logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)
ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                 Editor: V.N.Giritharan
மார்ச்  2003 இதழ் 39 -மாத இதழ்
 விளம்பரம்
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? ads@pathivukal.com
Computer Image
Computer Training!
[விபரம் உள்ளே]
தமிழ் எழுத்தாளர்களே!..
அன்பான ணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 
DownloadTamil Font
மண்ணின் குரல்.. 
மண்ணின் குரல் நூல் வெளி வந்து விட்டது. நூலினை வாங்க விருப்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: editor@pathivukal.com
இணையத்தில் உழைப்போம்!
எமது சேவை...
விரைவில் பதிவுகள் புதுப் பொழிவுடனும் மேலும் பல புதிய அம்சங்களுடனும் வெளிவரவுள்ளது.

வர்த்தகர்களே! உங்கள் விளம்பரங்களைப் பதிவுகள்ில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவுகளில் விரைவில் மின்னஞ்சல் நண்பர்கள் பகுதி தொடங்கவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

ணையத் தளங்களை வடிவமைக்க , கிராபிக்ஸ் உருவாக்க எம்மை நாடுங்கள். மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.     editor@pathivukal.com

இலக்கியம்
அ.ந.க.வும் அ.செ.மு.வும்  அசல் யாழ்ப்பாணிகள் - 2

அமரர் எஸ்.அகத்தியர்

A.N.Kanthasamiஇமுஎச ஊடாக அநக என் இறுக்க நெருக்கம், இயக்க இலக்கியப் பரிணாமம் ஒரு தோழமைக்குள்ள இலக்கணமாகத் திகழ்ந்தது. டானியலுக்கும் 'பாட்டாளிப் பாவலன்' என்ற இரத்தினசிங்கத்திற்கும் அடுத்து உள்ளார்த்தமாக இணைந்த உயிர்ப்பான இலக்கிய உன்னிப்பு என்மட்டில் அநகவோடு தான் இருந்தது.
வீதி, நடைபாதை, குச்சுத்தெரு,சாக்கடை, ஹொட்டல்,தேநீர்க்கடை என்றெல்லாம் அவர் முழக்கம் இலக்கிய மூச்சோடு இடையறாது கலந்து நிற்கும். அவர் எப்போதும் ஓர் அபூர்வவாதியாக எனக்குத் தோன்றினார். எவரையும் இலகுவில் ஆகர்ஷிக்கும் தன்மை கொண்டவரெனினும், தான் சொல்வதை ஒப்புவிக்கும் வரை ஒரு சர்வாதிகாரி போல் அட்டகாசிப்பார். அசட்டை, அசமந்தம், மறைத்து பேசுதல், சிரித்துச் சமாளித்தல், மெளனித்தல் அவருக்கு ஆகாத விஷயங்களாதலால் சர்வாதிகாரத்தனம் அவர் பால் வந்து விடுவதில் நியாயமிருப்பதை உணர எனக்குச் சொற்ப காலம் எடுத்தது.

சங்கீதக் கச்சேரி, சதுராட்டம்,நாடகம், சினிமாக் கலை,குச்சு விட்டுச் சமாச்சாரங்கள் இந்தக் கனவானுக்கு இலக்கியக் கருவூலங்களாக அமைந்து விடுகின்றன. பாட்டாளி - தொழிலாளி வர்க்க மக்கள் 'இலக்கியம் என்றால் எந்தக் கடைச்சரக்கு?' என்று கேட்கக் கூடியவர்களுடனும் இவர் மணிக்கணக்கில் சம்பாஷிக்கையில் ஒரு தொழிற்சங்கவாதியாகவும் காண்போம்.

லடிஸ் வீரமணி, ஸ்ரனிஸ் கலைதாசன்,சுகந்தன், அந்தனி ஜீவா, ஓவியர் குமார், இக்பால் என்று கொழும்பு கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டி என விரிந்த அவரின் இளவட்டச் சிஷ்யர்கள் நாளடைவில் என் தோழர்களாக - நண்பர்களாக ஆகினர். மகா கவியின் கவிதா சாரங்களை லடிஸ் வீரமணி நாடகமாக வாலாயமாக்கிய வல்லமை அநகவிலிருந்துதான் பிறப்பெடுத்தது. அநகவால் பிரத்தியேகமாக ஆகர்ஷிக்கப்பட்ட தன்மையை - அதன் வளர்ச்சியை -இன்று அந்தனி ஜீவாவில் காணலாம்.

இலக்கிய உலகில் எவரையும் 'உருவாக்குவது' என்ற போலித் தனத்தை அவர் வெறுத்தார். 'ஊக்குவிப்பது', 'உருவாக்குவது' என்றெல்லாம் கோஷிக்கும் வணிகமயம் அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. லட்சிய ஆவேசிப்போடு எழும் கிளர்வுக்குக் களம் கொடுப்பது, நெறிப்படுத்துவது,வழிகாட்டுவது, விமர்சிப்பதும் என்றெல்லாம் சொல்லுகின்ற அநக, எழுத்தை விளக்கமாக, தெளிவாக, கலாபூர்வமாக ஆளுமைப்படுத்தும் விதம் அவர் சிறுகதை,நாவலில் பிசகின்றி வெளிப்பட்டது. எடுத்த ஈட்டி குறித்த ஆளை நோக்கி நேரிடை பாயும் முனைப்பாக அவர் கருத்தியலைச் செலுத்துகின்ற பாங்கு அவர் சமப் படைப்பாளிகளையும் வியக்கச் செய்தது. அவருக்குப் பின் தன் கருதுகோளை இயல்பான செல்நெறிகையினூடாகத் துணிந்து சொல்லும் முனைப்பு டானியல் படைப்பில் அதிகம் வெளிப்பட்டது.

