதொரு கதைக்களத்தைக் கொண்டு விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கதைச்சுருக்கம்
அப்பு என்ற வேதம் படிக்கும் ஒருவனின் குடும்பத்தை மையமிட்டதாக புதினம் அமைந்துள்ளது. சிறுவயதில் கணவனை இழந்த பவானியம்மாள் என்பவரின் வேதபாடசாலையில் சுந்தர சாஸ்திரிகளிடம் படிக்கும் அப்பு, பதினாறு ஆண்டுகள் படிப்பு முடிந்து தன் சொந்த ஊருக்குச் செல்லத் தயாராகிறான். பவானியம்மாளின் தம்பி மகள் இந்து, தாய் தந்தையை இழந்தவள். கணவனையும் இழந்து தன் அத்தையுடன் வசித்து வருகிறாள். கல்யாணமென்றால் என்னவென்று அறியாத வயதில் அவள் வாழ்க்கை தொடங்குகிறது. சிறிது காலத்தில் கணவன் இறந்துவிட திரும்பி விடுகிறாள். நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அப்புவின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்துகிறாள். வேதங்களைக் கற்று பெரியாளாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அப்புவுக்கு அவள் மேல் ஆசையிருக்கிறது. இருப்பினும் வெளிக்காட்டாமல் மறுக்கிறான். இந்து ஒதுங்கிச் செல்லும் அப்புவிடம் அவன் தாயின் நடத்தையைப் பற்றிப் பேசி விடுகிறாள். கோபம் கொண்டான் அப்பு. மறுநாள் பவானியம்மாளிடம் சொல்லிக் கொண்டு ஊருக்குச் செல்கிறான். இரயில் பயணத்தில் இந்து தன் தாயைப் பற்றிச் சொன்னதைச் சிந்திக்கிறான்.
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மேற்படி ஆய்வு நூல் பின்வரும் அத்தியாயங்களைக் கொண்டுள்ளது:
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.
ஆய்வு: நற்றிணையில் கடற்பெயர்கள்
முன்னுரைகடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கடலும் அதன் குடிவழிகளும்
தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளில் பல அழிந்துபட்டும் வனப்பு கெட்டும் காணப்படுவதை அறிவோம். இதில் கடல் என்பது மனிதப் பயன்பாட்டில் பெரிய நீர்நிலையாகும். மனிதனால் பெரிதளவு ஆக்கிரமிப்பு செய்யப்படாத நீர்நிலை என்றும் சொல்லலாம். பொதுவாக ஆற்றங்கரைகளின் அருகிலே மனிதகுல நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டதாய்க் கூறுவர். அதுபோல கடல் அருகிலும் நாகரிகம், இனக்குழுக்கள் தோன்றியுள்ளன. அந்நாகரிகத்தைக் கடற்கரை நாகரிகம், அங்கு தோன்றிய இனக்குழுக்களை பரதவர் இனம் எனும் பெயரில் குறிக்கலாம். ஏனைய திணைகளில் நீர் நிலை அருகாமைக் குடியிருப்புகள் எல்லாம் வேளாண்மை தவிர்த்த பிற தொழில்களால் ஈர்க்கப்பட்டு நீர்நிலைகளுக்கு அடுத்த இடங்களுக்கு மக்கள் நகரத் தொடங்கினா். நெய்தல் நிலக் குடிகள் பெரிதாக நகர்வுக்கு ஆட்படாமல் அந்நிலத் திற்கு உரித்தான தொழில்களையே செய்து நிலவயப்பட்டோராக வாழ்ந்து வருகின்றனா். கடலால் நெய்தலோர் ஈர்க்கப்படக் காரணம் அதன் நீர்வளமும் அது கொண்ட பிற வளங்களும் ஆகும். கடலுக்குச் சென்று கடல் பொருட்களைக் கொண்டுவரும் மீனவர்கள் ஒரு புறம் இருந்துள்ளனா். கடல் நீரால் உப்பு தயாரிக்கும் உமணர்களும் அந்நிலத்தில் வசித்து வந்துள்ளனா். இவைபோக முத்து, கிழிஞ்சல்கள், சங்கு போன்றவற்றால் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் மக்களும் அவற்றை விற்பனை செய்யும் மக்களும் அந்நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனா். இவ்வாறு கடல் பலதரப்பட்ட மக்கள் வந்து பழகிய இடமாக இருந்துள்ளது. இன்று பொழுதுபோக்கு இடமாக இருக்கும் பல கடற்கரைகளை நாம் பார்க்கின்றோம். அன்றும் கடற்கரைகளில் காதல் வளர்த்த மக்கள் கடற்கரைகளில் இருந்துள்ளனா். இதனாலேயே அகம் சார்ந்த பல பாடல்களில் எரிதிரைக் கொண்கன், மல்குநீர் சேர்ப்பன், பனிநீர்ச் சேர்ப்பன் என்ற அடைகளால் பலவாராகக் காதல் தலைவர்கள் சுட்டப்பெறுகின்றனா்.
கிண்டில் மின்னூல்களாக என் படைப்புகள்...
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
என்றும் இதுபோல் எங்குமே வாழ்வு நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்!
கதிரவன் நோக்கி உழவர் பொங்கும்
களிப்புப் பொங்கல் இன்பப் பொங்கல்
பொங்கல் நாளில் அனைவர் வாழ்வில்
பொங்கி இன்பம் வழிந்திட வாழ்த்துகள்.
அன்பும், பண்பும் மிகுந்து பொங்கிட,
அகிலம் முழுதும் ஆனந்தம் பொங்கிட,
நெஞ்சம் நிறைந்து கூறுவோம் வாழ்த்துகள்.
நெஞ்சம் நிறைந்து கூறுவோம் வாழ்த்துகள்.
வாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா !
மங்கலம் பொங்கிடப் பொங்கலே வா
மனமெலாம் மகிழ்ந்திடப் பொங்கலே வா
சொந்தங்கள் இணைந்திடப் பொங்கலே வா
சுமையெலாம் இறங்கிடப் பொங்கலே வா !
வறுமைகள் வரண்டிடப் பொங்கலே வா
வளர்ச்சிகள் மிகுந்திடப் பொங்கலே வா
தொழிலெலாம் சிறந்திடப் பொங்கலே வா
துணிவது நிறைந்திடப் பொங்கலே வா !
வாசிப்பும் யோசிப்பும் 368: 'பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே!
கவிஞர் ச.வே.பஞ்சாட்சத்திரத்தின் கவிதைத் தொகுதியொன்றின் பெயர் 'இன்ப வானில்' (1971). அகத்துறைக்கவிதைகள் என்று அவற்றைக் குறிப்பிட்டிருப்பார். புதுமைலோலனின் அன்பு வெளியீடாக வெளியான தொகுப்பு அது. காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் , பிரிவினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல அக்காலச் சூழலில் வைத்துச் சுவையாகப் பின்னப்பட்டிருக்கும்.
அதிலொரு கவிதை 'கொழும்பில் வேலை என்றால்..'. கொழும்பில் பல சிரமங்களுக்கு மத்தியில் வேலை பார்க்கும் கணவன் படும் சிரமங்களை எண்ணியெண்ணி மனைவியொருத்தி வருந்துவதை விபரிக்கும் கவிதை. அதிலுள்ள ' .. பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே! பாவம்!' என்னும் வரிகள் என் கொழும்பு வாழ்க்கையை நினைவு படுத்தின.
கொழும்பில் நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது நானும் ஏனைய நண்பர்களும் மதிய உணவுக்காக அதிகம் செல்லுமிடங்கள்: அருகிலிருந்த புகையிரதத்திணைக்களக் 'கண்டீன்', கோட்டையிலுள்ள 'நெக்டர் கபே & சுத்தானந்தபவன் (சுத்தானந்தபவனா அல்லது ஆரியபவனா என்பதை நினைவு படுத்துவதில் சிறிது குழப்பம்). சுத்தானந்தபவனுக்குச் செல்வது பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில். அப்போது தமிழ் உணவகங்களில் மதிய உணவின்போது நீங்கள் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சோற்றினை முடிய முடிய வாங்கிச் சாப்பிடலாம். மேலதிகக் கட்டணம் ஏதுமில்லை. இவ்விதம் மதிய உணவுக்காக வரும் ஒவ்வொருவரும் முடிய முடிய சோற்றினை வாங்கிச் சாப்பிட்டால் வியாபாரம் என்னவாவது. இதற்காகத் தமிழ் உணவக முதலாளிகள் செய்யும் தந்திரமே சோற்றில் பாக்கு போட்டுச் சமைப்பது. அப்படிச் சமைத்தால் அவ்விதம் சமைத்த சோற்றினை அதிகமாகச் சாப்பிட முடியாது. பெரும்பாலும் முதற் தடவையிலேயே வயிறு நிறைந்து விடும். இதனைத்தான் கவிஞரும் 'பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே' என்கின்றார். அனுபவம் பேசும் கவிஞரின் வரி.
சிறுகதை: சங்கர்
“சங்கர், நீங்க தனியத்தானே இருக்கிறீங்க, உங்களோடை ஒருத்தரும் இல்லைத்தானே?”
“ஓம், நான் தனியத்தான் இருக்கிறன்”
“என்ரை பெயர் ஜோசேப். நான் ஒரு லோயர், சட்ட உதவி நிலையத்திலிருந்து கதைக்கிறன். குடிச்சிட்டு வாகனம் ஓடினதெண்டும் மனைவியைத் தாக்கினதெண்டும் உங்களிலை குற்றம்சாட்டப்பட்டிருக்கு …”
“குடிச்சதெண்டு என்னைப் பொலிஸ் பிடிக்கேல்லை, அப்பிடி நான் குடிக்கவுமில்லை”
“சரி, நானும் யூனிவேசிற்றிலை இருக்கேக்கே குடிச்சிட்டு வாகனமோட்டியிருக்கிறன்தான். அது பிரச்சினையில்லை. ஆனா, பிழையை ஒத்துக் கொள்ளவேணும்… சரி, அதைப் பத்திப் பிறகு உங்கடை லோயரோடை கதையுங்கோ. இப்ப உங்கடை உரிமையள் என்னெண்டு சொல்லத்தான் நான் கோல் பண்ணினான்.”
“ஓ, ஓகே”
“பொலிஸ் உங்களிட்டை என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாதேங்கோ, நீங்க சொல்றதை உங்களுக்கெதிராக அவை கோட்டிலை பாவிக்கேலும். அவை என்னத்தைக் கேட்டாலும், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கோ, சரியோ!”
“ஓ, ஓகே”
“ஆனா அவை ஏதாவது செய்யச் சொல்லி உங்களைக் கேட்டால் நீங்க செய்யோணும். அதுக்கு மறுப்புச்சொல்லேலாது. உதாரணத்துக்கு உங்கடை ரத்தத்திலை இருக்கிற அற்கோலின்ரை அளவைப் பாக்கிறதுக்கா ஊதச்சொல்லி அவை உங்களைக் கேட்கக்கூடும்.”
கவிதை: முகமூடிகளின் உலகில்

வாசிப்பும், யோசிப்பும் 367: கெளரியின் 'அகதி'!
கவிஞர் கெளரியைப்பற்றி முதலில் எழுத்தாளர் கடல்புத்திரன் மூலம்தான் நான் கேள்விப்பட்டேன். அவர் கெளரியின் 'சோகங்களிலும் துயரமானது' என்னும் கவிதையைப்பற்றி விதந்து கூறுவார். அத்தலைப்பில் கெளரியின் கவிதைத்தொகுப்பொன்றும் 1988இல் வெளியானதாக நான் அறிந்திருக்கின்றேன். அதன் பின்னர் கெளரியை நான் தொண்ணூறுகளில் தாயகம் (பத்திரிகை -> சஞ்சிகை) கனடாவில் வெளியானபோது வெளியான அவரது படைப்புகளினூடு அறிந்திருக்கின்றேன். அவரது படைப்புகள் தாயக'த்தில் வெளியாகியுள்ளன. 'டொராண்டோ'விலிருந்து வெளியான ஏனைய ஊடகங்கள் சிலவற்றிலும் வெளியாகியுள்ளன. தாயகம் பத்திரிகையில் தாயகம் பத்திரிகையில் அதிகமாக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களைப்பற்றி 'தாயக எழுத்தாளர்கள்' என்னும் கட்டுரையொன்றும் எழுதியுள்ளார். அதில் என்னையும் உள்ளடக்கியிருந்தார். அக்கட்டுரையும் நினைவிலுள்ளது. அக்காலகட்டத்தில் அவரது நெடுங்கவிதையான 'அகதி' நூலுருப்பெற்றது. அதனை வடிவமைத்துக்கொடுத்திருந்தவர் சகலகலாவல்லவரான 'தாயகம்' ஆசிரியரான ஜோர்ஜ்.ஜி.குருஷேவ்தான். அவர்தான் எனது 'எழுக அதிமானுடா' கவிதைத்தொகுப்பினையும் வடிவமைத்துத் தந்திருந்தார். அக்காலகட்டத்தில் அவரே தனது இருப்பிடத்தில் தாயகத்தை 'ஆப்பிள்' கணினியில் வடிவமைத்து, தன்னிடமிருந்த சிறிய அச்சியந்திரம் மூலம் அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
'அகதி' கவிதைத்தொகுப்பினை வடிவமைத்தவர் 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவ் என்றால், அதன் அட்டைப்படத்தை வடிவமைத்துக்கொடுத்தவர் கனடா மூர்த்தி (யாழ் இந்து நாராயணமூர்த்தி). அக்காலகட்டத்தில் தாயக'த்தில் வெளியாகிக்கொண்டிருந்த முனியின் கேள்வி பதில்கள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை. சிரித்திரனின் மகுடி பதில்களைப்போல், சுதந்திரனின் குயுக்தியார் பதில்கள் போல் , 'தாயக'த்தின் 'முனி' பதில்களும் முக்கியமானவை. சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை. முனி என்றால் ஏதோ ஆலமரத்து முனியென்று நினைத்து விடாதீர்கள். முனிவர் என்பதன் சுருக்கமான முனியே இந்தத் தாயகத்து முனி.
கெளரியின் 'அகதி' கவிதை நூலை வெளியிட்டிருப்பது 'டொராண்டோ'வில் இயங்கிக்கொண்டிருந்த 'சமூக ஆய்வு மையம்' (Social Research Circle) என்னும் அமைப்பாகும். வெளியிட்ட ஆண்டு: ஏப்ரில் 1991.
இணையவெளி உரை நிகழ்வும் கலந்துரையாடல்: ஈழத்தமிழரின் இசை மரபு (20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை)
'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: தமிழ் வெகுசன நாடக மரபின் எழுச்சியும் வீழ்ச்சியும்!
வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி!
வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.
இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி.
சான்றோர் சந்திப்பு- அமர்வு 03
Sivanesan Shivaleelan < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
சிறுகதை: ஏங்கித்துவளும் கொடியொன்று..!
‘நிலா, நிலா..!’ வாசலில் நின்று குரல் கொடுத்தாள் ரதி.
குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த நிலா, பக்கத்து தெருவில் வசிக்கும் ரதி வாசலில் நிற்பதைக் கண்டாள். இரண்டோ மூன்று முறை கோயிலில் சந்தித்ததால் சினேகிதமாகியிருந்தாள்.
‘என்ன ரதியக்கா? உள்ளே வாங்கோ!’
‘நாய் குரைக்குது, கடிக்குமா?’
‘இல்லையக்கா, கட்டியிருக்குது, தெரியாதவையைக் கண்டால் குரைக்கும், அவ்வளவுதான்!’ ரதி கேற்ரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். ‘குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லுவினம்..!’
‘நீங்கள் இதை சொல்லுறீங்க, போனகிழமை அவர் பயணத்தால வீட்டை வரேக்கையும் அவரை வாசல்ல கண்டிட்டு, யாரோ என்று நினைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டுது..!’
பெரிய காணியின் நடுவே கட்டப்பட்ட பெரியகல்வீடு பார்ப்தற்கு அழகாக இருந்தது. வீட்டின் இரு பக்கமும் சோலை போல வாழை, மா, பலா என்று பழமரங்களால் நிறைந்திருந்தது. முன்பக்கத்தில் பல வர்ணங்களில் அழகான ரோஜாக்கள், செவ்வரத்தைகள், நந்தியாவட்டை என்று பூச்செடிகள் அழகாகப் பூத்திருந்தன. குழாய்க் கிணற்றுத் தண்ணீர்த்தாங்கியும் உயரமாகத் தெரிந்தது.
நாயைக் கட்டிப் போட்டிருந்ததால், பயமில்லாமல் அணில்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தேனருந்தத் தேனீக்கள் ரீங்காரமிட்டுப் பொருத்தமான பூக்களைத் தேடிக்கொண்டிருந்தன. பழங்களைத் தேடிக் குருவிகள் கிளைகளில் தாவிக்கொண்டிருந்தன. ஆளிருந்தும் ஆளரவம் இல்லாத வீடுபோல காட்சி தந்தது.
சிறுகதை : கலைந்தது கனவு
காலை. காங்கேசன்துறை வீதி கலகலப்பாகத் தொடங்கிவிட்டது. துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் குச்சொழுங்கை வழியாக வந்த கிருஷ்ணவேணி கோவிலை நோக்கிச் சென்றாள். பாதணிகளை வீதியிலே கழற்றிவிட்டு நின்றபடியே கும்பிட்டுக் கொண்டாள். கோபுரத்தின் உச்சிவரை நிமிர்ந்தன அவள் கண்கள். அவளைக் கடந்து போவோர் அவளை ஒருகணம் திருப்பிப் பார்க்கின்றனர். திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுதான். மெல்லிய உயர்ந்த தேகம் கொண்ட அவள், இறுக வரிந்த மயில்நீல வர்ணச் சேலையில் தங்க விக்கிரகம் போல ஜொலிக்கின்றாள். நெற்றியில் திருநீற்றின் குறியும் பொட்டும், மல்லிகை மொட்டுகள் பிரிந்து மணம் கமிழ்க்கும் மாலையுமாக – பார்ப்பவர்கள் அவளையும் சேர்த்துக் கும்பிடத் தோன்றும். தினமும் அப்படித்தான் அவள் வேலைக்குப் போய் வருவாள். யாழ்ப்பாண நகரில் தனியார் கொம்பனி ஒன்றில் இலிகிதராக வேலை செய்கின்றாள்.
பின்னர் வீதியை இருமருங்கும் பார்த்துவிட்டு, குறுக்காக வீதியைக் கடந்து எதிரே இருக்கும் பஸ் ஸ்ராண்டை நோக்கிச் சென்றாள். அங்கே அவளது தோழி இந்திரா நின்றுகொண்டிருந்தாள். அனேகமான வேளைகளில் இருவரும் ஒன்றாகத்தான் வேலைக்குப் போய் வருவார்கள். தகரத்திலான பஸ் ஸ்ராண்டிற்குள் காலை இளம் வெய்யில் அட்டகாசம் போட்டது. இருவரும் உள்ளே போய் அமர்ந்து கொண்டார்கள்.
கலகலப்பாகப் பேசும் இந்திரா இன்று அமசடக்காக இருக்கின்றாள். முகம் கூடக் கறுத்துப் போய் இருந்தது. கவலையுடன் கிருஷ்ணவேணியைப் பார்த்தாள். மெதுவாக நகர்ந்து அவள் தோள் மீது தலை சாய்த்தாள். காதிற்குள் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு, தயக்கத்துடன் மொபைல்போனைத் திறந்து சில படங்களைத் தட்டிக் காண்பித்தாள்.
அகிலன் ஒரு பெண்ணுடன் நெருங்கியிருக்கும் சில புகைப்படங்கள்.
அகிலன் தற்போது அவுஸ்திரேலியாவில் அல்லவா இருக்கின்றான்!
நெஞ்சு திக்கென்றது கிருஷ்ணவேணிக்கு. திகைப்பில் படீரென அவளையுமறியாமல் மொபைல்போனைத் தட்டிவிட்டாள். பத்திரகாளியாட்டம் எழுந்தாள். தொங்கல் நடையில் வீதிக்குக் குறுக்காகப் பாய்ந்தாள். வாகனமொன்று கிரீச்சிட்டு அவளை மருவிக்கொண்டு ஓடியது. சத்தம் கேட்டு வீதியில் நின்றவர்கள் தலையில் கையை வைத்தார்கள்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா கவிதைகள் இரண்டு!
1. பற்றாதே என்கிறது ஞானம்! பற்றுவேன் என்கிறது மோகம் !
வெட்டாதே என்கிறது மரம்
வெட்டுங்கள் என்கிறது குளம்
தட்டாதே என்கிறது மனம்
தட்டுவேன் என்கிறது குணம்
முட்டாதே என்கிறது மூப்பு
முட்டுவேன் என்கிறது கொழுப்பு
பற்றாதே என்கிறது ஞானம்
பற்றுவேன் என்கிறது மோகம் !
கவிதை: ஆயுள்வேத வாகடம்: ஊற்றும் மாற்றும்
பால சிவகடாட்சம் பல்கலையின் பட்டமுளார்
காலக் கணிப்போடும் கற்றுநன்றே – காலமது
தாறுமாறாய்ப் போந்து தடயங்கள் மாற்றிவரும்
நேர்மாறைக் கண்டார் நிசம் !
செகராச சேகரன்தன் சொல்லுவாக டத்தை
முகத்தாயம் மாற்றியோர் முன்றில் – நகையோடும்
நற்பேரைத் தான்மாற்றி நாளம் வகைமாற்றி
நிற்போரைக் கண்டார் நிலம் !
வாசிப்பும் யோசிப்பும் 366 : தெளிவத்தை ஜோசப்பின் "ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி கட்டுரையும், பாரதியில் வெளியான அ.ந.கந்தசாமி படைப்புகளும் & இருட்டடிப்பு ஒன்றும்!
இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கியமான சஞ்சிகை இது. யாழ்ப்பாணத்தில் 'மறுமலர்ச்சி' சஞ்சிகை அச்சில் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான சஞ்சிகை. அச்சஞ்சிகைதான் எழுத்தாளர்கள் கே.கணேஷ், கே.ராமநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இணைந்து வெளியிட்ட 'பாரதி' சஞ்சிகை. ' 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' நூலை எழுதிய முனைவர்கள் சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் ஆகியோர் இச்சஞ்சிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்களது ஆய்வு நூலில் இச்சஞ்சிகை பற்றி 'பாரதியில் கட்டுரைகள் வெளிவந்தன' என்று ஒரு வரி மட்டுமே காணப்படுகின்றது. இவர்கள் பாரதியை மறைத்ததற்கு முக்கிய காரணங்களிலொன்றாக நான் கருதுவது இலங்கைத் தமிழிலக்கியத்தில் முற்போக்குத் தமிழிலக்கியத்துக்கு பாரதியாற்றிய பங்களிப்புத்தான். இவர்கள் யாருமே இதுவரையில் இலங்கைத் முற்போக்குத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கிய முன்னோடிகள் பற்றி இதுவரையில் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் எவற்றையும் நானறிய எழுதவில்லை. அந்த அடிப்படையில் இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தையும் புறக்கணித்திருக்கலாம் அல்லது மறைத்திருக்கலாம் என்றும் கருதவேண்டியுள்ளது.
இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தை மறைத்தாலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் , எழுத்தாளர் நந்தினி சேவியர் மற்றும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா போன்றோர் மறக்கவில்லை. தெளிவத்தை ஜோசப் தினகரனில் 'ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி' என்னும் தலைப்பில் முக்கியமானதோர் ஆய்வுக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை தினகரனில் செப்டம்பர் 1984 - நவம்பர் 1984 வரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையினை எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுத்து மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளியிட்ட "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்' கட்டுரைகளின் தொகுப்பு நூலில் உள்ளடக்கியுள்ளார்.
