கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் குறித்த பதிவுகள்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061-

முன்னுரை
சிரஞ்சீவி என்றால் சாகா வரம் பெற்றவர்கள் என்று பொருள். பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துவிடும் என்பது நியதி. ஆனால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களுக்கு இறப்பு என்பது கிடையாது. சிரஞ்சீவி என்பது சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் கிடைக்கின்றது என்பதை இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சிரஞ்சீவிகள் குறித்து இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள்
மகாபலி சக்கரவர்த்தி, அனுமன், வீடணன், பரசுராமர், பிரகலாதன் ஆகியோர் கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
1.மகாபலி சக்கரவர்த்தி
கம்பராமாயணத்தில் மகாபலி சக்கரவர்த்தி குறித்த பதிவுகள் பாலகாண்டம் வேள்விப் படலத்தில் காணப்படுகிறது. வேள்வியைக் காக்கவும், தாடகையை வதம் செய்யவும் விசுவாமித்திரர், இராமலக்ஷ்மணர்களை அழைத்துச் சென்ற போது அவரே, மகாபலி சக்கரவர்த்தி குறித்து பேசுகிறார். அசுர அரசன் மகாபலி விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் வென்று தன்வயப்படுத்திக் கொண்டான். வேள்விகள் செய்து தானம் செய்ய முடிவு செய்தான். தேவர்கள் திருமாலை வணங்கி ’கொடியவனான மகாபலியின் கொடுஞ்செயலை ஒழித்திடுக’ என்று யாசித்தனர். திருமாலும் அவர்களைக் காக்க வேண்டி காசிப முனிவருக்கும், அதிதிக்கும் ஒரு குழந்தையாக பெரிய ஆலமரம் முழுவதும் அடங்கியுள்ள சிறிய ஆலம் விதையைப் போல, மிகக் குறுகிய வடிவத்தோடு அவதரித்தார். மகாபலிடம் சென்று மூன்றடி மண் தானமாகக் கேட்டார். மகாபலியும் நீர் வார்த்து மூன்று அடி மண்ணைத் தர, வாமன அவதார திருமால், விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியில் பூமி முழுவதையும், மற்றொரு அடியில் வானுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கு வைக்க என்ற போது, மகாபலி ஆணவம் அழிந்து தன் தலை மேல் வைக்க வேண்டினார். பாதாள உலகின் மன்னன் ஆனார் மகாபலி சக்கரவர்த்தி. இன்னும் அங்கேயே சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார்.


திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வேடியப்பன் மற்றும் வேண்டியம்மன் வழிபாடு. மக்களால். பரவலாக வழிபட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழரின் வீரத்தின் எச்சமான நடுகல் வழிபாட்டில் தொடங்கி உள்ள வேடியப்பன் வழிபாடானது இன்றும் மக்களால். முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேடியப்பன் என்றாலே எல்லோரும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி என்ற ஊரில் உள்ள வேடியப்பனைத்தான் பொதுவாக அடையாளமாகக் கொள்கின்றனர். “கிருஷ்ணகிரி மாவட்டத்து கல்லாவி ஊரில் வேடியப்பன் கோவில் உள்ளது. வன்னிமரம் கோவிலில் உள்ளது. வேடியப்பன் உருவம் கற்பலகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்லாக இருக்க வேண்டும். இவன் வன்னியர்களின் குலதெய்வம். 500 ஆண்டுகள் பழமை உடையது. நாள் பூசைகள் உண்டு. தைமாதத்தில் 7 நாட்கள் திருவிழா. நடைபெறும். அருகிலுள்ள முனியப்பனுக்கே ஆடுவெட்டி அழைத்து ஏழை எளியவர்களுக்குத் தருமம் செய்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூசைகள் உண்டு. மற்ற சாதியினரும் தற்போது வழிபடுகின்றனர்.”1