எமது கால ஆரம்பத்தில் ஈழத்திலே சிறுகதையினை உயிர்ப்பாகப் படைத்தவர் டானியல். எனினும் அநக, எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் போல் வெவ்வேறு பாணியில் எழுதும் ஆற்றல் டானியல் எழுத்தில் இல்லை. 'சகல ஆக்கங்களுக்கும் ஒரே பாணியை - நடையைக் கையாள்தலை ஒரு 'தனித்துவமாக'க் கொள்ளப்படுவது முழுப் பலவீனமே தவிர பலமல்ல' என்று அநகவும், எஸ்.பொ.வும், நானும் ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தோம்.

அநக கல்விமான் என்பதை விடப் படிப்பாளி, படைப்பாளி, நுட்பமான மூளைசாலி என்பதே சரி. புரியாத விஷயம் என்று எதுவுமே அவரிடம் மல்லுக் கட்டியது கிடையாது. ஆய்வு, தேடல், விமர்சிப்பு எதையும் அறிய அவாவும் மனம் அவர் இயற்கைப் பண்பாக இருந்தமையாலேயே ஓர் இயக்கம் போல் அவர் வீறாகச் செயற்படவும் முடிந்தது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, பத்திரிகை ஆசிரியர் என்றெல்லாம் அவர் இலக்கியம் அளாவி நின்றது.

அவர் கருத்தை எடுத்துச் சொல்லும் விறுத்தம் ஊசி முனையாகப் பாய்ச்சுகினும் இலக்கியம் அவர் உள்ளாத்ததிற்கு மாறாக ஒருபோதும் ஊறு செய்ததில்லை. அவர் பேச்சில் அகங்காரம் ஒறுப்பாகவும், ஆவேசத் தொனி அட்டகாசித்து  வேகமாகவும் பாயும். போர்க்குணம் மிக்க அவர் வீச்சான எழுத்து அவரின் இலக்கிய நயத்தைக் கெடுத்ததில்லை. கரு, உரு,அழகு, எளிமை, தெளிவு அவர் படைப்புகளை உன்னதமாக்கின. பதத்திற்கு ஓர் அவிழாக 1966இல் தினகரனில் அவர் எழுதிய 'மனக்கண்' என்ற பெரிய நாவல் சான்று. கேலி, கிண்டல்,சாட்டை, நகைச்சுவை அவர் எழுத்துக்கு அங்கதம் சேர்த்தது.

'சமூகவியலை அகிலன் சரியாக எடைபோடாத படைப்பாளி ஆயினும் அகிலனின் எளிய, தெளிவான, அழகான தமிழ் நடை அவர் நாவல்களுச் சிறப்புச் சேர்த்தது என்ற கருத்தில் அநகவும் நானும் ஒருமித்திருந்தோம்.

'மனக்கண்' நாவலை நூலாக்க செ.க.ஏற்பாடு செய்கிறார் என்று பி.ராமநாதன் ஒருமுரை எனக்குச் சொன்னார். பதிலாக அநகவின் 'வெற்றியின் இரகசியங்கள்' கட்டுரைத் தொகுதிதான் வந்தது. அதில் அவர் உளவியலை வெளிப்படுத்தும் விதம் அக்காலம் இந்திய எழுத்தாளர் அப்துல் ரகுமான் எழுதிக் குவித்த இயக்கவியல் மறுப்பு வாத நூல்களுக்குச் சரியான சாட்டையடி என்றும் சொல்வேன்.

'மனக்கண்' நூலாகாத குறையை நிவர்த்திக்குமுகமாக அதை வானொலி நாடகமாக்கி வாரந்தோறும் ஒலிபரப்பிய சில்லையூர் செல்வராசன் அநகவைத் தக்க முறையில் கெளரவித்தமை செல்வராசனுக்கும் பெருமை சேர்த்தது. எனினும் அது நூலாக வரும் வரை தாகம் தணியாது.

அ.ந.க.வும் அ.செ.மு.வும்  அசல் யாழ்ப்பாணிகள் - 1...உள்ளே
அ.ந.க.வும் அ.செ.மு.வும்  அசல் யாழ்ப்பாணிகள் - 3...உள்ளே
 
 

நன்றி: தினகரன் ஆகஸ்ட் 18, 1991
[ அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனையொட்டிய நினைவுக் கட்டுரை ]
முகப்பு|கவிதைகள்|கனடியத் தமிழ் லக்கிய   பக்கம்
காப்புரிமை :  வ.ந,கிரிதரன் 2000