இந்நீண்ட கட்டுரையின் ஆரம்பத்தில் பாரதி பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்றினைத் தெளிவத்தை ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்:
நெடுங்கட்டுரை: மார்க்சியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு!

இவ்விதமாக அவற்றில் மூழ்கியிருந்த நான் அவற்றை வாசித்ததால் என்னுள் எழுந்த எண்ணங்களை 'சிஆர் கொப்பி'களில் எழுதத்தொடங்கினேன். இலங்கைத் தமிழ்ப்பிரச்சினை பற்றிய மார்க்சிய அடிப்படையிலான எனது எண்ணங்கள், கவிதைகள், என் தனிப்பட்ட உணர்வுக்கவிதைகள் என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் எழுதினேன். அக்குறிப்பேடுகளில் சில என்னிடமின்றும் உள்ளன. அவற்றை அப்படியே எனது கையெழுத்துப்பிரதிகளாகவே இங்கு பதிவு செய்தால் என்ன என்றொரு எண்ணம் எழுந்தது. அதன் முதல்படியாக இந்நீண்ட கட்டுரையினை உங்களுக்கு வாசிக்கத் தருகின்றேன்.
இதனை எழுதிய காலத்தில் என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் இக்கட்டுரையினை வாசியுங்கள். உங்கள் கருத்துகளை நேரம் கிடைக்கும்போது பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்து என் உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாடு என்னும் வகையில் இவை என்னைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியம் மிக்கவை. என் குறிப்பேட்டிலுள்ள இக்கட்டுரையை எழுதிய நிலையிலேயே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் இருக்கக்கூடும். இருந்தால் அறியத்தாருங்கள். கருத்துகளில் ஏதாவது குழப்பங்கள் இருப்பினும் அறியத்தாருங்கள். இக்கட்டுரை அன்று என் மனத்தில் எழுந்த சிந்தனைகளின், கேள்விகளின் பிரதிபலிப்பு. இக்கட்டுரை எழுதிய திகதி 29.12.1982
ஆய்வு: ஒப்பாரியும் உணர்வு வெளிப்பாடும்!
முன்னுரை:
ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது. வாய்மொழி இலக்கியங்களில் பாட்டு ஒரு இலக்கியம்தான். ஒப்பாரி என்பது இறந்தவர்களை நினைத்து அழும் பெண்கள் பாடுவதாகும். நாட்டுப்புற மக்களின் பிறப்பிடமான மரபு பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் இவற்றோடு இரண்டறக் கலந்து விட்ட நாட்டுபுறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்படுகிறது. ஒப்பாரியைப் பற்றி பாடும் பொழுது இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றி பாடுவார்கள் தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறுநிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு. அழுகைப்பாட்டு என நம் முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர்.
‘குழந்தைப் பெற்றவளுக்குத் தாலாட்டும் கணவனை இழந்தவளுக்கு ஒப்பாரியும் தானே வரும்” என்பது பழமொழி ஒப்பாரி பாட்டு பற்றிக் கட்டுரையில் கூறப்படுகின்றது.
ஒப்பாரி பொருள் விளக்கம்:
ஒப்பாரி என்பதனை ஒப்பூஆரி ஸ்ரீ ஒப்பாரி எனப் பிரித்துக் கொள்ளலாம், ஒப்பு என்றால் இழந்தப்பொருளுக்கு இணை என்றும், இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பதம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் அழுகைப்பாட்டு என்றும், போலி என்றும், ஒப்பு என்றும் அகராதி பொருள் விளக்கம் தருகிறது. ஆரிப்பது என்பதை அவழச்சுவையுடன் ஆரவாரம் செய்வதும் என்றும் கூறலாம். எனவே இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒரு வகை இசைப்பாடலே ‘ஒப்பாரி’ என்கிறார் மு.அண்ணாமலை.
‘மக்களே போல்வர் கயவர் அலரன்ன
ஒப்பாரியுங் கண்டது இல்” (குறள்-1071)
ஒப்பாரி:
ஒருவருடைய நெங்கிய உறவினர்கள் இறக்கும் போது இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளையும், அவர்கள் இறந்ததால் அடையப்போகும் துயரத்தையும் பாடலாகப் பாடுவார்கள். ஒப்புச் சொல்லி அழுவதால் ஒப்பாரி என்று அழைக்கப்படுகிறது.
அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்!
'ஆயிரத்தொரு இரவுகள்' என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில், அதாவது திரைப்படத்திற்கான காட்சிகள் ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல்.
ஆயிரத்தொரு இரவுகள் அரபிக் கதையல்ல. இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால் வியாபாரப் பொதிகளோடு எடுத்துச் செல்லப்பட்டது. இப்படியான கதை சொல்லல் ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள எழுத்தாளர்கள் மீது தாக்கத்தை உருவாக்கியது . கன்ரபரி கதைகள் (The Canterbury tales) போன்றவை ஆயிரத்தொரு இரவுகளின் தாக்கமே .
மாலையில் கன்னிப்பெண்yணை திருமணம் செய்து, இரவில் புணர்ந்து விட்டு கொலை செய்யும் பக்தாத் அரசனிடமிருந்து ( Caliph of Baghdad- Harin el- Rashid 786-809) ஷரசாட் (Shahrazad) என்ற மந்திரியின் பெண் உயிர் தப்புவதற்காக அரசனின் கட்டிலின் கீழ் உள்ள தங்கைக்குச் சொன்ன கதைகளின் தொகுப்பே ஆயிரத்தொரு இரவுகள் . ஒவ்வொரு இரவிலும் கிளைமாக்ஸில் கதை நிறுத்தப்படும். ஆனால், அதைக் கேட்பதற்காக அரசன் அடுத்த நாள் காத்திருப்பதால் கொலை நடக்காது. இப்படி ஆயிரத்தொரு இரவுகளின் பின்பு அரசன் திருந்தி ஷரசாட்டை மணமுடிக்கிறான்.
அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் அவரது சுயசரிதை . அந்த சுயசரிதை தமிழகத்தில் மாத சஞ்சிகைகளில் சிறுகதைகளாக வெளிவந்தது. வெவ்வேறு துண்டுகளாக நான் படித்திருந்தேன் . ஒன்றாகவே படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அவரது நினைவுகளைக் கதைகளாக்கி அதற்குள் கதையை வைத்துள்ளது, எனக்கு உயிருக்குப் பயந்து ஷரசாட் சொன்ன கதைகளை நினைவூட்டியது. இதை நான் சொல்லக் காரணம் ஒவ்வொரு பகுதியிலும் சுவை குன்றாது எழுதியிருக்கிறார் . அத்துடன் ஒவ்வொரு கதையிலும் உள்ளே பல உப கதைகளை உள்ளே ( there are frame stories that contain nested narratives.) வைத்திருக்கிறார்.
சிறுகதை : " குக், கூ " குயிலிக்காரி!
அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு பல்வேறு அனுபவங்களைப் பெறுவது ஆச்சரியமாக.... இருக்கிறது. மாலை நேரம்.இருள் மெல்ல, மெல்ல மங்கலாகக் கவியத் தொடங்கி இருந்தது. வீதிப்புறத்தில் சிறிய தொலைவிலிருந்து " குக் கூ ,குக் கூ ! " குயில் கூவும் குரல் கேட்டது. குயில் கூவுதாக்கும் என சீலன் நினைத்துக் கொண்டான்." என்ன ஒரு கூவல் ! ,இது , ஒரு சிறுமி ஒருத்தி குயிலைப் போலக் கூவுகிறாள். நல்ல குரல் வளம். இவளைக் கண்டுப் பிடித்து சினிமாப்பாடல்களை பாட பழக்கினால் கலக்குவாள்"என்றார் அம்மா. அம்மா,அராலிப் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிற மங்களம் ஆசிரியை .அவனும் அந்த பள்ளிக்கூடத்திலே தான் பத்தாம் வகுப்பைக் குறைத்து ஒன்பதாம் வகுப்பாக்கி இருந்த புதிய கல்வித் திட்டத்தில் படித்திருந்தான்.பிறகு எங்கெங்கோ...?அதை பிறகுப் பார்ப்போம்.சும்மா சொல்லக் கூடாது. குயிலே தோற்று விடும்.அந்த மாதிரிக் கூவல் .அவன் உடனேயே வெளியே ஓடிப் போய் வீதியில் பார்த்தான்.அது மண் ஒழுங்கை,சிறிது சென்ற பிறகு ,மற்ற ஒழுங்கையை அடைந்து விடும்.சந்தியில் குடி நீர்க்குழாய் இருக்கிறது. அது சற்றுத் தொலைவு. இருள் கூட கூடி விட்டிருந்தது. சென்று வலது,இடது பார்த்து கண்டுப் பிடிப்பது சிரமம். சிறுமி என்பதால் கூவி விட்டு ஓடி இருப்பாள். அது சரி ! ,குரல் சிறுமியின் குரல் ? என்பதை எப்படி கண்டு பிடித்தார்?.ஆச்சரியம் தான்.பெரிசுகளிற்கு இந்த விளையாட்டு சரி வராது.
தொடர்ந்து பலநாட்கள் தொடர்ச்சி ...என்றில்லை, அந்தக் கூவல்கள் இருள் பின்னணியில் கேட்டுக் கொண்டே இருந்தன. கண்டு பிடிப்பது சுலபமாக இருக்கவில்லை. அம்மாவிற்கு நிருபர் மூளை, அந்தக் குயிற்காரி யார் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்." ரீச்சர் ,இவள் நல்லாய்க் கூவுவாள்" எனச் சுகந்தியை அவள் தோழி சொல்லிக் காட்டிக் கொடுத்து விட்டாள். கறுத்த சிறுமி, கறுப்பென்றால் அதிகம் கலரைச் சேர்த்து விடாதீர்கள். "நீயா ,அந்தக் குயில்"என அம்மா, அவளை ஆச்சரியத்துடன் அழைத்து விசாரித்தார். அம்மாவை எல்லாச் சின்னப்பிள்ளைகளிற்கு மட்டுமில்லை பெரிய மாணவர்களிற்கும் நன்கு பிடிக்கும்.அம்மா, படிப்பிக்க வந்த நாளே, பேருந்திலிருந்து உள்ளே நன்கு தள்ளி இருக்கிற பள்ளிக்கூடத்திற்கு நடந்துச் செல்கிற போது, சிறுவர்களிற்கு யார் எனத் தெரியாது கிராமத்திற்கு வந்திருக்கிற புதியவராக இருக்க வேண்டும் என நினைத்த உதயன், தனது நண்பர்க்குழாமுடன் ஒரு மதகிலிருந்து கடந்து போக "மெல்லப் போ, மெல்லப் போ மெல்லிடை என்னவாகும்.."எனப் பாடினான்.
வீரகேசரியில் வெளியான வ.ந.கிரிதரனின் வானியற்பியல் (Astro Physics) கட்டுரைகள்!
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வானியற்பியல் பற்றிய எனது ஐந்து அறிவியற் கட்டுரைகள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. அவை பற்றிய விபரங்கள்:
1. விளக்கங் காணும் வெளிநேரம் பிரபஞ்சம்! அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 15.9.1991)
2. பிரபஞ்சத்து மாயங்கள்! கரும் ஈர்ப்பு மையங்கள்! விண்ணிலே சூழ உள்ளவற்றைப் பொறிவைத்துப் பிடிக்கும் ஈர்ப்பு வலயங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 10.11.1991)
3. சூத்திரங்களினால் துலங்கும் பேரண்டச் சூக்குமங்கள்! அச்சை விட்டு விலகிச் செல்லும் பிரபஞ்சக் குடும்பங்கள். - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 8.12.1991)
4. அதிசயமான அடிப்படைத் துணிக்கைகள்! பெளதிகக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தும் அடிப்படை உண்மைகள்! விசைகளே! பிரபஞ்சத்தின் அத்திவாரங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 2.2.1992)
5. அடர்த்தியுள் ஒளிந்திருக்கும் பிரபஞ்சச் சூனியங்கள்! ஆறுதல் அற்று விரையும் அண்டப் பொருட்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 5.4.1992)
யதார்த்ததிலிருந்து தனிமைப்படுத்தல்: நெஞ்சம் மறப்பதில்லை.
"தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்.
ஒரு தூதுமில்லை. உன் தோற்றமில்லை.
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.
நெஞ்சம் மறப்பதில்லை. அது தன்
நினைவை இழக்கவில்லை.
நான் காத்திருந்தேன்.
உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை. என்
கண்களும் மூடவில்லை."
- கவிஞர் கண்ணதாசன் -
'யதார்த்ததிலிருந்து தனிமைப்படுத்தல்' (Quarantine from Reality) 'யு டியூப் சான'லிலிருந்து நான் கேட்ட, இரசித்த இக்காலத்தால் அழியாத கானத்தை நீங்களும் ஒரு முறை கேட்டுப்பாருங்களேன். பாடகி அனு ஆனந்த் சிறப்பாகப் பாடியுள்ளார். காணொளியின் இறுதியில் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலில் பாடகர் பத்மநாபன் பாடுவார். அதுவும் இக்காணொளியின் சிறப்பு.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிவுகளின் வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! உங்கள் இல்லங்களில் இன்பப்பூக்கள் பூத்திடட்டும்! உங்கள் எண்ணங்கள் யாவும் எண்ணியவாறே நிறைவேறிடட்டும்! ஆரோக்கியமான எண்ணங்களுடன், உடல் நலத்துடன் உங்கள் வாழ்க்கை தொடரட்டும்! சிறக்கட்டும்!
‘ஃபனி போய்’: நாவலும் சினிமாவும்
கடந்த டிசம்பர் 04 2020இல் CBC Gem இல் தீபா மேத்தாவின் ‘ஃபனி போய்’ சினிமாவின் கனடா தழுவிய காட்சிப்படுத்தல் நிகழ்ந்தது. நான் பார்த்தேன். ஆயினும் கணினியில் பார்த்ததில் அது போதுமான விகாசம் கிடைத்திருக்கவில்லை. அதனால் மீண்டும் Shyam Selvadurai யின் Funny Boy நாவலுக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் புகுந்து வெளியேறினேன்.
நாவலினூடு சினிமாப் பிரதியின் பிரவேசம் அவ்வளவு அவசியமில்லையென முன்பெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் பிரச்னை எழுந்துள்ள இந்தச் சூழ்நிலைக்கு அது அவசியமென்று பட்டது. ஏனெனில் ஒரு நாவலை சினிமா ஆக்குவதென்பது தழுவி எழுதுதல், அதன் பாதிப்பில் எழுதுதல், அதன் பிடித்த ஒரு பகுதியை மய்யமாக்கி மற்றவற்றை தான் புதிதாய்ப் புனைந்தேற்றல் என பல வழிகளும் தளங்களும் கொண்டது. ஆக, சினிமா நாவலை எவ்வளவு தூரம் சுவீகரித்துள்ளது என்பது சினிமாவின் ஆன்ம தரிசனத்தின் ஒரு நிலையை அறிய உதவியாயிருக்கும். ஆயினும் நாவலின் சுவீகரிப்பு எவ்வளவாயிருந்தாலும் அதன் கணிப்பு சினிமாவின் தன்மைகளைக் கொண்டே அமையவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கூடா. அதைக் கணிக்க சினிமாபற்றிய அலகுகள் தனியாகவே உள்ளன.
என் வாசிப்பும் காட்சியும் முடிந்து நான் திரும்புவதற்குள் தமிழ்ப் புலத்திலும். ஆங்கில பத்திரிகை உலகத்திலும், பிற ஊடகங்களூடாகவும் முடிந்தளவு வலிமையாக துருவ முரண் எல்லைகளில் அச் சினிமாபற்றிய அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டு விட்டிருந்தன.
‘ஷ்யாம் செல்வதுரையின் அர்த்தபூர்வமான தளங்களும், தீபா மேத்தாவின் அவற்றின் காட்சிப்படுத்தல்களும் மிக வலிமையாக சினிமாவில் வெளிப்பட்டுள்ளன’ என்பதான Andrew Parker இன் The Gate இல் வெளியான விமர்சன அபிப்பிராயம் மிக முக்கியமானதென்கிறார்கள் திரை விமர்சகர்கள். அது பின்னால் வந்த விமர்சனங்களை நெறிப்படுத்தியது என்ற குற்றச்சாட்டும் உடனடியாகச் சொல்லப்பட்டது. Los Angeles Times இன் Tracy Brown, National Post இன் Chris Knight, The Global and Mail இன் Tina Hassannia வின் கருத்துக்களும் ‘ஃபனி போய்’ சினிமாவை நிறுதிட்டமாக உயர்த்தி வைத்தியிருக்கின்றன. போதாததற்கு TIFFஇன் ஆண்டின் சிறந்த பத்து படங்களுள் ஒன்றாக இது தேர்வாகியும்விட்டது.
எப்போதும் துருவ முரண்களின் அபிப்பிராயங்கள்போலவே நடுநிலைக் கருத்து வெளிப்படுத்துகைகளிலும் ஒருவரின் அரசியல் பொருணிலை பண்பாட்டுக் கூறுகள் உள்ளன என்பது ரோலன் பார்த்தின் பின்அமைப்பியல் வாதம். இரு துருவ நிலைகளும், நடுநிலையும்கூட, அரசியல் காரணப் புலங்கள் கொண்டவை.
அஞ்சலி: கணக்காளர் சார்ள்ஸ் நிமலரஞ்சன் மறைவு!
'சாமி அக்கவுண்டிங் சேர்விஸ்' நிறுவனத் ('டொராண்டோ', கனடா) தலைவரும், கணக்காளருமான திரு.சார்ள்ஸ் நிமலரஞ்சன் அவர்களின் மறைவு அதிர்ச்சியைத் தந்தது. கடந்த இருபது வருடங்களாக நான் இவரை அறிந்திருக்கின்றேன். வருமானவரி சம்பந்தமான ஆலோசனைகள் எவையாயினும் முதலில் நான் நாடுவது இவரைத்தான். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நண்பர் சார்ள்ஸ் பழகுவதற்கு இனியவர். சார்ள்ஸ் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நண்பர் சார்ள்ஸின் எதிர்பாராத மறைவு பலருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். இவரது மறைவு பற்றிய செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து நானின்னும் மீளவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் இவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டிருந்தேன். இதுவரையில் எனது மின்னஞ்சல்கள் எவற்றுக்கும் அவர் பதிலளிக்காமல் விட்டதில்லை. ஆனால் இதற்கு அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை. வேலையில் 'பிசி'யாக இருக்கக்கூடுமென்று நினைத்திருந்தேன். நத்தார் தின வாழ்த்து மடலும் அனுப்பியிருந்தேன். அதற்கும் அவரிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை. அவரது வழமைக்கு மாறான நடத்தை சிறிது வியப்பைத் தந்தது. அவரது நிறுவன இணையத்தளத்தையும் வடிவமைத்துக்கொடுத்திருந்தேன். அதுவும் கடந்த சில நாட்களாக இயங்காமலிருப்பதை அறிந்தேன். அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இன்று மாலை செய்தி அறிந்தேன். கடந்த இரு வாரங்களாக வைத்தியசாலையில் கோவிட் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு, 'வெண்டிலேட்டர்' பொருத்தப்பட்ட நிலையில் இன்று இவர் மறைந்ததாக அறிந்து திகைப்பும், துயரும் அடைந்தேன்.
அவரது எதிர்பாராத மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்தம் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.
ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்
முன்னுரைதமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹைக்கூவும் சென்ரியுவும் வடிவ அளவில் ஒன்றாக தோன்றினாலும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மனித நடத்தைகளையும் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவின் சென் தத்துவம், புரிதல் அற்ற தன்மை, வார்த்தைகள் தேர்ந்தெடுப்பு ஆகிய இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டது. சென்ரியு எவ்விதமான கட்டுபாடுகளும் இன்றி சுதந்திரமாக செயல்பாட்டினை உடையது. சென்ரியுவின் இத்தகைய தன்மையே சென்ரியு பிற இலக்கியங்களிலிருந்து வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் தனித்தன்மைகளான அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, உண்மையை உரைத்தல், விடுகதை, பொன்மொழி ஆகியத் தனித்தன்மைகள் ஈரோடு தமிழன்பனின் 'ஒரு வண்டி சென்ரியு' நூலில் வெளிப்படும் தன்மையினை இவ்வாய்வுக்கட்டுரை ஆராய்கிறது.
அங்கதம்
அங்கதம் என்பது நகைச்சுவையும் கருத்து வளமும் உடைய இலக்கிய வடிவம். சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளை நேரடியாக அல்லது மறைமுகமாக எடுத்துரைப்பது ஆகும்.
“அங்கதத்தின் பணி ஒருவரை இழித்துரைப்பதோடு முடிந்து விடுவதில்லை மாறாக அன்னாரைக் கண்டித்து திருத்தி சீர்திருத்தும் பொழுதே அதன் பணி முழுமையடைகின்றது. ஆக பழிப்புக்குரிய ஒன்றை ஏளனம் செய்து தாழ்த்தியுரைத்து உணர வைத்து திருத்துகின்ற ஓர் உன்னத இலக்கியக் கலையாக அங்கதம் உருவெடுத்துள்ளது.”1
என்று கூறப்படுகின்றது. அங்கதம் குறித்து தொல்காப்பியத்தில்
“அங்கதம் தானே அரில்தபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே”2
அங்கதமானது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். நேரடியாக உண்மையை உரைப்பது செம்பொருள் அங்கதம் மறைமுகமாக உலகியல் நிகழ்வை உரைப்பது பழிகரப்பு அங்கதம் என்றும் கூறப்படுகின்றது.
ஆய்வு: கிறித்துவ சமய மக்களின் விழாக்களில் நாட்டார் பண்பாட்டின் தாக்கம் (விழுப்புரம் மாவட்டம்)
முன்னுரைதமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியம், கிறித்தவம், ஆகிய பல தரப்பட்ட சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றன. பல சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களின் நிறுவனங்கள் கட்டமைத்துள்ள முறைகளையும், வழிபாடுகளையும், பின்பற்றுகின்றனர். மக்கள் தங்கள் சமய சட்டங்களை கடைபிடித்தாலும், வெகுசன மக்களாகிய அவா்களின் உள்ளங்களில் உயிராய் கலந்துகிடக்கின்ற நாட்டார் பண்பாட்டின் தாக்கம் அவா்களின் வாழ்வில் விழாக்களில் அதிகம் காணப்படுகின்றன என்று பல நாட்டார் வழக்காற்றியல் அறிஞா்கள் கூறுகின்றனர். நாட்டார் பண்பாடு தென்தமிழக, கிறித்துவ மக்களின் விழாக்களில் பரந்து விரிந்த தன்மை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன், பிலவேந்தரின், இருதயராஜ் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர் இந்நிலையை நாட்டார் பண்பாடு வடத்தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்துவ விழாக்களில் எவ்வாறு அடித்தளமிட்டுள்ளது. என்பதை பற்றி ஒரு சில விழாக்களில் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.
புனித வியாழன்
“பெரியவியாழன் அல்லது புனித வியாழன் என்பது கிறித்தவா்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகவா்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது Holy Thusday Maundy Thusday என்றும் அழைக்கப்படுகிறது.”1
இயேசு தான் சிலுவையில் பாடுகள் படும் முன் தினம் இரவு கெஸ்தமணி தோட்டத்தில் செபித்தார் அதை நினைவுக் கூறும் வகையில் அனைத்து கிறித்துவ கோவில்களிலும் “மாற்றுப் பீடம் அமைத்து மக்கள் அன்பின் வாரியாக வந்து விளக்குகளை ஏற்றி அன்று இரவு முழுவதும் கண்விழித்து இயேசு அணுபவித்த துன்பத்தை தானும் உணரவேண்டும்”2 என்று திரு.அ.மாரியநாதன் அவா்கள் கூறுகின்றார். இந்த நிகழ்வு ஒருவா் இறந்துவிட்டார் இரவு முழுவதும் இருந்து வேண்டுவதை குறிக்கும் ஒரு நாட்டார் நம்பிக்கையாக கருதப்படுகிறது.