பண்டைக் காலந்தொட்டே ஆசியக் கண்டத்தின் முக்கிய நிலப்பரப்பாக இந்தியா விளங்கி வருவதால், உலக நாடுகள் பலவும் பல்வேறு நிலைகளில் இந்தியாவுடான உறவுகளைப் பேணுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. குறிப்பாக வணிகம் செய்தல், சமயத்தைப் பரப்புதல், அரசியல், பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துதல் போன்றவை அவர்களின் முக்கிய நோக்கங்களாக இன்றளவும் உள்ளன. வெளிநாட்டவர்கள் தாக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் தங்களின் மேலாதிக்கத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
மாரி காலத்தில் மட்டுமே சல சலத்து ஓடும். வானம் பார்த்த வரண்ட பூமி வாழ் கிராமிய மக்களின் பார்வையில் அது கொள்ளை அழகைக் கொடுத்துப் பாயும். அதன் கருணையில் செழித்துக் கொழிக்கும் நெற் பயிர்கள் நன்றி சொல்லத் தாமும் தலை சாயும். நண்டுகள் ஓடும், மீன்கள் துள்ளும். அது கண்டு நாரைகள், கொக்குகள் திரள் திரளாய்ப் பறந்து அவற்றை கொத்திக் கொண்டோடும். ஆற்றின் இருமருங்கிலும் உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பற்றாதிருந்தால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் கட, கடவெனச் சத்தம் எழுப்பி இறப்பர் குளாய்களினூடாக ஆற்றில் பாயும் வெள்ள நீரை வயல்களுக்குள் பாய்ச்சும். கமக்காரர் முகங்களில் ஒளி வெள்ளம் பளிச்சிடும். சின்னப் பெடியங்கள் அதில் கப்பல் செய்துவிட்டு விளையாடியதும், அரைக்காற் சட்டையுடனோ, கோவணத்துடனோ அல்லது அவையின்றி அம்மணமாகவோ உன்னிப்பாய்ந்து நீச்சல் அடித்து கொட்டம் போட்டதெல்லாம் அந்தக்காலம்.
சோக்ரடீசின் மெய்யியல் விசாரணை சிறைகூடத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை ‘சிந்தனைக் களமாகிய சிறைக்கூடம்’ என்ற அடிப்படையில் அலசியுள்ளார். மரண தண்டனைக் கைதியாக முப்பது நாள்கள் சோக்ரடீஸ் சிறையில் வாழ்ந்தார். சிறையில் நடந்தவைகளை திரைகாவியம் போல நூலாசிரியர் காட்சிபடுத்தியுள்ளார். சோக்ரடீஸ் அவரது நண்பன் கிரீட்டோ ஆகியோருக்கிடையிலான உரையாடல் நாடகப்பாணியில் தரப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் இன் பேச்சு முழுவதும் மெய்யியல் விசாரணையே வியாபித்திருந்தது. நாடும் சட்டமும், ஆன்மாவும் மரணமும், நல்ல மரணம், தெய்வத்திற்கு நேர்த்திக் கடன். நீட்சே, சடமும் அகமும், ஒர்பிக்வாதிகளின் மரணக் கோட்பாடு, நப்ஸ்-சுயம், ரூஹ், சித்திலெப்பை: ரூஹ் போன்ற மினிதலைப்புகளில் சோக்ரடீஸ் இன் மெய்யியலை ஒப்பாய்வு செய்துள்ளார். சோக்ரடீஸ் நஞ்சை உட்கொள்ள முன்னும் பின்னும் நிகழ்ந்தவைகளை ஒரு திரைப்படத்தின் இறுதி காட்சிபோலவே நூலாசிரியர் சித்திரித்துள்ளார். மாதிரிக்கு சில வரிகள் வருமாறு,
சங்க இலக்கியத் நூல்களான எட்டுத்தொகையில் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும். 'ஒத்த பதிற்றுப்பத்து’ என்ற அடைமொழி கொண்ட பதிற்றுப்பத்து சேரர் மன்னர்களின் வாழ்க்கையையும், அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. புறப்பொருள் பற்றிய செய்திகளைத் தொகுத்துரைப்பது அகவற்பாக்களால் ஆனது. புறநானூறுக்கும், பதிற்றுப்பத்துக்கும் ஒரு வேற்றுமை உண்டு. முடி மன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும் பற்றிய பாடல்களின் தொகுதி கொண்டது புறநானூறு. ஆனால் பதிற்றுப்பத்தோ சேரமன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி எனலாம். அத்தகைய சேரநாட்டின் வளம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம் அமைதி பெறுகின்றது. இனிமையான இசையை இரசிப்பதென்பது ஓர் அலாதியான அனுபவம்! இதனால்தான் “இசையில்லாத வாழ்க்கை இனிக்காது” என்று நீட்சேயும் – ”துன்பத்தைத் துடைப்பதற்கே இசை உண்டாக்கப்பட்டது” என்று ஷேக்ஸ்பியரும் சொல்லிச் சென்றார்கள் போலும்!
கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீது மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகவும் சொற்கோவைகளால் ஆன இறைவழிபாட்டுத் துதிகளின் வெளிப்பாடாகவும் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் போன்ற செயல்களின் அடிப்படையில் தமிழ்கூறு நல்லுகில் தனிப் பெரும் புகுழுடன் போற்றப்பட்டு வரும் முருக வழிபாடானது தொன்மைக் காலந்தொட்டு அண்மைக்காலம் வரை ஒண்தீந்தமிழ்க் குடிமக்களின் சமய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட ஒரு வழிபாட்டு முறையெனில் மிகையன்று முருகவிழாவும் வழிபாடுயும் எவ்வாறு எப்படி படிப்படியாக வளா்ந்ததென்தை இக்கட்டுரை ஆராய்கிறது.
மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க கூடாத செயல்களை தொகுத்தும் பகுத்தும் உரைப்பதே பதினெண்கீழ்க்கணக்கு. இந்நூலில் அறத்தோடு அறிவியல் கருத்துகளும் பொதிந்து கிடந்துள்ளன என்று கூறின் மிகையாகாது. இயற்கையைக் கண்டு மனிதன் அஞ்சத் தொடங்கினான். இவ்வச்சத்தின் விளைவாக பண்டைத்தமிழன் ஐம்பூதங்களையும் வழிபட்டான். ஐம்பூத வழிபாட்டால் பருவத்தையும் நேரத்தையும் அளவிடுவதில் அதீத நாட்டம் கொண்டான். ஐம்பூதங்களில் முதன்மையானது நிலம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத்தமிழனின் வாழ்வில் இன்றியமையா இடத்தினைப் பெற்ற நிலம் சார் சிந்தனைகளை இலக்கியங்கள் வழி வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
பண்டைத் தமிழர்கள் மரபுகளைப் போற்றிக் காப்பவர்களாகவும், தம் முன்னோர் கற்றுக் கொடுத்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். இத்தகையச் சிறப்புகளுக்கு எல்லாம் அவர்களின் மரபே காரணமாக அமைந்தது. பழக்கம், வழக்கம், மரபு எனும் மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க இயலாதவை. எளிதில் மாற்ற முடியாதவை. எனவே “பழக்கம் என்பது தனி மனிதனைச் சார்ந்தது என்றும், வழக்கம் என்பது சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு என்பது சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்”1 அவ்வகையில் பழக்கம் வழக்கமாகி நிலைபெற்ற மடல் ஏறுதல் குறித்த தரவுகளைத் தொகுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









