ஆய்வு: தொல்காப்பியச் செய்யுளியலும் பேராசிரியரின் திறனாய்வு அணுகுமுறையும்
முன்னுரை
அறிவுக்கும் உயர்வுக்கும் இடங்கொடுத்து வளர்ந்து வரும் அரிய பெரிய துறைகளுள் திறனாய்வுத் துறையும் ஒன்று. ஒரு பொருளின் திறனைப் பற்றி ஆராயும் இத்திறனாய்வுக் கலையில் ‘முடிவுகூறல்’ என்பது இன்றியமையாதது. இதனடிப்படையில், நம்முடைய தொன்மையான இலக்கிய மரபுகளைக் காத்து நிற்கும் அறிவுக் கருவூலமான தொல்காப்பியத்தில் மறைந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்தறிந்து, தமிழ் மரபை வாழச் செய்த பெருமைக்குரியவர் பேராசிரியர். மொழி நூல் மட்டுமல்ல, ‘ஆழமான கவிதையியல் நூல் தொல்காப்பியம்’ என்பதை அறிவுறுத்தும் செய்யுளியலில், பேராசிரியர் கையாண்டுள்ள திறனாய்வு முறைகளை நுண்ணிதின் உணர்த்துவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நேர்பு நிரைபு எண்ணிக்கை
நேரசை நான்கு, நிரையசை நான்கு என்பது தொல்காப்பியர் முதலான யாப்பியலார் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து. ஆனால், தொல்காப்பியத்தில் நேர்பு, நிரைபசைகளின் எண்ணிக்கையைக் கூறுவதில் உரையாசிரியர்கள் தங்களுக்கென தனிததொரு கருத்தினைக் கொண்டுள்ளனர்.
“இருவகை யுகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப”
[தொல்காப்பியம் – செய்யுளியல் – நூற்பா 316]
என வரும் நூற்பாவிற்கு இதனையடுத்து வரும்
“குறிலிணை யுகர மல்வழி யான”
[தொல்காப்பியம்- செய்யுளியல்-நூற்பா 317]
என்ற நூற்பாவினையும் கருத்தில் கொண்டால் தனிக்குறிலாகிய நேரசையின் பின்னர் இருவகை உகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை என்பது புலனாகிறது. எனவே, நேர்பசை ஆறு, நிரைபசை எட்டு என வரும். இக்கருத்தினையே இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமது உரைத் திறத்தால் விளங்க வைப்பர். ஆனால், பேராசிரியர் நேர்பு, நிரைபசைகளின் பின்னர் வரும் உகரம் ‘ஒருசொல் விழுக்காடுபட’ இயைந்து வர வேண்டுமென்கிறார்.
குற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை மூன்றும், முற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை இரண்டுமாக நேர்பசை ஐந்தாகவும், குற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை நான்கும், முற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை இரண்டுமாக நிரைபசையின் விரி ஆறாகப் பேராசிரியரால் பகுக்கப்பட்டுள்ளது. சூத்திரத்தில் பொதிந்து கிடக்கும் உண்மைப் பொருளின் தெளிவை இலக்கண உலகிற்கு அறிமுகப்படுத்தும் திறனாய்வுப் பணியைச் செவ்விதின் செய்தவர் பேராசிரியர் என்பதற்கு ஆதாரமாக இச்சூத்திர உரை விளங்குகிறது.

முன்னுரை
முன்னுரை
முன்னுரை
தமிழ்மொழி மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தொன்மைச் சிறப்பு மொழி. இதில் தற்போது கிடைக்கும் செவ்விலக்கிய நூல்களுள் மிகவும் தொன்மையான முதல்நூல் தொல்காப்பியமே என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ் மக்களின் வாழ்வியல் கோட்பாடுகளையும் அவர்தம் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் பெருமை உடையது. வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து அவற்றை இலக்கியமாகப் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துத் தந்தது தொல்காப்பியம். இதன் சிறப்பும் பயனும் அங்கமும் அழகும் மிகப்பெரிய அளவில் பட்டியலிட்டுக் காட்டலாம். எனினும் இவற்றைச் சுருக்கமாக ஆராய்வோம்.
முன்னுரை: -
முன்னுரை
பண்டைத் தமிழ்க்குடி மக்களின் சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அனைத்தும் 'முருக' வழிபாட்டு முறைகளுக்கு ஏற்பவே அமைந்து இருந்தன. தமிழ்நாட்டின் அடிகானல்லூர் என்ற இடத்தில் இருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகப் பழமையுமான மயானங்களில் இருந்த கல்லறைகளில் 'வேல்' மற்றும் 'சேவல்' சின்னங்கள் கிடைத்துள்ளன. இவை பழங்காலத் தமிழர்களைப் பற்றிய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் மிக முக்கியமானவரும், பெரும் வல்லுரனுமான பேராசிரியர் 'பீ. டி. சீனிவாசன்' என்பவருடைய கூற்றின்படி, அடிகானல்லூரில் இருந்த அந்த கல்லறைகள் 7,000 ஆண்டுகளுக்கு முட்பட்டவை. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே 'வேல்' வழிபாடும், முருக வழிபாடும் தமிழர்களிடம் இருந்தது. அதில் அவர்கள் தீவிர ஆர்வமும் கொண்டு இருந்தனர். 'தொல்காப்பியம்', 'பத்துப்பாட்டு' மற்றும் 'எட்டுத் தொகை' போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளில் இருந்து அந்தக் காலத்தில் முருக வழிபாட்டு முறையைச் சார்ந்தே பண்டைத் தமிழ்க்குடி மக்களுடைய சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அமைந்து இருந்தன எனத் தெரிய வருகின்றது. “சேயோன் மேய மைவரை உலகம்” எனப் பண்டைத் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிக்கும். இதனால் முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வமாக வழிபடப்பட்டமை புலனாகின்றது. எனவே தொன்மைச் சிறப்புக் கொண்ட தமிழும் முருகு எனப்படும் முருகனும் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.
மனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனதில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பயன்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்து” ஆகுமென்று தற்காலத் தமிழகராதி கூறுகிறது. இக்கலை என்ற சொல்லிற்கு “செயல்திறன், ஆண்மான், ஒளி, சாத்திரம், மேகலை” எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இக்கலை, உணர்ச்சி கொள்ளக்கூடியது. உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மனித மரபு வகைப்பட்டது. மனிதனால் செயற்கையாக உணர்வுகளை இயங்கச் செய்யக்கூடியது. தனிமனிதனிலிருந்து சமூகத்தை இணைக்கக் கூடியது. இத்தகைய சிறப்பு பெற்ற கலை, கலைப்பண்பாடு காலங்காலமாக மக்களோடு ஒன்றிணைந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இசை, சிற்பம், ஓவியம், கட்டிடம், நாட்டியம், கூத்து, ஒப்பனை உள்ளிட்ட கலைகளும் அடங்கும். இசை, நாட்டியம், கூத்து, ஆடல், பாடல் ஆகிய நிகழ்த்துக்கலைகள் உடலோடு உணர்ச்சிகளை ஏற்படுத்தி பிறர் பார்த்து மகிழுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. இக்கலைகளை நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் (Folk Performing Arts) என்று அழைக்கப்படுகிறது.
முன்னுரை
தொல்காப்பியத்தின்படி தலைவன் - தலைவி மறைவாக ஒழுகும் களவு ஒழுக்கத்தை வரையறுப்பதே களவு இலக்கியக்கொள்கையின் வேலை. அத்தகைய களவில் தலைவனுக்குச் சார்பாக இயங்கும் பாங்கன், தலைவிக்குச் சார்பாக இயங்கும் தோழி இடம்பெற்றிருப்பது பொருத்தமுடையது. களவு ஒழுக்கத்திற்கு எவ்வகையிலும் சார்பாக இயங்காத செவிலி, நற்றாய் பாத்திரங்கள் களவில் ஏன் இடம்பெற்றிருக்கிறது? களவுக்குப் பொருத்தமற்ற செவிலி, நற்றாய் இருவரில் நற்றாய் குடி பொறுப்பிற்கு உரிமையானவள்; செவிலி தலைவியின் குடிச்செயலைப் பின்பற்றி தலைவியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றிருப்பவள். குடிசார்ந்து நேரடி உரிமையைப் பெற்றிருப்பதால் களவுக்குப் பொருத்தமற்ற நற்றாய் பாத்திரம் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இவ்ஆய்வுக் கட்டுரைக்கு ஃபூக்கோவியல் சிந்தனை கருவியாகக் கொள்ளப்படுகிறது. காரணம் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படுகிற இடத்தில் மாறிய பொருளுக்கும் மாற்றப்படுகிற பொருளுக்கும் இடையில் நடந்தவற்றைக் குறித்த ஆராய்ச்சியில் மிகுகவனம் செலுத்தியது ஃபூக்கோவியல் சிந்தனை. ஃபூக்கோ உற்பத்தியை நிகழ்த்தக்கூடிய ஒரு பொருள் குறித்த ஆராய்ச்சியை அவ்வரலாற்றின் பின்னணியில் ஆராய்பவர். ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட இலக்கியவிதிகள் மொழியாலான ஒரு பொருள். அது இலக்கியவிதிகளை உற்பத்தி செய்யக்கூடியது. எனவே பூக்கோவியல் சிந்தனையைக் களவில் வைத்து விளக்க இடமுண்டு. மேலும் இங்குக் களவு கற்பாக மாற்றப்பட்டதற்கு இடையில் நற்றாயின் செயல்முறைகள் அமைந்திருக்கின்றன. அதற்குரிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தி விளக்குவதற்கு முன் ஃபூக்கோவியல் சிந்தனையில் கட்டுரையை விளக்குவதற்குப் பயன்படக்கூடிய பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.
முன்னுரை
ஆய்வு நோக்கம் (Objectives)
முன்னுரை
நீதிக்கருத்துக்களை போதிக்கக் கூடிய இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்படுகின்றன. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய அறநூல்களைப் படைத்துள்ளார்.
1:0. முன்னுரை
1:0. முன்னுரை
முன்னுரை
சங்ககால மக்களின் வணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கைநிலை எப்படி இருந்தது என்பதையும் அறியவேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலப்பிரிவில் இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பண்டைத் தமிழ்நாட்டின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்திருந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளின் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாக அமைந்திருந்தன. தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாக இடம்பெற்றுள்ளன. நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன இன்றியமையாக் கைத்தொழில்களாக இருந்தன.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