ஆதரவு நல்கும் அன்பர்களுக்கு நன்றி கோடி!
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கவிதை: கழிவிரக்கக் குளத்தில்..!
நான்
ஆழமும், முடிவுமற்ற
கழிவிரக்கக்குளத்தில்
மூழ்கிக்கொண்டிருக்கின்றேன்.
முடிவற்ற தொடர் பயணத்தில்
பயணித்துக்கொண்டிருக்கின்றேனா?
இணையம் அறிவோமா? : பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்
- இனிது இணைய இதழில் (https://www.inidhu.com) வெளியான 'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய குறிப்பு. -
உலகத்தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியம் பேசும், நவீன முன்னெடுப்புகளான தமிழின் பல்வேறு வடிவங்களைப் பதிவு செய்யும் இணைய இதழ் தான், பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்! இத்தளத்தின் ஆசிரியர் வ.ந.கிரிதரன் ஆவார். இவர் சிறந்த இலக்கியவாதி, திறனாய்வாளர், வரலாற்றாலாளர், இதழாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவரின் சீரிய முயற்சியில் 2000 லிருந்து தொடர்ந்து இவ்விதழை நடத்தி வருகிறார்.
“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” எனும் மந்திரச் சொல்லுடன் அறிவை உலகமயமாக்கும் பெரும் தமிழ் உழைப்பே இத்தளம். இத்தளத்திலுள்ள தலைப்புகளுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் படைப்புகள். அவை கீழ்கண்டவாறு உள்ளன.
எனது முகநூற் பதிவொன்று: எழுபதுகளில் அமெரிக்கா சென்ற இளம் விவசாயி ஒரு நகைச்சுவைப் பத்திரிகை ஆசிரியர்!
1906 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழ் சஞ்சிகையொன்று வெளிவந்துகொண்டிருக்கின்றது. அதுதான் இலங்கை அரசின் கமத்தொழில் திணைக்களத்தால் வெளியிடப்படும் 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகை. தமிழ் விவசாயிகள், பண்ணைகள் நடத்துவோர் போன்ற பலருக்கும் மிகுந்த பயனுள்ள கட்டுரைகளைத் தாங்கி வரும் சஞ்சிகை. 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகையின் பழைய பிரதிகள் பலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.
பழைய 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ட ஒரு தகவல் என்னை வியப்படைய வைத்தது. 1974இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் அமெரிக்க இளம் விவசாயிகள் நிறுவனமான 4-ஏச் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட பண்ணை வாலிபர் மாற்றீட்டுத் திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்க இளம் விவசாயிகளின் விருந்தாளியாக அமெரிக்காவில் ஆறு மாத காலம் வரை தங்கியிருந்திருக்கின்றார்.
அவர் இணுவில் ஜோதி இளம் விவசாயிகள் கழகத்தின் தலைவர். சொந்தத்தில் மிகப்பெரிய நாற்றுப் பண்ணையை நடத்தி வந்திருக்கின்றார். நல்லின மாங்கன்றுகளை ஒட்டு முறை மூலம் இன விருத்தி செய்வதில் இவர் கை தேர்ந்தவரென்று 'கமத்தொழில் விளக்கம்' கூறுகின்றது.
என்னை வியப்படைய வைத்தது இச்செய்தியல்ல. இவ்விதம் அமெரிக்காவுக்குச் சென்ற இளம் விவசாயி ஒரு நகைச்சுவைச் சஞ்சிகை ஆசிரியர் என்பதுதான். எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நகைச்சுவைச் சஞ்சிகையான 'கலகலப்பு' சஞ்சிகையைப் பலரும் அறிந்திருப்பார். அந்தக் 'கலகலப்பு' சஞ்சிகையின் ஆசிரியர் தான் மேற்படி இளம் விவசாயி என்னும் விபரத்தையும் 'கமத்தொழில் விளக்கம்'சஞ்சிகை கூறுகின்றது.
சிறுகதை: யாதுமாகி நின்றவள்..!
‘அண்ணி வந்து சாப்பிடுங்களேன்..!’
‘இல்லை நிலா எனக்குப் பசிக்கலை..!’
‘இரண்டு நாளாய் நானும் பார்க்கிறேன், மதியம் ஒரு சாப்பாட்டோட நீங்க இருக்கிறீங்க ஏன் அண்ணி?’
‘எங்க ஊர்க் கோயில் உற்சவம் நடக்குது அதுதான் விரதம் இருக்கிறேன்..!’ என்றாள் சுபா.
‘சரி, காலையில சாப்பிடாட்டி விரதம் என்று எடுத்துக்கலாம் அதுக்காக நீங்க இரவிலும் சாப்பிடாமல் இருக்கணுமா?’
சுபா சிரித்துச் சமாளிக்கப் பார்த்தாள்.
‘டயற்ரிங் என்று சொல்லப் போறீங்களா..? அளவாய், அழகாயிருக்கிறீங்க, என்னுடைய கண்ணே பட்டிடும் போல இருக்கு, இதைவிட மெலிஞ்சால் வடிவாயிருக்காது அண்ணி, ஏன் சாப்பிறதில்லை?’
சுபா எதுவும் சொல்லாது மௌனமானாள்.
‘அண்ணா ஏதாவது சொன்னானா, சொல்லுங்கண்ணி..?’
சுபா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டாள்,
‘உங்கண்ணா சாப்பிடாமல் பட்டினி இருப்பாரா?’
‘அவரா, பசிதாங்கவே மாட்டார்..! ஒரு நேரம் சாப்பாடு தாமதமானாலே கொதிச்சுப் போயிடுவாரே’
இணையவெளி: நூல்களைப் பேசுவோம்!
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
திரை மொழி காலாண்டிதழ் : நமக்கான சினிமாவைத் தேடி... இலங்கையில் முதல் முறையாக தமிழில் உலக சினிமா பற்றிய சஞ்சிகை!
ஜனவரி மாதம் முதல் இலங்கையில் முதல் முறையாக ஒரு உலக சினிமாவுக்கான சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது ஒரு காலாண்டிதழ். கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான முகத்தை உருவாக்கும் இந்த பணிக்கு கட்டுரை தந்து உதவுங்கள்.
ஆய்வு: நாணற்காடன் சிறார் கதைகளில் இயற்கையும் அறிவியலும்
முன்னுரை
தமிழில் சிறார் இலக்கியங்கள் என்பது மிகவும் அரிதாக இருக்கின்ற நிலையில், நாணற்காடன் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகின்றார். அந்த வகையில், தன் முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 11/04/2020 முதல் 30/04/2020 வரை வெளியிட்டுள்ள சிறார் கதைகளில் இயற்கை மற்றும் அறிவியல் பற்றி இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது.
ஆசிரியர் அறிமுகம்
நாணற்காடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்ற ஊரைச் சார்ந்தவர். தனியார் பள்ளியில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கூப்பிடு தொலைவில், பிரியும் நேரத்தில் என்ற இரு ஹைக்கூ நூல்களையும் சாக்பீஸ் சாம்பலில், நூறு நாரைகளாய் நின் நிலமெங்கும் என்ற இரு கவிதை நூல்களையும் கோமலி, கர்வாச்சௌத் என்ற இரு இந்தி மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பினையும் அப்பாவின் விசில் சத்தம் என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பினையும் படைத்திருக்கிறார். இதில் சமீபத்தில் வெளியான நூல் கர்வாச்சௌத் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இவர் நாமக்கல் மாவட்டத் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றியதோடு, தற்போது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராக இருக்கின்றார். தமிழிலிருந்து இந்தி, இந்தியிலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். பன்மொழிப் புலமை கொண்ட இவர், தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருகிறார்.
இந்தச் சிறார் கதைகளை எல்லா தரப்பட்ட வயதினரும் வாசிக்கின்றார்கள். பின்னூட்டத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு இந்தக் கதைகளைச் சொல்லி வருவதாகவும் மேலும் தாங்கள் குழந்தைகளாகவே மாறி விடுவதாகவும் பதிவு செய்தனர். இதுபோன்ற வாசகர்களினுடைய பின்னூட்டங்கள், ஆசிரியருக்கு மேலும் மேலும் கதை எழுதுகிற ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் இருவர்: இலங்கையர்கோன் & சாகித்திய இரத்தினா" பண்டிதர் க. சச்சிதானந்தன்!
1. பல்திறன் கொண்ட படைப்பாளி இலங்கையர்கோன்..!! ஈழத்தில் 1930 முதல் சிறுகதைகள் புதிய வடிவமும் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டனவாகவும் வெளிவரத்; தொடங்கின. முன்னோடிப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தவர்களின் ஆங்கில மொழிப் பயிற்சியும், தமிழக இதழ்களில் வெளியான சிறுகதைகள் மீதான பார்வையும் அவர்கள் சிறந்த கதைகளைப் படைக்க ஏதுவாகவிருந்தன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்களில் ஒருவராகவும் அன்றுதொட்டு இன்றுவரை இலக்கிய வரலாற்றில் முக்கியமானவராகவும் பலராலும் குறிப்பிடப்படுபவர் இலங்கையர்கோன. இவரது இயற்பெயர் த. சிவஞானசுந்தரம். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கில மொழிமூலம் கல்விகற்று நிர்வாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுக் காரியாதிகாரியாக (னு.சு.ழு.) கடமையாற்றியவர். சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் திகழ்ந்தவர்.
இவர் ஆங்கிலப் படைப்புகளின் நோக்குகளை நன்கு புரிந்துகொண்டு முதலில் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். வெளிநாட்டுச் சிறந்த கதைகள், நாடகங்கள் சிலவற்றை மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.18 வயதுக் காலத்திலேயே இவர் எழுதத் தொடங்கிவிட்டார். புராண, இதிகாச, வரலாற்றுக் கதைக் கருக்களைக்கொண்டு சிறுகதைகளை முதலில் எழுதினார்.
இந்தியாவில் 'முப்பெரும் விழா' நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது!
இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு 'முப்பெரும் விழா' மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய எட்டு பிரிவுகளிலும் பல நூல்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு உரிய எழுத்தாளர்களுக்கு இந்த விழாவில் விருதோடு பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.
தினகரன் வாரமஞ்சரி: டெட்லாவின் குழந்தை!
- தினகரன் வாரமஞ்சரியில் (டிசம்பர் 20, 2020) வெளியான சிறுகதை. -
1.
கேசவன் அவன் வசிக்கும் தொடர்மாடிக்கட்டடத்தின் 'அபார்ட்மென்ட்' பல்கணிக்கு வந்துநின்று எதிரே விரிந்துகிடந்த மாலைநேரத்து வானை நோக்கினான். விரிந்துகிடந்த அந்திவான் நெஞ்சில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. மெல்லிய இருள் பரவிக்கொண்டு வந்தது. மெல்லிருளும் அந்தியின் வெளிச்சமும் கலந்த வானம் சிவந்துகிடந்தது. அந்தச் சிவப்பின் பின்னால் அடிவானத்திற்குள் ஒளிந்துவிட்ட கதிரவனின் கைங்கரியமிருந்தது. தொலைவில் அந்தி வானை ஊடறுத்தபடி ஜெட் விமானமொன்று நிழலாக விரைந்து கொண்டிருந்தது. கேசவனின் மனதை எப்பொழுதும் இயற்கையும், அதன் வனப்பும், வாழும் உயிரினங்களும் கவர்ந்தவை. சிட்டுக்குருவிகளை, புறாக்களை, அணில்களின் வாழ்வை இரசிப்பதில், அவதானிப்பதில் பொழுது போவதே தெரியாமல் மெய்மறந்து நிற்பான். அவ்விதமான சமயங்களில் விரிந்து கிடக்கும் விண்ணைக் கிழித்தபடி விரைந்துகொண்டிருக்கும் பூமிப்பந்தினைப் பற்றி நினைத்துக்கொள்வான். விண்வெளியில் பூமிக்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு விரையும் பூமி எவ்விதம் தெரியுமெனச் சிந்தித்துப் பார்ப்பான். சிறியதொரு வாயுக் குமிழியாக விரையுமொரு குமிழி. ஆனால் உயிர்த்துடிப்புள்ளதொரு குமிழி. அந்தக் குமிழிக்குள்தான் எத்தனை விதமான உயிரினங்கள். பல்வேறு அறிவு நிலைகளில் பல்வகை உயிரினங்கள். அறிவு நிலையில் வேறு பட்டிருந்தபோதிலும், இனத்தைப் பெருக்குவதில், குழந்தைகளை வளர்த்தெடுத்து ஆளாக்குவதிலும் அனைத்தும் காட்டும் கடமை, பாசவுணர்வு எப்பொழுதுமே அவனைப் பிரமிக்க வைத்தன. அதே சமயம் விண்ணில் விரைந்து செல்லும் இந்த நீலவண்ணக் கோளுக்கு வெளியில் கவிந்து கிடக்கும் தனிமையும், வெறுமையும் ஒருவித அச்சத்தினையும், இந்தப் பூவுலகில் வசிக்கும் ஜீவராசிகள்பால் ஒருவித பரிவினையும் ஏற்படுத்தின. வெளியினூடு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் விரையுமிந்தக் கோளின் வேகத்தினையும் உணர முடியவில்லை. இதற்கு வெளியே விரிந்து, கவிந்து கிடக்கும் வெறுமையையும், தனிமையையும் உணர முடியவில்லை. உள்ளே நாடு, மதம், மொழி, இனம், சாதி.. என்று எத்தனை வேறுபாடுகள். குத்து வெட்டுகள். இந்தக் கோளும், இங்கு வாழும் உயிரினங்களும் எவ்வளவு கொடிய தனிமை சூழ்ந்த வெறுமைக்குள் வாழ்கின்றார்கள்? அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?
'டொராண்டோ'வில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஈழத்துத் தமிழ் அகதிகளில் கேசவனுமொருவன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து மேற்கு நோக்கிப் படையெடுத்தவர்களிலொருவன். வயது நாற்பதை எட்டிக்கொண்டிருந்தது. ஓரிரு நரைகளே தென்பட்டன. ஆனால் வலுவான உறுதியான உடல். இன்னும் திருமணம் செய்துகொள்ளாத தனிக்கட்டை. பிரமச்சாரி. அவனது பதின்ம வயதில் அனைவருக்கும் வருவது போல் அவனுக்கும் ஒரு பெண்மேல் ஈர்ப்பு வரத்தான் செய்தது. வந்த வேகத்திலேயே அது பறந்தோடி விட்டது. அதன் பிறகு நாட்டுச் சூழல் அவனை உலகின் பல்வேறு திக்குகளிலும் தூக்கியெறிந்து பந்தாடியதில் பொழுது சென்றதே தெரியவில்லை. எவ்வளவு விரைவாகக் காலம் ஓடிவிட்டது என்று பிரமித்தபோது காதோரம் நரை தட்டத் தொடங்கி விட்டிருந்தது. வயதும் நாற்பதை எட்டியிருந்தது. திருமணம் செய்யும் ஆசையே போய்விட்டது.
ஆய்வு: திருக்குறளில் நீதிக் கருத்துக்கள்
முப்பால், உத்தரவேதம், தமிழ்மறை, உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, என்னும் சிறப்பினைப்பெற்ற அரியநூல் திருக்குறள். இந்தக் குறள் வெண்பாவைவிடச் சிறந்த நூல்கள் இருந்தாலும் அந்த நூல்கள் இனம், மதம், மொழி, குலம், நாடு என்கின்ற கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கின்றது. இந்த முப்பால் மட்டும் எந்தப் பிரிவினைக்குள்ளும் சிக்காமல், எந்தக் காலத்திற்கும் பொருந்துவதான பொதுமைக் கருத்தினைச் சுமந்து நிற்கின்றது. குறளில் கூறப்பாடாத செய்திகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்துக் கருத்துக்களும் பொதிந்து கிடக்கின்றன. இவ்வாறான பல சிறப்புக்களை உள்ளடக்கிய திருக்குறளிலுள்ள அறத்துப்பாலில் (பாயிரவில், இல்லறவியல், துறவறவியல்) நீதிக்கருத்துக்களைக் குறித்து ஆய்வதாக இந்தக் கட்டுரை அமைகின்றது.
திருக்குறள் நூல் அறிமுகம்
திருக்குறள் என்னும் நூலின் ஆசிரியர் திருவள்ளுவர். திருவள்ளுவரின் இயற்பெயர் தெரியவில்லை. திரு-என்னும் மரியாதைக்குரிய சொல்லையும், வள்ளுவர் – என்னும் குலப்பெயரையும் சேர்த்து திரு+வள்ளுவர் = திருவள்ளுவர் என்று பெயர் வந்துள்ளது. இவரது காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டாகும். திருக்குறளில் அறத்துப்பாலில் முப்பத்தெட்டு அதிகாரங்களும், பொருட்பாலில் ஏழுபது அதிகாரங்களும், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பாலில் இருபத்தைந்து அதிகாரங்களுமாக மொத்தம் நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 133x10=1330 குறட்பாக்கள் உள்ளன. ச. சுபாஷ் சந்திரபோஸ் தமிழ் இலக்கிய வரலாற்றில் மொத்தம் பதிமூன்று இயல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், திருக்குறள் பரிமேலழகர் உரையில் ஒன்பது இயல்கள் காணப்படுகின்றன. க.ப.அறவாணன் எழுதிய திருக்குறள் சிறப்புரை விளக்கம் கருத்து அடைவு என்னும் நூலில் பத்து இயல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு இயல்பகுப்பில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறள் வெண்பாவாலான இந்தத் திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டமைந்துள்ளது.
கவிதை: அண்டவாசியுடனோர் அளவளாவல்!
தூங்கும் நள்ளிரவு! இரவு வான்!
விரிவெளி!
இரவுப்பட்சிகளில்லை.
மாநகரின் நள்ளிரவில்.
நத்துகள் எங்கே?
நள்ளிரவு ஆந்தைகளெங்கே?
வவ்வால்கள்தம் சலசலப்புமில்லை.
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள் மட்டும் உப்பரிகைகளில்.
விரிவெளி ஒளிச்சிதறல் தூண்டும்
விரிவெண்ணங்கள் விரிமனவானில்.
எங்கோ ஒரு கோடியில்..
இங்கு நான்! அங்கு நீ!
சாத்தியமுண்டா?
சாத்தியமுண்டா?
நானுண்டாயின் நிச்சயம் நீயுமுண்டே.
நீளும் நம்பிக்கையில் நான்.
சந்திப்பு எப்போது?
நம்பிக்கை அதிகம் எனக்குண்டு
அவ்விடயத்தில்
ஆனால் (If) அல்ல
எப்போது (When) என்பதுதான்
இப்போதுள்ள நிலை.
அது புரிந்தவன் நான்.
நம்பிக்கை அவ்விடயத்தில்
மிக்கவன் நான்.
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலுக்குப் பேராசிரியர் செ.யோகராசா வழங்கிய அணிந்துரை!
- கடந்தவருடம் இலங்கையில் இரண்டாவது பதிப்பாக, மகுடம் வெளியீடாக வெளிவந்த எனது (வ.ந.கிரிதரன்) 'அமெரிக்கா' நாவலுக்குப் பேராசிரியர் வழங்கிய அணிந்துரை! -
பேராசிரியர் செ.யோகராசாவின் அணிந்துரை!புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர் வரிசையில் வ.ந.கிரிதரனின் இந்நாவல் வித்தியாசமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகவுள்ளது. இதுபற்றி இவ்வேளை எடுத்துரைப்பது பொருத்தமானதென்று கருதுகின்றேன்.
புலம்பெயர் இலக்கியத்தின் பேசுபொருள் அகற்சியுடையதென்பதையும் பல உட்பிரிவுகள் கொண்டதென்பதையும் ஆழமான வாசிப்புடைய இலக்கிய ஆர்வலர் அறிந்திருப்பர். எனினும் அவற்றுள் சில விடயங்கள் இன்றுவரை போதியளவு பேசப்படவில்லை என்பதே கவனத்திற்குரியது. 'நெடுவழிப்பயண'மும் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவதும் சார்ந்த அனுபவங்கள் இவ்விதத்தில் முக்கியமானவை. ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் போதான நெடுவழிப்பயணம் பற்றி கி.பி. அரவிந்தனின் சில கவிதைகளும், இளைய அப்துல்லாவின் பத்தி எழுத்துகளும் குறிப்பிடத்தக்கவை. கனடாப் பயணம் பற்றிய சில அனுபவங்களை அ.முத்துலிங்கம் பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலிய பயண அனுபவங்கள் சில பத்திரிகைகளில் மட்டும் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் தடுப்பு முகாம் அனுபவங்களுக்குட்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுவது அரிதானது. இத்தகைய அபூர்வமான வாய்ப்பு அவப்பேறாகவோ அதிஷ்டகரமாகவோ இவருக்குக் கிடைத்திருக்கின்றது. இவ்விதத்தில் பேசாப் பொருளாகவிருந்ததொன்று இந் நாவலூடாக முதன் முதலாகப் பேசு பொருளாகியுள்ளமை விதந்துரைக்கப்பட வேண்டியதாகின்றது.
எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் விளைவாக கனடா செல்வதற்கு புறப்பட்டவர்கள் விசா இல்லாமை காரணமாக அமெரிக்காவில் தடங்களுக்குள்ளாகி திருப்பி அனுப்பப்பட வேண்டிய நிலைக்குள்ளானபோது அகதி அந்தஸ்துக் கோரியமையினரால் நியூயோர்க் மாநகரின் ஒரு பகுதியான புரூக்லீனின் ஓர் ஓரத்தே கைவிடப்படும் நிலையிலிருந்த கட்டிடத்தின் ஐந்தாம் மாடியிலே தங்க வைக்கப்படுகின்றனர். அங்கிருந்த மூன்று மாத காலத்திலும் பெற்ற பல்வேறு அனுபவங்களே இந் நாவலாக மலர்ந்துள்ளது. அவைபற்றி இவ்வேளை எதுவும் குறிப்பிடாமல் வாசகரது வாசிப்பிற்கு விட்டுவிடுவதே உசிதமானது.
சு. குணேஸ்வரனின் “மண்ணில் மலர்ந்தவை” இலக்கியக் கட்டுரைகள் - ஒரு பார்வை
சு. குணேஸ்வரன் எழுதிய “மண்ணில் மலர்ந்தவை” என்ற நூல் அண்மையில் கிடைக்கப் பெற்றேன். முன்அட்டைப்படமாக தொண்டைமானாற்றின் அருகாமையில் மரபுரிமைச் சின்னமாக அமைந்திருக்கும் கரும்பாவளிக்கேணி மிக அழகாக அச்சில் பதிவாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் Book Lab இன் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை, யாழ்ப்பாணம் “குரு பிறின்டேர்ஸ்” மிகச் சிறப்பாக அச்சாக்கம் செய்துள்ளது.
சமூக முன்னோடி ஓய்வுபெற்ற அதிபர் திரு செ. சதானந்தன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில், சிறுகதை பற்றிய இரண்டு கட்டுரைகளும் நாவல் பற்றிய மூன்று கட்டுரைகளும் கவிதைத் தொகுதிகள் பற்றிய ஆறு கட்டுரைகளும் “கரும்பாவாளி” ஆவணப்படம் மற்றும் “ஆஸ்திரேலியவில் தமிழ் கற்பித்தல்” ஆகிய கட்டுரைகளுடன் கலை இலக்கிய ஆளுமைகளான கவிஞர் மு. செல்லையா , வே. ஐ வரதராஜன், கண. மகேஸ்வரன், நந்தினி சேவியர், பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் பற்றிய ஐந்து கட்டுரைகளுமாக மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
சிறுகதைகள் பற்றி…
இந்த நூலில் முதலாம், மூன்றாம் கட்டுரைகள் ‘குந்தவை’ (சடாட்சரதேவி) என்ற புனைபெயர் கொண்ட தொண்டைமானாற்றைச் மூத்த பெண் எழுத்தாளரின் சிறுகதைகள் பற்றியதாக அமைந்துள்ளன. “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய சிறுகதைத் தொகுதிகளைத் தந்த குந்தவையின் “பாதுகை” என்ற சிறுகதை பற்றி முதலாவது கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மகனை இழந்த ஒரு தாயின் அவல நிலையை “பாதுகை” என்ற சிறுகதை வெளிப்படுத்தி நிற்பதை குணேஸ்வரன் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கிறார்.
அற்பாயுளில் உதிர்ந்த மலர்: வருண்ராஜ் ஞானேஸ்வரனுக்கு இதய அஞ்சலி !
நான் அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல்லிலிருந்து சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மற்றும் ஒரு புறநகரமான சேல் என்ற ஊருக்கு கனத்த மனதுடன் சென்றுகொண்டிருக்கின்றேன்.
அந்தப்பாதையால் அதற்கு முன்னர் பலதடவைகள் அவுஸ்திரேலியாவின் மாநிலத்தலைநகரம் கன்பராவுக்கு சென்றிருந்தபோது இருந்த மனநிலையில் நேற்றைய தினம் மேற்கொண்ட இந்தப்பயணம் அமைந்திருக்கவில்லை.
இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது முதல் எனக்குத் தெரிந்த சில கலை, இலக்கிய ஆளுமைகள் மறைந்ததையடுத்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதியிருக்கும் நான், எதிர்பாராதவகையில் எனக்கு என்றைக்குமே அறிமுகமில்லாத ஒரு தமிழ் இளைஞன் குறித்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதநேர்ந்துவிட்டதும் விதிப்பயனா ? அல்லது உலகெங்கும் அகதிகளாக அலைந்துழலும் மனித குலத்தின் சோகக்குரலின் எதிரொலியா..?
இலங்கையில் நீடித்த போரின் முடிவுடன், அங்கிருந்து இந்தியாவுக்கும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கும் படகேறி வந்து குவிந்த மக்கள் திரளின் ஒரு பிரதிநிதியான செல்வன் வருண்ராஜ் ஞானேஸ்வரன் இம்மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் ஒரு உயரமான கட்டிடத்திலிலிருந்து குதித்து தற்கொலைசெய்துகொண்டார்.
அவருடைய இறுதி நிகழ்வுக்குத்தான் அவருடையதும் அவரது தாயார் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அவரது தங்கையினதும் புகலிடக்கோரிக்கை விண்ணப்பத்தில் கவனம் செலுத்தும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் மற்றும் அவருடை துணைவியார் ஜெஸி ரவீந்திரன், புதல்வன் அரூரண் ரவீந்திரன் ஆகியோருடன் அவர்களின் காரில் சென்றுகொண்டிருக்கின்றேன்.
இணையவெளி உரை நிகழ்வும் , கலந்துரையாடலும்: சிந்தனைக் களம் (இசை, நடனம்)
வாரம் ஒரு பறவை (4 - 8) மீன்கொத்தி அல்லது மீன் குத்தி....
எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். சூழற் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். அவர் அண்மைக்காலமாகப் பறவைகளைப் பற்றி எழுதி வரும் கட்டுரைத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததொரு தொடர். வாரம் ஒரு பறவையெனப் பறவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றார். அவர் தனது முகநூற் கட்டுரைகளைப் பதிவுகள் இணைய இதழில் பதிவு செய்வதற்கு அனுமதித்துள்ளார். அவருக்கு எம் நன்றி. - வ.ந.கிரிதரன், பதிவுகள்.காம் -
வாரம் ஒரு பறவை (5) :மீன்கொத்தி அல்லது மீன் குத்தி
மீன்கொத்திப் பறவைகளில் பல இனங்கள் இருந்தாலும் யாழ்ப்பாணதில் உங்கள் வீட்டு வளவுகளில் காணப்படும் மீன்கொத்தி பறவை 'வெண்கழுத்து மீன்கொத்தியாகும்' ( White throated Kingfisher ) ஆகும் . மீன்கொத்தி என்றும் சில இடங்களில் மீன்குத்தி எனவும் தமிழ் நாட்டில் சில இடங்களில் விச்சிலி அல்லது கிச்சிலி அழைக்கப்படும் இப்பறவையின் விஞ்ஞானப் பெயர் Halcyon smyrnensis என்பதாகும் . க்விக் க்விக் என உரத்த குரலில் ஒலி எழுப்பியபடி பறந்து திரியும் வர்ண மயமான இப்பறவையின் முதுகு , இறக்கைகள் ,வால் என்பன அடர் நீல வர்ணத்திலும் , அடிவயிறு ,கழுத்து , தோள் என்பன கடும் மண்ணிறத்திலும் , கழுத்துக்கு கீழே மார்புப் பகுதி வெள்ளையாகவும் காணப்படும் . ஆண் பெண் பறவைகளுக்குக்கிடையில் சிறிய நிற வித்தியாசம் காணப்படும் . ஆண் பறவை அடர் வர்ணாமாய் இருக்க , பெண் பறவை சிறிது வெளிறிய வர்ணத்தைக் கொண்டது . இதன் சொண்டுகள் பெரிதாக தடித்து செம்மஞ்சள் நிறமாக காணப்படும் . ஏறத்தாழ 28 CM நீளம் வளரும் இப்பறவை பெரிய தலையையும் குறுகிய வாலையும் , கட்டையான கால்களையும் கொண்டது . சிறிய பல குளங்கள் உள்ள கோப்பாயில் இப்பறவையே சர்வசாதாரணமாக கண்டுள்ளேன் . குளங்கள் எதுவுமே அற்ற ஏழாலையில் இப்பறவைக் கண்டு 'இவருக்கு இங்கே என்னவேலை' என்று ஆச்சரியப்பட்டேன் .
எனது வாழைத் தோடத்தில் வேலை முடித்து வைத்திருக்கும் மண்வெட்டி பிடியின் மீது சர்வ சாதாரணமாய் வந்தமர்ந்திருக்கும் இப் பறவை , குளம்கள் இல்லாத ஊரில் ,உணவுக்கு என்ன செய்யும் என்று யோசித்தேன் . இதன் பின் இதை அவதானிக்கத் தொடங்கினேன் . ஆச்சரியமாக இவை , வெட்டுக்கிளி , சிறு பூச்சிகள் , மண்புழு , வண்டுகள் , சிறு ஓணானான் , அரணை என்பவற்றை உண்பதை கண்டு வியப்படைந்தேன் . இது மாத்திரமல்ல சிறிய பறவைகளைக்கூட இது பிடித்து உண்ணுகிறது . நீரிலே மீன் பிடிக்க இதை இயற்கை தகவமைத்தாலும் , ஆகாத உணவு போட்டியில் இது சூழலுக்கேற்ப தன்னை மாற்றியமைத்து தனது வழமையான உணவல்லாத பூச்சிகளை பிடித்து உண்டு தக்கன தப்பி பிளைக்கும் என்ற டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு வாழும் சான்றாக இருப்பது ஓர் ஆச்சரியமான விடயமல்லவா ?
பொன்னியின் செல்வன் மின்னூல்களாக...

'டொராண்டோ' நூல் வெளியீடும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்...

இந்தப் புகைப்படத்தை ஒருமுறை பாருங்கள். இதிலுள்ளவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் இவர்கள் எவ்விதம் முகமூடி (Face Mask) அணிந்திருக்கின்றார்கள் என்பதை. எத்தனைபேர் 'முகமூடி'கள் அணிந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனியுங்கள். அருகருகில் நெருங்கி நின்று எவ்விதம் சமூக இடைவெளியைப் பேணுகின்றார்கள் என்பதையும் அவதானியுங்கள். நான் நினைக்கின்றேன் இவர்கள் 'ட்ரம்பின்' ஆதரவாளர்களென்று.. :-)
பயனுள்ள முகநூற் பதிவு: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய எனது விளக்கம்!
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
ஜான் பெர்கின்ஸ் என்பவர் சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெய்னுக்கு ( Main ) பொருளாதார அடியாளாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் தனது வாழ்நிலை சூழலை கருதி ஆசை அதிகாரம் பணம் என்பவற்றின் கவர்ச்சியில் சாராசரி மனிதனாகவே ஈடுபட்டார். காலப்போக்கில் இந்த சதிவலையின் பாரதூரமான விளைவுகளை கண்டு மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு உள்ளானார். இந்த பெருநிறுவனங்களின் நயவஞ்சக செயற்பாடுகளினால் ஏழைமக்களும், பழங்குடி மக்களும் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்த உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் கூறவேண்டும் என்றவாறு மய்னின் நிறுவனத்தில் இருந்து விலகினார். அவர் பெற்ற அனுபவங்களை “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகமாக வெளியிட்டார்.
உலகமயமாதல் பெயரில் ஒரு நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனிதவளங்கள் பெருநிறுவனங்களால் பங்கிடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற மாயத்தோற்றங்ஙளை காட்டி மக்களை ஏமாற்றுகிறது. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவமாக வைத்திருந்த அடிமை நாடுகளின் வளங்களை ஆளுமை செய்த நாடுகள் கொள்ளையிட்டது போலவே இன்று உலகமயமாதல் என்ற பெயரில் அரங்கேறுகிறது.
அமெரிக்க சர்வதேச நிறுவனம் மெய்ன் (Main) என்பதாகும். அதன் நோக்கம் மூன்றாம் உலக நாடுகளில் நீர் மின்நிலையங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள் என மிகப் பெரிய திட்டங்களை அமுல் படுத்துவதாகும். இந்த நிறுவனத்திற்கும், அரசுக்கும், சர்வதேச வங்கிக்கும் பரஸ்பர உறவு காணப்படும். மெய்ன் நிறுவனத்தில் பொருளாதார வல்லுனராக இருப்பவருக்கு கொடுக்கப்படும் வேலையானது இரண்டு முக்கிய விடயங்களை கொண்டிருக்கும்.
1. பெரிய சர்வதேச கடன் வாங்குவதை நியாயப்படுத்தி வாங்க வைத்து மீண்டும் அப்பணம் முழுவதும் பொறியியல் கட்டுமான வேலைகள் மூலமாக மெய்னுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் கிடைக்குமாறு திருப்பி விட வேண்டும்.
2. கடன் வாங்கிய நாடுகளில் இருந்து பணம் மெய்னுக்கும், நிறுவனத்திற்கும் வந்து சேர்ந்த பிற்பாடு அந்நாடுகளை திவாலாக்கி விட வேண்டும். இங்கு வேலையில் அமர்த்தப்படும் அனைவரும் நிறுவனம் தொடர்பான சகல விபரங்களையும் இரகசியமாக பேணுதல் வேண்டும்.
ஆய்வு: பாரியும் பனையும்
முன்னுரை
உலகின் மூத்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்க கூடியது தமிழ்மொழி ஆகும். தமிழ்மொழியின் பெருமைகளைத் தலைமுறைத் தலைமுறையாக இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. அத்தகைய இலக்கியங்கள் பல இலக்கிய வகைமைகளைத் தோற்றுவிக்கின்றன. தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் தோன்றின. இது காலத்தின் தேவையாக இருக்கின்றது. அந்த வகையில் சங்க இலக்கியத்தை மூலமாகக் கொண்டு அண்மையில் ஆனந்த விகடனில் 111 வாரமாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ என்ற வரலாற்றுத் தொடர் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்தாலும், மணியம் செல்வன் என்ற புகழ்பெற்ற ஓவியரின் கை வண்ணத்தாலும், தமிழரின் ஈராயிரம் ஆண்டுகாலம் பழமை வாய்ந்த வரலாறுகளையும், பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வையும் விரிவாக எடுத்துரைக்கின்றனது. இந்நாவலில் தமிழரின் ஆதி அடையானமான ‘பனைமரம்| ஒரு மையக் குறியீடாக இருந்து கதையின் தொடக்கத்தையும் இறுதியையும் இணைக்கிறது என்பதையும் தமிழினத்தின் பேரடையானமாகப் ‘பனைமரம்’ நாவலில் எவ்வாறு இடம் பெறுகின்றது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
முதல் நூலில் பனைமரம்
தொல்காப்பயித்தில் மூவேந்தர்கள் பகையின் காரணமாகவும், தங்களைத் தனித்து அடையாளப்படுத்தவும் தனித்தனி அடையாள மாலையை பயன்படுத்தினர் என்று குறிப்பு இடம்பெறுகிறது. இதில் சேரனுக்குரிய அடையாளமாகப் போந்தையும், சோழனுக்குரிய அடையாளமாக ஆத்தியும், பாண்டியனுக்குரிய அடையாளமாக வேம்பும் குறிப்பிடப்படுகின்றது.இதனை,
“…………………………உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந்தானை மலைந்த பூவும்” (தொல்.பொ.நூ-1006)
என்ற நூற்பாவின் வழி அறியமுடிகிறது. போந்தை என்பது பனம் பூவைக் குறிப்பதாகும். தொல்காப்பியர் பனம் பூவை “ஏந்து புகழ் போந்தை” என்று குறிப்பிடுகின்றார். இதன் பொருள்,“உயர்ந்த புகழை உடைய பனம் பூ” என்பதாகும். உயர்வு கருதி குறிப்பிட்டதன் காரணம் தமிழரின் பேரடையாளமாக பனைமரம் இடம் பெற்று இருப்பதே ஆகும்.
இணைய வெளிக் கலந்துரையாடல்: 'எனது கலை இலக்கியப் பயணம்'
அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்
- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனார் கவிதைகள் பற்றிய இணையவழி காணொளி அரங்கில் சமர்பிக்கப்பட்ட அறிமுகம் -
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன்.
அனார் 1990 களின் நடுப்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். எனினும் அவருடைய ஆரம்ப காலத்திலேயே, 2004 இல் வெளிவந்த அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி ஓவியம் வரையாத துரிகை இலங்கை சாகித்திய விருதும், மாகாண இலக்கிய விருதும் பெற்றது.
கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளில் ஓவியம் வரையாத தூரிகை உட்பட அவரது ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. எனக்குக் கவிதை முகம் (2007), உடல் பச்சை வானம் (2008 ), பெருங்கடல் போடுகிறேன் (2013), ஜின்னின் இரு தோகை (2017) என்பன அவை. இந்த ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 151 கவிதைகள்தான் உள்ளன.
அவர் எழுதத் தொடங்கி கடந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் அவர் எழுதியவை அதிகம் இல்லை. ஆயினும், இன்று அவர் இலங்கையில் மட்டுமன்றி ”தமிழ் கூறும் நல்லுலகு“ எங்கும் நன்கு அறியப்பட்டவராக, ஈழத்து முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராக அங்கீகாரம் பெற்றிருக்கிறார். கவிதைக்கான கனேடிய இயல்விருது, விஜய் தொலைக்காட்சியின் இலக்கியத் துறைக்கான சாதனைப் பெண் விருது, கவிஞர் ஆத்மாநாம் விருது, ஸ்காபரோ இலக்கிய விருது என பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
தொடர் நாவல்: கலிங்கு (2006 -4)
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
4
தயாநிதி உள்ளே எதற்கோ பிள்ளைகளோடு கத்திக்கொண்டிருப்பது நாகாத்தைக்கு கேட்டது. கலாவதியைத்தான் கொஞ்சநேரமாகக் காணவில்லை. கிணற்றடியில் கப்பிச் சத்தம் ஒலிக்க, கிணற்றடியில் நிற்கலாமென எண்ணிக்கொண்டாள். திண்ணையில் வந்தமரும் போதே நாகி வெற்றிலைப் பெட்டியையும் கொண்டுதான் வந்திருந்தாள். பெட்டியுள் கிடந்த வாடிய வெற்றிலையை எடுத்து துடைத்து பதனமாக வைத்துக்கொண்டு பாக்குவெட்டியும் பாக்கும் எடுத்தாள். வலது கையில் சாய்த்துப் பிடித்திருந்த பாக்குவெட்டி, கோலிய இடது கையில் பாக்குப் பிளவுகளைச் சீவி விழுத்திக் கொண்டிருக்கையில், மனம் அமுக்கத்திலிருந்து விடுபட்டு விரியத் துடித்துக்கொண்டிருந்தது. அவசரமாக வெற்றிலையை எடுத்து, சுண்ணாம்புக் காரல்களைக் டப்பாவிலிருந்து கொட்டி, பாக்கும் சேர்த்துச் சுருட்டி வாயில் அதக்கினாள். வெடித்து அழுவதற்குள் அதை அவள் செய்தே ஆகவேண்டியிருந்தது. யோசிப்புக்கான சில குடும்ப விஷயங்கள் சிலகாலமாக அவளது மனத்திலே படைபோட்டு இருந்திருந்தவேளையில், சம்பூரில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையிலான யுத்தம் தொடங்கி அதைப் பின்போடும்படி செய்துவிட்டது. அது கிழக்கிலேதானே, வன்னிக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாமென நினைத்த சிலரைப்போல அவளாலும் நினைத்திருக்க முடியவில்லை. அது அவளது குடும்பத்தோடும் சம்பந்தப்பட்டது. அப்போது தமிழீழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்துப் பேரோடும் சம்பந்தப்பட்டது. விரும்பியும் விரும்பாமலும். அதனால்தான் மறுபடி எல்லாவற்றையும் மனப் படையுள் போட்டுவிட்டு வேறு திசைகளில் கவனத்தைத் திருப்பினாள். இரண்டு நாட்கள் கூலிவேலைக்கும் போய்வந்தாள். குடும்பத்துள் நிகழும் விஷயங்கள் மெல்ல அறியவந்தபோது அவளை நடுங்கவே வைத்துவிட்டன. அதன் பின்னால் கலாவுடன் நடந்த சம்வாதம் மேலும் அவளை உடைத்துவிட்டிருந்தது. பிடிவாதமாய் இனிமேலும் தன் இறுகிய மௌனத்தைத் தொடர்வது சாதுர்யமாய் அவளுக்குத் தென்படவில்லை. அவள் யோசித்தாகவேண்டும். அவதானமாக. இல்லாவிட்டால் குதிர்ந்திருக்கும் பிரச்னைகளை அவளால் தன் வழியில் இழுத்து அடக்கமுடியாது போய்விடும். ஏறுமாறாக நடக்கக்கூடிய கலாபோன்றவர்களின் விஷயங்களில் அது இன்னுமின்னும் முக்கியமானது.
கடைவாய் புண்ணாகிவிட்டிருந்ததில் இனி வெற்றிலை சப்புவதில்லையென்ற முடிவோடு, வெற்றிலைப் பெட்டியைக் கொண்டுபோய் அறை மூலையுள் போட்டுவிட்டு இரண்டு நாட்களாக அதன் நினைப்பையே மறந்துதிரிந்தாள். பிறகு வாய் சுணையெடுத்து எதையாவது செய்யென உழைந்துகொண்டிருக்க, இரண்டு வெறும் பாக்குப் பிளவுகளை வாயில்போட்டு நன்னிக்கொண்டு திரிந்தாள். ஆனால் இனி அப்படியிருக்க சாத்தியமில்லை. சமீபகாலமான கலாவின் நடவடிக்கைகள் குறித்து அவளுக்கு அவ்வப்போது ஐமிச்சங்கள் எழுந்துகொண்டுதானிருந்தன. தாயாகியதாலேயே அந்த விஷயங்களை மகளிடம் கேட்கமுடியாமலும், அதனாலேயே அதை அவளிடம் நிர்ப்பந்தமாய்க் கேட்கவேண்டியவளுமாய் இழுபறிப்பட்ட பிறகு, நான்கு நாட்களுக்கு முதல் படலையைத் திறந்துவிட்டு கலா ஏமிலாந்தியபடி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருக்கையில் தானே அவள் கிட்டப்போய், ‘நானும் அப்பப்ப கண்டிருக்கிறன். ஆர், கலா, அந்தப் பெடியன்? உன்னோட நல்ல பழக்கம்போலயிருக்கு?’ என தன்மையாய்க் கேட்டாள். ‘கிளிநொச்சி ஆஸ்பத்திரியில கண்டு பழக்கமம்மா’ என்று சொல்லிவிட்டு முகத்தை அப்பால் வெட்டித் திருப்பி ‘அவ்வளவுதான். இனியொண்டும் கேட்டு நச்சரிக்காதயுங்கோ’ என்பதை கலாவதி உணர்த்திவிட்டாள். அவள் மெய் சொல்லவில்லையென்று நாகிக்குத் தெரிந்தது. பெடியனின் பேச்சு மட்டக்கிளப்பு வழக்கிலிருக்கையில், கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் சந்தித்ததாய்ச் சொன்னது அவளின் மனத்தில் ஐயுறவைக் கிளப்பியது. அதற்குச் சாத்தியமிருந்தும் ஐயுறவு ஏற்படுவதை நாகியால் தடுக்கமுடியவில்லை. நாகி திரும்பிவிட்டாள். அது ஒன்றேயாயிருந்தால் அந்தளவில் அவள் விட்டிருக்கக்கூடும். முதல் நாள் காலையில் ஆட்டுக்கொட்டில் பக்கமாய் அடக்கியடக்கி ஓங்காளித்துக் கேட்டது. குடலை வெறுமையாக்குகிற அத்தகைய ஓங்காளிப்பை, ஒவ்வாமையும் சமிபாடின்மையும் போன்ற காரணங்களில் வருகிற ஓங்களிப்பிலிருந்து அனுபவம் கண்டுபிடித்துவிடும். கள்ளனைப் பிடிக்கப்போல் பாய்ந்தோடாமல், மெல்ல எழுந்து நாகி போகிறவரையில், கலாவதி கிணற்றடிக்குப் போய்விட்டாள். நாகி கிணற்றடிக்குப் போனாள்.
ஆய்வு: தலைமைக்கும் தனிமனிதனுக்கும் நெறியுரைக்கும் சூளாமணி
தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியகாலம் என்று தனித்துச் சுட்டும் அளவிற்கு ஐம்பெருங்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றி மக்களுக்கு சுவையுடன் கூடிய நன்னெறிகளை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை. சமணக்காப்பியங்களும், பௌத்தக்காப்பியங்களும் தோன்றி தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்கள் ஏற்று நடக்கும் வகையில் நல்லசிந்தனைகளை, நன்னெறிகளை ‘தேனுடன் கலந்த நோய் தீர்க்கும் மருந்தினைப்போலத்’ தந்த நல்லதொரு காப்பியம் சூளாமணியாகும்.
சமணர்கள் சீவக சிந்தாமணிக்குப் பிறகு போற்றும் காப்பியம் இச்சூளாமணியாகும். இது வடமொழியிலுள்ள மகா புராணத்தைத் தழுவி தமிழில் அமைந்த காப்பியமாகும். இருப்பினும் வடமொழிப்பெயர்கள் தமிழில் மாற்றப்பெற்று தமிழ்க்காப்பிய மரபிற்குத் தகுந்தவாறு தரப்பட்டுள்ளன.
தோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட இக்காப்பியம் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப்பின்னர் தோன்றிய காப்பியம் என்ற கருத்துண்டு.திவிட்டன்,விசயன் என்னும் இருவரின் கதையை எடுத்துச்சொல்லும் இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆன காப்பியச்சுவை நிரம்பப்பெற்ற காப்பியமாகும்.
தமிழ் மரபுக்கேற்ற வகையில் இயற்றப்பெற்ற இக்காப்பியம் பற்றிய,‘இவ்வளவு இனிமையாகச் சொல்லும் செய்யுள்கள் தமிழில் சிலவே எனலாம். சிந்தாமணியிலும் இந்த ஓட்டமும் இனிமையும் இல்லை’1 என்ற தெ.பொ.மீயின் கருத்தும்,
‘விருத்தப்பாவைக் கையாள்வதில் இவர் சீவகசிந்தாமணி ஆசிரியரைப் பின்பற்றிய போதிலும் சில இடங்களில் அவரையும் மிஞ்சிவிட்டார் என்று கூறலாம்’2 என்ற டாக்டர் மு.வரதராசனின் கருத்தும் சூளாமணியின் சிறப்பை எடுத்துணர்த்தும்.
கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்
போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.
திருமதி. பெரேரா - புதிய நூல் வெளியீடு
திருமதி. பெரேரா' எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள 'ஆதிரை பதிப்பகம்' இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர சோமவீரவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்ததிலும், அவரது சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அது ஒரு நூலாக வெளிவருவதையிட்டும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
'திருமதி. பெரேரா' எனும் இந்தத் தொகுப்பில் இதுவரையில் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 'திருமதி. பெரேரா' எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவல் போல இந்தத் தொகுப்பை நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கை கோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர்நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர் தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம்.
மிகவும் சூட்சுமமாக, மனித ஜீவிதத்தில் யாரும் காணும் எனினும் எவருக்கும் தென்படாத அல்லது எவராலும் கண்டுகொள்ளப்படாத விடயங்களை, இஸுரு தனது சிறுகதைகளின் மூலமாக மனித உள்ளங்களின் மென்மையான இடங்களைத் தொட்டு, காண்பித்திருக்கிறார். கதையை, கதை சொல்லும் விதத்தை, கதைக்குத் தேவையான மொழிநடையை சரியான விதத்தில், சரியான இலக்கில் குவித்து எழுதும்போது சிறுகதை வழியே சாதாரண ஒரு விடயத்தைக் கூட, மிக ஆழமாக உணரச் செய்யலாம் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள இஸுருவின் சிறுகதைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.
வாரம் ஒரு பறவை (1 - 4) மாம்பழக்குருவி!....
எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். சூழற் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். அவர் அண்மைக்காலமாகப் பறவைகளைப் பற்றி எழுதி வரும் கட்டுரைத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததொரு தொடர். வாரம் ஒரு பறவையெனப் பறவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றார். அவர் தனது முகநூற் கட்டுரைகளைப் பதிவுகள் இணைய இதழில் பதிவு செய்வதற்கு அனுமதித்துள்ளார். அவருக்கு எம் நன்றி. - வ.ந.கிரிதரன், பதிவுகள்.காம் -
வாரம் ஒரு பறவை (1) மாம்பழக்குருவி
இரண்டு வருடங்களுக்கு முன் மதிப்புறு நண்பர் Giritharan Navaratnam அவர்களின் பதிவு ஒன்றில் நான் போட்ட பறவைகளைப் பற்றிய பின்னுட்டம் ஒன்றைப் பார்த்த நண்பர் கிரி, "நீங்கள் அறிந்த பறவைகளைப் பற்றி நீங்கள் கட்டாயம் எழுதவேண்டும் " என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார் .பதிகிறேன் என ஒத்துக்கொண்ட நான் எனது வழமையான எழுத்துச் சோம்பலால் அதை எழுதவில்லை . அண்மையில் நண்பி J P Josephine Baba அவர்கள் பகிர்ந்த பறவையின் படமொன்றில் அப்பறவையின் பெயரை , நம்மவர்கள் தப்புத் தப்பாக குறிப்பிட்டிருந்தைப் பார்த்து வேதனையடைந்தேன் . எமது வீடுகளில் கூடுகட்டி வாழும் 'பிலாக்கொட்டை'க் குருவி எனச் செல்லமாக அழைக்கப்படும் தேன்சிட்டைக் கூட நம்மவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லையே என்ற கவலை மேலோங்கியது . எனவே வாரம்தோறும் புதன் கிழமைகளில் நான் அறிந்த பறவைகளைப் பற்றி எழுதலாம் என ஆர்வமுற்றுள்ளேன் .
சிறு வயது தொடக்கம் பலவகைப் பறவைகளையும் விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வளர்ந்தவன் என்ற ஒரே ஒரு தகுதிதான் இப் பதிவை எழுத எனக்குள்ள தகுதியாகும். மற்றும்படி நான் பறவைகள் ஆராச்சியாளனோ பறவைகள்
அவதானிப்பாளனோ அல்ல .இப்பதிவை என்னை எழுதத் தூண்டிய நண்பர் கிரிதரன் நவரத்தினம் , நண்பி Malini Mala ஆகியோருக்கு நன்றி கூறி தொடர்கிறேன் .
பேராசிரியர் க.கைலாசபதி நினைவாக….
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
உலகறிந்த மார்ச்சிய தமிழ் அறிஞர் பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. 1933 ஏப்ரல் 05 ஆம் திகதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த கைலாசபதி, 1982 டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு பொது வைத்தியசாலையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். மரணிக்கும் போது அவருக்கு 49 வயது மட்டுமே நிரம்பியிருந்தது.
உலகில் சாதனை படைத்த பல மனிதர்களைப் போலவே கைலாசபதி அவர்களையும் மரணம் இளம் வயதிலேயே காவு கொண்டுவிட்டது. தனது குறுகிய ஆயுள் காலத்தில் அவர் தமிழ் இலக்கியத்துக்கும், மார்க்சிய விமர்சனத்துறைக்கும் அளித்த அளப்பரிய, காலத்தால் அழியாத பங்களிப்பை நோக்குகையில், அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் அறிவுலகம் இன்னும் எத்தனை அரும் பெரும் பொக்கிசங்களை அவரிடமிருந்து பெற்றிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
கைலாசபதி அவர்களைப் பற்றி நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை முதன்முதலாகப் பார்த்தது 1966 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்தான். தோழர் வி.ஏ.கந்தசாமியைச் சந்திப்பதற்காக அவர் வந்திருந்தார். ஆனால் கந்தசாமி அந்த நேரத்தில் அங்கிருக்காததால் உடனும் திரும்பிச் சென்றுவிட்டார்.
முதலில் வந்தவர் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை. பின்னர் அலுவலகத்தில் அப்பொழுது இருந்த ஒரு தோழர் மூலம்தான் வந்தவர் பிரசித்தி பெற்ற கைலாசபதி அவர்கள் என அறிந்து கொண்டேன். அன்றே அவரது தோற்றம் எனது மனதில் பதிந்து கொண்டது. நெடிதுயர்ந்த தோற்றம். கண்ணாடியின் பின்னே கூர்மையான கண்கள். கையில் ஏதோ ஒரு புத்தகம் வைத்திருந்தார். கட்டம் போட்ட அரைக்கை சேர்ட் அணிந்திருந்ததாக நினைவு. அவருடன் சில வார்த்தைகளாவது கதைக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் தோன்றியது.
•
அதன் பின்னர் அவர் எழுதிய பல கட்டுரைகளைத் தேடிப் படித்தேன். ஆரம்பத்தில் அந்தக் கட்டுரைகளின் கனதியான சாராம்சத்தை கிரகிக்க முடியாமல் போய்விட்டாலும், பின்னர் படிப்படியாக அவற்றைக் கிரகித்துக் கொண்டேன். அவர் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. அதேபோல, அவர் எழுதி வெளியிட்ட நூல்களும் பலப்பல.
அந்தக் காலத்தில் தோழரும் எழுத்தாளருமான சுபைர் இளங்கீரன் எழுதிய “நீதியே நீ கேள்” என்ற நாவல் என்னைப் போன்றவர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாவல் ‘தினகரன்’ பத்திரிகையில் தொடராக வந்தது என்றும், அப்பொழுது கைலாசபதி அவர்கள்தான் தினகரன் ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்விப்பட்டேன். அது மாத்திரமல்லாமல், கைலாசபதி ஆசிரியராக இருந்த காலம் தினகரன் பத்திரிகையின் பொற்காலம் எனவும், அவர்தான் பல எழுத்தாளர்களை தினகரன் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்றும் பிற்காலத்தில் அறிந்தேன். பின்னர் நான் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக வேலை செய்த காலத்தில், தோழர் நீர்வை பொன்னையன் மூலம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சங்கத்தின் அச்சாணியாகவும், பிரதம வழிகாட்டியாகவும் கைலாசபதிதான் செயற்பட்டுக் கொண்டிருந்தார். எனவே கொழும்பு செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் நீர்வை பொன்னையனுடன் சேர்ந்து கைலாசபதியை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
எஸ்.ஏ. அப்துல் அஸீஸ் (நளீமி) அவர்களுடனான நேர்காணல்
உங்களது பூர்வீகம் (பிறப்பிடம்),கல்லூரி வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?
நான் ஈச்சந்தீவு என்ற தமிழ் குக்கிராமத்தில் 1970.06.02 இல் சேகு அப்துல்லா காலஞ்சென்ற நஜ்முன் நிஷா என்போருக்கு மகனாகப் பிறந்தேன். இக்குக்கிராமம் திருமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கிராமத்தில் அமைந்திருக்கின்ற ஈச்சந்தீவு விபுலானந்த வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி கற்றேன். பின்னர் ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் கா.பொ.த. சாதாரண தரம் வரை கற்றேன்.
இது முற்று முழுதாக தமிழ் மக்கள் வாழுகின்ற ஒரு பிரதேசம். 1985 ஆம் ஆண்டு பயங்கரவாத யுத்தத்தின் காரணமாக பாடசாலைக்குள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அகதிகளானதால் கா.பொ.த. சாதாரண தரக் கல்வியைப் பூரணப்படுத்த முடியாமையினால் 1986 ஆம் ஆண்டு சின்னக் கிண்ணியா அல் அக்ஸா மகா வித்தியாலத்தில் இணைந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து உயர் தரப் படிப்புக்காக பேருவளையில் அமைந்திருக்கின்ற ஜாமியா நளீமியா என்ற கலா பீடத்துக்குள் 1987 இல் நுழைந்தேன். அங்கு ஏழு வருடங்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களையும் அரபு மொழியையும் சிறப்பாகக் கற்று 1994 இல் பட்டம் பெற்று வெளியேறினேன்.
உங்கள் குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனக்கு ஆறு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள். மனைவி பட்டதாரி ஆசிரியை. எனக்கு ஐந்து பிள்ளைகள். அதில் மூன்று பெண் குழந்தைகள மற்றும் இரண்டு ஆண் மக்கள். தற்போது நான் கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் நிதி மற்றும் நிர்வாக பகுதியின் சிரேஷ்ட உத்தியோகத்தராகக் கடமை புரிகின்றேன்.
தற்கொலை - தடுப்பதற்கான முயற்சி
தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம்.
தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் என்கிறது ஆய்வு. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தற்கொலை என்பது மனக்கிளர்ச்சியிலான ஒரு செயலாகத் தோன்றலாம், ஆனால் அது எழுந்தமானமானதொரு நிகழ்வல்ல, அது ஒரு செயல்முறை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தற்கொலையைப் பற்றிப் பேசுவதற்குப் பொதுவில் நாங்கள் எவருமே விரும்புவதில்லை. அத்துடன், எங்களுக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் அந்த முடிவுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆனால், எங்களுக்குத் தெரிந்தவர்களும் தற்கொலையைத் தெரிவு செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும், தற்கொலை ஒரு களங்கம் என்ற உணர்வு அல்லது அது அவமானம் தரும் ஒரு செயல் என்ற கருத்துப்பாடு எங்களைச் சங்கடப்படுத்துவதால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் கலந்துரையாடுவதில்லை. அதனால், ஒருவர் உணரும் வலி பற்றியோ அல்லது அவருக்குத் தேவையான உதவி பற்றியோ வெளிப்படையாகப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.
தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென ஒருவர் முடிவெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில், அந்தக் காரணங்கள் பற்றிய ஒருவரின் உணர்வுகள்தான், அந்தக் காரணங்களைவிட மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. குறித்த வலியைத் தொடர்ந்து தாங்கமுடியாது அல்லது நிச்சயமற்ற வாழ்வைத் தொடரமுடியாது என்பதின் அடிப்படையில் எழும் நம்பிக்கையின்மை, கையலாகதன்மை மற்றும் விரக்தி போன்ற தீவிரமான உணர்வுகளால் தற்கொலைதான் தீர்வென முடிவெடுப்பவர்கள் ஆட்கொள்ளப்படுகிறார்கள். வேறு சிலருக்கு சில வகையான மனநோய்களின் தாக்கம் தற்கொலை செய்வதற்கான தூண்டல்களைக் கொடுக்கக்கூடும். அப்படியான தூண்டல்களை குரல்களாக அவர்கள் கேட்கக்கூடும், அல்லது விம்பங்களாகப் பார்க்கக்கூடும்.
அஞ்சலிக்குறிப்போடு, அக்கா எழுதிய ஆக்கம்! நாடகமேடையில் பாண்டியன் செழியனாக கனல் கக்கும் வசனம் பேசிய செல்வி அக்கா!
எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரி செல்வி அக்கா திருமதி சண்முகவடிவம்பாள் இம்மாதம் ( டிசம்பர் ) 01 ஆம் திகதி இலங்கையில் நீர்கொழும்பில் திடீரென மறைந்துவிட்டார். எனது எழுத்துலக வாழ்வில், தொடர்ந்தும் கலை, இலக்கிய, கல்வி சார்ந்த ஆளுமைகள் மறைந்தவேளைகளில் அவர்தம் நினைவுகளை பதிவுசெய்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவந்திருக்கும் நான், முதல் தடவையாக எனது உடன்பிறப்பு குறித்து எழுதநேர்ந்துள்ளதும் விதிப்பயன்தான்.
அக்காவுக்கு பேச்சாற்றல் எழுத்தாற்றல், வாதிடும் திறமை இருந்தது. ஆனால், திருமணத்தோடு இல்லறத்தை நடத்தும் ஆற்றலை வளர்ப்பதில்தான் கவனம் செலுத்தினார்.
அக்காவின் இயற்பெயர் சண்முகவடிவம்பாள். வீட்டில் செல்லமாக செல்வி என அழைக்கப்பட்டு, அதுவே ஊரிலும் உறவினர் மத்தியிலும் நிலைத்தபெயராகியது.
எங்கள் பாடசாலைக்கு ஒரு தடவை தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த குன்றக்குடி அடிகளார், அக்காவின் பேச்சாற்றலை வியந்து பாராட்டிவிட்டு, “ உனது பெயரின் தமிழ் அர்த்தம் - அறுவதன எழிலரசி – “ என்றார்.
அக்காவுக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தபோது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்காவின் திருமணம் பேசித்தான் நடந்தது. பரஸ்பரம் மணமக்களின் படங்கள் காண்பிக்கப்படாமல் ஒருவரோடு ஒருவர் பேசாமல் நடந்த அக்காலத்தைய திருமணம்.
வீட்டில் நடந்த பதிவுத்திருமணத்தின்போதும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து நீர்கொழும்பு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடந்த திருமணத்தின்போதும்கூட, அக்கா, தனக்கு வரப்போகும் மணமகனை ஏறிட்டும் பார்க்கவில்லை. பேசவில்லை !
எழுத்தாளர் அகஸ்தியர் 25ஆவது வருட நினைவுக் கட்டுரை!
- எஸ்.அகஸ்தியர் அவர்களின் சிந்தனையை நிறுத்திய 25ஆவது வருட நினைவு தினத்தையொட்டி (29.08.1926 – 08.12.1995) அம்பலவாணர் சிவராசா எழுதிய கட்டுரையைப் பதிவுகள் இதழுக்கு அனுப்பு வைத்துள்ளார் அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணம். அவருக்கு நன்றி. - பதிவுகள் -
கவிதை புனைவதோடு இலக்கிய உலகில் பிரவேசித்துää சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தமிழ் சிருஷ்டி இலக்கியத்தின் சகல கூறுகளிலும் தன் கைவண்ணத்தைக் காட்டி அவற்றில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ள ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான அகஸ்தியர் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிட்டியது. எடுத்த எடுப்பிலேயே. எழுத்துத் துறையில் புகுவதற்கு எவை தூண்டுதலாக இருந்தன என அவரைக் கேட்டேன். அடக்கு முறைகளையும். ஒடுக்கு முறைகளையும். சுரண்டலையும் நேரடியாகக் கண்டு அவற்றுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டுமென்ற அவாவே அவரை எழுதத் தூண்டியது என்றும். தான் சேர்ந்த முற்போக்கு இயக்கமும் அவ்வியக்கத்துத் தோழர்களிடமிருந்து தான் பெற்ற போதமும். மக்களிடமிருந்து கற்றவையுமே சரியான பாதை எது என்பதை அவருக்குக் காட்டித் தந்தன எனச் சுட்டிக் காட்டினார்.
தமிழ் இலக்கிய உலகில் வியத்தகு சாதனைகளைச் செய்துள்ள இவ்வெழுத்தாளரின் படைப்புகளைப் பட்டியல் போட்டுக்காட்டுவது எனது நோக்கமல்ல. ஆயினும் முந்நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும்ää ஒன்பது நாவல்களையும். எட்டுக் குறுநாவல்களையும். பத்துக்கு மேற்பட்ட உணர்வூற்றுச் சித்திரங்களையும் இலக்கிய உலகுக்கு ஆக்கித் தந்த இந்த எழுத்தாளர் அவற்றினூடாக மக்களுக்கு என்ன சொல்ல முற்பட்டார் என்பதே முக்கியமாகும். ஆதனைவிட அவற்றை எவ்வாறு சொன்னார் என்பதே மிக முக்கியமானதாகும். இவரது படைப்புக்களின் உள்ளடக்கம் சாதாரணமான மக்களது. குறிப்பாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கைப் பிரச்சனைகளையும். மன அவசங்களையும் பிரதிபலிப்பனவாகவும்ää அவற்றுக்கான தீர்வுகளைக் காட்டுவனவாகவும் அமைந்தன. அவை சொல்லப்பட்ட விதமே அவரை ஒரு தலைசிறந்த இலக்கிய சிருஷ்டிகர்த்தா ஆக்கியது. அகஸ்தியர் தான் வாழ்கின்ற காலப் பகுதியின் சமூக. பொருளாதார. அரசியல் பிரச்சினைகளை அவற்றுக்குரிய பகைப் புலங்களை மையமாகக் கொண்டு மிக நுணுக்கமாகச் சித்தரிப்பதில் வெற்றி கண்டவர். களத்திற்கேற்ப உரைநடையைக் கையாள்வதிலும். பாத்திரங்களின் இயல்பான பேச்சு மொழியை ஒலி வடிவத்தில் யதார்த்த பூர்வமாக வளர்ப்பதிலும். குறிப்பாக யாழ்;பாணத்தின் பல்வேறு கிராமங்களிலும் நிலவுகின்ற பேச்சு வழக்கினை யதார்த்தங்களினுடாக வெளிக்கொணர்வதில் மிகவும் வல்லவர்.
மூத்த பத்திரிகையாளர் - எழுத்தாளர் ''சசிபாரதி" நினைவுகள்..!
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான 'சசிபாரதி" சபாரத்தினம் ஈழத்தில் பத்திரிகைத் துறையினர் - இலக்கியவாதிகள் யாவருக்கும் நன்கு அறிமுகமானவர். 'சசிபாரதி" சபாரத்தினம் 1951 -ம் ஆண்டு 'வீரகேசரி" பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்தவர். 1961 - ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 'ஈழநாடு" பத்திரிகை தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இவர் இணைந்துகொண்டார். 'ஈழநாடு" பத்திரிகையில் உதவி ஆசிரியராக - செய்தி ஆசிரியராகப் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகையில் எழுத்துப்பிழைகள் - வசனங்களில் இலக்கணப் பிழைகள் ஏற்படாது மிகச் சிறப்பாகத் திருத்தங்கள் செய்வதில் வல்லவர் எனப் பாராட்டுப் பெற்றவர். பல பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவிருந்து வளர்த்துவிட்டவர்.
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்தவர்.
இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இவரை நன்றியோடு நினைவுகூர்வர். ஈழநாடு பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய எஸ். திருச்செல்வம் ஆசிரியராக விளங்கிய 'முரசொலி"ப் பத்திரிகையிலும் சிறிது காலம் பணிபுரிந்தார். சிறுகதைகள் - குட்டிக்கதைகள் பல எழுதியவர். அவை நூல்களாகவும் வெளிவந்தன. இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகிப் பாராட்டுப் பெற்றது.
ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி..! பல்துறை ஆற்றலாளர் அ. ந. கந்தசாமி..!!
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவர், பல்துறை ஆற்றலாளர் அ. ந. கந்தசாமி. பத்திரிகைத்துறை ஜாம்பவான். எழுத்தாளர், கவிஞர். வீரகேசரி, தேசாபிமானி, சுதந்திரன், மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளான ஒப்சேவர், ரிபுயூன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர். இலங்கை அரசாங்கத் தகவற்பிரிவின் வெளியீடான 'ஸ்ரீ லங்கா" என்ற இதழின் ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை என யாவற்றிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர்.
சிறந்த கவிதைகள் பலவற்றைப் படைத்துள்ளார். துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம், எதிர்காலச் சித்தன் பாட்டு என்பன அவரது பாராட்டுப்பெற்ற கவிதைகளில் சிலவாகும். கவீந்திரன் என்ற பெயரிலும் மற்றும் சில புனைபெயர்களிலும் சர்ச்சைக்குரிய கவிதைகளையும் பல கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். புகழ்பெற்ற 'மதமாற்றம்" என்ற நாடகத்தைப் படைத்தளித்தவர். 'மனக்கண்" என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
தனது பதினேழாவது வயதில் 'ஈழகேசரி"ப் பத்திரிகையில் சிறுகதை எழுதியதின்மூலம் எழுத்துத்துறையில் நுழைந்தவர். பத்திரிகை ஆசிரியபீடங்களில் பணியாற்றிய காலத்தில் நாற்பது சிறுகதைகள் வரையில் படைத்துள்ளதாகத் தெரியவருகிறது. நள்ளிரவு, இரத்த உறவு, ஐந்தாவது சந்திப்பு என்பன குறிப்பிடத்தக்க சிறந்த கதைகளாகும்.
அன்று யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய முதலாவது எழுத்தாளர் அமைப்பெனக் குறிப்பிடப்படும் 'மறுமலர்ச்சிச் சங்கத்தில்" (1943) ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து செயற்பட்டவர். ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் முற்போக்குச் சிந்தனையுடன் சிறுகதைகளைக் கலையழகுடன் படைத்தவர். முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியாக, அறிஞராகக் கருதப்பட்டவர்.
என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!
மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ்.
குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள்.
‘அம்மா குழந்தையைக் கொடுங்க நான் வெச்சிருக்கிறேன்’ என்றாள் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாதி.
‘நோ.. நோ.. இவன் அவரோட செல்லக் கண்ணன், அவர் வரும்வரை நான்தான் கவனமாய் வெச்சிருப்பேன்’ ஒரு மனநோயாளிபோல வீரிட்டவள், மறுகணம் குழந்தையைத் தனக்குள் இறுகவணைத்தபடி மௌனமானாள். பொதுவாகப் பிரசவம் முடிந்ததும் சில தாய்மார் இப்படியான ‘போஸ்ட்பாட்டும்’ மனநோயால் பாதிக்கப்படுவதுண்டு என்பதைத் தாதி அறிந்தேயிருந்தாள்.
‘என்னம்மா, என்னாச்சு..?’ என்ற தாதியின் ஆதரவான கேள்விக்கு, வேதனை தாங்காது உடைந்து போயிருந்தவள், அப்படியே கொட்டித் தீர்த்தாள்.
என்றுமில்லாதவாறு அதிகாலையில் செல்போன் சிணுங்கிது.
படுக்கையில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தேன். அவருடைய செல்போன்தான் அழைத்தது. அவரோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தூக்கத்தைக் கெடுக்காமல் செல்போனை எடுத்துப் பார்த்தேன். மருத்துவமனையில் இருந்துதான் அந்த அழைப்பு வந்திருந்தது.
தீயில் பூத்த மலர்
- தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மோகன் அருளானந்தம் (இவர் மட்டுநகரைச் சேர்ந்தவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் கட்டடக்கலை பயின்ற சக மாணவர்களிலொருவர். அவர் தன்னுடைய 83 ஜூலைக் கலவர நினைவுகளை அவரது வலைப்பதிவான 'Closetoheartweb'இல் ஆங்கிலத்தில் The Journey Begins என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார். அதனை எனக்கும் அனுப்பியிருந்தார். அதன் தமிழ் வடிவமிது. 'தீயில் பூத்த மலர்' என்னும் தலைப்பில் வெளிவருகின்றது. தமிழில் பதிவு செய்வதன் மூலம் பலர் அறிய வாய்ப்புள்ளதால் தமிழாக்கம் செய்துள்ளேன். இதற்கான ஓவியத்தினை வரைந்திருப்பவர் கிறிஸ்ரி நல்லரட்ணம். - வ,ந.கி -
அது ஒரு சனிக்கிழமை. 23 ஜூலை 1983. பத்திரிகைகள் பின்வரும் செய்தியினை வெளியிட்டிருந்தன: "வட மாகாணத்தில் 13 இராணுவத்தினர் மறைந்திருந்து தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டனர். உடல்கள் திங்கட்கிழமை கொழும்புக்குக்கொண்டு வரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. "
இந்தத் தலைப்புச் செய்தி முப்பது வருடங்கள் நீடிக்கப்போகின்ற சமூக யுத்தமொன்றை உருவாக்கும் விதையொன்றினை விதைத்துள்ளது என்பது பற்றி நாங்கள் எவ்விதம் கருத்தையும் அச்சமயம் கொண்டிருக்கவில்லை. இந்தத் தனிச் சம்பவம் எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கடுமையாக மாற்றப்போகின்றது என்பதை நாம் உணர்ந்திருக்கவில்லை.
வழக்கமாக உயிர்த்துடிப்புடன் விளங்கும் எம் அயலில் கனத்த அமைதி குடிகொண்டிருந்தது. என்னாலும், மனைவியாலும் நித்திரைகொள்ளக்கூட முடியவில்லை. நாங்கள் அனைவரும் விளிம்பில் இருப்பதுபோன்ற நிலையற்ற சக்தி அல்லது உணர்வு காற்றில் பரவிக்கிடந்தது. ஏதோவொன்று சரியில்லையென்பதை எங்களால் உணரமுடிந்தது. ஆனால் அடுத்த நாள் நாங்கள் விழித்தெழுந்தபோது வழக்கமான ஆரவாரம் எங்கள் வீதியில் மீண்டிருந்தது. எல்லாமே வழமைக்குத் திரும்பியதைப்போல் தெரிந்தது. வழக்கம்போல் நானும் வேலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிப் புறப்பட்டேன். ஆனால் என் மனைவி முதல் நாள் செய்தி ஏற்படுத்திய பாதிப்பு நீங்காத நிலையில் வேலைக்கு விடுமுறையெடுத்திருந்தார்.
ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் நீதி
மக்களின் வாழ்க்கையை முழுமை படுத்தவும் செம்மைப் படுத்தவும் எழுந்தவை தான் நீதி இலக்கியங்கள் எனப் பொருள் கொள்ளலாம். மனிதன் வாழ்க்கையில் எதனைப் பின்பற்ற வேண்டும் எதனைப் பின்பற்றக் கூடாது என்று சொல்லுவதுதான் நீதிநூல்கள். மக்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஓர் அளவுகோலாக இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க இலக்கியமான புறநானூறு; அற இலக்கியமான திருக்குறள், நாலடியார் போன்றவை நீதியை எடுத்தியம்பும் உயர்ந்த நோக்கில் இவ்வாய்வு அமைகின்றது.
மனித சமுதாயத்தில் நீதி கோட்பாடுகள்
பழந்தமிழர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் மக்களாக விளங்கினர். பின்னர் பல்வேறு நாகரீக மாற்றத்தால் கூடி வாழும் வாழ்க்கையை வாழ்வதற்கு துவங்கினர். அதன் பின்னர் ஒருவர் செய்யக்கூடிய தவறுகள் அல்லது குற்றங்களை தட்டிக்கேட்டு அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக சமூகம் என்ற அமைப்பு உருவானது சமூகத்தில் வாழும் போது நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இம்மை மறுமை என்ற இருவகை வாழ்க்கை உள்ளதை மக்கள் அறிந்திருந்தனர்.
தற்பொழுது தாம் வாழும் வாழ்க்கையில் அவர்கள் செய்கின்ற செயலை மறுமைக்கும் தொடர்ந்து வரும் என நம்பினார்கள், எனவே அத்தகைய வாழ்வே அனைவரும் விரும்பத்தக்கது என்று நல்வழி படுத்துகின்ற வழிகளையும் உணர்ந்தனர். எனவே தன் வாழ்நாளில் பிறருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கூட தீயதை செய்யாமல் வாழ வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கம் உடையவர்களாக மக்கள் வாழத் துவங்கினர். அதுவே மனிதனை நல்ல கதிக்கு கொண்டு சேர்க்கும் என்றும் உணர்ந்தனர். இத்தகைய சமூக வாழ்வை புறநானூறு,
சுருக்கெழுத்துக்கலை மறக்கப்பட்டுவிட்டதா..? “ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை” சி. இராமலிங்கம் அவர்களின் பணி.
இலங்கையில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தையெனக் கருதப்படத் தக்கவர் அன்பர் இராமலிங்கம். அவர் நம்மவரின் மதிப்புக்குரியர்." இவ்வாறு பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். இன்றைய நவீன கணினி - கைத்தொலைபேசி யுகத்தில் சுருக்கெழுத்தின் தேவை அருகிவிட்டது. இலங்கையில் சுயமொழியில் நிருவாக அலுவல்கள் ஆரம்பித்த காலத்தில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தேவை அவசியமாகப்பட்டது.
தமிழ்மொழியில் தமிழகத்து மூன்று பெரியவர்கள் (எம். சீனிவாசராவ் - என். சுப்பிரமணியம் - பி. ஜீ. சுப்பிரமணியம்) மூவகைச் சுருக்கெழுத்து முறைகளை உருவாக்கித் தமிழுக்கு அணி செய்தனர். இலங்கைக்கு 1950 -ம் ஆண்டுக்கு முன்னர் இச்சுருக்கெழுத்து முறைகள் எட்டவில்லை. 1951 -ம் ஆண்டில் இலங்கை வானொலி நிலையம் ஒரு தமிழ்ச் சுருக்கெழுத்தாளரையும் இரண்டு தமிழ்த் தட்டெழுத்தாளர்களையும் நியமனம் செய்தது. இதில் ஒரு தட்டெழுத்தாளராக நியமிக்கப்பட்ட சி. இராமலிங்கமே பிற்காலத்தில் 'ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை"யெனப் போற்றப்பட்டார். தமிழகத்தில் சி. இராமலிங்கம் சுருக்கெழுத்தை நன்கு கற்றுத் தேறியிருந்தார்.
1952 -ம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்க மொழிகள் கமிசனின் மேற்பார்வையில் மருதானை ஆனந்தாக் கல்லூரியின் ஒரு பகுதியில் சிங்கள - தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு முதன்முதலாகச் சிங்களச் சுருக்கெழுத்துப் போதிப்பதற்கு ஒருவரும் - தமிழ்ச் சுருக்கெழுத்துப் போதிப்பதற்கு சி. இராமலிங்கமும் நியமிக்கப்பட்டனர். இந்நியமனத்திற்கெனத் தமிழில் நடாத்தப்பட்ட தேர்வில் பலர் போட்டியிட்டும் வேகப் பரீட்சையில் முதன்மையானவராகத் திகழ்ந்ததின் மூலமே இவர் தெரிவுசெய்யப்பட்டார்.
ஆய்வு: “செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்
தமிழக நிலபரப்பு ஐவ்வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள நிலஅமைப்புக்கேறிய ஐவ்வகையான தெய்வ வழிபாடுகளை மக்கள் வழிபட்டு வந்தனர். அதில் குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டு முறையே மக்கள் கையாண்டு வந்தனர். இதனை ஆரியர் வருகைக்குப் பின் இந்நிலமைப்பில் சிறுதெய்வ வழிபாட்டு முறை மாறி, அனைத்தும் பெருதெய்வ வழிபாட்டு முறையாக மடைமாற்றம் செய்தனர். இதனால் மக்கள் குழப்பத்திற்குள்ளாகிய ஆரியர் வருகையினால் சிறுதெய்வ வழிபாடு பெரிதும் முடங்கின. இந்நிலையில் தமிழகத்தில் இந்துத்துவம் மிகவும் காலுன்றியது எனலாம். இந்துவத்தினால் இங்குள்ள மக்கள் மேலாதிக்க சாதியினர் மட்டுமே கோயிலில் நுழைய முடியும் என்ற நிலை வந்தது. மற்ற சமூக மக்கள் கோயிலில் நுழைத்தால் தீட்டுப்பட்டு விடும் என்றனர். இங்கு வாழ்ந்த மக்களுக்கு சுதந்திரமாக கோயிலில் கூட செல்ல முடியாத நிலை நிலவியது. இதனை அறிந்துக் கொண்ட கிறிஸ்துவ மத பாதிரியர்கள் தங்களின் மதபோதத்தைத் தமிழக தாழ்த்தப்பட்ட மக்களிடம் பரப்பி, கிறிஸ்துவ மதத்தைக் காலுன்ற செய்தனர். கிறிஸ்துவத்தைப் பரப்ப வந்த, பாதிரியர்கள் தமிழ்மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் நன்றாக கற்றுத் தேர்ந்தனர். அதன் பின்பு மதத்தைப் பரப்ப அவர்களுக்கு ஏதுவாக அமைத்தது எனலாம். 18,19-ஆம் நூற்றாண்டுகளில் பெரிதும் வளர்ச்சியடைந்த நவீன இலக்கியப் பிரதிகளில் தமிழ்நிலப்பரப்பில் நிலவும் சாதிய போக்கினையும், மக்களின் அன்றாட வாழ்வில் நிகழ்வினையும், நிலவுடைமையாளர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் போன்ற பல்வேறு கருதுபொருள், நவீன இலக்கியப் பிரதிகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்துத்துவ கொள்கையினால் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்ட கிறிஸ்துவர்கள் தங்களுக்குச் சாதகமாக மதப்பரவலைக் கையாண்டனர். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலனோர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம்மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுக் காணப்படும் என்று அம்மக்கள் நினைத்தனர்.
தலித்திய இலக்கிய எழுத்தாளரான இமையம் தான் கண்ட நிகழ்வுகளைப் படைப்பாக்கமாக்கினார். அதில் “செடல்” நாவல் மிகவும் கவனத்திற்குரியது. இந்நாவலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு பெண்ணை (செடல்) ஊர்காவல் தெய்வமான செல்லியம்மனுக்குப் பொட்டுகட்டி விடுதல் என்ற வழக்கத்தைப் பற்றியும், அப்பகுதியில் கூத்தாடும் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்துள்ளார். இந்நாவலில் நிலவுடைமை சமூகத்தால் பல்வேறு இன்னல்களுக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். அப்படி மதம்மாறினால் தங்களின் நிலைமாறும் அதாவது கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்து விளங்கலாம் என்று எண்ணினர். இந்நாவலில் வெளிப்படும் மதமாற்ற அரசியலை வெளிக் கொண்டுவருவதை ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வு: பாரதியார் கவிதையில் பெண்ணியச் சிந்தனைகள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியாவின் விடிவெள்ளியாகத் தோன்றியவர். விடுதலை உணர்வையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்த மகான். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தேசிய உணர்வு ,மனிதநேயம் ஆகியவற்றை தம் கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியவர். பெண் என்பவள் ‘பேசும் தெய்வம்’ என்பதை வலியுறுத்துமுகமாக அன்னை காளியை ஆயிரம் இடங்களில் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண், பெண்மை விடுதலைக்கும்மி போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்மையைப் போற்றியுள்ளார்.
சமுதாயத்தில் பெண் என்பவள் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறாள். பெண் என்பவள் பிறந்தது முதல் யாரையேனும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. இளமைப்பருவத்தில் பெற்றோரையும், திருமணம் முடித்து பின் கணவனையும், அதற்குப்பின் தன்னுடைய மகனையும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. ஆண் ஆதிக்கச் சமூகம் பெண்ணுக்கு பல அடிமை விலங்குகளை பூட்டி அவர்களை அடக்கி வைத்திருக்கிறது. பாரதியாரின் பெண்விடுதலை பற்றி கூறும் கருத்துக்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு பாடமாக அமைந்துள்ளது எனில் மிகையாகது.
பெண் என்பவள் அழகானவள், மென்மைளானவள், இன்பம் தரக்கூடியவள், பொறுமையில் பூமாதேவி, கேலி செய்யப்பிறந்தவள், ஐயத்திற்குரியவள் என்ற கருத்து நிலவி வருகிறது. ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ளும் முன் பல வகையான பலன்களை எதிர்பார்க்கின்றனர். அவள் அழகுடையவளாகவும் அதிகமான சீர்வரிசை கொண்டு வருபவளாகவும், வீட்டிற்கு அடங்கி நடப்பவளாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வீடுதிரும்பும் வரை பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகவேண்டி உள்ளது. பலபேரின் கேலிச் சொற்களைக் கேட்டு அதை சகித்து கொண்டு வாழ வேண்டி இருக்கிறது.
ஆய்வு: சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்
அறிமுகம்கற்பு என்ற சொல் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு விவாதப் பொருளாகவே இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. என்றாலும் கற்பு என்ற சொல் பற்றிய கருத்தாக்கம் பாரதி, தந்தை பெரியார் போன்றவர்களிடம் வந்து சேருகிறபோது கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. குறிப்பாக பெரியார், ‘கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலி கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும் பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை (குடிஅரசு, 8 -11-1928)’ என்ற சிந்தனையை முன்வைத்துள்ளார்.
பாரதியாரோ,
‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ (பெண்கள் விடுதலைக்கும்மி.5)
என்கிறார். அதாவது கற்பு என்பது, பெண்ணுக்கு மட்டும் உரியதன்று; ஆண், பெண் இருவருக்கும் அது பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.
கற்பு என்ற சொல் பெண்களைக் குறித்ததாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட சூழலில் புதுமைப்பித்தன் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்’ (புதுமைப்பித்தன் சிறுகதைகள், ப.3) என்று பெண்ணுக்கு எதிரான
சமூகத்தினுடைய கட்டமைப்பைக் கிண்டல் செய்துள்ளார்.
அஞ்சலி: உதைபந்தாட்ட வீரர் மரடோனா மறைவு!
உலகமெங்கும் வாழும் உதைபந்தாட்ட வீரர்களின் ஆதர்சபுருஷரான மரடோனா தனது அறுபதாவது வயதில் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தியினை ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்ஜென்டீனைவைத் தெரியாதவர்களுக்கும் மரடோனாவைத் தெரியும். அவரது உதைபந்தாட்டத்திறமையான நகர்வுகள் ஆர்வத்துடன் கூடிய அனுபவத்தின் , கடுமுழைப்பின் வெளிப்பாடுகள்.
பயனுள்ள மீள்பிரசுரம்: ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆள்வாப்பிள்ளை
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
ஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆள்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். ஈழத்தில் பெண்ணிய நோக்கிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார். ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு பெற்றது” என்கிற சிறுகுறிப்புடன் வெளியாகியிருக்கின்றது. அவர் அக்காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது எழுதிய கதையாக இது இருக்கலாம்.
இவரது கதைகள் இளங்கதிர், கலைச்செல்வி, சுதந்திரன், ஈழநாடு, தேனருவி, வீரகேசரி, மரகதம், சங்கம், திரைக்கலை, திருக்கோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு மலர், தினகரன், செந்தாமரை, உன்னைப்பற்றி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இவரது சிறுகதைத் தொகுப்பொன்று 1962 இல் வெளியாகியிருக்கின்றபோதும் தற்போது அது கிடைப்பதில்லை என அறியமுடிகின்றது. ஆயினும் இவரது சிறுகதைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் ஊடாக இவரது சிறுகதைத் தொகுதியை மீள்பதிப்பிக்க முயற்சிகள் எடுத்திருக்கின்றார். அந்த முயற்சியின் பலனாக, முன்னர் தொகுப்பில் இடம்பெறாத சில கதைகளும் சேர்க்கப்பட்டு 1994 இல் “கடவுளும் மனிதரும்” என்கிற தொகுப்பு இருபது கதைகளுடன் வெளியானது. இந்நூலிற்கான முன்னுரையில் இந்த நூலை வெளியிடுவதற்கான காரணங்கள் பற்றிச் செல்வி திருச்சந்திரன் கூறுகின்ற காரணம் முக்கியமானது. ஒரு பெண் எழுத்தாளரது கதைகள், அவரது பெண் நிலைவாதக் கருத்துகளைத் தாம் ஆதரிக்கின்றோம் என்பதற்கும் அப்பால் தாம் வெளியிடக் காரணம், சிட்டி சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் எழுதிய ”தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்”, கா. சிவத்தம்பி எழுதிய தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் போன்ற முக்கிய நூல்களில் கூட பவானியின் சிறுகதைகள் பற்றிய எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை என்பதையும் பவானிக்குரிய சரியான இடம் வழங்கப்படவேண்டும் என்கிற தனது அவாவினையும் வெளிப்படுத்தி அதுவே இந்நூலைத் தாம் வெளியிடக் காரணமாக அமைந்தது என்று செல்வி திருச்சந்திரன் கூறுகின்றார். கலை, இலக்கியங்களின் வரலாறுகளைப் படிக்கின்றபோது இது போன்ற நிறைய விடுபடல்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மீள்பிரசுரம்: வரலாறும், கரிகாலன் கனவும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையும் பற்றிய சில குறிப்புகள்....
[பதிவுகள் யூன் 2009இல் , முள்ளிவாய்க்கால் சமரினைத் தொடர்ந்து வெளியான கட்டுரையின் சில பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.- பதிவுகள்].... விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதோர் இடமுண்டு. மாவீரன், தேசியத் தலைவர், சர்வாதிகாரி, இரத்த வெறியன், கொடிய பயங்கரவாதி.... இவ்விதம் பலவேறு கோணங்களில் பல்வேறு பிரிவின மக்களால் பார்க்கப்படும் புலிகளின் தலைவர் பற்றி அனைவரும் ஒரு விடயத்தில் மட்டும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். அது தமிழீழம் என்ற நோக்கத்திலிருந்து இறுதிவரை அவர் நிலை தழும்பவில்லையென்பதுதான் அது. ஆக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்புகளில் வரலாறென்பது எவ்விதம் எழுதப்படுமோ அவ்விதமே விடுதலைப் புலிகளின் தலைவரின் வரலாறும் எழுதப்படுமென்பதை இப்பொழுதே ஊகித்துக் கொள்ளலாம். வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஈழ மன்னன் சங்கிலியன், நெப்போலியன் போன்றவர்களின் வரலாறு சமகாலச் சமுதாய அமைப்பில் எவ்விதம் அவர்களின் முடிவினை மட்டும் மையமாக வைத்துக் கணிக்கப்படுவதில்லையோ அதுபோன்றே எதிர்காலத்தில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன், கரிகாலன் கனவு என்றெல்லாம் இவரைப் பற்றியும் வரலாற்றுப் பதிவுகளிருக்குமென்பதையும் அனுமானித்துக் கொள்ளலாம்.
ஆய்வு: சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)
வழக்காறுகளைப் பற்றிய வழக்காறுகள் என்ற சொல்லாட்சி கூர்ந்து நோக்கத்தக்கது. வழக்காற்றினைக் குறிக்கும் சொற்கள், சொல்லிலிருந்து உருவான வழக்காறுகள் என்ற இருநிலைகளில் நோக்கும்போது பெரும்பான்மையான சொற்கள் வழக்காற்றிலிருந்து கிளைத்தவையாகும். வழக்காறுகளின் ஆன்மா என்பது நிகழ்த்துதல் மற்றும் இயங்குதலில் உறைகின்றது. சொல்வழக்குகளும் அதன் நிலைபேறில்தான் உயிர்த்திருக்கின்றன. சொல்லோடு தொடர்புடைய பண்பாடும், வழக்காறுகளும் அச்சொல்லின் நிலைபேற்றிற்கு அடிப்படையானவை. செயல்தன்மைக்கொண்ட வழக்காறுகளைக் குறிக்கும் சொற்கள் தகவமைப்பு, சமூகம், மரபு, மொழி, பண்பாடு போன்றவற்றின் தொன்மையினைக் கணிக்கும், ஊகிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றன. ஒரு வழக்காற்றிலிருந்து கிளைத்த பல வழக்காறுகள் ஒரு சமூகத்தின் வழக்காற்றுச் செழுமைக்கும், மொழியாக்கத்திற்கும் அடிப்படையானவையாகவும் திகழ்கின்றன.
நீலகிரியின் குடிகளான படகர்கள் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்டதற்கு இயற்கையை மூலமாகக்கொண்டு உருவான, இயற்கையைப் பேணக்கூடிய அவர்களின் வழக்காறுகள் அடிப்படையான காரணங்களாகும். பூர்விகக் குடிகள் என்ற அங்கீகார நிலையில் இயற்கைப் புரிதலும், இயற்கை வாழ்வும் இன்றியமையான கூறுகளாகும். படகர்களிடையே வழக்கிலிருக்கும் “சேக்கெ முட்டோது” எனும் வழக்காறு இயற்கை, தகவமைப்பு, பண்பாடு, இயங்கியல், சடங்கியல், நம்பிக்கை, உணர்வுகள் என்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இந்த வழக்காற்றின் தோற்றம் மற்றும் தொன்மையினை நாடிச்செல்வது இந்த வழக்காற்றோடு இணைந்த பல்வேறு வழக்காறுகளைக் காண்டறிவதற்கும், அதன்வழி இம்மக்களின் மரபு மற்றும் பண்பாடுச் சார்ந்த கூறுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அமையும்.
குறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'
அதுவரை பக்கத்திலிருந்த நண்பன் முருகவேல் சிறிதுநேரத்திற்கு முன்னர்தான் டான் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கவென உள்ளே எழுந்துபோனான். அவனுக்குமே அந்த உந்துதல் எழுந்தது. பின் ஏதோவொரு சலிப்பில் பேசாமல் இருந்துகொண்டான்.
பகலிலே அந்த இடத்தில் தோன்றியிருக்கக்கூடிய அவசங்கள், வெளிச்சம் படராது இருள் விழுந்த முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவனிடத்தில் அப்போது எழுந்திருக்கவில்லை. உருவத்தை இருட்டில் கரைத்துவிட்டு இருப்பதுபோல் ஓர் நிறைவு.
அவன் வானெறிந்த நட்சத்திரங்களும், அதன் மேலலைந்த மேகங்களும் கவனமின்றிக் கண்டபடி இருந்தான். திடீரென கோவில் வளவு மரக்கூடலிலிருந்து ஒரு சாக்குருவி அலறியடித்துப் பறந்தது. அவனது உடம்பு அந்தத் திடீர் சத்தத்தில் லேசாக ஆடியது. கடந்த சில தினங்களாக அவ்வாறுதான் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்ற ஒரு ஆத்துமம் அந்தமாதிரித்தான் எந்தவொரு திடீர்ச் சத்தத்திலும் சந்தடியிலும் திடுக்காட்டம் அடையுமோ?
கீழ் வான் மூலையிருளினுள் சாக்குருவியின் கதறல் போய் மறைய, சூழல் அவதானத்துக்கு வந்தது. சிறிதுநேரத்தில் தெருவில் நிலந்தீற்றிய காலடிச் சத்தம் அவன் கேட்டான். அது மெலிந்து மெலிந்து வந்து வேலிக்கு வெளியே ஓரிடத்தில் சடுதியாய் நின்றதும் தெரிந்தது.
வேலியின் கீழ்ப் பகுதியிலுள்ள முட்கம்பி வரிகளுக்கு மேலாக பக்கப்பாட்டில் தகரங்கள் அடித்திருந்தன. போன மாரியின் கடும் காற்றுக்கு அதில் நட்டிருந்த காட்டுக்கட்டை சரிந்து தகர இணைப்பு ஊடு விட்டிருந்த இடத்தில்தான் காலடி அரவம் அடங்கியிருந்தது. அவனுக்கு எழுந்து உள்ளே போய்விடுகிற அவதி. ஆனாலும் இருளில் இன்னும் நம்பிக்கைவைத்து அவன் விநாடிகளை விழுங்கிக்கொண்டிருந்தான்.
சிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!
அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.
‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள்.
‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தூங்க வைத்தாலும் மெலோடியால் தூங்க முடியவில்லை. மகளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றி விட்ட துயரத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதாள். வேகமாக நடந்து முடிந்த எல்லாமே ஒரு கனவு போல அவளது கண்ணுக்குள் நிழலாடியது.
19-3-2020 – நியூயோர்க் நகரம்.
வேலைக்கு வரும்போதே அவன் இருமிக்கொண்டுதான் வந்தான். இவனுடன் ஒன்றாக வேலை செய்பவன் நேற்றும் இருமிக்கொண்டு இருந்ததை இவனால் சகிக்க முடியவில்லை. இன்று அவனுக்குச் சாதுவான ஜுரமும் இருந்தது. ‘இந்தா பார் வேலை வேலை என்று அலையாதே, சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம், புரியுதா..? பேசாமல் இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொள், நான் சமாளிக்கிறேன்’ என்று சொல்லி அவனைக் கட்டாயப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
சாதாரண புளு ஜுரம் என்று நினைத்துதான் அவனை ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தான். அவசரமாகச் செய்து முடிக்க வேண்டிய வேலை என்று முதலாளி ஏற்கனவே சொல்லி அனுப்பி இருந்ததால், இவன் கட்டாயம் வேலைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தன்னை ஆளாகிக் கொண்டான். 25 வருட தொழில் அனுபவம் இவனுக்கு இருந்தது. தொழில் நிமிர்த்தம் ரொலாண்டோ சிலநாட்களாக அரேன்ஞ்கவுண்டியில் இருந்து நியூயோர்க் மான்ஹற்ரன் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தொலைதொடர்பு சாதனங்களை பழுதுபார்ப்பதற்காகச் சென்று வந்தான்.
இன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்
நவம்பர் 19 , சர்வதேச ஆண்கள் தினமாக வருடாவருடம் கொண்டாடப்படுகின்றது. சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது.
எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம், வேண்டத்தகாத அந்த விடயங்களின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் நல்ல விடயங்களை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், சென்ற வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருந்தது. இவ்வருடக் கருப்பொருளாக ஆண்களின் நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் அமைந்திருக்கிறது.
ஆண்களின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களிடையே அதிகரித்திருக்கும் தற்கொலைகளையும், அவர்களின் வேலையிடங்களில் நிகழும் இறப்புக்களையும் தடுப்பதற்குமான வழிவகைகளைக் கண்டறியலாம். மற்றும் அவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி! மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் !
கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது, உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில், மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் திகதி பறிகொடுத்துவிட்டோம். 1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி ருஷ்யாவில் பிறந்திருக்கும் இவரது முழுப்பெயர்: அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி. நேற்று தமது 79 வயதில் கொரோனோ தொற்றின் தாக்கத்தினால் மறைந்துவிட்டதாக செய்தி வௌிவந்துள்ளது. இவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமானவர். இவரை இவ்வாறு எமது மொழியுடனும் எமது இனத்துடனும் நெருங்கவைத்தவர் மகாகவி பாரதியார்.
துபியான்ஸ்கி, மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான ஆய்வுப்பிரிவில் ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் முன்னர் பணியாற்றியவர். அங்கு அவர் மாணவராக பயின்றபோது, 1974 ஆம் ஆண்டு “ முல்லைத்திணையில் பிரிவு “ என்ற தலைப்பில் தமது ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர். நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்துள்ள இவர், காடும் காடு சார்ந்த நிலமும் பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை , இந்திய தமிழர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும் தகவல். இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு கற்பித்தவர். தமிழ் மொழி வரலாறு, தமிழியலுக்கு ஐரோப்பிய அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பு , திருக்குறளும் தமிழ் நீதி நூல் மரபும் முதலான பல்வேறு தலைப்புகளில் விரிவுரையாற்றி வந்திருப்பவர். சங்க இலக்கியம் என்ற நூலையும் இவர் ருஷ்யமொழியில் எழுதியுள்ளார். விஞ்ஞானபூர்வமாக பண்டைக்கால தமிழ்க்கவிதைகளையும் ஆய்வுசெய்து கட்டுரைகள் எழுதியவர். 1978 – 79 காலப்பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர். மேல்நாடுகளில் வாழ்ந்த மொழியியல் வல்லுனர்களுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டில் இலக்கியத் தமிழ் மற்றும் மக்களின் பேச்சுத் தமிழ் குறித்தெல்லாம் தமிழிலிலேயே கலந்துரையாடும் இயல்பையும் கொண்டிருந்தவர்.
அஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன்! தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை !
க்ரியா இராமகிருஷ்ணன் இன்று நவம்பர் 17 ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்..? என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன். மகாகவி பாரதியின் அந்திமாகாலத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில், எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்துடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை ஆரம்பிக்கின்றேன்.
ஒரு பெரிய குடும்பம் அங்கு தரிசனத்துக்கு சென்றது. அதில் பத்துப்பதினைந்து பேர் ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள் இருந்தார்கள். அதில் அத்தை உறவான ஒரு பெண் சற்று நோய்வாய்ப்பட்டு எப்பொழுதும் சோர்வாக இருப்பவர். நோஞ்சான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய குழந்தை வாட்டசாட்டமான அத்துடன், கொழு கொழு என்று கொழுத்த குழந்தை. தூக்கினால் சற்று பாரமான குழந்தை. இருவரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கோயிலை சுற்றிவந்து தரிசிப்பது அந்தப் பெரியகுடும்பத்திற்கு சிரமமாக இருந்திருக்கிறது. நோய்வாய்ப்பட்ட அத்தை " தன்னிடம் குழந்தையை விட்டு விட்டு போய்வாருங்கள் நான் பார்த்துக்கொள்கின்றேன்" என்றார். உடனே மற்றவர்களும் அதற்கு சம்மதித்து குழந்தைய ஒரு படுக்கை விரிப்பில் கிடத்திவிட்டு அத்தையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அத்தைக்கு உறக்கம் கண்களை சுழற்றியிருக்கிறது. அந்தக்கோயில் தூணில் சாய்ந்துவிட்டார். தரையில் குழந்தையும் ஆழ்ந்த உறக்கம்.
நாலடியார் உணர்த்தும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும்
முன்னுரை
சங்க இலக்கியங்கள் என்று அறியப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமன்றி
இச்சங்க நூல்கள் இலக்கிய ஆவணங்களாகவும் விளங்குகின்றன. இவ்வியலக்கியத் தகவல்கள் மற்றும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் தரவுகளைக் கொண்டு தமிழரின் தொன்மை மரபையும் அவர்களின் தனித்தன்மைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது.
இத்தொகை நூல்கள் மட்டுமே தமிழர் சார்ந்த பண்பாட்டு ஆவணங்கள் என்று சொல்லிவிட முடியாத அளவிற்குப் பிற்காலத்திலும் பல்வேறு நூல்கள் தோன்றி நம் தமிழர் மரபைப் பரைசாற்றி நிற்கின்றன. அதில் திருக்குறள் நாலடியார் போன்ற
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடலாம். மேலும், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்களும் இதற்குள் அடங்கும். இவ்வாறு தொன்றுதொட்டு எழுதப்பட்டுவரும் இலக்கியங்களில் ஒரு இனத்தின்
பண்பாட்டுச் செய்திகள் பொதிந்திருப்பது இயல்பே. அந்தவகையில் நாலடியாரில் இடம்பெற்றிருக்கும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும் சார்ந்த தகவல்களை இக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.
பெரியோரை மதித்தல்
பெரியோரக் கண்டால் இருக்கையில் இருந்து எழுவது எதிர் நின்று வரவேற்பது, அவர் பிரியும்போது அவருக்குப் பின்சென்று வழியனுப்புவது போன்ற உயர்ந்த ஒழுக்கநெறிகள் இருந்துள்ளதை,
ஆய்வு: கல்வியும், ஒழுக்கமும்!
மனிதன் சிகரம் தொட அடிப்படைக் காரணமாக அமைவது கல்வியும் ஒழுக்கமும் ஆகும். குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி நம்மை உயர்த்தும் ஆயுதம் கல்வி மட்டுமே. இதனை உணர்ந்த ஜாம்பவான்கள் கல்வியின் சிறப்பினை,
“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்”
“இளமையில் கல்”
“எண்ணும் எழுத்தும்_கண்ணெனத் தரும்”
“கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி”
“கற்றது கைமண் அளவு
கல்லாதது உலக அளவு”
“கல்வி கரையில கற்பவர் நாள்;
சில மெல்ல நினைக்கின் பிணிபல”
என்று கூறினர். மேற்கூறிய கூற்றுகள் கல்வியின் அவசியத்தை உணர்த்துகின்றன.
ஏராளமான செல்வத்தை பிள்ளைக்குத் தருவதிலும் சீரானது கல்வி மட்டுமே தான் எவ்வளவு கோடிஸ்வரர் ஆனாலும் தான் கற்ற கல்வியை சொத்தாகக் கொடுக்கவும் முடியாது பெறவும் முடியாது .ஆதலால் தான் கல்வி சிறப்பு வாய்ந்த
அணிகலனாகக் கருதப் படுகின்றது. என்பதனை,
“அரும்பரிசு ஆயிரம் கொடுத்தாலும்
பிள்ளைக்கு பெரும்பரிசு கல்வி”
என்ற வரிகள் உணர்த்துகின்றன.
ஆய்வு: தமிழர்களின் இறை நம்பிக்கை
தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.இன்றும் சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் பரவி இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவமும் நமது நாட்டில் புகுவதற்கு
முன் சைவம், வைணவம் ,புத்தம், சமணம் ஆகிய நான்கு சமயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் நிலவின.ஆனால் சமயங்களை வேண்டாம் என்பவரும் சமய நெறிகளைப் பின்பற்றாதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உலக ஆயுத என்பர்.
இருப்பினும் சமயம் என்பது மிகப் பழமையானது.
சமயம் என்ற ஒன்றைத் தமிழர்களிடம் எப்பொழுது தோன்றியது என்பதை அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இறை நம்பிக்கை என்பது பண்டுதொட்டு தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது என்பதை எடுத்துரைப்பது இவ்வாய்வுக் கட்டுரையின்
நோக்கமாகும்.
தெய்வங்கள்
தமிழர்கள் எப்பொழுது தனித்தனிக் குடும்பங்களாக வாழத் தொடங்கினார்களோ அப்பொழுது அவர்களிடம் இறைவன் நம்பிக்கை ஏற்பட்டது என்று கூறலாம். மனிதர்களின் மனதில் தோன்றிய அச்ச உணர்வே தெய்வ நம்பிக்கையை உண்டாக்கியது
எனலாம். எனினும் தெய்வ நம்பிக்கை தோன்றிய காலத்தைக் கணக்கிட முடியாது தொல்காப்பியர் காலத்திலேயே பல தெய்வ வழிபாடு இருந்துள்ளதைச் சான்றுகளின் வழிக் காணலாம் .
Azadi: Freedom. Fascism. Fiction By Arundhati Roy
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
அமெரிக்காவில் தேர்தலில் தான் தோல்வியுற்றேன் என்பதனை ஏற்க டொனால்ட் ரம்ப் மறுக்கின்றார். சட்டரீதியாக போராடுவேன் என சபதம் எடுத்து களத்தில் இறங்கியுள்ளார். அங்கு ஒவ்வொரு மாநிலத்துக்குமென வாக்குகள் உள்ளன.; வாக்களிப்பின் பின்னர் தமது மாநிலத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளரை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் அதனை கொங்கிரஸ் உறுதிப்படுத்தும் Electoral votes முறையை சில தடவைகள் மாற்ற முற்பட்ட போது, தென் மாநிலங்கள் மறுத்து விட்டன. பல தேர்தல்களில் இந்த தென் மாநிலங்களே இறுதியாக ஜனாதிபதியை தீர்மானிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஆவணி 2019ல் காஸ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுகின்றது. இவ்வாறான விடயத்தை அமெரிக்காவில் செய்ய முடியாது. கனடாவில் கியுபெக் மாநிலம் இரண்டு தடவைகள், பிரிந்து செல்வதற்காக வாக்கெடுப்பு நடாத்தியது. அதே போல் ஸ்கொற்லன்ட்டும் வாக்கெடுப்பு நடாத்தியது. 750 மொழிகளைக் கொண்ட ஒரு உப கண்டத்தில் இவையாவும் சாத்தியமற்றவை. ஐரோப்பாவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ளது. அப்படிப்பார்ப்பின் இந்தியாவும் ஒரு கண்டமாகும். ஆனால் ஒரு மொழி, ஒரு யாப்பு, ஒரு மதம், ஒரு நாடு என இந்தியா மாறிவருகின்றது. மாற்றப்படுகின்றது. இந்தியா உயர் சாதி இந்துக்களின் நாடாக மாற்றப்பட்டு வருகின்றது. மாநில சுதந்திரங்களும் படிப்படியாக பறிக்கப்படுகின்றன.
நீர்கொழும்பு : வாழ்வும் வளமும் - அங்கம் -02 - நிகும்பலையூர் குளங்களின் மறுபக்கம் !
- எழுத்தாளர்களே! இவ்விதழில் எழுத்தாளர் முருகபூபதி அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு பற்றி எழுதுகின்றார். ஏன் நீங்களும் உங்கள் ஊர்களைப்பற்றி எழுதக்கூடாது. எழுதுங்கள்! 'பதிவுகள்' உங்கள் மண்ணைப்பற்றி, அம்மண் எவ்விதம் உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு உதவியது என்பது பற்றியெல்லாம் அறிய ஆவலாகவுள்ளோம். அதே சமயம் உங்கள் ஊர்களைப்பற்றிய முக்கிய தகவல்களையும் உங்கள் கட்டுரைகளில் உள்ளடக்குங்கள். உங்கள் ஊர் பற்றிய உங்கள் எண்ணங்களை
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். - ஆசிரியர், பதிவுகள்.காம் -
நீர்கொழும்புக்கு நிகும்பலை என்றும் ஒரு பெயர் கம்பராமாயணத்தில் சூட்டப்பட்டுள்ளது.
இராவணன் புதல்வன் இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் குளங்கள் வெட்டி நிகும்பலை யாகம் வளர்த்தானாம்.
அவ்விடங்களில் மழைக்காலங்களில் நீர்பெருகிவிடுவதையும் அவதானித்துள்ளோம். பிற்காலத்தில் அதில் ஒன்று தூர்வாராமல் மண் நிரப்பப்பட்டு பஸ் நிலையமும் அமைந்தது. மற்றும் ஒன்று விளையாட்டு மைதானமாகியது. மற்றும் இரண்டு இடங்கள் மக்கள் குடியிருப்பானது. பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்த குளத்தில் யானையை அழைத்துவந்து அதன் பாகன் குளிக்க வைத்ததால் நடந்த விபரீதத்தில் எனது பொலிஸ் தாத்தாவும் சிக்கி உயிர்தப்பினார்.
அந்தக்குளமும் தூர்வாரப்படாமல் நுளம்புகள் குடியிருந்து மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைக்கண்ட எனது தாத்தா ( அவர் பொலிஸ் சார்ஜன்டாக நீர்கொழும்பில் பணியாற்றியவர். – அது பிரிட்டிஷாரின் காலம் )
அங்கு யானையை தோய வார்க்கவேண்டாம் என்று எங்கள் பொலிஸ் தாத்தா அந்த யானைப்பாகனை கண்டித்துள்ளார்.
அதனை அவதானித்த அந்த யானை, தனது எஜமானனை கண்டிக்க இவர்யார்…? இவர் யாருக்கு பொலிஸ்காரன்…? என்று நினைத்ததோ என்னவோ , தும்பிக்கையினால் தாத்தாவை சுழற்றி எடுத்து தூக்கி எறிந்துள்ளது. தாத்தா பொலிஸ் நிலைய கூரையில் விழுந்து சுருண்டு தரைக்கு வந்துள்ளார்.
பதிவுகள் சிறுகதைகள் (தொகுதி நான்கு)
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் நான்காவது சிறுகதைத்தொகுப்பு.
பதிவுகள் இணைய இதழ் இணையத்தில் தமிழ் காலூன்றிட உழைத்த ஆரம்ப காலத் தமிழ் இணைய இதழ்களிலொன்று. அக்காலகட்டத்திலிருந்து இன்றுவரை பதிவுகள் இணைய இதழுக்குப் பங்களித்த, பங்களித்துவரும் படைப்பாளிகள் நன்றிக்குரியவர்கள். அவர்கள்தம் படைப்புகள் இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். அவ்வகையில் வெளியாகும் தொகுப்புகளே பதிவுகள் தொகுப்புகள்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள்:
1. பறவைப்பூங்கா - சித்ரா ரமேஷ் (சிங்கப்பூர்) -
2. அப்பாச்சி -எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.
3. 3. ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து - அ.முத்துலிங்கம் -
4. லூசியா - அ.முத்துலிங்கம் -
5.இழப்பு - குரு அரவிந்தன்
6. றைட்டோ - சாந்தினி. வரதராஐன்
7. வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம் -- புதுவை எழில் -
8. அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம் - திலகபாமா
எங்கள் ஊர்: நீர்கொழும்பு - இலங்கை திரைப்படத்துறைக்கும் பங்களிப்பு செய்த நகரம் !
- எழுத்தாளர்களே! இவ்விதழில் எழுத்தாளர் முருகபூபதி அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு பற்றி எழுதுகின்றார். ஏன் நீங்களும் உங்கள் ஊர்களைப்பற்றி எழுதக்கூடாது. எழுதுங்கள்! 'பதிவுகள்' உங்கள் மண்ணைப்பற்றி, அம்மண் எவ்விதம் உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு உதவியது என்பது பற்றியெல்லாம் அறிய ஆவலாகவுள்ளோம். அதே சமயம் உங்கள் ஊர்களைப்பற்றிய முக்கிய தகவல்களையும் உங்கள் கட்டுரைகளில் உள்ளடக்குங்கள். உங்கள் ஊர் பற்றிய உங்கள் எண்ணங்களை
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். - ஆசிரியர், பதிவுகள்.காம் -
இந்து இளைஞர் மன்றத்தில் இயங்கிய நூல் நிலையத்தில் பெரும்பாலும் சமயம் சார்ந்த நூல்களே இருந்தமையினால் நண்பர்கள் இணைந்து வளர்மதி நூலகம் அமைத்தார்கள். மிகவும் குறைந்த கட்டணத்தில் உறுப்பினர்கள் இணைந்தார்கள். மாதம் 25 சதம்தான் அறவிட்டனர். செல்வரத்தினம் தன்னிடமிருந்த ராணிமுத்து நாவல்களையெல்லாம் தந்தார். இந்நிலையில் இலக்கிய ஆர்வம் மிக்கவர்களின் படைப்புகளுடன் வளர்மதி என்ற கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டோம். தற்பொழுது ஜெர்மனியில் வதியும் தேவாவின் கையெழுத்து அழகானது. அவரே பல பக்கங்களையும் எழுதினார். படங்கள் வரைந்தும் ஒட்டியும் முதலாவது இதழை வெளியிட்டோம். அதில் சிறுகதை, கட்டுரை, கவிதை என்பன வெளியாகின. அப்பொழுது நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு.பஷீர் ஆகியோர் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தனர். இவர்களே நீர்கொழும்பின் மூத்த எழுத்தாளர்கள். வளர்மதி நூலகத்தின் உறுப்பினர்களின் முதலாவது ஒன்றுகூடல் சந்திப்பில் நீர்கொழும்பூர் முத்துலிங்கமும் மு. பஷீரும் கலந்துகொண்டனர்.
எமது இலக்கிய நண்பர்களின் வட்டம் பெருகியது. வளர்மதியின் இரண்டாவது இதழை முத்துலிங்கம் வடிவமைத்தார். அவர் சிறந்த ஓவியருமாவார். கேலிச்சித்தரங்களும் இடம்பெற்றன. 1971 இல் இலங்கையில் ஏப்ரில் கிளர்ச்சியினால் நாடெங்கும் உரடங்கு உத்தரவு இரவுவேளைகளில் பிறப்பிக்கப்பட்டது. அதனால் வீட்டிலிருந்தவாறே பல படைப்பிலக்கிய நூல்களை படித்தோம்.
பதிவுகள்.காம் வெளியிட்ட மின்னூற் தொகுப்புகள் மற்றும் நூல்கள்!
பதிவுகள் இணைய இதழ் இணையத்தில் வெளியான ஆரம்பகாலத்து இணைய இதழ்களிலொன்று. இதன் முக்கிய நோக்கங்களிலொன்று இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்புகளை எழுதுவதைத் தூண்டுவது. அவ்விடயத்தைப்பொறுத்தவரையில் நிச்சயமாக எனக்குத் திருப்தி உண்டு. வளர்ந்த எழுத்தாளர்களிலிருந்து வளரும் எழுத்தாளர்களை வரை பதிவுகள் இணைய இதழுக்குத் தம் ஆக்கங்களை அனுப்பி வைத்தார்கள்; வருகின்றார்கள். அவற்றையெல்லாம் இயலுமானவரையில் முதலில் ஆவணப்படுத்த வேண்டுமென்பதின் விளைவே இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இம் மின்னூல்கள். உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வருகின்றார்கள். இதுவரை வெளியான பதிவுகள் தொகுப்புகளிலுள்ள படைப்பாளிகள் மற்றும் அவர்கள்தம் படைப்புகளைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியான ஏனைய படைப்புகளும் காலப்போக்கில் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்.காம் வெளியிட்டுள்ள 19 மின்னூல்களின் விபரங்கள் வருமாறு,
1. பதிவுகள் சிறுகதைகள் - மூன்று தொகுப்புகள்: பதிவுகள் 55 சிறுகதைகள், பதிவுகள் 27 சிறுகதைகள் & பதிவுகள் 36 சிறுகதைகள்
2. பதிவுகள் கட்டுரைகள் - மூன்று தொகுப்புகள்.: பதிவுகள் 59 கட்டுரைகள், பதிவுகள் 27 கட்டுரைகள் & பதிவுகள் 25 கட்டுரைகள்
3. பதிவுகள் - கவிதைகள் - மூன்று தொகுப்புகள்: பதிவுகள் 100 கவிதைகள், பதிவுகள் 95 கவிதைகள் & பதிவுகள் 101 கவிதைகள்
4. பதிவுகள் - ஆய்வுக்கட்டுரைகள் - ஒரு தொகுப்பு: பதிவுகள் 25 ஆய்வுக் கட்டுரைகள்
பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி 3)
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கவிதைத்தொகுப்பு. இதுவொரு பதிவுகள்.காம் வெளியீடு.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று , பதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று),, பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) & பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி மூன்று) ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி மூன்று) மின்னூலினை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_poems_101_volume3-revised_revised
இணைய ஊடகத்துறையில் இணைந்திருக்கும் தோழர் ஜெமினி! தோழர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் !
எனது எழுத்துலக வாழ்வு வெள்ளீயத்தில் தயாரிக்கப்பட்ட அச்சு ஊடகங்களில் ஆரம்பமாகி, பின்னாளில் இணைய ஊடகத்தை நோக்கி வளர்ந்தது. 1970 களில் எனது எழுத்துக்கள் வீரகேசரி, தினகரன் முதலான நாளேடுகளிலும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களிலும்தான் வெளிவந்தன. அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் ஒவ்வொரு வெள்ளீய அச்சு எழுத்துக்களினால் கோர்க்கப்பட்டு அச்சாகிய எனது படைப்புகள், 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கணினியில் பதிவாகி இணைய ஊடகங்களிலும் பரவத்தொடங்கியது. இணையத்தின் வருகையுடன், தமிழ் எழுத்து உருபுகளும் அறிமுகமானதும் அதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பேனையை எடுத்து, காகிதத்தில் எழுதி, தபாலில் அனுப்பும் வழக்கம் முற்றாக மறைந்தது.
முதலில் பாமினி உருபுகளில் கணினியில் எழுதத்தொடங்கியதும், எனது மனைவி வழி உறவினரான திருமதி பாமினி என்பவர் , தனது அண்ணாதான் அந்த தமிழ் உருபை கண்டுபிடித்து, அதற்கு தனது பெயரையும் சூட்டினார் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதன்பின்னர் யூனிகோட்டில் எழுதிப்பழகினேன். இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் மெல்பன் நண்பர் எழுத்தாளர் நடேசன், எனக்கு தேனீ இணைய இதழை அறிமுகப்படுத்தினார். முதலில் அவர் ஊடாகவே எனது ஆக்கங்களை ஜெர்மனியிலிருந்து வெளிவந்த தேனீ இணைய இதழுக்கு அனுப்பினேன். அவற்றை ஏற்று தொடர்ச்சியாக பிரசுரித்த தேனீ இணையத்தளத்தை நடத்தும் ஜெமினி கங்காதரன், என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தோழமை பூண்டார். அதன்பிறகு நானே நேரடியாக அவருக்கு எனது ஆக்கங்களை அனுப்பத்தொடங்கினேன். இவ்வாறு தொடங்கிய எமது தோழமையினால், எனது இலக்கிய மற்றும் அரசியல் ஆய்வாளர்களான நண்பர்களின் ஆக்கங்களையும் தேனீக்கு அறிமுகப்படுத்தினேன். அவற்றையும் தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன் மனமுவந்து ஏற்று பதிவேற்றினனார்.
பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு)
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் இரண்டாவது கவிதைத்தொகுப்பு. இதுவொரு பதிவுகள்.காம் வெளியீடு.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று , பதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று) மற்றும் பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) மின்னூலை வாசிக்க & பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_poems_volume2_toc_revised_202011
பதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று)
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் முதலாவது கவிதைத்தொகுப்பு.
பதிவுகள் கவிதைகள் (தொகுதி ஒன்று) தற்போது இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை நீங்கள் வாசிப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்குமான இணைய இணைப்பு: https://archive.org/details/pathivukal_poems_volume1a_revised_2/page/n1/mode/2up
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...
'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) & 27 ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கட்டுரைத்தொகுதி இத்தொகுதி. இதுவரை வெளியான மூன்ற கட்டுரைத் தொகுதிகளிலும் 108 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_collections_3_toc
இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளின் விபரங்கள் வருமாறு:
1. நவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும் - - நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) -
2. .கொடு மனக் கூனி தோன்றினாள் முனைவர் மு. பழனியப்பன் ( இணைப்பேராசிரியர் ,மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்டை ) -
3. தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் - முனைவர். துரை. மணிகண்டன் , உதவிப் பேராசியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி,பெரம்பலூர் -
4.‘‘நாவல் ராணி வை.மு.கோதைநாயகி அம்மாள்’’ - முனைவர் சி. சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை -
5. என் ஆதர்ஸம் என் ஆசான் என் நண்பன் - பொ. கருணாகரமூர்த்தி (பேர்லின்) -.
6 .கனடியத் தமிழ் சினிமா! உறவு: கனடியத் தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்புமுனை! - - குரு அரவிந்தன் -
8. பிரஞ்சு சினிமா: வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’ - எம்.கே.முருகானந்தன் -
9. ராஜா ராஜாதான். -- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -
10. A.N.KANTHASAMY: a rationalist of a fine order by K.S. Sivakumaran
11. (மீள்பிரசுரம்) நான் ஏன் எழுதுகிறேன்? அறிஞர் அ.ந.கந்தசாமி -
பதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)
'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_research_volume1/mode/2up
பதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) மின்னூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் பற்றிய விபரங்கள்:
1. பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை) - முகப்பு - த. சத்தியராஜ் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2. தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு - - த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
3. வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் - - பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) -
4. ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா? - - த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,தமிழ்நாடு, இந்தியா -
5. தேவன் - யாழ்ப்பாணம்! - வ.ந.கிரிதரன் -
பதிவுகள்' 36 சிறுகதைகள் (தொகுதி மூன்று); வெளியீடு 'பதிவுகள்.காம்'
'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்றாவது தொகுப்பில் 36 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் / படைப்புகள் பற்றிய விபரங்களைக் கீழே தந்திருக்கின்றேன். இத்தொகுப்பினைத் தற்போது
இணையக் காப்பகம் தளத்தில் வாசிக்கலாம்; பதிவிறக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளியான இரண்டு தொகுப்புகள் (55 & 27) இணையக்காப்பகத்திலுள்ளன. தொகுப்பினை வாசிக்க: https://archive.org/details/pathivukal_stories_volume3a
இதுவரை மூன்று தொகுப்புகளிலும் உள்ளடங்கியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை: 118. பதிவுகளில் வெளியான சிறுகதைகளின் ஏனைய தொகுப்புகளும் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும். இவை 'பதிவுகள்.காம்' வெளியிட்டுள்ள மின்னூல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு மூன்றில் வெளியாகிய படைப்புகள்:
1. உண்மையான ஆரியன்! - மொஹமட் நாஸிகு அலி (Mohammed Naseehu Ali)- மிழில்: அ.முத்துலிங்கம்
2. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -
3. என்ன தவம் செய்தனை - பாரதிதேவராஜ் எம். ஏ (கோவை)
4. காவி அணியாத புத்தன். - குரு அரவிந்தன் -
5. எதிர்காலச் சித்தன்! - வ.ந.கிரிதரன் ( கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) 'எதிர்காலச் சித்தன் பாடல்' கவிதையின் சிறுகதை வடிவம். சிறுகதையாக்கியிருப்பவர்: வ.ந.கிரிதரன்) -
6. ஒரு புதிய உலகம் அல்லது புதியதோர் உலகம் - ஆங்கிலத்தில் எழுதியவர் : சிவகாமி விஜேந்திரா & தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
'தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு'
அழகப்பா பல்கலைக்கழகம்'காரைக்குடி-.9.10.20என்னை,அழகப்பா பல்கலைக்கழகம்,தமிழ் பண்பாட்டு மையம் நடாத்தும்,'சிறு தெய்வ வழிபாடுகள்' பற்றிப் பேச அழைத்த மதிப்புக்குரிய முனைவர் திரு.மா.சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.அத்துடன்,கல்லூரி துணைவேந்தர் பேராசிரியர்,திரு, நா.இராஜேந்திரன் அவர்களுக்கும்,பல்கலைக்கழக இணைப் புரவலர் பேராசிரியா,திரு.;ஹா.குருமல்லேஷ் அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர், முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கும், வந்திருக்கும் முனைவர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஆய்வுக்குப் பல பதிவுகளின் துணை மட்டுமல்லாமல், ஒரு சில நல்ல மனங்களின் உதவியும் கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமே. இலங்கையின் மேற்கு, வடக்கு பகுதிகளின் சிறு வழிபாடு பற்றிய ஆய்வுக்கு, எனது இலக்கிய நண்பர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள்,இலங்கை நூலகத்திலுள்ள பதிவுகளை எடுத்துத் தந்துதவியதற்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இலங்கையின் கிழக்கில் உள்ள சிறு தெய்வ வழிபாடு பற்றி தகவல்களைத் தந்த,திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ்,நீலாவணை இந்திரா என்போருக்கும் ,எனது நன்றிகள்.
இக்கட்டுரையில்,'சிறுவழிபாடுகள்' பற்றி,வட தமிழகம், தென் தமிழகம், இலங்கையில் மேற்கு.வடக்கு. கிழக்கு. மலையகம் உட்பட்ட பகுதிகளிலுள்ள சிறு தெய்வ வழிபாடுகள், நம்பிக்கைகள் என்பன சொல்லப் படுகின்றன.அத்துடன், இங்கிலாந்தில் ஒருகாலத்திலிருந்த சிறு தெய்வ வழிபாடுகள் பற்றியும் ஒரு சில சிறு தகவல்களும் பதிவாகியிருக்கின்றன.
மானுடவியல் பார்வையில்,சிறுதெய்வ வழிபாடுகள் என்பது,அந்தத் தெய்வங்களை வழிபடும் மக்களின் நம்பிக்கைகளின் பிரதி பலிப்புகளாகும் என்று சொல்லப் படுகிறது.அவை,மக்கள் வாழும் இடங்கள்,மிருகங்கள்,குன்றுகள்,நதிகள்,காலநிலை,மனித கைவேலைகள்,போன்றவற்றில,தங்களைப் பாதுகாக்கும்,'கடவுள்த்'தன்மை இருக்கின்றன என்பதை அவர்கள் நம்புவதாகும். இவை அவர்களுக்குப் புரியாத இயல்நிலை அதாவது சுப்பர் நட்சுரல்,அல்லது கடவுள்த் தன்மையிருப்பதாக நம்பி வழிபடுகிறார்கள்.இதை' மானுடவியலாய்வாளர்கள்' அனிமிசம்' என்றழைப்பார்கள்.
சர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் நா. சண்முகதாசன்!
தோழர் சண்முகதாசன் நூற்றாண்டு நினைவாக....
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.
1960 - களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும் - சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது - இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் 'திரிபுவாதம்' எனக் கண்டித்தார்.
குருசேவ் முன்வைத்த ‘'சமாதான சகவாழ்வு” என்ற சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை - புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன. 1964-ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க - வாலிபர் சங்க - கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.
நினைவுகளின் தடத்தில் - 16 & 17
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -
நினைவுகளின் தடத்தில் - 16!
என் உபநயனத்திற்காக உடையாளூருக்குச் சென்றது தான் என் நினைவிலிருக்கும் முதல் தடவை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த நினைவுகளுக்குச் சென்று எழுத முனைந்ததும் அங்கு பார்த்த காட்சிகளையும் மனிதர்களையும் நினைவு கொண்டபோது, அதற்கும் முந்தி ஒரு தடவை உடையாளூருக்கு நான் சென்றிருக்கவேண்டும், ஆனால் அது எப்போது என்பது தான் நினைவில் இல்லாது போயிற்று. இருப்பினும் நினைவிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழைய உடையாளூரின் மனிதர்களையும் காட்சிகளையும் நினைவில் தங்கி மேலெழுந்த சிலவற்றையாவது எழுத முடிந்திருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் உடையாளூர் பெரும் மாற்றங்களை அடைந்திருக்கவில்லை. மின் சாரம் இல்லை. மாலையில் மங்கிய ஒரே ஒரு தெருவிளக்கைத்தவிர உடையாளூர் இருளில் தான் ஆழ்ந்திருந்தது. பள்ளிகள் இல்லை. ஒரு நாட்டு வைத்தியரைத் தவிர வேறு எதற்கும் வலங்கிமானுக்குத் தான் போகவேண்டியிருந்தது. தபால் அலுவலகம் கிடையாது. மாலையில் இருட்டத் தொடங்கியதும் எல்லா வீடுகளிலும் எல்லோரும் சாப்பிட்டு உறங்கப் போய்விடுவார்கள். அது பற்றி நினைக்கும் போதெல்லாம் உ.வே.சா. தன் 19-ம் நூற்றாண்டு பின் பாதி தமிழ் நாடு பற்றி எழுதி வைத்துள்ளவை தான் நினைவுக்கு வந்தன. உடையாளூர் தான் அந்த 19-ம் நூற்றாண்டுப் பின் பாதியிலேயே தங்கி விட்டதான தோற்றம் தந்ததே ஒழிய மூன்று மைல்கள் தள்ளி வலங்கைமானுக்கோ, அல்லது வேறு திசையில் மூன்று ஆறுகள் தாண்டி ஐந்து அல்லது ஆறு மைல்கள் கடந்தால் கும்பகோணத்துக்கோ சென்றால் காணும் காட்சி வேறாகத் தான் இருக்கும். ஆனால், 19-ம் நூற்றாண்டுப்பின் பாதியிலேயே உறைந்து விட்ட உடையாளூரும் அதன் வாழ்க்கையும் இப்போது நினைத்துப் பார்க்க ஒரு ரம்மியமான நினைவுகளாகத் தான் கண் முன் திரையோடிச் செல்கின்றன.
உப நயனம் முடிந்து நிலக்கோட்டை திரும்பியது ஒன்றும் நினைவில் இல்லை. ஆனால் இந்த உடையாளூர் பயணம் நினைவுக்கு வந்ததே, அந்த ரயில் பிரயாணம், அதை மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொணர்ந்த மதுரைக்கு 9-ம் வகுப்பு படிக்கச் சென்ற பஸ் பிரயாணம். 30 மைல் பஸ்ஸில் பயணம் என்றால் அது ஒன்றும் சாதாரண விஷயமாக அன்று எனக்குப் படவில்லை. ஆனால் மனித மனதின் விந்தைகள், இப்போது அந்த பிரயாணத்தை 32 மைல் தூரத்தையோ, அது எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் ஒன்றரை நேர அனுபவத்தையோ என்னால் நினைவு கொள்ள முடியவில்லை. எனக்கு அந்த பிரயாணத்தில் இப்போது நினைவுக்கு வருவது, மதுரை எல்லையை அடைந்ததும், பஸ் நிறுத்தப்பட்டது. சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. யாரோ ஒருவர் டிரைவரிடம் வந்து பஸ் அந்த வழியில் மேலே செல்லவியலாது என்றும், டவுனுக்குள்ளே ஆங்காங்கே ரகளையாக இருப்பதாகவும், வண்டியை வேறு வழியில் தான் திருப்பிக் கொண்டு போகவேண்டும் என்றும் சொல்ல வண்டி திருப்பப்பட்டது. நாங்கள் மதுரை போய்ச் சேர்ந்தோம் தான். ஆனால் மதுரை அமைதியாக இல்லை. ஆங்காங்கே அவ்வப்போது காங்கிரஸ் காரர்களின் கூட்டம், ஊர்வலம் என்று ஏதோ அன்றாட அமைதி கலைந்துகொண்டிருந்தது.
கவிஞர் வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள் 1: வெண்ணிலா!
கவிஞர் வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள் மிகவும் முக்கியமானவை. அவரது குழந்தைப்பாடல்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு இன்பத்தைத்தருபவை. மிகவும் புகழ்பெற்ற 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' என்னும் பாடலை எழுதியவர் கவிஞர் வேந்தனாரே. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவை அறிந்த அளவுக்கு நம் குழந்தைகள் கவிஞர் வேந்தனாரின் குழந்தைக் கவிதைகளை அறிந்திருக்கின்றார்களா என்றால் இல்லையென்றே கூற வேண்டும். அவரது 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' மட்டுமே அதிகமாக அறிந்திருப்பார்கள். ஆனால் கவிஞர் வேந்தனார் பல குழந்தைப்பாடல்களை எழுதியுள்ளார். இலங்கையில் வெளியான ஈழநாடு, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் அவரது குழந்தைக் கவிதைகள் பல வெளியாகியுள்ளன. மூன்று தொகுதிகளாக அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகள் நூலுருப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'பதிவுகள்' இணைய இதழின் சிறுவர் பக்கம் பகுதியில் அவரது குழந்தைப்பாடல்கள் அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகளிலிருந்து தொடர்ந்து வெளியாகும். அவரது குழந்தைப்பாடல்களைத் தமிழுலகு அறியவேண்டியது அவசியம். அதற்காகவே இம்முயற்சி. உங்கள் குழந்தைகளுக்கு அவரது குழந்தைக் கவிதைகளை அறிமுகம் செய்யுங்கள். - ஆசிரியர், பதிவுகள் -
1. வெண்ணிலா
பாலைப் போல வெண்ணிலா
பார்க்க நல்ல வெண்ணிலா
கோல வானில் நின்றொளியைக்
கொட்டு கின்ற வெண்ணிலா
வெள்ளிக் கூட்டம் சுற்றி நிற்க
விளங்கு கின்ற வெண்ணிலா
அள்ளி அள்ளிச் சோற்றையூட்டி
அம்மா காட்டும் வெண்ணிலா
இலக்கிய மரபை மையப்படுத்திய ஒரு வரலாற்றுப் பார்வை - கலாநிதி நா சுப்பிரமணியன்
இலக்கிய மரபு பற்றி, இலக்கியம் பற்றிய பல்வகைச் சிந்தனைகள் பற்றி பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் ஆற்றிய உரையிது. - https://www.youtube.com/watch?v=Sr52MuV9res
தணியாத தாகம் - எதிர்வினை
Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Sat., Apr. 25 at 6:21 p.m.
நண்பர் கிரிதரனுக்கு காலை வணக்கம். அந்தச்சகோதரிகள் எனது ஆசான்கள் சுப்பிரமணியம் தம்பதியரின் புதல்விகளா! வாழ்க. கலைஞர் இ.சி. சோதிநாதனும் சுப்பிரமணியம் தம்பதியர் பணியாற்றிய எங்கள் விஜயரத்தினம் கல்லூரியில் (விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கிய காலத்தில்) அதிபராக பணியாற்றியவர்தான். சோதிநாதனும் கனடாவில் மறைந்தார். தணியாத தாகம் மிகச்சிறந்த வானொலி நாடகம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள்!
பதிவுகளின் வாசகர்கள் விபரங்கள்..
'பதிவுகள்' இணைய இதழில் இப்போது நீங்கள் நியாயமான கட்டணங்களில் விளம்பரம் செய்யலாம். பதிவுகளில் தற்போது கூகுள் நிறுவன விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் 'அட் சென்ஸ்' (Ad Sense) விளம்பரங்கள் தற்போது தமிழ் இணையத்தளங்களையும் புரிந்துகொள்கின்றன. அதனால் பதிவுகள் போன்ற தமிழ் இணையத்தளங்கள் பயனடைகின்றன.
'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.
பதிவுகள் இணைய இதழுக்கு ஏப்ரில் வரை தந்தவர்கள், வாசித்த பக்கங்கள் மற்றும் மொத்த ஹிட்ஸ் பற்றிய விபரங்கள்.
இவ்விபரங்கள் பதிவுகள் தளத்தைப் பராமரிக்கும் 'ஹொஸ்டிங்' நிறுனத்தில் பதிவுகள் இயங்கும் 'சேர்வ'ரில் நிறுவப்பட்டுள்ள Webalizer மென்பொருள் மூலம் கிடைக்கப்பெற்றவை.
'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் படைப்பாளிகளே!
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அதிக அளவில் வருவதால் உடனுக்குடன் பிரசுரிப்பதில் சிறிது சிரமமிருப்பதைப் புரிந்து கொள்வீர்களென்று கருதுகின்றோம். கிடைக்கப்பெறும் படைப்புகள் அனைத்தும் தரம் கண்டு படிப்படியாகப் 'பதிவுகள்' இதழில் பிரசுரமாகும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் பொறுமைக்கும் ஆக்கப்பங்களிப்புக்கும் எம் நன்றி.
எமக்குப் படைப்புகளைப் பலர் அனுப்புகின்றார்கள் என்பதைக்கவனிக்கவும். சிலர் பாமினி எழுத்துருவில் அனுப்புகின்றார்கள். சிலர் ஒருங்குறி எழுத்துருவில் அனுப்பினாலும், அவற்றில் பல எழுத்துப்பிழைகளுடன் அனுப்புகின்றார்கள். அவர்கள் பாமினியில் எழுதி விட்டு, எழுத்துரு மாற்றி மூலம் ஒருங்குறிக்கு மாற்றி விட்டு, அவ்விதம் மாற்றுகையில் ஏற்படும் எழுத்துப்பிழைகளைத்திருத்தாமலே அனுப்புகின்றார்கள் என்று நினைக்கின்றோம். இவ்விதமான தவறுகள் திருத்தப்பட வேண்டும்.
மேலும் கிடைக்கும் படைப்புகள் வாசிக்கப்பட்டு, பதிவுகள் இதழில் பிரசுரிப்பதற்கு உரியனவா என்பது முடிவு செய்யப்பட்ட பின்னரே அவை வெளியாகும் என்பதை அவர்கள் கவனத்துக்கெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எமக்கும் கிடைக்கும் படைப்புகள் , பிரசுரத்துக்கு உரியனவாகத்தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பிரசுரமாகும். படைப்புகள் எப்பொழுது வெளியாகும் என்று விசாரித்து மீண்டும் மீண்டும் கடிதங்களை அனுப்பாதீர்கள் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் கவனத்துக்கு: 'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள், கடிதங்கள் அனுப்புவோர் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
ஆரம்ப காலத்து ''பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில், எழுத்துருவில் (திஸ்கி எழுத்துரு, அஞ்சல் எழுத்துரு) நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) : கடந்தவை
ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு...
'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
- பதிவுகள் -
நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு'
ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).
பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு..
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்! ("Sharing Knowledge With Every One")" - பதிவுகள்
பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு) எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் 'பிரதியைச் சரிபாத்தல்' எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். 'பாமினி' எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். 'பாமினி' எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , 'இ', 'அ','ஆ', மற்றும் 'ஞ' போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துக்கு மாற்றுகையில் தேவையற்ற எழுத்துகளை இடையிடையே தூவி விடுகின்றது. அவற்றை நீக்குவதென்பது மேலதிக வேலை. குறிப்பாகப் படைப்பானது மிகவும் நீண்டதாகவிருந்தால் தேவையற்ற சிரமத்தைத் தருகிறது.'பாமினி'யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு 'உருமாற்றி' (Converter) மூலம் ஒருங்குறிக்கு மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். பதிவுகளில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் பதிவுகளின் கருத்தாக இருக்க வேண்டியதில்லை. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கருதி படைப்புகள் பதிவுகளில் வெளியாகும்.
பதிவுகளுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் கவனத்துக்கு....
பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும். பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும். பின்வரும் இணையத்தளத்தில் (கண்டுபிடி எழுத்துருமாற்றி) இதற்கான வசதிகளுண்டு: http://kandupidi.com/converter/ இதுபோல் பல இணையத்தளங்களுள்ளன. அல்லது இலவசமாக எழுத்துருமாற்றி (Converters) மென்பொருள்கள் இணையத்தில் பல இருக்கின்றன. அவற்றை உங்கள் கணினியில் பதிவிறக்கி, நிறுவிப் பாவிக்கலாம்.